படித்ததில் பிடித்த இடுகைகளை (பதிவுகளை பற்றி அல்ல) போன வாரம் எழுதினேன். அதற்கு தாங்கள் அளித்த வரவேற்பு என்னை இந்த வாரமும் தொடரவைக்கிறது. இதோ இந்த வாரம் படித்ததில் பிடித்தது.
இதில் உங்களுக்கு பிடித்த , பிரபலமான பதிவர்கள் வரலாம். எனவே "சூரியனுக்கே டார்ச் லைட்டா"ன்னு கம்பு தூக்க வேண்டாம். :)
அண்ணன் உண்மைதமிழன் "மக்கள் நித்தியானந்தன்களைத் தேடி ஏன் ஓட வேண்டும்..?" அப்படின்னு கேள்வி கேட்டு அவர் ஸ்டைலிலேயே அருமையாக விளக்கமும் கொடுத்திருக்கிறார். பதிவு எவ்வளவு நீளமாக இருந்தாலும் படித்து விட்டு போக வைப்பது அவர் எழுத்தின் சிறப்பு.
நான் நேசிக்கும் பத்து புத்தகங்கள் 4 மனோ எழுதிய இந்த தலைப்பே வாசிக்கத்தூண்டிகிறது. விரும்பும் காரணத்தை விளக்குவதோடு மட்டுமில்லாமல் வாசிக்கும் ஒவ்வொருவரையும் தொடரவும் சொல்லியிருக்கிறார். வாசியுங்கள் தொடருங்கள்.
நம்ம சஞ்சய் காந்தி அவர்கள் My Name is Bloody Blogger ன்னு அதிரடியா ஒரு பதிவு போட்டிருக்கார். ஏன் ஆங்கிலத்துல தலைப்பு வைக்கணும்னு யாராவது கேட்டிங்கன்னா , அதற்கும் பதில் சொல்லியிருக்கிறார். போய்த்தான் பாருங்களேன்.
நம்ம க. பாலாசி அவர்கள் திராட்சை என்றும் இனிப்புதான்.... என்று ஒரு அரிய கண்டுபிடிப்பை எழுதியிருக்கிறார். ஆனால் அதற்கு சொல்லும் காரணம் மிக சுவாரஸ்யம். நீங்களும் திராட்சையின் சுவையை உணர வாசித்துப் பாருங்கள்.
முகுந்த் அம்மா அவர்கள் தமிழ் பதிவர்களுக்கு பிடிக்காத ஒரு கேள்வியை கேட்டிருக்காங்க அது போட்டி மனப்பான்மை நல்லதா? என்பதுதான். ஆனால் அவங்களோட நியாயமான ஆதங்கத்தை நாம் பாராட்டியே ஆகணும்.
எடக்கு மடக்கா தலைப்பு வைக்கிறதுல நிகர் நம்ம பழமைபேசி அண்ணாச்சிதான். அம்மணம் ன்னு தலைப்பு வச்சி நெத்தியடியா ஒரு கவிதை எழுதியிருக்காரு பாருங்க.
வானம்பாடிகள் ஐயா தானும் யூத்துதான் என்று அடிக்கடி எழுதி நிறுபிப்பார் அதுல ஒன்னுதான் கலாய்க்கப்போவது யாரு -2 பதிவுலக நண்பர்களை கலக்கலாய் கலாய்ச்சு எடுத்திருக்கிறார். அவசியம் போய் பாருங்க.
இது நான் படித்த இடுகைகள். படிக்காமல் விட்டது நிறைய இருக்கலாம். நீங்க படித்ததில் பிடித்ததையும் பின்னூட்டத்தில் தெரிவிக்கலாம்.
.
13 comments:
ஆகா...உடனடி இடுகையா? பாலாசியோட இடுகை...அபாரமுங்க!
அது... சுடச் சுட கொடுத்து இருக்கீங்க..
சூப்பர் அப்பு... கீப் இட் அப்...
ரைட்டு, படிச்சிரலாம்.
நீங்கள் அடையாளம் காட்டியதில் விடுபட்ட சில இடுக்கைகளையும் படித்துவிடுகிறேன்ங்க.
உங்க ரசனை சூப்பர்! வித விதமாப் படிக்கறீங்க! ரைட்டு!!!!
சூப்பர்!
Good choices!
Hello
you can post your news on http://www.thalaivan.com
also
THANKS
வாங்க மணி அண்ணா
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
வாங்க
இராகவன் நைஜிரியா
சைவகொத்துப்பரோட்டா
தாராபுரத்தான்
சேட்டைக்காரன்
T.V.ராதாகிருஷ்ணன்
Chitra
thalaivan
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
இந்த வார அறிமுக பதிவுகள் அனைத்தும் அருமை...இதில் எனக்கு பல புதிது..
வாங்க
நாடோடி
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
சூப்பர் சூப்பர்
இங்க வாங்க வந்து வாங்கிக்குங்க அக்பர்.
http://kalaisaral.blogspot.com/2010/03/blog-post_27.html
Post a Comment