Tuesday, April 27, 2010

காய்க்காத மரத்தின் விலை ஒரு லட்சம்

சவுதி அரேபியா பெட்ரோல் வளம் நிறைந்த மத்திய கிழக்கு நாடுகளில் குறிப்பிடத்தக்க ஒரு நாடு.

இங்குள்ள சவுதிகள் ( நாம் இந்தியர்கள் என்பது போல் அவர்கள் சவுதிகள் ) பெருமையாக சொல்லிக்கொள்வார்கள், உன் காலுக்கு அடியில் தோண்டினால் தண்ணீர் வராது பெட்ரோல்தான் வரும் என்று.

அந்த வளம்தான் அவர்களை பணக்கார நாடுகளின் வரிசையில் இன்றும் வைத்திருக்கிறது. நமக்கு வேலை வாய்ப்பையும் அளித்திருக்கிறது.

ஆனால் இவ்வளவு வசதியிருந்தும் அவர்கள் ஏங்குவது எதற்கு தெரியுமா? இயற்கைக்கு.

ஆம் இங்கு நம் நாட்டை போல் பச்சை பசேலென புல்வெளிகளோ, அடர்ந்த மரங்கள் நிறைந்த காடுகளோ எதுவுமே கிடையாது. பேரிச்சம் மரங்களும் ஒரு சில ஏரியாவில்தான் நன்கு வளர்கின்றன.

வருடத்திற்கு 5 நாட்கள் அல்லது பத்து நாட்கள் மழை பெய்யும் அதுவும் ஒரு சில வருடங்கள் பெய்யாது. மழை நேரங்களில் யாரிடமாவது என்ன இப்படி ஒரே நசநசன்னு சொல்லிவிட்டால் போதும் அவர்களுக்கு கோபம் வந்து விடும். அப்படி சொல்லக் கூடாது, மழை இறைவனின் அருட்கொடை இன்னும் நிறைய பெய்யட்டும். அதுதான் நல்லது என்பார்கள்.

இங்கு ஒரு லிட்டர் பெட்ரோலின் விலை 6 ரூபாய் ஆனால் ஒரு லிட்டர் பாட்டில் தண்ணீரின் விலை 24 ரூபாய். வீட்டிற்கு வந்து சப்ளை செய்பவர்களிடம் வேண்டுமானால் விலை குறைவாக இருக்கும்.

அவர்களுக்கு இந்தியாவை மிகவும் பிடிக்கும். காரணம் இங்குள்ள இயற்கை வளங்கள். மூணாறு பற்றியும் ஊட்டி பற்றியும் நிறைய சவுதிகள் பெருமையாக பேச கேட்டிருக்கிறேன்.

போலவே சவுதி அரசும் செயற்கையாக இயற்கையை உருவாக்கி வருகிறது இது போல‌


இந்த கார்டன் அமைக்க ஆன செலவு மட்டும் 5 கோடி (தோராயமாக)இருக்கும். அனைத்தும் செயற்கை புல்வெளிகள். தினமும் இரு வேளை நீர் தெளிக்க பைப் வசதிகள் என்று மிக அழகாக திட்டமிட்டு உருவாக்கியிருக்கிறார்கள்.

இதை திறந்து 2 மாதமாகிறது. தினமும் மாலையில் இருந்து இரவு 12 மணிவரை கூட்டம் கூட்டமாக ஏசி வீட்டை விட்டு இங்கு வந்து இளைப்பாறுகிறார்கள்.

மேலும் ரோட்டிற்கு நடுவே இது போல மரங்களை நட்டு தினமும் லாரிகள் மூலம் நீர் பாய்ச்சுகிறார்கள்.
ஏதாவது தருணத்தில் விபத்து ஏற்பட்டு இந்த மரங்கள் ஒடிந்தால் ஒரு மரத்திற்கு ஒரு லட்சத்தி இருபதாயிரம் ரூபாய் வீதம் அவரிடம் அபராதம் விதிக்கப்படும்.

காய்க்காத, நிழல்தராத அந்த மரத்திற்கு அவர்கள் கொடுக்கும் முக்கியத்துவத்திலிருந்து தெரிந்திருக்கும் இயற்கைக்கு எவ்வளவு ஏங்குகிறார்கள் என்று.

ஆனால் நாம்?

இருக்கிற இயற்கை வளங்களை அழித்து கான்க்ரீட் காடுகளாக்கிக் கொண்டு இருக்கிறோம்.

நடுத்தர மற்றும் ஏழை வர்க்கத்தினர் மரங்கள் வளர்க்காவிட்டாலும் மரங்களை அழித்து நான் பார்த்ததில்லை. ஆனால் வேலியே பயிரை மேய்ந்த கதையாக அதிகாரத்தில் இருப்பவர்களால்தான் இயற்கை வளங்கள் அதிகமாக சுரண்டப்படுகிறது.

இந்த பூமிக்கு நம்மாலான சிறிய உதவி அல்லது கடமை. வாழ் நாளில் ஒரு மரமாவது நட்டு, பெரிதாக வளரும் வரை அதை பராமரிப்பதுதான்.

என்னதான் சொர்க்கத்தில் இருந்தாலும். அதை சொர்க்கம் என்று உணராதவரை ஒரு பயனும் இல்லை.

,

45 comments:

நாடோடி said...

//என்னதான் சொர்க்கத்தில் இருந்தாலும். அதை சொர்க்கம் என்று உணராதவரை ஒரு பயனும் இல்லை.///

அருமை அக்ப‌ர்.......

மின்மினி said...

ரொம்ப நல்லா சொல்லிருக்கீங்க.. இதுதான் உண்மையும்கூட. மரம் வளர்க்கலின்னா மழையேது?.. நல்ல அருமையான பதிவு அக்பர் அண்ணா.

Starjan ( ஸ்டார்ஜன் ) said...

சவுதிகள பற்றி புட்டுபுட்டு வச்சிருக்கீங்க.. இந்த பார்க் உருவாக்க ஆறுமாதத்துக்கும் குறைவா ஆகிருக்கு.. இதே நம்மூர்ல என்றால் ஒரு வருசத்துக்கு மேலா நீட்டிருப்பாங்க.. மழைதான் ஒவ்வொரு நாட்டு பொருளாதாரத்தையும் தீர்மானிக்குது. மழை எல்லா வளங்களையும் பெற்றுத்தரும். மழை இறைவன் நமக்கு கொடுத்த அருட்கொடை. மரம் வளர்ப்போம் மழை பெறுவோம். நல்ல அருமையான பகிர்வு அக்பர்.

கண்ணா.. said...

//காய்க்காத, நிழல்தராத அந்த மரத்திற்கு அவர்கள் கொடுக்கும் முக்கியத்துவத்திலிருந்து தெரிந்திருக்கும் இயற்கைக்கு எவ்வளவு ஏங்குகிறார்கள் என்று.

ஆனால் நாம்?//

உறுத்தும் கேள்வி தல......


அருமையான பதிவு..

Haroon said...

என்னதான் சொர்க்கத்தில் இருந்தாலும். அதை சொர்க்கம் என்று உணராதவரை ஒரு பயனும் இல்லை.நல்ல அருமையா சொல்லிருக்கீங்க

SUFFIX said...

எந்த இடத்தில் ஒரு புல் தரையை கண்டாலும், ஒரு விரிப்பு விரித்து, குடும்படுத்தடன் உடகார்ந்து அந்தச் சூழலை அரபிகள் அனுபவிப்பது அலாதி தான், நாங்களும் இப்போ மாறிட்டோம்ல.

ஹுஸைனம்மா said...

//தினமும் மாலையில் இருந்து இரவு 12 மணிவரை கூட்டம் கூட்டமாக ஏசி வீட்டை விட்டு இங்கு வந்து இளைப்பாறுகிறார்கள்.//

அது அந்த முதல் ஃபோட்டோவைக் கிளிக்கிப் பாத்தா நல்லாத் தெரியுது!! குப்பைகள்!! :-(

//என்னதான் சொர்க்கத்தில் இருந்தாலும். அதை சொர்க்கம் என்று உணராதவரை ஒரு பயனும் இல்லை//

ம்ம்.. உண்மை!!

அஹமது இர்ஷாத் said...

இதே விஷயங்கள் இங்கேயும்(தோஹா) உண்டு...

ஆனால் பேரீத்தம்பழம் மரம் மட்டும் இயற்கையாய் இங்கு வளரும்...

ஹேமா said...

இல்லாதவர்களுக்குத்தான் அதன் அதன் அருமை தெரியும்.
நல்லதொரு பதிவு அக்ப‌ர்.

க‌ரிச‌ல்கார‌ன் said...

ந‌ச்னு சொல்லிருக்கீங்க அக்ப‌ர்

இராகவன் நைஜிரியா said...

// என்னதான் சொர்க்கத்தில் இருந்தாலும். அதை சொர்க்கம் என்று உணராதவரை ஒரு பயனும் இல்லை. //

மிகச் சரியாகச் சொன்னீர்கள் நண்பரே.

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

இருப்பதை உதாசீனப்படுத்துவதும்; இல்லாததற்கு ஏங்குவதும் உலகில் எல்லோரிடமுமே!
உள்ள பழக்கம்.
கள்ளி, நாகதாளி;கற்றாளை நமது நாடுகளில் தேடுவாரற்றவை, வீட்டைச் சுற்றி இருந்தாலே அழித்து விடுவோம். இங்கோ இவை மிக விலை
அதிகமான வீட்டுக்குள் வளர்க்கும் தாவரவகை. கள்ளி நமக்கு விழிக்கும் போது பார்க்கக்கூடாத தாவரம்;
இவர்கள் இதைத்தான் வரவேற்பறையில் வைத்திருப்பார்கள்.
அதைப் பெருமையாகவும் கருதுவார்கள்.
ஆனால் நமது நாடுகள் இயற்கை வளம் மிக்கவை; இது கொடை அதை நல்லபடி பேணும் மனநிலை
நமதனைவருக்கும் வரவேண்டும்.

நட்புடன் ஜமால் said...

அதை அதாக உணரனும் - சரி தான்.

செ.சரவணக்குமார் said...

மிக நல்ல பதிவு அக்பர்.

செ.சரவணக்குமார் said...

அந்த ஃபோட்டோ உங்க ஷாப்புக்கு முன்னாடி இருக்குற ரோட்ல எடுத்ததுதான?

செ.சரவணக்குமார் said...

// ஹுஸைனம்மா said..
அது அந்த முதல் ஃபோட்டோவைக் கிளிக்கிப் பாத்தா நல்லாத் தெரியுது!! குப்பைகள்!! :-(//

ஏங்க அக்பர் ஒரு நல்ல ஃபோட்டோ போடக்கூடாதா? நம்ம கம்பெனி சீக்ரெட்ட வெளியிட்டுட்டீங்களே.

T.V.ராதாகிருஷ்ணன் said...

//என்னதான் சொர்க்கத்தில் இருந்தாலும். அதை சொர்க்கம் என்று உணராதவரை ஒரு பயனும் இல்லை.//

மர(!!!) மண்டைகளுக்கு இன்னும் இது புரியறதில்லையே அக்பர்

ஈரோடு கதிர் said...

அருமையான பகிர்வு அக்பர்

பிரசன்னா said...

//பச்சை பசேலென புல்வெளிகளோ, அடர்ந்த மரங்கள் நிறைந்த காடுகளோ எதுவுமே கிடையாது//
//அப்படி சொல்லக் கூடாது, மழை இறைவனின் அருட்கொடை இன்னும் நிறைய பெய்யட்டும். அதுதான் நல்லது என்பார்கள்.//
//வீட்டிற்கு வந்து சப்ளை செய்பவர்களிடம் வேண்டுமானால் விலை குறைவாக இருக்கும்.//


இங்க (தமிழ் நாடு) உள்ளதைத்தான் சொல்றீங்களோனு நெனச்சேன்.. இங்கேயும் இதான் நிலைமை. கொஞ்ச நாள் கழிச்சு வெறும் கட்டிடங்கள் தான் இருக்கும் :(

தேவையான பதிவு..

க.பாலாசி said...

//காய்க்காத, நிழல்தராத அந்த மரத்திற்கு அவர்கள் கொடுக்கும் முக்கியத்துவத்திலிருந்து தெரிந்திருக்கும் இயற்கைக்கு எவ்வளவு ஏங்குகிறார்கள் என்று.//

ம்ம்... உண்மைதானுங்க...

நல்ல சமூக பொருப்புள்ள பகிர்வு...

சேட்டைக்காரன் said...

//இந்த பூமிக்கு நம்மாலான சிறிய உதவி அல்லது கடமை. வாழ் நாளில் ஒரு மரமாவது நட்டு, பெரிதாக வளரும் வரை அதை பராமரிப்பதுதான்.//

சுவாரசியமாக அந்த ஊர்க்கதையைச் சொல்லி விட்டு, நச்சென்று எமக்கு இந்த முக்கிய அறிவுரையையும் கூறியிருக்கிறீர்கள். பாராட்டுக்கள்!!

malar said...

நல்ல அருமையான பதிவு

சைவகொத்துப்பரோட்டா said...

அருமை அக்பர், வாழ்த்துக்கள் தங்களின்
சமுதாய அக்கறைக்கு.

வானம்பாடிகள் said...

இருக்கும்போது மதிப்பு தெரிவதில்லை. இல்லாதவர்களுக்குத்தான் புரிகிறது. :)

அக்பர் said...

வாங்க‌

நாடோடி
மின்மினி
Starjan ( ஸ்டார்ஜன் )

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

அக்பர் said...

வாங்க‌

கண்ணா..
Haroon

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

Haroon said...

பண்புடைய பெரியார் எக்காலமும்..எல்லோரிடமும் பணிவுடன் நடப்பார்கள்.ஆனால் சிறியோரோ
பண்பு இன்றி தன்னைத்தானே பாராட்டிக் கொண்டு இருப்பார்கள்.

Sangkavi said...

//இயற்கைக்கு எவ்வளவு ஏங்குகிறார்கள் என்று//

அவர்கள் இயற்கைக்கு ஏங்குகிறார்கள்....

நாம் இயற்கையை அழித்துக்கொண்டு இருக்கிறோம்....

பிரபாகர் said...

உங்களின் சிறந்த பகிர்வு, பதிவுகளில் இதுவும் ஒன்று சினேகிதா! அருமை!

பிரபாகர்...

Spottamil Entertainment said...

நல்ல அருமையான பதிவு

andrum anbudan said...

நிஜத்தை நிஜமாக சொன்ன அக்பருக்கு நன்றி

andrum anbudan said...

வானவில் தமீம்

Chitra said...

////ஆனால் இவ்வளவு வசதியிருந்தும் அவர்கள் ஏங்குவது எதற்கு தெரியுமா? இயற்கைக்கு./////////என்னதான் சொர்க்கத்தில் இருந்தாலும். அதை சொர்க்கம் என்று உணராதவரை ஒரு பயனும் இல்லை.////


..... well-said! super!

Mrs.Menagasathia said...

அருமையான பதிவு!!

sridharan said...

Superb.....visit

http://yournight-srdhrn.blogspot.com/

ஜெய்லானி said...

//இங்கு ஒரு லிட்டர் பெட்ரோலின் விலை 6 ரூபாய் ஆனால் ஒரு லிட்டர் பாட்டில் தண்ணீரின் விலை 24 ரூபாய்.//

ரியாலா ரூபாயா ?

V.Radhakrishnan said...

அருமையான பதிவு

நண்டு@நொரண்டு -ஈரோடு said...

நல்ல பகிர்வு .
அருமை

thenammailakshmanan said...

அருமையான பகிவு அக்பர் நானும் ஷார்ஜா துபாய் சென்றபோது அவர்களின் இந்த இயற்கை நாட்டமும் சாலையெங்கும் பூச்செடிகளும் கண்டு வியந்தேன்

♫ ♪ ..♥ .பனித்துளி சங்கர் .♥..♪ ♫ said...

இயற்கையை காக்கும் வகையில் . மிகவும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் ஒரு சிறந்த பதிவு . பகிர்வுக்கு நன்றி .விரைவில் சவுதிகள் போல் இந்தியாவும் மாறிப்போகலாம் வளர்ச்சியில் இல்லை இயற்கைக்காக ஏங்கும் நாடுகளில் நாமும் ஒருவராக .

NIZAMUDEEN said...

//காய்க்காத, நிழல்தராத அந்த மரத்திற்கு அவர்கள் கொடுக்கும் முக்கியத்துவத்திலிருந்து தெரிந்திருக்கும் இயற்கைக்கு எவ்வளவு ஏங்குகிறார்கள் என்று.//

உண்மை!
நிழலின் அருமை,
வெயிலில்தான் தெரியும்.

அமைதிச்சாரல் said...

இயற்கையின் அருமை இன்னும் நிறைய பேருக்கு புரியவில்லை. 'குப்பை'ன்னு ஒதுக்க முடியாம கார்டன் நல்லா இருக்கு.

அமைதி அப்பா said...

//என்னதான் சொர்க்கத்தில் இருந்தாலும். அதை சொர்க்கம் என்று உணராதவரை ஒரு பயனும் இல்லை.//


நானும் கிராமத்தில் பிறந்து வளர்ந்தவன்தான். நான் கிராமத்தில் இருக்கும் வரை எனக்கு இயற்கையை ரசிக்கத் தெரியவில்லை. எப்போது நகரத்தை நோக்கி புறப்பட்டேனோ அதன் பிறகுதான் எங்கள் கிராமத்து இயற்கையை ரசிக்கவும் நேசிக்கவும் ஆரம்பித்தேன்.
நிழலின் அருமை வெயிலில்தான் தெரியும்.

நல்ல படங்கள், நல்ல பகிர்வு சார்.

அக்பர் said...

வருகைதந்த அனைவரின் கருத்துக்கும் மனமார்ந்த நன்றிகள்.

asiya omar said...

நல்ல பகிர்வு அக்பர்.அருமை.

இதையும் விரும்புவீர்கள்.

Related Posts with Thumbnails