Sunday, November 28, 2010

மதிப்பிற்குரிய பொ .ம . ராசமணி அவர்கள் !

நாங்கள் ஆறாம் வகுப்பு படித்துக்கொண்டிருந்த சமயம். விடுமுறை நாளில் பள்ளியில் நடந்த ஒரு விழாவிற்கு சிறப்பு பேச்சாளர் ஒருவரை பாளையங்கோட்டையில் இருந்து அழைத்து வந்திருந்தனர்.

பொதுவாகவே இதுமாதிரி நிகழ்ச்சிகளை முடிந்தவரை தவிர்த்துவிட்டு கிரிக்கெட் விளையாட சென்று விடுவது வழக்கம்.ஆனால் எங்கள் தமிழாசிரியர் "வருபவர் பேசினால் நேரம் போவதே தெரியாது அவ்வளவு இனிமையா இருக்கும் யாரும் வராமல் இருக்கவேண்டாம் " என்று கேட்டுக் கொண்டதற்கிண‌ங்க அன்று காலை அனைவரும் ஆஜரானோம். பேச்சாளர் வந்தவுடன் விழா ஆரம்பமானது.

இப்போது இங்கு சிறப்பு விருந்தினராக வந்திருப்பவர்க்கு பெரிய அறிமுகம் தேவையில்லை. மக்களின் சிந்தனையைத்தூண்டும் விதமாக நகைச்சுவையாகவும், சுவாரஸ்யமாகவும் பல மேடைகளிலும் , வானொலியிலும் பேசி இருக்கிறார் அண்ணன் பொ.ம.ராசமணி அவர்கள். அவர்களை சிறப்புரை ஆற்றுமாறு அழைக்கிறேன் என தமிழாசிரியர் அறிமுகப்படுத்தினார்.

உண்மையிலேயே ஆசிரியர் சொன்னது போல் அந்த ஒரு மணி நேரம் அவர் பேசிய பேச்சு வாழ்க்கையில் மறக்க முடியாததாக அமைந்தது. அவர் சொன்ன சிறந்த ஜோக்குகள் ஏற்கனவே என் அப்பா சொல்லி கேட்டவையாக இருந்தது.

வீட்டுக்கு வந்தவுடன் அப்பாவிடம் சொன்னேன். அதற்கு அப்பா " அந்த ஜோக்குகள் அனைத்தும் அவர் பேசியதிலிருந்து கேட்டு சொன்னதுதான்" என்று சொன்னபோது அவரின் அருமையை உணர்ந்தேன். அவர் பேச்சாளர் மட்டுமல்ல பல நல்ல நூல்களை எழுதிய எழுத்தாளர் என்று பின்பு வந்த நாட்களில் அவரைப்பற்றி அறிந்துகொண்டேன்.

சமீபத்தில் பா.ரா வீட்டு திருமணத்தில் கலந்து கொண்டபோது அண்ணன் ஜெரி ஈசானந்தாவை சந்தித்தேன். பதிவுலகம் பற்றிய பேச்சு வந்தபோது , நீங்கள் ஏன் நெல்லை பதிவர்களை வைத்து மீட்டிங் போடக்கூடாது எனக்கேட்டார். யாரெல்லாம் இருக்கிறார்கள் எனக்கேட்டபோது, நம்ம சித்ரா போன்றவர்களை வைத்து ஆரம்பிக்கலாமே என்று சொன்னவர். மேலும் ஒரு சந்தோச தகவலை சொன்னார். சித்ராவின் அப்பா பெரிய பேச்சாளர் என்று.

யாரெனக் கேட்டபோது சொன்னார். த கிரேட் பொ.ம.ராசமணி. எனக்கு சந்தோசத்தில் தலை கால் புரியவில்லை. ராசமணி சார் பொண்ணா அவங்க என ஆச்சரியப்பட்டேன். அப்போது நினைத்துக்கொண்டேன் அவரின் பக்குவப்பட்ட எழுத்துக்கள் எங்கிருந்து வந்திருக்கும் என்று.

அன்றிலிருந்தே இந்த விசயத்தை பகிர்ந்து கொள்ளவேண்டும் என்ற ஆவல் இருந்து கொண்டே இருந்தது. சரி சித்ராவிடம் ஒரு வார்த்தை கேட்டு விட்டு தெரியப்படுத்தலாம் என்றிருந்தேன். இன்று காலை அவரின் பதிவைப் பார்த்த போதுதான் தெரிந்தது. இன்று ராசமணி சாரின் முதலாமாண்டு நினைவு தினம் என்று.

அந்த சிறந்த மனிதருக்கு உங்களுடன் சேர்ந்து எங்களது அஞ்சலிகளை செலுத்துகிறோம் சித்ரா. தந்தை விட்ட இடத்திலிருந்து நீங்கள் தொடங்கி மென்மேலும் புகழடைய வாழ்த்துகிறோம்.

,

47 comments:

Prabu M said...

சித்ரா அக்காவின் பதிவில் படித்துவிட்டு இப்போது வெளிவந்திருக்கும் கவிதைத் தொகுப்புதான் அவர்கள் தந்தையின் முதல் கவிதைத்தொகுப்பு என்று நினைத்திருந்தேன்... தங்கள் பதிவைப் படித்தபிறகுதான் அவர் இத்தனைப் புகழ்பெற்ற பேச்சாளர் மற்றும் எழுத்தாளர் என்று அறிந்தேன்.... சித்ரா அக்காவின் தன்னடக்கத்தைத்தான் சொல்லவேண்டும்.... பகிர்வுக்கு ரொம்ப நன்றி அக்பர்...

இத்தனை சிறப்புமிக்க புகழ்பெற்ற பேச்சாளர்/எழுத்தாளர் தெய்வத்திரு. பொ ம ராசமணி அவர்களுக்கு முதலாம் ஆண்டு நினைவஞ்சலி....

'பரிவை' சே.குமார் said...

//சித்ரா அக்காவின் பதிவில் படித்துவிட்டு இப்போது வெளிவந்திருக்கும் கவிதைத் தொகுப்புதான் அவர்கள் தந்தையின் முதல் கவிதைத்தொகுப்பு என்று நினைத்திருந்தேன்... தங்கள் பதிவைப் படித்தபிறகுதான் அவர் இத்தனைப் புகழ்பெற்ற பேச்சாளர் மற்றும் எழுத்தாளர் என்று அறிந்தேன்.... சித்ரா அக்காவின் தன்னடக்கத்தைத்தான் சொல்லவேண்டும்.... //

Repeat PRABU.M.


பகிர்வுக்கு ரொம்ப நன்றி அக்பர்...

Prasanna said...

அழகான பகிர்வு :) திரு பொ ம ராசமணி அவர்களுக்கு அஞ்சலிகள்...

எஸ்.கே said...

அழகான பகிர்வு! திரு பொ ம ராசமணி அவர்களுக்கு அஞ்சலிகள்!

ஹுஸைனம்மா said...

நானும் பொதிகையில் அவர பேச்சை ரசித்திருக்கிறேன். சித்ரா தன் தந்தை என்று அவர் தனது வலைப்பூவில் முன்பொரு பதிவில் தெரிவித்திருந்தபோது ஆச்சர்யமாக இல்லை. (அதே பேச்சு/எழுத்து நடை!!) மகிழ்ச்சியாக இருந்தது.

அம்பிகா said...

இப்போது தான் நானும் சித்ராவின் பதிவில் படித்தேன்.
திரு பொ ம ராசமணி அவர்களுக்கு அஞ்சலிகள்...

vasu balaji said...

ராசாமணி அய்யாவுக்கு அஞ்சலிகள்.

ஆமினா said...

திரு ராசாமணி அவர்களுக்கு இன் அஞ்சலிகள்!!!

Asiya Omar said...

அந்த நல்ல மனிதரை நேரில் பார்க்கும் வாய்ப்பு உங்களுக்கு கிடைத்தது அறிந்து மிக்க மகிழ்ச்சி.பகிர்வுக்கு நன்றி.

Prathap Kumar S. said...

ஆச்சர்யமா இருக்கு... எதிர்பார்க்காத விசயம்.
ராசாமணி அய்யாவுக்கு அஞ்சலிகள்.

அ. முஹம்மது நிஜாமுத்தீன் said...

சமீபத்தில் 'தமிழ்மணம் நட்சத்திர பதிவர்'
குறிப்பில்தான் திரு.பொ.ம.ராசமணி
அவர்களின் மகள்தான் சித்ரா அவர்கள்
என்பதைத் தெரிந்துகொண்டேன், நான்.
எனது பள்ளிப் பருவத்தில் வெளிவந்த
ரத்னபாலா பாலர் வண்ண மாத மலர்
இதழில்கூட ஐயா அவர்களின் கதைகள்
படித்துள்ளேன்.

Unknown said...

ராசாமணி அய்யாவுக்கு அஞ்சலிகள்...

ராஜ நடராஜன் said...

A feather on the crown!

T.V.ராதாகிருஷ்ணன் said...

அழகான பகிர்வு :) திரு பொ ம ராசமணி அவர்களுக்கு அஞ்சலிகள்...

bogan said...

பாளை சவேரியார் பள்ளியில் படித்தபோது அவரது நகைச்சுவைப் பேச்சை அடிக்கடி கேட்டிருக்கிறேன்...அவரது மகள்தான் சித்ரா அவர்கள் என்பது அறியாத தகவல்...மெல்லப் புகை போல் சவேரியார் பள்ளி நினைவுகள் எழுந்து வருகின்றன..அவருக்கு எனது அஞ்சலிகள்...

Chitra said...

எதுவும் சொல்ல வார்த்தைகளின்றி ..... மெளனமாக .......... ரசிக்கின்றேன்.... வியக்கின்றேன்..... என்றும் நன்றியுடன், சித்ரா.

I feel so blessed! Praise the Lord!

Thank you very much, Akbar.

ISR Selvakumar said...

தங்கை சித்ராவின் தந்தையாரை மிக அருமையாக நினைவு கூர்ந்திருக்கிறீர்கள். பெரிய மனிதர்களை நினைத்துப் பார்ப்பதன் மூலம், நாம் நமது எண்ணங்களை தூய்மைபடுத்திக் கொள்கிறோம்.

க ரா said...

ராசாமணி சாருக்கு அஞ்சலிகள்

Jerry Eshananda said...

அன்பு தம்பி அக்பருக்கு வணக்கம்,நலமா? பதிவை இப்பொழுது தான் படித்தேன்,மகிழ்ச்சியாய் இருக்கிறது,நல்லதொரு பகிர்வு,,உங்களுடன் சேர்ந்து ஐயாவுக்கு அஞ்சலி செலுத்துவதில் பெருமைப்படுகிறேன்.நாளும் அன்பில் தொடர்வோம்.

ராமலக்ஷ்மி said...

உங்கள் அஞ்சலிப் பதிவில் நாங்களும் இணைகிறோம். பகிர்வு மிக நன்று அக்பர். சித்ராவின் தந்தை பற்றி சேவியர்ஸ் பள்ளியின் மாணவராய், என் கணவர் கூறக் கேட்டிருக்கிறேன்.

எட்வின் said...

பகிர்விற்கு நன்றிங்க. எனக்கு இது புதிய தகவல். பெரியவர் ராசமணி அவர்களை நினைத்து பெருமிதம் தோன்றுகிறது. அதை விட பெருமிதம் சித்ரா அவர்களின் தன்னடக்கத்தை பார்க்கையில்.

என்றும் தோழமையுடன்
எட்வின்
நெல்லை

cheena (சீனா) said...

அன்பின் அக்பர் - திரு பொ.ம.ராசமணி அவர்களுக்கு முதலாம் ஆண்டு நினைவஞ்சலி செலுத்துகிறேன்.

சிநேகிதன் அக்பர் said...

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி பிரபு

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சே.குமார்

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி Prasanna

சிநேகிதன் அக்பர் said...

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி எஸ்.கே

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ஹுஸைனம்மா.

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி அம்பிகா

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி வானம்பாடிகள் பாலாண்ணா

சிநேகிதன் அக்பர் said...

முதல் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ஆமினா.

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி asiya omar

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நாஞ்சில் பிரதாப்™

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி NIZAMUDEEN

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி கே.ஆர்.பி.செந்தில்

சிநேகிதன் அக்பர் said...

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ராஜ நடராஜன்

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி T.V.ராதாகிருஷ்ணன் sir

@ bogan. நீங்களும் தெரிந்து வைத்திருப்பதில் மகிழ்ச்சி. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

சிநேகிதன் அக்பர் said...

மிக மகிழ்ச்சியான தருணம் இது சித்ரா.

சிநேகிதன் அக்பர் said...

@r.selvakkumar . உண்மைதான் சார். தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி இராமசாமி கண்ணண்

சிநேகிதன் அக்பர் said...

@ஜெரி ஈசானந்தன் அண்ணா. தங்கள் மூலமாகவே இதை அறிந்துகொள்ள முடிந்தது. அன்று உங்களை சந்தித்தது வாழ்வின் இனிமையான நிகழ்வுகளில் ஒன்றாகிப்போனதில் மகிழ்ச்சி. அன்பில் தொடர எல்லை ஏது!

சிநேகிதன் அக்பர் said...

மிக்க மகிழ்ச்சி ராமலக்ஷ்மி மேடம். தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

சிநேகிதன் அக்பர் said...

தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி எட்வின்

சிநேகிதன் அக்பர் said...

தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி cheena (சீனா) ஐயா

Mahi_Granny said...

அந்த சிறந்த மனிதருக்கு உங்களுடன் சேர்ந்து எங்களது அஞ்சலிகளை செலுத்துகிறோம் சித்ரா. தந்தை விட்ட இடத்திலிருந்து நீங்கள் தொடங்கி மென்மேலும் புகழடைய வாழ்த்துகிறோம்.

, repeat the same

Starjan (ஸ்டார்ஜன்) said...

நாங்க சின்னவயசுல ‌ஸ்கூல்ல படிக்கும்போது சித்ரா அப்பா பேச்சை கேட்டுக்கிட்டே இருக்கலாம் போல இருக்கும். அந்தளவுக்கு அவரது பேச்சில் ஒன்றிடுவோம். எனக்கு ரொம்ப வருத்தமா இருக்கு. என்ன சொல்வது என்றே தெரியல.. அன்னாருக்கு என்னுடைய அஞ்சலிகள்.

Menaga Sathia said...

அழகான பகிர்வு!! சித்ராவின் தந்தைக்கு அஞ்சலிகள்....

நசரேயன் said...

பொ.ம ராஜாமணி ஐயா வை நான் எங்க ஊரு பட்டிமன்றத்திலே பார்த்து இருக்கிறேன் ..நல்ல நகைச்சுவை வளம் நிறைந்தவர்

தாராபுரத்தான் said...

அய்யா அவர்களைப் பற்றி கேள்விபட்டிருக்கிறேன்..அவர் மகளா இவர்...பரிவுக்கு நன்றிங்க அக்பர்,

Kousalya Raj said...

சித்ராவின் அப்பாவை நினைவு கூர்ந்த உங்களுக்கு என் பணிவான வாழ்த்துக்கள்....நானும் நேற்று தான் அவரை பற்றி தெரிந்து கொண்டேன்....அவரது பட்டிமன்றங்களை பற்றிய மலரும் நினைவுகளை நேற்று எங்களுக்குள் பகிர்ந்து கொண்டோம் ... அவரது நினைவுநாளில் நாம் அவரை நினைவு கூர்வது நாம் பெற்ற பாக்கியம்.

பகிர்வுக்கு நன்றி

ஆனந்தி.. said...

என் பிரிய தோழியின் அப்பாவுக்கு என் நினைவாஞ்சலி...

அமுதா கிருஷ்ணா said...

சித்ராவின் நகைச்சுவை அவர் அப்பாவின் ஆசிர்வாதம்..அறிமுகத்திற்க்கு நன்றி.

ஸாதிகா said...

பகிர்வு அருமை.ராசாமணி அவர்களுக்கு அஞ்சலி.

செ.சரவணக்குமார் said...

எனது அஞ்சலிகளும்..

எம் அப்துல் காதர் said...

பதிவு மிக அருமை. ராசாமணி அய்யாவுக்கு அஞ்சலிகள்...

*--*---*----*---*----*---*----*---

தல உங்களை ஒரு தொடர் பதிவுக்கு அழைத்திருக்கிறேன்!! மறுக்காமல் அவசியம் தொடரனும்!!

http://mabdulkhader.blogspot.com/2010/11/blog-post_29.html

பனித்துளி சங்கர் said...

நன்றி நண்பரே இந்த பதிவை வாசிக்கும்பொழுது எனக்கும் மகிழ்ச்சியாகத்தான் இருக்கிறது . ஒரு பேச்சாளரின் மகளா சித்ரா அவர்கள் என்று ! பகிர்வுக்கு நன்றி

அன்புடன் மலிக்கா said...

அழகான பகிர்வு அக்பர்
திரு பொ ம ராசமணி அவர்களுக்கு நினைவுகூறுதல் சிறப்பு.

சிநேகிதன் அக்பர் said...

அனைவரின் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

அப்துல்காதர் அண்ணே விரைவில் தொடர்பதிவு எழுதிவிடுகிறேன்.

சிங்கக்குட்டி said...

புலிக்கு பிறந்தது எப்படி பாயாமல் இருக்கும் ...!

தன் தந்தை வழியில் சித்ரா இன்னும் புகழ் பெற்று அவர் பெயரை காக்க அந்த இறைவன் அருள் புரிய வேண்டுகிறேன்.

நன்றி!.

இதையும் விரும்புவீர்கள்.

Related Posts with Thumbnails