Thursday, April 1, 2010

மாறாத கறைகள் ( ஏப்ரல் 1 சிற(ரி)ப்பு பதிவு)

இந்த வருடம் ஏப்ரல் ஒன்னில் யாருகிட்டயும் ஏமாறாம‌ இருக்கனும், குறிப்பா சட்டையில மை படாமா பார்த்துக்கிடனும். இது என் குறிக்கோள்.

காரணம் இருக்கிறது. சென்ற வருடங்களில் நான் பட்ட பாடு அப்படி. என்னதான் பழைய சட்டை போட்டாலும். நம் மக்கள் முதுகில் குத்துவதில் வல்லவர்கள் முன்னாடி சிரிச்சுகிட்டே போவாங்க, பின்னடி திரும்புனாலும் சிரிப்பாங்க. ஆனா வீட்டுல வந்து பார்த்த முதுகெல்லாம் மையா இருக்கும்.

ஒரு முறை இவர்களை மூக்கூடைக்க மை கலரில் சட்டை போட்டு வெளியில் சுற்றினேன். வெற்றிக்களிப்பில் வீட்டுக்கு வந்து சட்டையை கழற்றினால் பச்சை மை கருமையாக படர்ந்திருந்து.

கழுவினால் போய்விடுகிறது ஏன் இந்த அலப்பறை என்பது காதில் விழுகிறது. அவர்கள் மை தயாரிக்கும் விதமே தனி. மையில் வாழைச்சாறை கலக்கினால். சட்டை கலர் போனாலும் போகும் மை போகாது.

எனவேதான் இந்த ஆண்டு இவ்வளவு வைராக்கியம். வீட்டுக்குள்ளேயே இருந்தால் பயந்தங்கோளி என்று பட்டம் பெற வாய்ப்பிருந்ததால் மிக அடர் கலரில் பழைய சட்டையை மாட்டிக்கொண்டு தெருவை கவனமாக சுற்றினேன். எதிர்படும் நண்பர்களிடம் சிறிது நேரம் பேசி விட்டு, வீடு வந்து சட்டையை கழட்டினேன். வெற்றி இன்று ஒரு கறை இல்லை.

சந்தோசத்துடன் திரைச்சிலை விலக்கி சமையலறைக்குள் செல்ல முயன்ற போது. டம் தடார்!

" அடப்பாவி பயலே கொதிக்கிற ஆனச் சட்டியில வந்து விழுந்துட்டியே. பிள்ளையை பிடிங்கம்மா" பெரியம்மா கத்துகிறார்கள்.

நெஞ்சு வயிற்றுப்பகுதியில் மீன் குழம்பு மணம் சுடச்சுட.

குளிர்ந்த நீரில் கழுவி மருந்து எடுத்து போடப்போனார்கள்.

"வேணாம் " அலறினேன். பின்னே எந்த மை படாமல் இன்று தப்பி வந்தேனோ அந்த மை உடம்பு பூராவும் தேய்த்தால் சும்மாவா இருக்க முடியும்?

" சும்மா கிட‌ புண்ணு ஆறவேணாம. புள்ளைக்கு பொத்து போயிலோ கிடக்கு. நீ பார்த்து புடிச்சிட்டு போக கூடாதாக்கா" இது அம்மா.

" அவம்தாம்ளா வேகமா வந்து விழுந்துட்டான்" பெரியம்மா.

சிறிது நேரம் கழித்து அந்த வேதனையிலும் சிரித்துக்கொன்டிருந்தேன். அம்மாம்மா வந்து கேட்டார்கள்

"ஏம்மா வலிக்குதா".

வலிக்காம? நல்லாவே வலிக்குது.

" சரி எதுக்கு சிரிச்சே".

இல்லை இதுக்கு சட்டை முழுக்க மையா ஆனா நல்லாயிருந்துருக்குமேன்னு தோணுச்சு அதுதான்.

"என் ராசா ஒன்னும் ஆவாது நீ வீரன்லடா. "

இன்னொன்னுக்கும் சிரிச்சேன். நல்ல வேளை இப்ப‌ பத்து வயசா இருக்கும் போது நெஞ்சுல,வயத்துல பட்டுச்சு. வளர்ந்த பிறகு பட்டா என்ன ஆயிருக்கும்.

" அடி படுவா. வக்கனைப்பேச்சுக்கு குறை இல்லை அப்படியே அவரு மாதிரியே. "

இப்போது எழுதும் போதும் வயிற்றை தடவிப்பார்த்து சிரித்துக்கொண்டுதான் இருக்கிறேன்.


,

24 comments:

நாடோடி said...

இதுக்கா த‌ல‌ உங்க‌ ஊர்ல‌ மை அடிப்பானுங்க‌.. ந‌ம்ம‌ ஊர்ல‌ ப‌ள்ளியின் க‌டைசி நாள் தான்.. ஞாப‌க‌ம் இருக்கு..

ஜெரி ஈசானந்தன். said...

வாசித்தேன்,ரசித்தேன்,நேசிக்கிறேன்..

நாஞ்சில் பிரதாப் said...

மை அடிக்கிற பழக்கம் நம்ம ஊர்லயும் உண்டு...அநியாயம் பண்ணுவானுங்க... அது ஒரு காலம்....
ரெண்டு சொட்டு மைக்கு பயந்து உடம்பு முழுக்க மைபோட்ட ஒரு ஆளுதான் நீங்கதான் தல... ஆப்பை தேடிபோய் உட்காறது இதுதானோ...???

இராகவன் நைஜிரியா said...

இப்போ படிக்கும் போது சிரிப்பாகத்தான் வருகின்றது.

கையில் சின்ன சூடு பட்டாலே தாங்க முடியாது... சட்டியோடு குழம்பு கொட்டிடுச்சுன்னா...

கொடுமைதாங்க..

துபாய் ராஜா said...

விழுந்தாலும் மீன் குழம்பு சட்டியா பார்த்துதான் விழுந்திருக்கீங்க... :))

நம்ம ஸ்கூல்ல சில பயபுள்ளய
'AF'ன்னு உருளைக்கிழங்கு இல்லைன்னா மாக்கல்லுல அச்சு செஞ்சுட்டு வந்து சட்டை ஃபுல்லா குத்திபுடுவானுங்க குத்தி...

பால்ய நினைவுகள் அருமை அக்பர்.

cheena (சீனா) said...

அன்பின் அக்பர்

பாலய நினைவுகள் அருமை - அசை போட்ட விதம் நன்று - சட்டையில் மை அடிப்பது எங்கள் காலத்திலும் இருந்த ஒன்று தான். வெற்றி வீரனாக மை படாமல் வந்து மீன் குழம்பின் சூட்டில் மை தவயது - பாவமே !

ஆமா கொஞ்சம் வளந்திருந்தால் - ,,,,,,, குசும்புக்கு குறைச்சலில்ல

ம்ம்ம்ம்ம்

நல்வாழ்த்துகள் அக்பர்
நட்புடன் சீனா

சைவகொத்துப்பரோட்டா said...

சிரிப்பு + வேதனை
அனுபவமாயில்ல இருக்கு.

T.V.ராதாகிருஷ்ணன் said...

ரசித்தேன் அக்பர்

ஷங்கி said...

இடுக்கண் வருங்கால் நகுக?!!!

Sangkavi said...

உங்கள் கதையை ரசித்து ரசித்து படித்தேன்....

அருமை....

பிரபாகர் said...

ராகவன் அண்ணா மாதிரிதான் ஃபீல் பண்ணினேன் சினேகிதா!

பிரபாகர்...

செ.சரவணக்குமார் said...

அருமை அக்பர். (இருந்தாலும் வயித்துல கொழம்பு கொட்டி மை தடவுனது கொஞ்சம் ஓவர்தான். இதுக்கு அந்த மையே பரவாயில்லை)

தாராபுரத்தான் said...

எங்களை மாதிரி ஆட்களை அந்த காலத்திற்கே கூட்டிக்கிட்டு போயிட்டீங்க தம்பி.

thalaivan said...

வணக்கம்
நண்பர்களே

உங்கள் திறமைகளை உலகுக்கு அறியச் செய்யும் ஒரு அரிய தளமாக எம் தலைவன் தளம் உங்களுக்கு அமையும்.
உங்கள் தளத்தில் நீங்கள் பிரசுரிக்கும் சிறந்த ஆக்கங்களை எமது தளத்தில் இடுகை செய்வதன் மூலம் உங்கள் ஆக்கங்களை அதிகமான பார்வையாளர்கள் பார்ப்பதற்கு வாய்ப்பளிப்பதுடன் உங்கள் தளத்திற்கு அதிக வருகையாளர்களையும் பெற்றுத் தரும்.
நன்றி
தலைவன் குழுமம்

http://www.thalaivan.com

Hello

you can register in our website http://www.thalaivan.com and post your articles

install our voting button and get more visitors

http://www.thalaivan.com/button.html


Visit our website for more information http://www.thalaivan.com

Jaleela said...

ஏப்ரல் முதல் நாள் என்றாலே மை ஊரில் செம்ம கலாட்டாவாக இருக்கும்.

உங்கள் அனுபவத்தை சொன்னது, சைவ கொத்து பரோட்டா சொன்னது போல் வேதனை+ சிரிப்பு தான், உடம்பு முழுவதும் குழம்பா கேட்கவே கழ்டமா இருக்கு, கொஞ்சமா சூடு பட்டாலே பொருக்க முடியாது, அத தாங்கிகிட்டு சிரிச்சீங்கன்னா நீங்க ரொம்ப நல்லவரு...

SUFFIX said...

சட்டையில மை அடிக்கிறது அது ஒரு காலம், இப்போ அதெல்லாம இருக்கான்னு தெரியல, உங்களுக்கு சட்டியால மை அடிச்சது கொடுமை, நகைச்சுவையுடன் எழுதியிருக்கீங்க அக்பர்.

அஹமது இர்ஷாத் said...

ரைட்டு....

ஸாதிகா said...

ஏன் அக்பர் சார் இன்னுமுமா மை அடிக்கின்றார்க?இந்த ஏப்ரல் அனுபவம் ரொம்ப சுவாரஸ்யம்

பிரசன்னா said...

//நெஞ்சு வயிற்றுப்பகுதியில் மீன் குழம்பு மணம்//

அடாடா.. வயித்துக்கு எட்டுனது வாய்க்கு எட்டலியே :)

Priya said...

mm... Nice one!

jeen said...

மலரும் நினைவுகளை அசை போட்டுள்ளீர்கள்.நாங்களும் தான் மை அடித்தோம் பள்ளி கடைசி நாளில். ஞாபக படுத்தி விட்டீர்களே நண்பா.

அருமை.

jeen said...

மலரும் நினைவுகளை அசை போட்டுள்ளீர்கள்.நாங்களும் தான் மை அடித்தோம் பள்ளி கடைசி நாளில். ஞாபக படுத்தி விட்டீர்களே நண்பா.அருமை.

jeen said...

மலரும் நினைவுகளை அசை போட்டுள்ளீர்கள்.நாங்களும் தான் மை அடித்தோம் பள்ளி கடைசி நாளில். ஞாபக படுத்தி விட்டீர்களே நண்பா.அருமை.

jeen said...

மலரும் நினைவுகளை அசை போட்டுள்ளீர்கள்.நாங்களும் தான் மை அடித்தோம் பள்ளி கடைசி நாளில். ஞாபக படுத்தி விட்டீர்களே நண்பா.அருமை.

இதையும் விரும்புவீர்கள்.

Related Posts with Thumbnails