Monday, March 29, 2010

வலைச்சரத்தில் உங்கள் அக்பர்

அன்பு நண்பர்களே!

நம் சீனா ஐயா வலைச்சரத்தில் எழுத வாய்ப்பளித்துள்ளார். எனவே இந்த வாரம் முழுவதும் வலைச்சரத்தில் எழுதுகிறேன்.

எப்போதும் போல தங்கள கருத்துக்களையும், வாழ்த்துகளையும் வலைச்சரத்தில் தெரிவியுங்கள் நண்பர்களே.

அன்புடன்

அக்பர்.

Thursday, March 25, 2010

இந்த இடுகைகள் உங்களுக்கும் பிடிக்கும்.

படித்ததில் பிடித்த இடுகைகளை (பதிவுகளை பற்றி அல்ல) போன வாரம் எழுதினேன். அதற்கு தாங்கள் அளித்த வரவேற்பு என்னை இந்த வாரமும் தொடரவைக்கிறது. இதோ இந்த வாரம் படித்ததில் பிடித்தது.

இதில் உங்களுக்கு பிடித்த , பிரபலமான பதிவர்கள் வரலாம். எனவே "சூரியனுக்கே டார்ச் லைட்டா"ன்னு கம்பு தூக்க வேண்டாம். :)

அண்ணன் உண்மைதமிழன் "மக்கள் நித்தியானந்தன்களைத் தேடி ஏன் ஓட வேண்டும்..?" அப்படின்னு கேள்வி கேட்டு அவர் ஸ்டைலிலேயே அருமையாக விளக்கமும் கொடுத்திருக்கிறார். பதிவு எவ்வளவு நீளமாக இருந்தாலும் படித்து விட்டு போக வைப்பது அவர் எழுத்தின் சிறப்பு.

நான் நேசிக்கும் பத்து புத்தகங்கள் ‍ 4 மனோ எழுதிய இந்த தலைப்பே வாசிக்கத்தூண்டிகிறது. விரும்பும் காரணத்தை விளக்குவதோடு மட்டுமில்லாமல் வாசிக்கும் ஒவ்வொருவரையும் தொடரவும் சொல்லியிருக்கிறார். வாசியுங்கள் தொடருங்கள்.

நம்ம சஞ்சய் காந்தி அவர்கள் My Name is Bloody Blogger ன்னு அதிரடியா ஒரு பதிவு போட்டிருக்கார். ஏன் ஆங்கிலத்துல தலைப்பு வைக்கணும்னு யாராவது கேட்டிங்கன்னா , அதற்கும் பதில் சொல்லியிருக்கிறார். போய்த்தான் பாருங்களேன்.

நம்ம க. பாலாசி அவர்கள் திராட்சை என்றும் இனிப்புதான்.... என்று ஒரு அரிய கண்டுபிடிப்பை எழுதியிருக்கிறார். ஆனால் அதற்கு சொல்லும் காரணம் மிக சுவாரஸ்யம். நீங்களும் திராட்சையின் சுவையை உணர வாசித்துப் பாருங்கள்.

முகுந்த் அம்மா அவர்கள் தமிழ் பதிவர்களுக்கு பிடிக்காத ஒரு கேள்வியை கேட்டிருக்காங்க அது போட்டி மனப்பான்மை நல்லதா? என்பதுதான். ஆனால் அவங்களோட நியாயமான ஆதங்கத்தை நாம் பாராட்டியே ஆகணும்.

எடக்கு மடக்கா தலைப்பு வைக்கிறதுல நிகர் நம்ம பழமைபேசி அண்ணாச்சிதான். அம்மணம் ன்னு தலைப்பு வச்சி நெத்தியடியா ஒரு கவிதை எழுதியிருக்காரு பாருங்க.

வானம்பாடிகள் ஐயா தானும் யூத்துதான் என்று அடிக்கடி எழுதி நிறுபிப்பார் அதுல ஒன்னுதான் கலாய்க்கப்போவது யாரு -2 பதிவுலக நண்பர்களை கலக்கலாய் கலாய்ச்சு எடுத்திருக்கிறார். அவசியம் போய் பாருங்க.

இது நான் படித்த இடுகைகள். படிக்காமல் விட்டது நிறைய இருக்கலாம். நீங்க படித்ததில் பிடித்த‌தையும் பின்னூட்டத்தில் தெரிவிக்கலாம்.

.

Sunday, March 21, 2010

நீரின்றி அமையாது இவ்வுலகு !

அப்போ 9ம் வகுப்பு படித்துக்கொண்டிருந்தேன் (இப்பவும் அவ்வளவுதானே படிச்சிருக்கேன்னு யாருங்க அங்க சத்தம் கொடுக்கிறது). உறவினர் கல்யாணத்திற்கு சில சொந்தங்களுடன் கொங்கராயகுறிச்சி சென்றோம். மெயின் ரோட்டில் இறங்கி ஆற்றை கடந்து கடந்தோம்.

அப்ப செந்திலுக்கு வந்த சந்தேகம் எனக்கும் வந்தது. நான் அப்பாவிடம் கேட்டேன் இந்த தண்ணியை அப்படியே குடிக்கலாமா என்று (ஏன்னா பள்ளியில் சுத்திகரிப்பு முறைகளை பற்றி பாடம் நடத்தியிருந்தாங்க). எல்லோரும் சிரித்தார்கள்.

அப்பாவுக்கு வந்ததே கோபம். போலே.. போலே.. கேவலப்படுத்துறதுக்குன்னே வந்து சேர்ந்திருக்கான் பாரு.. குடிக்கிற தண்ணிய குடிக்கலாமான்னு கேட்ட முதல் ஆளு நீதான் என்றார்கள் என் கேள்வியின் அர்த்தம் புரியாமலே.

இப்போது அதே கேள்வியை கேட்டால் குடிக்க வேண்டாம்னு சொல்லுவார்கள். ஆறு அவ்வளவு அசுத்தம்.

தண்ணீரை திறந்து விட்டுக்கொண்டே பல் தேய்க்காதீர்கள். குளிக்கும் போது சவரில் குளிக்காதீர்கள். 4 பக்கெட்டுக்கு பதில் 2 பக்கெட் குளித்தால் போதும். இப்படி அப்படின்னு தண்ணீரை சேமிக்க நிறைய வழிகள் சொல்றாங்க. இந்த வழிகளில் தண்ணீரை சேமிக்க முடியும்கிறது மறுக்க முடியாத உண்மை.

ஆனால் சாயப்பட்டறை, பேப்பர் மில், தொழிற்சாலை போன்றவற்றின் கழிவுகளை ஆறு,குளம்,ஏரிகளில் கலந்து. நாம் மேற்சொன்ன வழிகளில் சேமித்த நீரை மொத்தமாக மாசுபடுத்துபவர்களை தடுக்க என்ன வழிகள் உள்ளன?

சிங்கப்பூர் நிறுவனத்துடன் சேர்ந்து கூவத்தை சுத்தப்படுத்துவது நல்ல விசயம்தான். ஆனால் தமிழகத்தில் உள்ள மற்ற நதிகள் எல்லாம் கூவமாகிக்கொண்டு வருவதை யார் தடுப்பது?

இறைவன் நாம் வாழ்வதற்கு தேவையான வசதிகளை அருமையாக அளித்திருக்கிறான். அவற்றை நம் சுய நலத்திற்காக பாழ்படுத்தி விட்டு பிறகு புலம்புவது எந்தவிதத்தில் நியாயம்?

இருக்குற நீர் வளங்களை அசுத்தபடுத்திவிட்டு சந்திரன்ல நீர் இருக்கா, செவ்வாய்ல நீர் இருக்கான்னு தேடிக்கிட்டு இருக்கோம். அங்கேயும் போய் மாசுபடுத்தவா?

மழை நீர் சேகரிப்பு திட்டம் ஒரு அருமையான திட்டம். ஆனால் அதற்கு கட்டபட்ட தொட்டிகள் இன்று எங்கு ? நிலத்தடி நீர் உயர மாற்று வழிகள் ஏதேனும் உள்ளனவா?

தண்ணீரை சிக்கனமாக செலவழித்தால் மட்டும் போதாது முதலில் அதை மாசுபடுத்தாமல் இருக்க வேண்டும்.

நெல்லையில் இருக்கும் வரைக்கும் குடிப்பது முதற்கொண்டு அனைத்துக்கும் ஆற்று நீர்தான். என்று சென்னை சென்றேனோ அப்போதுதான் தண்ணீரோட அருமை தெரிஞ்சது. குளிப்பதற்கு 1 பக்கெட் உப்பு நீர், குடிப்பத்ற்கு கேன் வாட்டர். சென்னையை ஒப்பிடும் போது பாலைவன நாடான சவுதியில் தண்ணீர் பிரச்சனை இல்லை என்று சொல்லலாம்.

சென்னையில் ஒரு நண்பனிடம் கேட்டேன். இங்கு நல்ல குடிநீர் வழங்குவது அரசுக்கு அவ்வளவு கஷ்டமா? அவன் சொன்னன். அப்புறம் தண்ணி வியாபாரிங்கள்லாம் எங்க போவாங்க?

என்று வாழ்க்கைக்கு அத்தியாவசியமானதை வியாபாரமாக்கினோமோ அன்றே அதை பாதுகாக்கும் தகுதியை நாம் இழந்து விட்டோம்.

இன்று உலகம் முழுக்க தண்ணீர் மிகச்சிறந்த வியாபார பொருள்.

என்று ஆளும்வர்க்கம் இதை தடுத்து, வீணாக கடலில் கலக்கும் நன்னீரை முறைபடுத்தி சேமித்து மக்களுக்கு முறையாக வினியோகம் செய்கிறதோ அன்றே பாதி பிரச்சனை தீர்ந்து விடும் என்று நம்புகிறேன். நீர் வளம் நிறைந்த நம் நாட்டில் விலைக்கு வாங்கி குடிப்பது வெட்கக்கேடானது.

தினம் தினம் பயன்படுத்தும் தண்ணீருக்காக ஒரு தினம் அவசியம்தான். நாளை 22 மார்ச் உலக தண்ணீர் தினம்! எனவே மக்களே தண்ணீரை சேமியுங்கள் , தொழிலதிபர்களே தண்ணீரை மாசுபடுத்தாதீர்கள்.

,

Thursday, March 18, 2010

இந்த இடுகைகள் உங்களுக்கு பிடிச்சிருக்கா ?

வார வாரம் படித்ததில் பிடித்த இடுகைகளை (பதிவுகளை பற்றி அல்ல) எழுதாலமென்று ரொம்ப நாளாக‌வே நினைத்துக்கொண்டிருந்தேன். இந்த வாரத்தில் இருந்து தொடங்குகிறேன் உங்களின் விருப்பத்தை பொறுத்து இதை இனி தொடரலாமென்று நினைக்கிறேன்.

இது அறிமுக இடுகையில்லை. உங்களுக்கு பிடித்த , பிரபலமான பதிவர்கள் இதில் வரலாம். எனவே "சூரியனுக்கே டார்ச் லைட்டா"ன்னு கம்பு தூக்க வேண்டாம். :)

வாஸ்து மூலைகளும் மனித மூளைகளும் என்ற இடுகையில் கண்ணா வாஸ்துவைப்பற்றி தகர அடி அடித்திருக்கிறார். மேம்போக்காக சாடாமல் வாஸ்துவை ஆதாரத்துடன் அது தேவையா என்பதை விளக்கியிருக்கிறார். தலைவர் வேலையும் கட்டுமான துறையில்தான்.

நம்ம தல ஸ்டீபனின் கதையை கேட்டிங்கன்னா உங்களுக்கே கோபம் வரும். கைக்குழந்தைகள் உள்ள‌ பெற்றோரைப்பற்றிய அவரின் ஆதங்கம் நியாயமானதா இல்லையா? என்பதை அவரின் குழ‌ந்தைக‌ளுக்காக‌_என்னால் முடிந்தது இடுகையில் படித்து தெரிந்து கொள்ளுங்கள்.


சிறு முயற்சி அப்படின்னு பதிவின் பெயர் இருந்தாலும் சகோதரி முத்துலெட்சுமி தரும் தகவல்கள் சீரிய முயற்சியாக இருப்பது வரவேற்கத்தக்கது. வீடு கட்ட ( கம்யூட்டரில்தான் ) விரும்புபவர்களுக்கு வீட்டைக்கட்டிப்பார்! இடுகை உபயோகமாக இருக்கும்.

கொஞ்சம் தமிழ், கொஞ்சும் தமிழ் பருக‌ ராதாகிருஷ்ணன் சாரின் வள்ளுவனும் கண்ணழகும் ‍ 2 இடுகையை படியுங்கள். வள்ளுவனின் குறளுக்கு விளக்கம் அருமை. அதுவும் தலைவின் கண்ணழகு நம்மை மயக்கத்தான் செய்கிறது.

பெயரில் சேட்டைக்காரனாக இருந்து கொண்டு பின்னூட்ட வேட்டைக்காரனாக இருக்கிறார். தண்ணீரைப்பற்றிய ஜலமஹாத்மியம் கதா காலட்சேப இடுகைக்கு வந்த பின்னூட்டங்களே சொல்லும் அவரின் எழுத்து சுவாரஸ்யத்தை. அதிலும் அந்த எம்.ஜி.ஆர் போட்டோ ரொம்ப டாப்.

படிப்பவரை கரைய வைத்துவிடும் தன்மை பா.ரா. அண்ணனின் எழுத்துக்களுக்கு எப்போதுமே உண்டு. சோகத்தை கூட இயல்பாக சொல்லியிருக்கின்ற புரை ஏறும் மனிதர்கள்‍ஏழு இடுகை நம்மையும் புரை ஏற வைக்கிறது. சாப்பிடும் போது படிக்க வேண்டாம்.

சகோதரி ஹுசைனம்மாவின் அதான் கடல் நிறைய தண்ணி இருக்கே!! இடுகை தண்ணீரைப் பற்றி நாம் இதுவரை அறிந்திராத அரிய தகவ‌ல்களை கொண்டுள்ளது. தண்ணீரின் அவசியம் குறித்த முக்கியமான இடுகைகளில் இதுவும் ஒன்று.

என்ன பாஸ் இது நான் படித்த இடுகைகள். படிக்காமல் விட்டது நிறைய இருக்கலாம். நீங்க படித்ததில் பிடித்த‌தையும் பின்னூட்டத்தில் தெரிவிக்கலாம்.

,

இதையும் விரும்புவீர்கள்.

Related Posts with Thumbnails