Thursday, March 18, 2010

இந்த இடுகைகள் உங்களுக்கு பிடிச்சிருக்கா ?

வார வாரம் படித்ததில் பிடித்த இடுகைகளை (பதிவுகளை பற்றி அல்ல) எழுதாலமென்று ரொம்ப நாளாக‌வே நினைத்துக்கொண்டிருந்தேன். இந்த வாரத்தில் இருந்து தொடங்குகிறேன் உங்களின் விருப்பத்தை பொறுத்து இதை இனி தொடரலாமென்று நினைக்கிறேன்.

இது அறிமுக இடுகையில்லை. உங்களுக்கு பிடித்த , பிரபலமான பதிவர்கள் இதில் வரலாம். எனவே "சூரியனுக்கே டார்ச் லைட்டா"ன்னு கம்பு தூக்க வேண்டாம். :)

வாஸ்து மூலைகளும் மனித மூளைகளும் என்ற இடுகையில் கண்ணா வாஸ்துவைப்பற்றி தகர அடி அடித்திருக்கிறார். மேம்போக்காக சாடாமல் வாஸ்துவை ஆதாரத்துடன் அது தேவையா என்பதை விளக்கியிருக்கிறார். தலைவர் வேலையும் கட்டுமான துறையில்தான்.

நம்ம தல ஸ்டீபனின் கதையை கேட்டிங்கன்னா உங்களுக்கே கோபம் வரும். கைக்குழந்தைகள் உள்ள‌ பெற்றோரைப்பற்றிய அவரின் ஆதங்கம் நியாயமானதா இல்லையா? என்பதை அவரின் குழ‌ந்தைக‌ளுக்காக‌_என்னால் முடிந்தது இடுகையில் படித்து தெரிந்து கொள்ளுங்கள்.


சிறு முயற்சி அப்படின்னு பதிவின் பெயர் இருந்தாலும் சகோதரி முத்துலெட்சுமி தரும் தகவல்கள் சீரிய முயற்சியாக இருப்பது வரவேற்கத்தக்கது. வீடு கட்ட ( கம்யூட்டரில்தான் ) விரும்புபவர்களுக்கு வீட்டைக்கட்டிப்பார்! இடுகை உபயோகமாக இருக்கும்.

கொஞ்சம் தமிழ், கொஞ்சும் தமிழ் பருக‌ ராதாகிருஷ்ணன் சாரின் வள்ளுவனும் கண்ணழகும் ‍ 2 இடுகையை படியுங்கள். வள்ளுவனின் குறளுக்கு விளக்கம் அருமை. அதுவும் தலைவின் கண்ணழகு நம்மை மயக்கத்தான் செய்கிறது.

பெயரில் சேட்டைக்காரனாக இருந்து கொண்டு பின்னூட்ட வேட்டைக்காரனாக இருக்கிறார். தண்ணீரைப்பற்றிய ஜலமஹாத்மியம் கதா காலட்சேப இடுகைக்கு வந்த பின்னூட்டங்களே சொல்லும் அவரின் எழுத்து சுவாரஸ்யத்தை. அதிலும் அந்த எம்.ஜி.ஆர் போட்டோ ரொம்ப டாப்.

படிப்பவரை கரைய வைத்துவிடும் தன்மை பா.ரா. அண்ணனின் எழுத்துக்களுக்கு எப்போதுமே உண்டு. சோகத்தை கூட இயல்பாக சொல்லியிருக்கின்ற புரை ஏறும் மனிதர்கள்‍ஏழு இடுகை நம்மையும் புரை ஏற வைக்கிறது. சாப்பிடும் போது படிக்க வேண்டாம்.

சகோதரி ஹுசைனம்மாவின் அதான் கடல் நிறைய தண்ணி இருக்கே!! இடுகை தண்ணீரைப் பற்றி நாம் இதுவரை அறிந்திராத அரிய தகவ‌ல்களை கொண்டுள்ளது. தண்ணீரின் அவசியம் குறித்த முக்கியமான இடுகைகளில் இதுவும் ஒன்று.

என்ன பாஸ் இது நான் படித்த இடுகைகள். படிக்காமல் விட்டது நிறைய இருக்கலாம். நீங்க படித்ததில் பிடித்த‌தையும் பின்னூட்டத்தில் தெரிவிக்கலாம்.

,

22 comments:

Starjan ( ஸ்டார்ஜன் ) said...

அட இது நல்லாருக்கே..

Chitra said...

அத்தனை பதிவுகளும் அருமையானவை.

SUREஷ் (பழனியிலிருந்து) said...

வர வர ஐ.பி. எல் பாணீயில் போய் கொண்டு இருக்கிறீர்கள் வாழ்த்துக்கள்..,

ஜெட்லி said...

படிச்சிட்டு சொல்றேன்....

சைவகொத்துப்பரோட்டா said...

சில எனக்கு புதிய அறிமுகம், நன்றி அக்பர்.

T.V.ராதாகிருஷ்ணன் said...

நன்றி அக்பர்.

karthik said...

தொகுப்புகள்
அருமை

ரிஷபன் said...

நல்ல முயற்சி.. அறிமுகங்களுக்கு நன்றி..

ஜோதிஜி said...

உருப்படியான முயற்சி.

வெங்கட் said...

இனி உங்க பதிவ படிச்சா போதும்..,
எங்களுக்காக நல்ல நல்ல பதிவா
தேடி பிடிச்சி போட்டிருக்கீங்க..
தொடரட்டும்.. வாழ்த்துக்கள்...!

கண்ணா.. said...

தல ...

நல்ல பதிவிற்கான உங்க தொகுப்பில் என் பதிவையும் இணைத்தற்கு நன்றி..

ஆனா கொத்தனார் கைல கிடைச்ச செங்கல்ன்னு சொல்லி வாரிட்டயே மக்கா....


:))

கண்ணா.. said...

இதில் ஹுசைனம்மா பதிவை மட்டும்தான் படித்திருக்கிறேன்..

அறிமுகத்திற்கு நன்றி தல...இன்று வெளியில் செல்வதால் நாளைக்கு அனைத்து பதிவுகளையும் படித்து பின்னூட்டமிடுகிறேன்.

===

அட இதுவும் நல்லா இருக்கே... நல்ல பதிவுகளை நம் முலம் ஓரிருவர் அறிந்தால் கூட நல்ல விஷயம்தானே..


தூள் பரத்து .. மக்கா...

கண்ணா.. said...

போன பின்னூட்டத்தில ஒரு சின்ன மிஸ்டேக் தல..

நாடோடி @ ஸ்டீபன் பதிவையும் படித்து பின்னூட்டமிட்டிருக்கிறேன்.

thenammailakshmanan said...

ஏழு பதிவுகளும் அருமை அக்பர்

DREAMER said...

சிலரது இடுகைகள் படிக்கும்போது, இன்னும் இதுபோல எவ்வளவு இடுகைகள் இருக்கோ, அதை நாம எங்கே போய் தேடுறதுன்னு ஒரு உணர்வு வரும்.

அந்த உணர்வுகளுக்கு விடையளிக்கும்படி உங்களது இந்த தொகுப்பு சிறப்பாக அமைந்துள்ளது.

மிக்க நன்றி!

-
DREAMER

நாடோடி said...

என்ன தல..பதிவுகளுக்கே பதிவா?....... நல்லா இருக்கு, நீங்க சொல்லியிருக்கிற பதிவுகள் அனைத்தும் அருமை.. தொடருங்கள்

அக்பர் said...

வாங்க

Starjan ( ஸ்டார்ஜன் )

Chitra

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

அக்பர் said...

வாங்க தல‌

//வர வர ஐ.பி. எல் பாணீயில் போய் கொண்டு இருக்கிறீர்கள் வாழ்த்துக்கள்..,//

அவ்வளவு வேகமாவா... இருக்கு.

நன்றி தல‌

அக்பர் said...

வாங்க

ஜெட்லி

சைவகொத்துப்பரோட்டா

T.V.ராதாகிருஷ்ணன்

karthik

ரிஷபன்

ஜோதிஜி

வெங்கட்

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

அக்பர் said...

வாங்க கண்ணா

//ஆனா கொத்தனார் கைல கிடைச்ச செங்கல்ன்னு சொல்லி வாரிட்டயே மக்கா....//

எடுத்துட்டேன்.

கண்ணா உங்கள் பதிவு உண்மையிலேயே அருமை. இது போல் தொடர்ந்து எழுதுங்கள்.

அக்பர் said...

வாங்க

தேனம்மை அக்கா,

DREAMER

நாடோடி

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

கண்ணா.. said...

//
//ஆனா கொத்தனார் கைல கிடைச்ச செங்கல்ன்னு சொல்லி வாரிட்டயே மக்கா....//

எடுத்துட்டேன்.
//

அட எதுக்கு தல .. எடுத்த...

இந்த மாதிரி கலாய்த்தல்தான் நல்லா இருக்கும்..

:))

இதையும் விரும்புவீர்கள்.

Related Posts with Thumbnails