Sunday, March 21, 2010

நீரின்றி அமையாது இவ்வுலகு !

அப்போ 9ம் வகுப்பு படித்துக்கொண்டிருந்தேன் (இப்பவும் அவ்வளவுதானே படிச்சிருக்கேன்னு யாருங்க அங்க சத்தம் கொடுக்கிறது). உறவினர் கல்யாணத்திற்கு சில சொந்தங்களுடன் கொங்கராயகுறிச்சி சென்றோம். மெயின் ரோட்டில் இறங்கி ஆற்றை கடந்து கடந்தோம்.

அப்ப செந்திலுக்கு வந்த சந்தேகம் எனக்கும் வந்தது. நான் அப்பாவிடம் கேட்டேன் இந்த தண்ணியை அப்படியே குடிக்கலாமா என்று (ஏன்னா பள்ளியில் சுத்திகரிப்பு முறைகளை பற்றி பாடம் நடத்தியிருந்தாங்க). எல்லோரும் சிரித்தார்கள்.

அப்பாவுக்கு வந்ததே கோபம். போலே.. போலே.. கேவலப்படுத்துறதுக்குன்னே வந்து சேர்ந்திருக்கான் பாரு.. குடிக்கிற தண்ணிய குடிக்கலாமான்னு கேட்ட முதல் ஆளு நீதான் என்றார்கள் என் கேள்வியின் அர்த்தம் புரியாமலே.

இப்போது அதே கேள்வியை கேட்டால் குடிக்க வேண்டாம்னு சொல்லுவார்கள். ஆறு அவ்வளவு அசுத்தம்.

தண்ணீரை திறந்து விட்டுக்கொண்டே பல் தேய்க்காதீர்கள். குளிக்கும் போது சவரில் குளிக்காதீர்கள். 4 பக்கெட்டுக்கு பதில் 2 பக்கெட் குளித்தால் போதும். இப்படி அப்படின்னு தண்ணீரை சேமிக்க நிறைய வழிகள் சொல்றாங்க. இந்த வழிகளில் தண்ணீரை சேமிக்க முடியும்கிறது மறுக்க முடியாத உண்மை.

ஆனால் சாயப்பட்டறை, பேப்பர் மில், தொழிற்சாலை போன்றவற்றின் கழிவுகளை ஆறு,குளம்,ஏரிகளில் கலந்து. நாம் மேற்சொன்ன வழிகளில் சேமித்த நீரை மொத்தமாக மாசுபடுத்துபவர்களை தடுக்க என்ன வழிகள் உள்ளன?

சிங்கப்பூர் நிறுவனத்துடன் சேர்ந்து கூவத்தை சுத்தப்படுத்துவது நல்ல விசயம்தான். ஆனால் தமிழகத்தில் உள்ள மற்ற நதிகள் எல்லாம் கூவமாகிக்கொண்டு வருவதை யார் தடுப்பது?

இறைவன் நாம் வாழ்வதற்கு தேவையான வசதிகளை அருமையாக அளித்திருக்கிறான். அவற்றை நம் சுய நலத்திற்காக பாழ்படுத்தி விட்டு பிறகு புலம்புவது எந்தவிதத்தில் நியாயம்?

இருக்குற நீர் வளங்களை அசுத்தபடுத்திவிட்டு சந்திரன்ல நீர் இருக்கா, செவ்வாய்ல நீர் இருக்கான்னு தேடிக்கிட்டு இருக்கோம். அங்கேயும் போய் மாசுபடுத்தவா?

மழை நீர் சேகரிப்பு திட்டம் ஒரு அருமையான திட்டம். ஆனால் அதற்கு கட்டபட்ட தொட்டிகள் இன்று எங்கு ? நிலத்தடி நீர் உயர மாற்று வழிகள் ஏதேனும் உள்ளனவா?

தண்ணீரை சிக்கனமாக செலவழித்தால் மட்டும் போதாது முதலில் அதை மாசுபடுத்தாமல் இருக்க வேண்டும்.

நெல்லையில் இருக்கும் வரைக்கும் குடிப்பது முதற்கொண்டு அனைத்துக்கும் ஆற்று நீர்தான். என்று சென்னை சென்றேனோ அப்போதுதான் தண்ணீரோட அருமை தெரிஞ்சது. குளிப்பதற்கு 1 பக்கெட் உப்பு நீர், குடிப்பத்ற்கு கேன் வாட்டர். சென்னையை ஒப்பிடும் போது பாலைவன நாடான சவுதியில் தண்ணீர் பிரச்சனை இல்லை என்று சொல்லலாம்.

சென்னையில் ஒரு நண்பனிடம் கேட்டேன். இங்கு நல்ல குடிநீர் வழங்குவது அரசுக்கு அவ்வளவு கஷ்டமா? அவன் சொன்னன். அப்புறம் தண்ணி வியாபாரிங்கள்லாம் எங்க போவாங்க?

என்று வாழ்க்கைக்கு அத்தியாவசியமானதை வியாபாரமாக்கினோமோ அன்றே அதை பாதுகாக்கும் தகுதியை நாம் இழந்து விட்டோம்.

இன்று உலகம் முழுக்க தண்ணீர் மிகச்சிறந்த வியாபார பொருள்.

என்று ஆளும்வர்க்கம் இதை தடுத்து, வீணாக கடலில் கலக்கும் நன்னீரை முறைபடுத்தி சேமித்து மக்களுக்கு முறையாக வினியோகம் செய்கிறதோ அன்றே பாதி பிரச்சனை தீர்ந்து விடும் என்று நம்புகிறேன். நீர் வளம் நிறைந்த நம் நாட்டில் விலைக்கு வாங்கி குடிப்பது வெட்கக்கேடானது.

தினம் தினம் பயன்படுத்தும் தண்ணீருக்காக ஒரு தினம் அவசியம்தான். நாளை 22 மார்ச் உலக தண்ணீர் தினம்! எனவே மக்களே தண்ணீரை சேமியுங்கள் , தொழிலதிபர்களே தண்ணீரை மாசுபடுத்தாதீர்கள்.

,

26 comments:

Starjan (ஸ்டார்ஜன்) said...

அருமையான கட்டுரை. நீரின்றி அமையாது எவ்வுலகும்..

settaikkaran said...

மிகவும் எதார்த்தமான பதிவு. பாராட்டுக்கள்

Chitra said...

தண்ணீரை சிக்கனமாக செலவழித்தால் மட்டும் போதாது முதலில் அதை மாசுபடுத்தாமல் இருக்க வேண்டும்.

......... true.

ஹுஸைனம்மா said...

//இருக்குற நீர் வளங்களை அசுத்தபடுத்திவிட்டு சந்திரன்ல நீர் இருக்கா, செவ்வாய்ல நீர் இருக்கான்னு தேடிக்கிட்டு இருக்கோம். அங்கேயும் போய் மாசுபடுத்தவா?//

நல்லாக் கேட்டீங்க.

கண்ணா.. said...

//சிங்கப்பூர் நிறுவனத்துடன் சேர்ந்து கூவத்தை சுத்தப்படுத்துவது நல்ல விசயம்தான். ஆனால் தமிழகத்தில் உள்ள மற்ற நதிகள் எல்லாம் கூவமாகிக்கொண்டு வருவதை யார் தடுப்பது?//

இதுக்கு அரசாங்க முயற்சியை விடவும் மக்களின் முயற்சிதான் மிகவும் முக்கியம்.


நல்ல பதிவு அக்பர்..

ரிஷபன் said...

சென்னையில் ஒரு நண்பனிடம் கேட்டேன். இங்கு நல்ல குடிநீர் வழங்குவது அரசுக்கு அவ்வளவு கஷ்டமா? அவன் சொன்னன். அப்புறம் தண்ணி வியாபாரிங்கள்லாம் எங்க போவாங்க?
அட ஆமா.. இதுதான் அரசியல் அலட்சியத்தின் காரணமா

Anonymous said...

நல்ல பதிவு அக்பர்.

Prathap Kumar S. said...

சூப்பரா சொன்னீங்க அக்பர்.... நாமல்லாம் ஆத்துல குளிச்சே முக்கால் வாசி தண்ணியை மாசுப்படுத்திட்டோம்... தொழிற்சாலைங்க அதுக்குமேல...என்னத்தச்சொல்ல

ஜெட்லி... said...

டாஸ்மாக்ல தான் அவ்ளோ தண்ணி இருக்கு இல்ல...
அப்புறம் ஏன் குடிமக்கள் கவலை பட போறாங்க....:))
நல்ல மெசேஜ்...

தாராபுரத்தான் said...

தண்ணீரை நினைத்தால்....கணணீர்தான் வருகிறது.

பழமைபேசி said...

//தாராபுரத்தான் said...
தண்ணீரை நினைத்தால்....கணணீர்தான் வருகிறது.

March 22, 201//

அண்ணா, நிறைய தண்ணி குடிங்க... கண்ணீருக்கே தண்ணீர் தேவை...

T.V.ராதாகிருஷ்ணன் said...

அருமையான கட்டுரை

ஷங்கி said...

நல்ல அருமையான கட்டுரை அக்பர்.

நாடோடி said...

நல்ல பதிவு அக்பர்... வாழ்த்துக்கள்.

சைவகொத்துப்பரோட்டா said...

சபாஷ்!! நாம் மாசு "படுத்தாமல்" இருந்தாலே போதும்.

SUFFIX said...

நல்லா எழுதியிருக்கீங்க அக்பர், இன்னும் மிச்சம் மீதி இருக்கிற குளம், குட்டைகளையும் ப்ளாட் போடுவதற்கு முன், அரசு அவைகளை தூர் வாரினால், நிலத்தடி நீர் சேமிப்பிற்கு வழி வகுக்கும்.

அன்புடன் மலிக்கா said...

மிகவும் அருமையான கட்டுரை அக்பர்
எதார்த்தமாகவும் இருக்கு அருமை..

அமைதி அப்பா said...

சந்திரன்ல நீர் இருக்கா, செவ்வாய்ல நீர் இருக்கான்னு தேடிக்கிட்டு இருக்கோம். அங்கேயும் போய் மாசுபடுத்தவா?//

மழை நீர் சேகரிப்பு திட்டம் ஒரு அருமையான திட்டம். ஆனால் அதற்கு கட்டபட்ட தொட்டிகள் இன்று எங்கு ?//

நியாயமான கேள்விகள், பதில் சொல்லத்தான் ஆளில்லை...!

எனக்கு பெட்ரோல் செலவு மாதம் 200 ரூபாய், தண்ணீர் செலவு குடிக்க 300 ரூபாய், குளிக்க 1000 ரூபாய்.

Thenammai Lakshmanan said...

சிங்கப்பூர் நிறுவனத்துடன் சேர்ந்து கூவத்தை சுத்தப்படுத்துவது நல்ல விசயம்தான். ஆனால் தமிழகத்தில் உள்ள மற்ற நதிகள் எல்லாம் கூவமாகிக்கொண்டு வருவதை யார் தடுப்பது?//

தொழில் அதிபர்களையும் நல்லா கேள்வி கேட்டீங்க ஸ்டார்ஜன்

சிநேகிதன் அக்பர் said...

வாங்க

Starjan ( ஸ்டார்ஜன் )

சேட்டைக்காரன்

Chitra

ஹுஸைனம்மா

கண்ணா..

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

சிநேகிதன் அக்பர் said...

வாங்க

ரிஷபன்

கடையம் ஆனந்த்

நாஞ்சில் பிரதாப்

ஜெட்லி

தாராபுரத்தான்

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

சிநேகிதன் அக்பர் said...

வாங்க

பழமைபேசி

T.V.ராதாகிருஷ்ணன்

ஷங்கி

நாடோடி

சைவகொத்துப்பரோட்டா

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

சிநேகிதன் அக்பர் said...

வாங்க

SUFFIX

அன்புடன் மலிக்கா

அமைதி அப்பா

thenammailakshmanan

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

பனித்துளி சங்கர் said...

முகவும் நேர்த்தியான எழுத்து நடை . பதிவு அருமை வாழ்த்துக்கள் நண்பரே

Nathanjagk said...

"நீரின்றி அமையாது இவ்வுலகு!"
க​ரெக்டுங்க.. ஹாவ்வ்வ்!

சிநேகிதன் அக்பர் said...

வாங்க‌

சங்கர்

மாம்ஸ்

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

இதையும் விரும்புவீர்கள்.

Related Posts with Thumbnails