ஊரிலிருந்து திரும்பி வந்தாலும் ஊர் நினைவுகள் இன்னும் விடாதபடியால் பதிவுகளின் பக்கம் அடிக்கடி வர முடியவில்லை. அதனால் பின்னூட்டமிட முடியாததற்கு மன்னிக்கவும்.
ஊர் நிலவரங்களைப்பற்றி விரிவாக எழுதவேண்டுமென்பதே ஆசை. அதை நேரம் கிடைக்கும் போது பின்னொரு சமயத்தில் எழுதலாம். நம்மூரில் நான் பார்த்தவற்றிலிருந்து சில சுருக்கமாக.
************
பழுப்பு மண்ணையே பார்த்து வறண்டு போயிருந்த கண்களை திருவனந்தபுரத்திலிருந்து ஊர் வரும்வரை எங்கு பார்த்தாலும் பச்சைப்பாசேலெனக் வயல்வெளிகளும் , மலைக்குன்றுகளும் வரவேற்பளித்து கண்களை குளுமையாக்கியது மனதுக்கு இதமாக இருந்தது. கூடவே இதை விட்டுட்டு ஏன் வெளி நாடு போகிறோம் என்ற கேள்வியும்? எல்லாவற்றிற்கும் பணம்தான் காரணம்.
************
நம்மூரை விட வெளிநாட்டில் சம்பளம் அதிகம் என்ற எண்ணத்தையும் உடைத்து சுக்கு நூறாக்கியது சந்தித்த சில நண்பர்களின் சம்பள விவரம். ஆம் ஏழு ஆண்டுகளுக்கு முன் நான் முதலில் சவுதிக்கு வந்த போது இருந்ததை விட மூணு மடங்கு சம்பளம் அதிகமாக வாங்குகிறார்கள். எனக்கு கொஞ்சங்கொஞ்சமாக இப்போதுதான் அரை மடங்கு உயர்ந்திருக்கிறது.
வெளிநாட்டு சம்பளத்துக்கும் ஊரில் வாங்கும் சம்பளத்துக்கும் பெரிய வித்தியாசம் இல்லை. அடுத்த முறை வரும் போது ஊரிலேயே இருந்துவிட வேண்டும்.
*************
இலவச கலர் டிவி எங்கள் ஏரியாவில் எல்லா வீட்டுக்கும் கிடைத்துள்ளது. இப்போதெல்லாம் ஒரு வீட்டில் ஹால், ரூம்கள் என ரெண்டு மூணு டிவி இருக்கிறது. சில வீடுகளில் ஸ்பேர் டிவியாக பரணில் வைத்துள்ளார்கள் :). பின்னே ஏன் அதிக மின்சாரம் செலவாகாது.
அனேகமாக வரும் தேர்தலில் வாஷிங்மெஷின் கொடுப்பதாக பேச்சு. அப்படிக் கொடுத்தால் இப்போது தினமும் ரெண்டுமணி நேர பவர்கட் நாலு மணி நேரமாக வாய்ப்புகள் அதிகம்.
**************
ஊரில் வாட்டர் ஃபில்டர் விற்பனை படு ஜோராக நடக்கிறது. ஒரு காலத்தில் ஆற்றில் ஓடும் தண்ணியை அப்படியே பிடித்துக்குடிக்கலாம். அவ்வளவு சுத்தமாக இருக்கும். இப்போது வீட்டு பைப்புகளில் வரும் தண்ணீர் பழுப்பு கலரில் வருகிறது. சுத்திகரிப்பு செய்கிறார்களா என தெரியவில்லை.
ஒருவேளை வாட்டர் ஃபில்டர் தயாரிப்பாளர்களுக்கும் மாநகராட்சிக்கும் என்ன தொடர்போ தெரியவில்லை. மக்களின் அலட்சியமும் இதற்கு காரணம். ஒன்று சேர்ந்து அதிகாரிகளிடம் கோரிக்கை வைக்காமல், வீட்டுக்கு வீடு வாட்டர் ஃபில்டர் வாங்கி வைக்கின்றனர்.
**************
ஊரில் உள்ள விலைவாசிக்கு நூறு ரூபாயெல்லாம் பத்து ரூபாய் மாதிரி (ஒரு வேளை வெளிநாட்டில் இருப்பதால் அப்படி தெரியலாம்). எனக்கு உதய கீதம் படத்தில் கவுண்ட மணி தேங்காய் விலை அதிகமாயிருக்கு என்று சொல்லும் போது என்ன உள்ளே இருந்துட்டு வந்தியான்னு கடைக்காரர் கேட்பார். அது போல எந்த கடையிலாவது ரேட் ரொம்ப ஜாஸ்தியாயிருச்சு போலன்னு கேட்டால் ஆறு மாசமா இந்த ரேட்டுதான் அப்படிங்கிறார். நாம ஊர் வந்து ஒரு வருஷமானது அவருக்கு எப்படி தெரியும்.
ஆனாலும் ஊரில் உள்ளவர்கள் இதற்கெல்லாம் கவலைப்படுகிறமாதிரி தெரியவில்லை. அவர்களுக்கு பழகிவிட்டது போலும்.
**************
என்னதான் பொருளாதரப்பிரச்சனைகள் இருந்தாலும். நம்ம மக்களோட அருமை அவர்களை பிரிஞ்சு இருக்கும் போதுதான் தெரியுது. ஆள் நடமாட்டமே இல்லாத ஏரியாவில் வாழ்ந்து விட்டு. ஊரில் கடைவீதிகளில் மக்களை கூட்டம் கூட்டமாக பார்க்கும் போது ரொம்ப சந்தோசமாக இருந்தது.
குடும்பத்துடன் ஷாப்பிங் சென்று அரசனில் டீயும் பப்ஸுமோ, அல்லது சரவண பவ வில் ஒரு தோசையோ சாப்பிட்டு வரும் சந்தோசத்துக்கு விலை ஏது?
***************
இன்னும் பகிர்ந்து கொள்வதற்கான விஷயங்கள் நிறைய இருக்கிறது. அவை பிரிதொரு சந்தர்ப்பத்தில்.
இன்று பிறந்த நாள் காணும் இனிய நண்பர் ஸ்டார்ஜன் அவர்களுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்.
64 comments:
என்.ஆர்.ஐ.க்களுக்கு எழும் அதே கேள்விகள்!!
நல்ல பதிவு. ஊரில் செட்டிலாவதற்கு இப்போதே ஏற்பாடுகளைத் தொடங்குங்கள். இல்லையென்றால் மனம் மாறிவிடும்.
இன்று பிறந்த நாள் காணும் இனிய நண்பர் ஸ்டார்ஜன் அவர்களுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்//
என்னுடைய வாழ்த்துக்களும்
மண் மணம் கமழும் அருமையான பதிவு
ஹையா திருநெல்வேலியா..ஊர் ரொம்ப மாறிடுச்சோ..
//அனேகமாக வரும் தேர்தலில் வாஷிங்மெஷின் கொடுப்பதாக பேச்சு //
இது வேறையா?! டிவி கொடுத்து கண்ணை மறைத்து கொள்ளையடிச்சது போதாதா?
இப்போ வாசிங் மெசின் கொடுத்து மொத்தமா துடைக்க ஆசையோ அவங்களுக்கு? தூ..
ரைட்டு
//நம்ம மக்களோட அருமை அவர்களை பிரிஞ்சு இருக்கும் போதுதான் தெரியுது. ஆள் நடமாட்டமே இல்லாத ஏரியாவில் வாழ்ந்து விட்டு.//
உணர்வுகளை அழகாய் எழுதி இருப்பதை படிக்கும் போது என் ஊரை பற்றி தானே இருக்கிறது என்று ஒரு மிதப்பு வருகிறது என் மனதிற்கு....!
வீட்டிற்கு வரும் தண்ணீரை பற்றி நீங்கள் எழுதி இருப்பதை பார்த்து விட்டு காலையில் வந்த தண்ணீரை ஓடி போய் பார்கிறேன்....ஆமாம் கொஞ்சம் நிறம் நீங்கள் சொன்ன மாதிரி தான் இருக்கிறது. மழை நேரம் அப்படித்தான் இருக்கும், இது தான் நம் மண்ணின் மணம் என்று பெருமை பட்டு கொண்டு பழகிகொண்டோம்....! :))
இன்னும் சொல்லுங்கள் படிக்க சலிப்பே வராது. நன்றி
நண்பர் ஸ்டார்ஜன் அவர்களுக்கு என் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்...!
//அடுத்த முறை வரும் போது ஊரிலேயே இருந்துவிட வேண்டும்.//
இதை எத்தனை வருசமா சொல்லிட்டு இருக்கீங்க தல...:))
திருநெல்வேலின்னு தலைப்பைபோட்டு அல்வாவையும், அருவாவையும் பத்திச்சொல்லலைன்னா பதிவு முழுமையாகதென் தெரிவித்துக்கொள்கிறேன்..
என்னது குருவுக்கு பொறந்த நாளா? சொல்ல்ல்ல்ல்ல்ல்வே இல்ல....
எனக்கு ஆயகலைகள் அறுபத்து நான்கையும் கற்றுக்கொடுத்த குரு ஸ்டார்ஜனுக்கு குமரி மாவட்ட
"இளைஞரணி" சார்பாக இந்த 500 ரூபாய் நோட்டு மாலையை அணிவிக்கிறேன்...:))
//இலவச கலர் டிவி எங்கள் ஏரியாவில் எல்லா வீட்டுக்கும் கிடைத்துள்ளது. இப்போதெல்லாம் ஒரு வீட்டில் ஹால், ரூம்கள் என ரெண்டு மூணு டிவி இருக்கிறது//
இதுபெரிய காமெடியாச்சே... ஊர்ல பலவீடுகள்ல இப்போ டாய்லெட்ல மட்டும்தான் டிவி வைக்கலை... அடுத்த தேர்தல அதுவும் நடக்கும்... யோசிச்சுப்பார்த்தாலே கிலியடிக்குதே..:))
நல்ல தொகுப்பு.
ஸ்டார்ஜனுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
//வாஷிங்மெஷின் கொடுப்பதாக பேச்சு. அப்படிக் கொடுத்தால் இப்போது தினமும் ரெண்டுமணி நேர பவர்கட் நாலு மணி நேரமாக வாய்ப்புகள் அதிகம்.//
ஓ...!!!
டீவி கொடுத்ததுக்கு தான் தினமும் 2 மணி நேர பவர் கட்டா? :))
சேக் அண்ணாக்கு என் மனம் நிறைந்த வாழ்த்துக்கள்
திருநெல்வேலி பற்றி எத்தனை பாகம் எழுதினாலும் படிக்க படிக்க திகட்டாது அவ்வளவு செய்தி இருக்குமே!ரொம்ப சரியாக சொன்னீர்கள்.
அருமையான பகிர்வுகள் பகிர்வுக்கு நன்றி நண்பரே.
முன்பு வெள்ளைக்காரனிடம் அடிமையாக இருந்தோம் இப்போது அரசியல்வியாதிகளிடம் அடிமையாக இருக்கிறோம் நண்பரே.
ஊர் நினைவுகளைப் பற்றி அருமையாக எழுதியிருக்கிறீர்கள் அக்பர்.
//அடுத்த முறை வரும் போது ஊரிலேயே இருந்துவிட வேண்டும்.//
நானும் இதைப்பற்றித்தான் யோசித்துக்கொண்டிருக்கிறேன் அக்பர்.
இரண்டு நாட்களுக்கு முன்பு போன் செய்தபோது ஸ்டார்ஜன் பிறந்தநாள் பற்றி சொல்லவில்லையே. அங்கதான் கெளம்பிக்கிட்டே இருக்கேன். ஒரு கப்ஸா ஆர்டர் பண்ணிவையுங்கள் மக்களே.
இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் சேக்.
பத்து வருடம் முன் சம்பளம் இங்குள்ளத நம்பி எல்லோரும் வந்தார்கள்
ஆனால் இப்ப எல்லாம் மாறிவிட்டது.,
இங்கும் விலை வாசிகள் அதிகம், வாங்கும் சம்பளம், வாடகை,ம் சாப்பாடு போனுக்கே சரியா போகுது எல்லா பேச்சிலர்களுக்கும்
நல்ல முடிவு, அடுத்த முறை ஊர் போய் செட்டில் ஆகுவது.
என்ன இப்ப வாஷிங் மிஷினா?
உஙக்ள் நண்பர் ஸ்டார்ஜனுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்
Alva thaan
http://enathupayanangal.blogspot.com
நண்பர் ஸ்டார்ஜன் அவர்களுக்கு இனிய உளம் கனிந்த பிறந்த நாள் வாழ்த்துகள்.
ஊருக்கு போயிட்டு வந்த உடனே இப்படித்தான் இருக்கும்... கொஞ்ச நாள் போச்சுன்னா.. எல்லாம் பழக்கமாயிடும்.
சரியா சொன்னீர்கள் ,உண்மையில் இந்த முறை ஊரில் இருந்து திரும்பும் பொழுது, மனது கனத்து விட்டது .வெளிநாட்டு வாழ்க்கைக்கு விரைவில் ஒரு முற்று புள்ளி ,இறைவன் நாடினால்.
இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் ஸ்டார்ஜன். :)
இனிய பகிர்வு.. நிறைய தகவல்கள்.
HAPPY BIRTHDAY TO GURU STARJAN!
எங்களையும் அப்படியே நெல்லைக்கு, பதிவின் மூலம் அழைத்து சென்றதற்கு நன்றிங்க. இன்னும் எழுதுங்க.
"ஆள் நடமாட்டமே இல்லாத ஏரியாவில் வாழ்ந்து விட்டு. ஊரில் கடைவீதிகளில் மக்களை கூட்டம் கூட்டமாக பார்க்கும் போது ரொம்ப சந்தோசமாக இருந்தது." சரியா சொன்னீங்க. ஊர்ல போய் சொன்னா ஆமா, "இவரு பெரிய ஓபாமா"ன்னு ஓட்டிருவானுங்கன்னு வெளியே சொல்லாத feeling அது.
Anyways, அடுத்த பிறந்தநாளை ஊர்ல கொண்டாடுறதுக்கு advance வாழ்த்துக்கள்!
ஸ்டார்ஜனுக்கு வாழ்த்துகள். நல்ல பகிர்வு. :)
அருமை! (நானும் சுருக்கமாக...)
வாழ்த்துக்கள் ஸ்டார்ஜன்!
//வெளிநாட்டு சம்பளத்துக்கும் ஊரில் வாங்கும் சம்பளத்துக்கும் பெரிய வித்தியாசம் இல்லை. அடுத்த முறை வரும் போது ஊரிலேயே இருந்துவிட வேண்டும்.//
ரொம்ப சரியான முடிவு. ஆனா ஒரு வருஷம் ஆனதும் அந்த ஆர்வம் மங்கி, ஊர்ப் போய் வரணும் என்ற ஆர்வம் தலைதூக்கி, போயிட்டு திரும்ப வரும்போது மேற்படி ஆர்வம் தலை தூக்கும். இப்படியே ரிபீட்டி கிட்டே இருக்கும். இந்த சுற்று வட்டத்திலேயே.. (வாழ்க்கை ஒரு சுற்று வட்டம் தானே!!)
இலவச கலர் டிவி, இனி இலவச வாஷிங்மெஷின், இனி இலவச வாட்டர் ஃபில்டர் - அரசு நம் மக்களை பெரிய வசதியில் வைத்திருக்கிறது என்று நாம் பணக்கார நாட்டில் இருந்துக் கொண்டு அந்த வசதியிலா இருக்கிறோம். ஒன்றுக்கு நூறு முறை யோசிக்கணும்.
// குடும்பத்துடன் ஷாப்பிங் சென்று அரசனில் டீயும் பப்ஸுமோ, அல்லது
சரவணபவ வில் ஒரு தோசையோ சாப்பிட்டு வரும் சந்தோசத்துக்கு விலை ஏது?//
அது !!!
தல ஸ்டார்ஜன்) பிறந்த நாளுக்கு என் இனிய வாழ்த்துகள். இன்னும் நூறு காண விழைகிறேன்...
சகோ.ஸ்டாருக்கு இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்.
என்னுடைய பிறந்தநாளுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்த அனைவருக்கும் என் நன்றிகள்.
ஊர்ல இவ்வளவு விசயம் நடந்துருக்கா அக்பர் .., ஊருக்கு போகும்போது இதெல்லாம் கவனத்துல வச்சிக்கணும்.
நெல்லை மணம் கமழும் இனியதொரு பகிர்வு. நன்றி அக்பர்.
ரசித்தேன். குறிப்பாக
//அடுத்த முறை வரும் போது ஊரிலேயே இருந்துவிட வேண்டும்.//
:-))))
உணர்வுக்கலவைகளை அழகாய் கொட்டி இருக்கின்றீர்கள் சகோ அக்பர்.படிப்பதற்கு சுவாரஸ்யமாக இருந்தாலும் சில இடங்களில் நெகிழ்வாய் இருந்தது.சகோதரர் ஸ்டார்ஜனுக்கு பிறந்த நாள் நல் வாழ்த்துக்கள்.
அருமை,.
ஊரில் வந்து வாழ் வேண்டும் என்ற ஆசையும் நம்பிக்கையும் வந்து விட்டால், அடுத்த விடுமுறை வரை காத்து இருக்காதீர்கள்.
அடுத்த மாதமே பெட்டியை கட்டவும்
//வெளிநாட்டு சம்பளத்துக்கும் ஊரில் வாங்கும் சம்பளத்துக்கும் பெரிய வித்தியாசம் இல்லை. அடுத்த முறை வரும் போது ஊரிலேயே இருந்துவிட வேண்டும்.//
அடுத்த மாசம் போனா இந்த எண்ணமே வராது. இதெல்லாம வெளிநாட்டு வாழ்க்கையில சகஜம்ப்பா :-))
ஷேக்-க்கு இனிய பிறந்த நாள் நல் வாழ்த்துக்கள்
வாங்க ஹுஸைனம்மா.
நீங்கள் சொல்வது போல் இப்போதிருந்தே தொடங்கி விட வேண்டியதுதான்.
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
வாங்க ஆர்.கே.சதீஷ்குமார்
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
வாங்க அமுதா கிருஷ்ணா
நெல்லை ரொம்பவெல்லாம் மாறலை
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
வாங்க Balaji saravana
இன்னும் என்னவெல்லாம் கொடுக்க போறங்களோ :)
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
வாங்க Kousalya
சில இடங்களில்தான் தண்ணீர் ஓரளவு நன்றாக இருக்கிறது.
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
வாங்க நாஞ்சில் பிரதாப்™
ஐயா இப்பதான் ஊரு கொஞ்சம் மாறியிருக்கு மறுபடியும் அருவா தூக்க சொல்றீங்களே.
ஸ்டார்ஜன் அடுத்து போய் உங்களுக்கு அல்வா கொடுப்பாரு :)
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
வாங்க ராமலக்ஷ்மி
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
வாங்க ஆமினா
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
வாங்க asiya omar
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
வாங்க Thomas Ruban
நீங்கள் சொல்வது உண்மைதான்
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
வாங்க செ.சரவணக்குமார்
நீங்க ரஜினி மாதிரி ஜீ, வாரேன்னு சொல்லிட்டு வரமாட்டீங்களே :)
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
வாங்க Jaleela Kamal
நீங்கள் சொல்வது போல முன்னிருந்த நிலை இப்போது இல்லை
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
வாங்க Thirumalai Kandasami
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
வாங்க இராகவன் நைஜிரியா
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
வாங்க இளம் தூயவன்
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
வாங்க மின்மினி RS
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
வாங்க Chitra
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
வாங்க Denzil
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
வாங்க வானம்பாடிகள் பாலாண்ணே
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
வாங்க NIZAMUDEEN
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
வாங்க எம் அப்துல் காதர்
நீங்கள் சொல்வது உண்மைதான்
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
வாங்க asiya omar
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
வாங்க Starjan ( ஸ்டார்ஜன் )
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
வாங்க மாதவராஜ்
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
வாங்க ஸாதிகா
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
வாங்க ராம்ஜி_யாஹூ
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
வாங்க ஜெய்லானி
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
மண் மணம் கமழும் அருமையான பதிவு. தொடருங்கள் சிநேகிதரே...
Post a Comment