இரு நாட்கள் முன்பு பா.ரா அண்ணனிடம் இருந்து போன். என்ன அக்பர் எப்படியிருக்கீங்க, சரவணன் எப்ப வாரார் என்று கேட்டார். அண்ணனின் எழுத்துகளை போலவே பேச்சிலும் தனித்தன்மை உண்டு.
எனக்கு சின்ன சந்தேகம் இது அவரின் குரல் நடை (எழுத்து நடை மாதிரி:)) இல்லையே என்று நினைத்துக்கொண்டே, நேற்றே வருவதா சொன்னாரு போனுக்கு அடிச்சா எடுக்க மாட்டேங்குது என்றேன்.
இப்போ யாருட்ட பேசிட்டு இருக்கீங்களாம்ன்னாரு அட! இது நம்ம சரவணன்!! எப்படியிருக்கீங்க சரவணன் ஊரில் அனைவரும் நலமா என்று ஒருவருக்கொருவர் நலம் விசாரித்துக்கொண்டோம். இந்த வாரத்தில் சந்திப்பதாக கூறினார். பின்பு பா.ரா அண்ணனிடம் சிறிது நேரம் பேசினேன்.
நண்பரை சந்திக்கும் மகிழ்ச்சியை சொல்லி அறிய வேண்டியதில்லை என்று நினைக்கிறேன். இந்த வெள்ளியன்று ஐந்து மணி பஸ்ஸில் வருவதாக செல்லினார். சரியாக ஆறு மணிக்கு இறங்கியவரை அழைக்க பஸ் நிலையம் சென்றேன்.சிறிது தூரத்தில் வாசலில் ஒருவர் அவரைப்போலவே சற்று குண்டாக நின்று கொண்டிருந்தார்.
ஊருக்கு சென்ற சரவணனுக்கு உடம்பு வைத்துவிட்டதா என்று நினைத்துக்கொண்டே வாசலுக்கு அருகில் சென்றேன் அவர் இல்லை. போனடித்தேன். அக்பர் நான் உள்ளேதான் இருக்கேன் உங்களை பார்த்துட்டேன். அங்கே நில்லுங்க நான் வெளியில் வாரேன்னார்.
ஸ்லைடிங்க் டோர் ஓப்பனாக ஹீரோ என்ட்ரி. கட்டித்தழுவ முடியவில்லை கையில் டீ கப்புடன் இருந்ததால்.ஓரத்தில் டீ கப்பை கைவிட்டு என் கைகுலுக்கினார். மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டு கடைக்கு வந்தோம்.
சரவணன் ஒரு புத்தக தகவல் களஞ்சியம். எப்போதோ படித்த புத்தகத்தின் பேரைச் சொன்னாலே போதும். அதை எழுதியவர். எந்த சூழ்நிலையில் எழுதினார். அதற்கு முன்னும் பின்னும் என்ன புத்தகங்கள் எழுதியுள்ளார் என்பதை சொல்லுமளவுக்கு ஞாபக சக்தி. கூடவே புத்தக நேசிப்பும் வெளிப்பட்டு விடுகிறது.
சரவணன், ஸ்டார்ஜன் , நான் மூவரும் பேசிக்கொண்டேயிருந்தோம் நேரம் போவது தெரியாமல். காலை 6 மணிக்கு பணிக்கு செல்லவிருந்ததால் விடை பெற்றார். மீண்டும் காத்திருக்கிறோம் மற்றுமொரு வெள்ளிக்காக.
பா.ரா அண்ணனின் பணிச்சூழல் காரணமாக சந்திப்பது தள்ளிக்கொண்டே போகிறது. அதுவும் ஒரு நாள் நிறைவேறும்.
===========================
போன வாரத்தில் பின் தொடரும் நண்பர்களின் எண்ணிக்கை நூறைத் தாண்டியது மனதை நெகிழ வைத்தது. பின் தொடரும் நண்பர்களுக்கும் , தொடர்ந்து என்னை வாசித்து உற்சாகப்படுத்திக்கொண்டிருக்கும் அனைத்து நண்பர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்.
============================
ஒரு கவிதை.
வெளிநாடுவாசியின் லீவு நாட்கள்.
கத்தை கத்தையாக
பணம் அழித்தவன்
கையில் எஞ்சி இருக்கும்
சில்லறை காசுகளின்
முக்கியத்துவத்தை
பெற்று விடுகின்றன
ஊர் வந்தவனின்
இறுதி விடுமுறை நாட்கள்.
,
57 comments:
/////கத்தை கத்தையாக
பணம் அழித்தவன்
கையில் எஞ்சி இருக்கும்
சில்லறை காசுகளின்
முக்கியத்துவத்தை
பெற்று விடுகின்றன
விடுமுறைக்கு
ஊர் வந்தவனின்
இறுதி நாட்கள்./////////
ஆஹா ! உங்களுக்கும் தெரிந்துபோச்சா எங்க வறுமையின் வாசனை .
பகிர்வுக்கு நன்றி !
தொடருங்கள் மீண்டும் வருவேன் .
வாவ் ரொம்ப அருமையான கவிதை.. நல்லாருக்கு அக்பர்..
அக்பர் கவிதை சூப்பர். வெளிநாட்டுவாசி கட்டுரை அருமை. நாமளும் அதே அலைவரிசையான ஆளுதான்....
அருமையான கவிதை.....
அந்த 4 எழுத்துக்கவிதை உண்மைய சொல்லுது
சந்திப்பு குறித்து மகிழ்ச்சி, அது புது அனுபவம் கூட
கவிதை சூப்பர்...
கவிதை நல்லா இருக்கு,
105 - க்கு வாழ்த்துக்கள்.
kavithai toppu ...
அக்பர் கவிதை சூப்பர்
உங்களைப்பற்றியும் பா.ரா பற்றியும் நிறைய சொன்னார் சரவணன்...
கவிதை கலக்கல் சினேகிதா!
பிரபாகர்...
சுவாரசியமான புலம்பல்கள். உங்களை நூறு பேர் பின்தொடர்வதில் வியப்பென்ன? வாழ்த்துகள்.
கவிதை கலக்கலா இருக்கு அக்பர்ஜி. நேற்று உங்களையும் ஸ்டார்ஜனையும் சந்தித்துப் பேசியதில் மிக மிக மகிழ்ச்சி. இன்னும் நிறைய எழுதுங்கள் நண்பா.
கவிதை நல்ல இருக்கு அக்பர்....
கவிதை நல்லாருக்குங்க
நம்ம கையிலே முதல்ல இருந்தே சில்லறைக் காசுக்குத் தான் முக்கியத்துவமே
அருமையான கவிதை...!
அருமையான கவிதை...!
கவிதை நிதர்சனத்யும் வலியையும் புரிய வைத்தது...அக்பர்..
கவிதையில் யதார்த்தத்தின் பிரதிபலிப்பு..
வாங்க சங்கர்
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
மீண்டும் வாருங்கள்.
கவிதை கலக்கல் சினேகிதா!
சில்லறை காசுகளின்
முக்கியத்துவத்தை
பெற்று விடுகின்றன
விடுமுறைக்கு
ஊர் வந்தவனின்
இறுதி நாட்கள்//
உண்மைங்க
//சில்லறை காசுகளின்
முக்கியத்துவத்தை
பெற்று விடுகின்றன//
லோக்கல் ஆளுங்களுக்கும் இதே நிலைமை தான்.. மாசக்கடைசில :) எல்லாமே நல்லாருக்கு.
100 - Congrats!
kavithai + post - super!
ரொம்பவும் நன்றாக இருந்தது.வெளி நாடு செல்லும் ஒவ்வொருவரும் கண்களை விற்று சித்திரம் வாங்கிக் கொண்டு இருக்கிறோம்!!!
செஞ்சுரிக்கு வாழ்த்துக்கள்.
பதிவர் சந்திப்பு போட்டோ ஒண்ணையும் காணோம்..
சுவாரஸ்யமான பகிர்வு.
சுவாரஸ்யமான பகிர்வு.
ஒத்த நண்பர்களோடு பேசிக்கொண்டு இருந்தால் நேரம் போவதே தெரியாது. வாழ்த்துக்கள்.
கவிதையையும் ரசித்தேன் அக்பர் !
ரொம்ப நல்லாருக்கு கவிதை,அக்பர்.
av@vikatan.com அனுப்பி வையுங்கள் அக்பர்.
அனுப்புவது எனில் கவிதையை பதிவில் இருந்து எடுத்து விடவும்.
தொடர்ந்து கவிதையும் எழுதவும். வாழ்த்துக்கள்!
vவணக்கம் அக்பர்.
சந்திப்பும் கவிதையும் மிக அருமை
கலக்குங்க. அக்பர்..
மாப்ள, பாரா-வை இன்னும் சந்திக்கலியா? டூ பேட்!
சீக்கிரம் சந்தித்து ஒரு கலர்புல் பிரியாணி + பிராந்தி இடுகை தரவும்.
அப்புறம் கவிதை...
அருமையாயிருக்குவோய்!
அதான் சொல்றாரே விகடனுக்கு அனுப்பி வையும்.
ஆல் தி பெஸ்ட்!
நண்பர்களை சந்திப்பதே தனி சுகம்.கவிதை நல்லாயிருக்கு சகோ!!
பதிவர் சந்திப்பு ரொம்ப சந்தோஷத்தை கொடுக்கும்.
பாலோவர்ஸ் 100 க்கு மேலா ஒரு பெரிய பலம் கிடைத்த மாதிரி இருக்குமே//
நல்ல பகிர்வு, கவிதையும் அருமை..
வாழ்த்துக்கள்
ச்சோச்சோ....கவிதைக்கு
வாழ்த்துக்கள் நண்பர்களின் அடுத்த சந்திப்புக்கு
உங்களை தொடர்பதிவு ஒன்றுக்கு
அழைத்துள்ளேன், நேரம் கிடைக்கும்போது
தொடருங்களேன் அக்பர், நன்றி.
நல்ல கவிதை....
வாங்க சங்கர்
//ஆஹா ! உங்களுக்கும் தெரிந்துபோச்சா எங்க வறுமையின் வாசனை//
நம்ம வறுமையின் என்று சொல்லுங்க.
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
வாங்க
ஸ்டார்ஜன்
அஹமது இர்ஷாத்
Sangkavi
அபுஅஃப்ஸர்
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
வாங்க
ஜெய்லானி
சைவகொத்துப்பரோட்டா
நட்புடன் ஜமால்
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
வாங்க T.V.ராதாகிருஷ்ணன் சார்
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
வாங்க பிரபாகர்
//உங்களைப்பற்றியும் பா.ரா பற்றியும் நிறைய சொன்னார் சரவணன்...//
போலவே இங்கும் உங்களைப்பற்றி சொன்னர். மிக்க மகிழ்ச்சி.
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
வாங்க
சேட்டைக்காரன்
செ.சரவணக்குமார்
நாடோடி
VELU.G
அமைதி அப்பா
ஜாக்கி சேகர்
க.பாலாசி
சே.குமார்
அன்புடன் அருணா
வானம்பாடிகள்
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
வாங்க
பிரசன்னா
Chitra
ஆரண்யநிவாஸ் ஆர் ராமமூர்த்தி
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
வாங்க கண்ணா
//பதிவர் சந்திப்பு போட்டோ ஒண்ணையும் காணோம்..//
போட்டோ எடுக்கவில்லை கண்ணா.
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
வாங்க
ஸாதிகா
துபாய் ராஜா
ஹேமா
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
வாங்க பா.ரா அண்ணா
//av@vikatan.com அனுப்பி வையுங்கள் அக்பர்.
அனுப்புவது எனில் கவிதையை பதிவில் இருந்து எடுத்து விடவும்.
தொடர்ந்து கவிதையும் எழுதவும். வாழ்த்துக்கள்!//
யூத் ஃபுல் விகடனுக்கு அனுப்பி இருக்கிறேன்.
உங்கள் பாராட்டு மகிழ்ச்சி அளிக்கிறது.
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
வாங்க பழனிச்சாமி சார்
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
வாங்க அன்புடன் மலிக்கா
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
வாங்க மாம்ஸ்
//பாரா-வை இன்னும் சந்திக்கலியா? டூ பேட்!
சீக்கிரம் சந்தித்து ஒரு கலர்புல் பிரியாணி + பிராந்தி இடுகை தரவும்.//
கண்டிப்பா. ஆனா பிராந்தி மிஸ்ஸிங்.
//அப்புறம் கவிதை...
அருமையாயிருக்குவோய்!
அதான் சொல்றாரே விகடனுக்கு அனுப்பி வையும்.
ஆல் தி பெஸ்ட்!//
அனுப்பி விட்டேன் மாம்ஸ்.
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
வாங்க
Mrs.Menagasathia
Jaleela
கண்மணி/kanmani
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
வாங்க சைவகொத்துப்பரோட்டா
// உங்களை தொடர்பதிவு ஒன்றுக்கு
அழைத்துள்ளேன், நேரம் கிடைக்கும்போது
தொடருங்களேன் அக்பர், நன்றி.//
கண்டிப்பாக எழுதுகிறேன்.
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
வாங்க காதல் கவி
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
ஃபோட்டோ போட்டிருக்கலாமே
வாங்க NIZAMUDEEN
//ஃபோட்டோ போட்டிருக்கலாமே//
போட்டோ எடுக்கவில்லை நண்பரே.
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
Post a Comment