Thursday, June 16, 2011

திருநெல்வேலி அல்வா (தொடர்பதிவு)








நம்ம ஊரை பத்தி எழுதச் சொல்லி நம்ம ஸாதிகா அக்கா ஒரு தொடர்பதிவுக்கு அழைச்சிருந்தாங்க. நெல்லையில பதிவர் சந்திப்பு நடக்கப்போற இந்த நேரத்துல இதை எழுத வாய்ப்பு கிடைச்சது உண்மையிலேயே சந்தோசமா இருக்கு.




எங்கூரு கதை மொத்தத்தையும் இந்த கட்டுரைல சொல்லணும்கிறது தாமிரபரணி ஆத்த சொம்புக்குள்ள அடைச்சி வைக்கிற மாதிரி ஆயிடும். அதனால இப்போ சொல்ற எல்லாமே ட்ரைலரா நெனச்சுகிடுங்க. மெயின் பிச்சர ஒரு தொடரா பின்னாடி எழுதலாம்.

தாமிரபரணி! பேரக்கேட்டாலே சும்மா ஜில்லுன்னு இருக்குல்ல... அதாண்ணே எங்கூரோட முதுகெலும்பு. ஆனா அதுல மண்ணள்ளி.. இல்ல இல்ல, அதுல மண்ணெடுத்து ஆத்தையே முடமாக்கிகிட்டு இருக்காங்க பாவி பயலுவ. சரி இப்ப அந்த சோகம் எதுக்கு நாம ஊரச் சுத்தி பார்க்கலாம் வாங்க
.

, உங்களுக்கொரு விசயம் தெரியுமா? திருநெவேலி 2000 வருஷத்துக்கு முன்னாடியே தோன்றுன ஆத்தங்கரை நாகரீகம்ணே. ஊரை பத்தி பேசுறதுக்கு பதிலா ஆத்தபத்தி பேசினாலே மொத்த ஊரும் அதுக்குள்ள வந்துரும். ஆறு போற எடம் பூரா பச்ச பசேல்னுட்டு கண்ணுக்கெட்டுன தூரம் பூராவயல் வரப்பும், வாய்க்காலுமா இருக்கும் இப்போ அதுல பாதி எடத்த ப்ளாட் போட்டு விக்கிறாங்க அது வேற கத
.

நம்ம மணி அண்ணனோட ரோஜா படத்துல, மதுபாலாக்காசின்ன சின்ன ஆசைன்னுபாடிக்கிட்டே ஒரு அருவில குளிக்கும்ல‌,அதான் பாணதீர்த்த அருவி. பொதிகை மலையில இருந்து விழும் பாணதீர்த்த அருவி தரை தொட்டு தாமிரபரணியா மாறுத அழக பார்த்துகிட்டே இருக்கலாம்ல. அங்கன ஒரு டேம் இருக்கு வெள்ளக்காரன் கட்னது.டேம் உள்ள ஊரு பேரு
காரையார்.



இங்கதான், எப்பேர்பட்ட மஞ்சக்காமாலையையும் தன்னோட மூலிகை மருந்தால குணப்படுத்தும் 100 வயசான அன்னம்மாள் பாட்டி இருந்தாங்க(இப்ப இல்ல). நான் கல்கத்தால இருந்தப்ப மஞ்சகாமாலை வந்து, அதனால ஊர் வந்து இவங்ககிட்ட மருந்து சாப்பிட்டு, அவங்க சொன்ன மாதிரி ஆத்துல ஒரு முங்கு போட்டேன். ரெண்டுமாசமா தீராம இருந்த மஞ்சக்காமாலை மருந்து சாப்பிட்ட ஒரு வாரத்துல படிப்படியா கொறஞ்சிட்டுது. அதுதாம்ணே தாமிரபரணி மகிமை.

அப்டி மலையில இருந்து கீழ எறங்குற ஆறு முதல்ல தொடுற இடம் பாபநாசம். இந்த ஊருக்கு இடப்பக்கம் 30 கிமி தள்ளி குற்றாலம் இருக்கு வலப்பக்கம் 20 கிமி தள்ளி மணிமுத்தாறு இருக்கு, அது மேல மாஞ்சோலை எஸ்டேட் இருக்கு. ஊட்டி, கொடைக்கானல் போறவங்க மாஞ்சோலை எஸ்டேட்டுக்கு போகலாம் அவ்வளவு அழகான தேயிலை தோட்டங்கள் நிறைந்த ஊர். போற பாதை செம த்ரிலிங்க இருக்கும்.



மாஞ்சோலையில் நான்.

அதுல இருந்து அம்பாசமுத்திரம், கல்லிடைகுறிச்சி, வீரவ நல்லூர், சேர்மாதேவி, கல்லூர், சுத்தமல்லி, கோபலசமுத்திரம், கருங்காடு, குன்னத்தூர், மேலப்பாளையம், குறுக்குத்துறை வழியா திருநெல்வேலி சந்திப்ப அடையுது. அங்கிருந்து சிந்துபூந்துறை, கருங்குளம், திருவைகுண்டம், ஆத்தூர் வழியா போய் புன்னக்காயலில் கடல்ல கலக்குது. நெல்லை தொடங்கி தூத்துக்குடி மாவட்டத்தில் முடியுது நம்ம ஆறு.





ஆறு பக்கத்துல இருக்கும் போது மீன்கள பத்தி கேட்கவா வேணும்! கெண்டை, கெளுத்தி,விரால்,அயிரைன்னு நிறைய வகைகள் உயிரோட கிடைக்கும். இது போக வாய்க்கால்ல மட்டும் கிடைக்க கூடிய விலாங்கு, ஆரா மீன்கள் ரொம்ப ஸ்பெஷல்.



இதுல சுத்தமல்லி ஊர்ல இருந்து 5 கிமி தள்ளி இருக்குது பேட்டை.

கண்ணியத்திற்குரிய
காயிதே மில்லத் இஸ்மாயில் சாஹிப் பிறந்த அந்த பேட்டை தான் எங்க சொந்த ஊர். 200 வருடங்கள் பழமை வாய்ந்த புனித அந்தோனியார் பள்ளிலதான் எட்டாம் வகுப்பு வரையும், அதற்கப்புறம் நெல்லை சாப்டர் மேனிலைப்பள்ளியிலும் படிச்சேன்.

பேட்டையில காமராஜர் மேனிலைப்பள்ளி, ராணி அண்ணா பெண்கள் மேனிலைப்பள்ளி, மா.தி.தா இந்து கல்லூரி, அரசு .டி.,பக்கத்துல உள்ள பழைய பேட்டையில் மகளிர் கல்லூரி என முழுமையான படிப்பு வசதி உள்ள ஊர் பேட்டை. சுற்றியுள்ள கிராமங்கள்ல இருந்தெல்லாம் வந்து இங்கு நிறைய பேர் படிக்கிறாங்க
.

பேட்டைக்குள்ளேயே இருக்குற தொழிற்பேட்டையில, பல சிறிய தொழிற்சாலைகள் நடந்துகிட்டு இருக்கு, எல்லாத்துக்கும் மேலதென்னிந்திய கூட்டுறவு நூற்பாலை(பேட்டை மில்) இங்கே இருக்கும் போது நல்ல பணப்புழக்கமும் இருந்துச்சு
.

இங்கு ஊதுற சங்கு சத்தத்தை வச்சுத்தான் எங்கூர்ல மணியே சொல்வாங்க. இதுக்கு முந்தைய .தி.மு. ஆட்சியில அதுக்கும் சங்கு ஊதிட்டாங்க. அதுக்கு பின்னாடி வந்த ஆட்சியில திறக்கிறேனாங்க. இன்னிக்கு வரைக்கும் இல்ல
.

மா.தி,தா இந்து கல்லூரியோட பள்ளி நெல்லை சந்திப்புல இருக்கு.மகாகவி சுப்பிரமணிய
பாரதியார் படிச்ச பெருமையும் இந்த பள்ளிக்கு இருக்கு.

நெல்லை நகரோட ஒரே பொழுதுபோக்கு தியேட்டர்கள்தான் நீங்க இறங்குற எந்த பஸ் ஸ்டாப்பு பக்கத்துலயும் ஒரு தியேட்டர் இருக்கும். உண்மையைச் சொல்ல போனா தியேட்டரை கணக்கு பண்ணித்தான் பஸ் ஸ்டாப்பே இருக்கும்
.

அதுக்கு அடுத்ததா ஜங்ஷன் தாமிரபரணி ஆத்து பாலத்தை ஒட்டி மாவட்ட அறிவியல் மையம் அமைஞ்சிருக்கு. இங்கும் குழந்தைகளோட நிறைய பேர் போவாங்க. இங்குள்ள டிஜிட்டல் கோளரங்கம் பார்க்கவேண்டிய ஒன்னு
.

பேட்டையில இருந்து மூணு கிலோமீட்டர் தூரத்துலதான் நெல்லை டவுண், இங்கே இருக்கும் புகழ் பெற்ற நெல்லையப்பர் கோவிலை சுத்தி இருக்கிற நாலு ரதவீதியும் தான் நெல்லையோட தெற்கு உஸ்மான் சாலை. ஆரெம்கேவி, போத்தீஸ், நாவல்டி, சோனா அப்படின்னு இங்கே இல்லாத துணிக்கடைகளே இல்லை ( இப்ப ஆரெம்கேவியை வண்ணார்பேட்டைக்கு மாத்திட்டாங்க) அதுபோலவே அனைத்து தங்க நகைக்கடைகளும் இங்கதான் இருக்கு
.

கல்யாணம், காதுகுத்து, சடங்கு, வளைகாப்புன்னு எல்லா விசேஷத்துக்கும் சாமான் வாங்க சொந்த பந்தத்தையெல்லாம் கூட்டிட்டு படைபடையா இங்க தான் வந்து எறங்குவோம். ஒரு பட்டு எடுக்க ஊரையே கூட்டிட்டு போற பெருமையை நாங்க யாருக்காகவும் விட்டுக்கொடுத்ததே இல்ல
.

அப்புறம் துணிமணி, நகை நட்டெல்லாம் எடுத்துட்டு, எல்லாத்தையும் கூட்டிட்டு ஒரு ஹோட்டலுக்கு போய் டிபனோ அல்லது ஒரு டீயும் வடையுமோ வாங்கி கொடுக்கலைன்னு வைங்க. உங்க பேரு ஊரு பூரா நாறிப்போயிரும்
.

நெல்லை புரோட்டா சால்னாவுக்கும், சைவச் சாப்பாட்டுக்கும் ரொம்ப பேமஸ் கொறஞ்ச விலையில தரமான சாப்பாடு ஊரைச்சுத்தி கிடைக்கும். இவ்வளவு சொல்லிட்டு இருட்டுக்கடையை பத்தி சொல்லாமலா... நெல்லையப்பர் கோவிலுக்கு எதிர்த்தாப்லதான் இருட்டுக்கடை அல்வா இருக்கு. சாயந்திரம் 5 மணில இருந்து 10 மணி வரைக்கும்தான் வியாபராம் ச்ச்சே.. வியாபாரம். (பாருங்க அல்வாவப்பத்தி பேசுனா எழுத்தே வழுக்குது
).

இந்த கடைக்கு பேர் போர்டெல்லாம் கிடையாது. ஆனா ஊரைச்சுத்தி இருட்டுக்கடை அல்வான்னு போர்டு தொங்குற கடைகளெல்லாம் ஒரிஜினல் இருட்டுக்கடை கிடையாது. அதே போர்டு வைக்க முடிஞ்சவங்களுக்கு அல்வால அதே டேஸ்ட்ட வைக்க முடியலை
.



வெள்ளையடிக்கிற கடைதான் இருட்டுக்கடை


அது போல ஜங்ஷன்ல இருக்குறசாந்தி ஸ்வீட்ஸ்லாலா கடையும் அல்வாவுக்கும் மிக்சர் ,ஸ்வீட்ஸ்க்கும் ரொம்ப பேமஸ். மொய்க்க எடம் கொடுக்காத அளவுக்கு எந்நேரமும் கூட்டம் மொச்சிக்கிட்டு நிக்கும்.
ஊரெல்லாம் சாந்தி ஸ்வீட்ஸ்ன்னு பேர் வச்ச கடைகள் இருந்தாலும் இதுதான் ஒரிஜினல் சாந்தி ஸ்வீட்ஸ்.

அதுமாதிரி சாந்திக்கு ஸ்வீட்ஸ்க்கு எதிர்த்தாப்ல‌ இருக்குற லட்சுமி விலாஸ் லாலா கடையிலும், அரசன் ஸ்வீட்ஸிலும் தரமான அல்வா கிடைக்கும்.





நெல்லை நகரத்துக்கு இணையா ஆத்துக்கு அந்த புறம் இருக்கிற நகரம் பாளையங்கோட்டைதென்னகத்தின் ஆக்ஸ்போர்டுங்கிற பெருமைக்குரிய நகரம். இங்கதான் நம்ம சித்ராக்கா பிறந்தாங்கங்கிறது இன்னும் சிறப்பு.

இந்த ரெண்டு நகரத்தையும் இணைக்கிற ஆத்து பாலம் வெள்ளைக்காரங்க காலத்துல நமது சுலோச்சன முதலியார் அவங்களால கட்டப்பட்டது.

என்ன அதுக்குள்ள எங்க கெளம்பிட்டிங்க நெல்லையில நடக்கிற பதிவர் சந்திப்புக்கா? , அதுக்குத்தான் இன்னும் நாள் இருக்குல்ல... சரி போனா நான் சொன்ன இடங்களையும் மறக்காம பாத்துட்டு வந்து எழுதுங்க என்ன
.


தொடர்பதிவுக்கு அழைத்த ஸாதிகாக்கவுக்கு நன்றி. படங்கள் உதவி கூகிள் .

43 comments:

vasu balaji said...

2 வருஷமாச்சு காரையார் போய். படம் திரும்ப அங்க நிக்கிற அனுபவத்தை தருது. அருமை அக்பர்.

சிநேகிதன் அக்பர் said...

போன தடவை ப்ளாக்கர் பிரச்சினையால பதிவை எடுத்துட்டு புதுசா போட்டிருக்கேன்.

போன பதிவுல கமெண்ட் போட்டவங்க.

நாஞ்சில் பிரதாப் said...

திருநெல்வேலி அருவாளைபத்தி சொல்லாம வுட்டீங்களே ப்ப்பிரதர்...:))
June 14, 2011 5:34 PM
நாஞ்சில் பிரதாப் said...

//ஒரு பட்டு எடுக்க ஊரையே கூட்டிட்டு போற பெருமையை நாங்க யாருக்காகவும் விட்டுக்கொடுத்ததே இல்ல//

பட்டு எடுக்க மட்டுமா? வெளிநாட்டுக்கு போற புள்ளையை வழியனுப்பவும், வெளிநாட்டுலேருந்து வர்ற புள்ளை வரவேற்கவும் பஸ்புடிச்சு ஊரே திரண்டு ஏர்போர்ட்டுககு போற பெருமையும் நெல்லைக்கு மட்டுமே....:))
June 14, 2011 5:37 PM
சிநேகிதன் அக்பர் said...

வாங்க நாஞ்சில்

//திருநெல்வேலி அருவாளைபத்தி சொல்லாம வுட்டீங்களே ப்ப்பிரதர்...:))//

ஏன் ஊருக்கு வரணும்னு நினைக்கிறவங்களையும் ஓட வைக்கிறதுக்கா? :)
June 14, 2011 9:01 PM
ரோகிணிசிவா said...

அந்த வெல்ல பணியாரம் செய்ய தெரியுமா ?
June 14, 2011 9:42 PM
சிநேகிதன் அக்பர் said...

@ நாஞ்சில்

//பட்டு எடுக்க மட்டுமா? வெளிநாட்டுக்கு போற புள்ளையை வழியனுப்பவும், வெளிநாட்டுலேருந்து வர்ற புள்ளை வரவேற்கவும் பஸ்புடிச்சு ஊரே திரண்டு ஏர்போர்ட்டுககு போற பெருமையும் நெல்லைக்கு மட்டுமே....:))//

ஹா.ஹ்ஹா..ஹா
June 15, 2011 9:47 AM
சிநேகிதன் அக்பர் said...

வாங்க ரோகிணி சிவா

//அந்த வெல்ல பணியாரம் செய்ய தெரியுமா ?//

என்ன இப்டி கேட்டுட்டிங்க. எனக்குத்தான் தெரியாதே :)

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
June 15, 2011 9:48 AM

சிநேகிதன் அக்பர் said...

வாங்க பாலாண்ணே,

காரையாருக்கு நீங்களும் போயிருந்தீங்களா, ரொம்ப அருமையான இடம்ணே.

ஸாதிகா said...

ஆஹா..அக்பர் தம்பி..உங்கள் திருநெல்வேலியைப்பற்றி அறுபுதமாக சொல்லி திருநெல்வேலிக்கு சென்று சுற்றி பார்க்கும் ஆவலை அதிகப்படுத்தி விட்டீர்கள்.நாகர் கோவில்.குற்றாலம் செல்லும் பொழுது திருநெல்வேலி வழியாக சென்றுள்ளேன்.கண்டிப்பாக தாமிரபரணி ஆற்றில் கால் நனைத்து விட்டு இருட்டுக்கடை அல்வா வாங்கிட்டு வரணும்.பதிவுக்கு மிக்க நன்றி.

ஸாதிகா said...

////ஒரு பட்டு எடுக்க ஊரையே கூட்டிட்டு போற பெருமையை நாங்க யாருக்காகவும் விட்டுக்கொடுத்ததே இல்ல//// எல்லா ஊரிலும் உள்ளதுதான்.

சிநேகிதன் அக்பர் said...

வாங்க ஸாதிகாக்கா,

அடுத்த முறை கண்டிப்பா போயிட்டு அல்வாவோட வாங்க. :)

//////ஒரு பட்டு எடுக்க ஊரையே கூட்டிட்டு போற பெருமையை நாங்க யாருக்காகவும் விட்டுக்கொடுத்ததே இல்ல//// எல்லா ஊரிலும் உள்ளதுதான்.//

அப்டியா!

~முஹம்மத் ஆஷிக் citizen of world~ said...

ஸலாம் சகோ.அக்பர்,

நன்றாக ஊரு சுத்திக்காட்டி இருக்கிறீர்கள்.

நீங்கள் சொன்ன (காரையார், பாணதீர்த்தம், பாபநாசம், மணிமுத்தாறு, மாஞ்சோலை, நெல்லை டவுன், பாளை, பேட்டை, மேலப்பாளையம்)...என இந்த இடங்கள் மட்டுமல்லாது, கும்பாவுருட்டி, தென்மலை, பத்மனாபபுரம் பேலஸ், திற்பரப்பு அருவி, தொட்டிப்பாலம் என.... நான்கைந்து பைக்கில் எட்டு பத்து பேர் என பத்து வருடங்களுக்கு முன் அடிக்கடி சுற்றி இருக்கிறோம்.

எனக்கு இப்போது நிறைய மலரும் நினைவுகள் வந்துவிட்டன.

தென்தமிழகம் :- ரசிக்கத் தெரிந்தவர்களுக்கு நல்லதொரு விருந்து.

சிநேகிதன் அக்பர் said...

வாங்க முஹம்மது ஆசிக்

//தென்தமிழகம் :- ரசிக்கத் தெரிந்தவர்களுக்கு நல்லதொரு விருந்து.//

சரியாச்சொன்னீங்க

தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

ஹுஸைனம்மா said...

பேட்டைக்காரவுகளா நீங்க.

மாஞ்சோலையில நீங்க - சரி. அந்தாக்குல ஆத்துல துணி தப்பிகிட்டு இருக்கதும் நீங்களா? :-)))))

சிநேகிதன் அக்பர் said...

வாங்க ஹுஸைனம்மா,

//பேட்டைக்காரவுகளா நீங்க.

மாஞ்சோலையில நீங்க - சரி. அந்தாக்குல ஆத்துல துணி தப்பிகிட்டு இருக்கதும் நீங்களா? :-)))))//

இதப்படிச்சதும் சிரிப்பை அடக்க முடியலை :)

அது நா இல்லீங்கோ.

எம் அப்துல் காதர் said...

தல இருட்டுக் கடை என்னமோ (ஒரே ஒரு குண்டு பல்பு போட்டு) இருட்டாவே இருக்கும் என்றல்லவா கேள்வி பட்டிருக்கேன்!ஒய்ட் வாஷ் எல்லாம் அடிக்கிறாங்களே. அப்ப கடை உஜாலாவுக்கு மாறுதோ??

எம் அப்துல் காதர் said...

ஒரே பதிவில் எம்ம்புட்டு தகவல்கள். அசத்தல் அக்பர். எல்லோரும் படிக்க வேண்டிய அருமையான பதிவு! தொடர்ந்து எழுதுங்க தல!

செ.சரவணக்குமார் said...

அட்டாகாசமான பதிவு அக்பர்..

சிநேகிதன் அக்பர் said...

internet explorer ல் இந்த பதிவு சரியாக ஓப்பன் ஆக மாட்டேங்குது. தெரிந்தவர் சொல்லுங்களேன்.

அன்புடன் மலிக்கா said...

தி வே அல்வா. சூப்பர் நல்ல அருமையாக விளக்கியுள்ளீர்கள் அக்பர்.நாங்களும் அங்கே வந்து சுத்திப்பார்த்த திருப்தி..

நாமளும் எழுதனும் ம்ம் எப்ப நேரம் கிடைக்கிறதுன்னு பார்ப்போம்..

Admin said...

அருமையான விளக்கம்

க.பாலாசி said...

ஒரு முழுமையான நிறைவான பதிவுங்க அக்பர். தி.வேலிக்கு இன்னும் வந்ததில்ல (போனதில்ல).. போகணும்.. தெரிஞ்சதெல்லாம் தின்னதெல்லாம் தி.வேலி அல்வாதான்.. கொரியர்ல வேலைப்பாக்கறப்ப தி.வேலி கொரியர் ஆபிஸ்ல சொல்லி பார்சல் வாங்குவேன். இப்பவும் அலுவலக நண்பர் ஒருத்தர் அங்க போறப்பல்லாம் வாங்கியாறச்சொல்லுவேன்......

சிநேகிதன் அக்பர் said...

வாங்க தல

//தல இருட்டுக் கடை என்னமோ (ஒரே ஒரு குண்டு பல்பு போட்டு) இருட்டாவே இருக்கும் என்றல்லவா கேள்வி பட்டிருக்கேன்!ஒய்ட் வாஷ் எல்லாம் அடிக்கிறாங்களே. அப்ப கடை உஜாலாவுக்கு மாறுதோ??//

இது வெளியே அது உள்ளே :)


நன்றி தல

சிநேகிதன் அக்பர் said...

வாங்க சரவணன்

தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

சிநேகிதன் அக்பர் said...

வாங்க மலிக்கா

பதிவு பிடிச்சிருந்ததா சந்தோசம்.

நீங்களும் சீக்கிரம் எழுதுங்க

சிநேகிதன் அக்பர் said...

வாங்க சந்ரு

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

சிநேகிதன் அக்பர் said...

வாங்க பாலாசி

முடிஞ்சா திருநெல்வேலிக்கு ஒரு முறை வாங்க.

A.R.ராஜகோபாலன் said...

நான் நெல்லை மனிதர்களை அறிந்த வரையில் தாமிரபரணி அவர்கள் வீட்டில் ஒருவர் என்றே நினைக்கிறேன், அதுவும் இல்லாமல் தாமிரபரணி ஒரு ஆறுதான் தமிழகத்தில் தோன்றி தமிழகத்திலேயே கலக்கும் நதி
நல்ல பிறந்த வீட்டு பதிவு நண்பரே

சிநேகிதன் அக்பர் said...

வாங்க ராஜகோபாலன் சார்

நெல்லையை பொறுத்தவரை குடிப்பதற்கு மட்டுமல்லாமல் , குளிப்பதற்கு கூட ஆற்று நீர்தான். மேலும் சிறு வயது முதலே ஆற்றில் போய் நீராடி வந்தவர்களுக்கு. ஆறு கூட பழக்கம் ஏற்பட்டு விடும்தானே.

சிநேகிதன் அக்பர் said...

இந்த பதிவு முழுவதுமாக திறக்கவில்லை எனில் ஃபயர்பாக்ஸ்ல் ஓப்பன் செய்யவும்.

Suresh Kumar said...

அருமையான பதிவு தோழரே.நீங்க சுத்தி எங்களை சுத்த விட்டுட்டீங்களே பாஸ்

தூயவனின் அடிமை said...

நான் திருநெல்வேலி வந்தது கிடையாது, நீங்கள் எழுதியதை படிக்கும் பொழுது, பார்க்க வேண்டும் என்கின்ற ஆசை.

Asiya Omar said...

சகோ.அக்பர் அருமையான அசத்தலான அட்டகாசமான பகிர்வு,முதலில் வாசிக்க முடியாமல் இருந்தது,இப்ப உங்கள் ப்ளாக்கிலேயே அழகாக வாசிக்க முடிகிறது.
என்னுடைய ஆர்வத்தை புரிந்து உடனே மெயிலில் டாக்குமெண்ட் இணைத்து அனுப்பியமைக்கு மிக்க மகிழ்ச்சி.நம்ம நெல்லைக்கு ஈடு எதுவுமே கிடையாது தமிழகத்தில்.சூப்பர் பதிவு சகோ.

Rathnavel Natarajan said...

அருமையான பதிவு.
வாழ்த்துக்கள்.

சிநேகிதன் அக்பர் said...

வாங்க சுரேஷ்குமார்

தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

Riyas said...

உங்க ஊர் ரொம்ப அழகா பசுமையா இருக்கு அக்பர்.. தகவல்களும் படங்களும் அருமை,,

சிநேகிதன் அக்பர் said...

வாங்க இளம் தூயவன்

//நான் திருநெல்வேலி வந்தது கிடையாது, நீங்கள் எழுதியதை படிக்கும் பொழுது, பார்க்க வேண்டும் என்கின்ற ஆசை.//

கண்டிப்பா வாங்க பாஸ்.

சிநேகிதன் அக்பர் said...

வாங்க சகோ ஆசியா உமர்.

தல அப்துல்காதரும் இதே பிரச்சனையை கூறியிருந்தார். நேற்று இரவுதான் சரி செய்தேன்.

தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

சிநேகிதன் அக்பர் said...

வாங்க ரத்னவேல் சார்

தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

சிநேகிதன் அக்பர் said...

வாங்க ரியாஸ்

தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

Muruganandan M.K. said...

அழகான படங்களுடன் ஆழ்ந்து ரசிக்க வைத்த பதிவு. பாரதி படித்த பள்ளிக் கூடம். கேட்கவே ஆனந்தம் பொங்கிவருகிறது.

சிநேகிதன் அக்பர் said...

வாங்க டாக்டர் எம்.கே முருகானந்தம்

//அழகான படங்களுடன் ஆழ்ந்து ரசிக்க வைத்த பதிவு. பாரதி படித்த பள்ளிக் கூடம். கேட்கவே ஆனந்தம் பொங்கிவருகிறது.//

ரொம்ப சந்தோசம் சார்

Starjan (ஸ்டார்ஜன்) said...

திருநெல்வேலி பகிர்வு அருமை அக்பர். நிறைய விசயங்களை அறிந்து கொள்ள முடிந்தது.

ஷர்புதீன் said...

எங்க ஊரை பத்தி படிக்க வாங்க!
http://rasekan.blogspot.com/2011/08/blog-post_1720.html

ராம்ஜி_யாஹூ said...

அற்புதமான பதிவு, பேட்டை செக்கடி பேருந்து நிறுத்தம், ரொட்டிக் கடை பேருந்து நிறுத்தம், பாலாஜி மெடிக்கல்ஸ், திமுக மாணவர் அணி ஷேக் தாவூத் , டவுனிலி இருந்து செல்லும் வழியில் உள்ள (கோடீஸ்வர நகர் அருகில்) தர்கா எல்லாம் மறக்கத்தான் முடியுமா

சிநேகிதன் அக்பர் said...

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ஸ்டார்ஜன்.

சிநேகிதன் அக்பர் said...

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ஷர்புதீன்

கண்டிப்பா உங்க ஊருக்கு வாரேன் :)

சிநேகிதன் அக்பர் said...

வாங்க ராம்ஜி யாஹூ

நீங்களும் பேட்டையா?,அத்தனை இடங்களையும் அழகாக சொல்கிறீர்களே.

தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

இதையும் விரும்புவீர்கள்.

Related Posts with Thumbnails