Thursday, May 6, 2010

கல் சிலேட்டு , தேனீ உமர் தம்பி !

அப்போதெல்லாம் கல் சிலேட்டுகள் தான் பிரபலமாக இருந்தது. எனக்கான சிலேட் இரண்டாம் வகுப்பில்தான் வாங்க முடிந்தது. அதில் எழுதத்தொடங்கினால் எழுதிக்கொண்டே இருக்கணும் போல தோன்றும் அப்படி மாவு மாதிரி எழுதும். எழுத கடல் குச்சி கிடைத்துவிட்டால் கொண்டாட்டத்திற்கு அளவே இல்லாமல் போய் விடும்.

குச்சிகளை கடன் கொடுப்பதோடு நிறைய பேருக்கு நட்பையும் சேர்த்து கொடுத்திருக்கிறேன். பின்பு அவர்கள் நட்போடு சேர்த்து இருமடங்காக திருப்பித்தருவார்கள். இது பென்சிலுக்கும் நடக்கும்.

மூணாம் வகுப்பில் இருந்து பேனாவை பயன்படுத்தியதாக ஞாபகம். எனது அம்மாவின் அம்மா வாங்கிதந்த முதல் பேனா இன்னும் நினைவில் நிற்கிறது.

மை பேனா பயன்படுத்துவதில் ஒரு வசதி. மை தீர்ந்து விட்டால் அடுத்தவனை ரெண்டு சொட்டு பெஞ்சில் விடச்சொல்லி உறிஞ்சி விடலாம். இப்போதும் ஏதேனும் பள்ளிக்கு சென்று மை உறிஞ்சிய பெஞ்சுகளையும், டெஸ்க்குகளையும் பார்த்தால் அதில் ஆயிரமாயிரம் நட்பின் கதைகளையும் சேர்த்தே உறிஞ்சியிருப்பதாக தோன்றும்.

ஆறாம் வகுப்பில் பேனாக்களின் ஹீரோவான கரும்பச்சை ஹீரோ பேனா கிடைத்தது. கையில் நோகியா 97 வைத்திருப்பதை விட அதிக மகிழ்ச்சியை உணர்ந்த காலம் அது.

பின்பு ஒன்பது, பத்தாம் வகுப்புகளில் பால்பாயிண்ட் பேனாக்கள் சக்கை போடு போட்டன. கரைபடியும் கவலை இனி இல்லை உங்களுக்கு என்ற விளம்பர வாசகம் போல அதனால் கைகளில் கறை படிவது குறைந்தது.

பாலிடெக்னிக் படிக்கும் போது ஜெல் பேனாக்கள் பிரபலமாகின. நான் வைத்திருந்த ஸ்டிக் மைக்ரோ டிப் பேனாவை பார்த்த தோழி ஒருத்தி அது போல் ஒன்றுக்கு ஆசைப்பட்டாள்.

சரியென்று மறுநாள் வாங்கி வரும் போது நண்பன் சொன்னான் பேனா பரிசு கொடுத்தால் நட்பு முறிந்து விடும் என்று. அதைச் சொல்லி அவளிடம் பணம் வாங்கிக் கொண்டேன். கஷ்டமாகத்தான் இருந்தது. ஆனால் அதனால் நட்பு இருமடங்கு வளர்ந்தது.

மனதில் பைனரியாக தோன்றும் எண்ணங்களை நமது மூளை கம்பைல் செய்து விரல்களின் வழியே அனுப்பி பேனாவில் வழியச்செய்வதால் கிடைப்பதுதான் நம் அழகழகான எழுத்துகள்.

நம் வாழ்வோடு ஆறாம் விரலாய் ஒட்டிக்கொண்டு வந்துள்ள‌ மை பேனாவை கண்டுபித்தவர் வாட்டர்மேன் என்றும் பால்பயிண்ட் பேனாவை கண்டுபிடித்தவர் லாய்ட் என்றும் நம்மில் எத்தனை பேருக்கு தெரியும். ஐந்து ரூபாய்க்கு வாங்கும் பேனாவை கண்டுபிடித்த ஒருவரின் வாழ்நாளின் பெரும் பகுதியை இந்த பேனாவே கரைத்திருக்கும் என்று உணர்ந்திருக்கிறோமா?

அது போலவே முன்பு பேனாவை எழுத பயன்படுத்தியது போல் இப்போது கணினியை பயன்படுத்துகிறோம். இதில் நீங்களும் நானும் எளிய தமிழில் தொடர்பு கொள்ள இந்த எழுத்துருக்களை கண்டுபிடித்தது யாரென்று நாம் நினைத்துப்பார்த்து நன்றி செலுத்தியிருக்கிறோமா?

அப்படியொரு வாய்ப்பு கிடைத்தால் கண்டிப்பாக விடமாட்டோம்தானே. ஏனெனில் காலையில் எழுந்து இரவு படுக்கச்செல்லும் வரை நடக்கும் சின்ன சின்ன விசயங்களுக்கு கூட மற்றவர்களுக்கு நன்றி சொல்லி பழக்கப்பட்டவர்கள் நாம். அப்படியொரு வாய்ப்பு கிடைத்தால் விடுவோமா?

கிடைத்திருக்கிறது. ஆம் இந்த தமிழ் எழுத்துருக்களுக்காக பிரதிபலன்பாராமல் தன் வாழ்நாளின் பெரும்பகுதியை செலவழித்து கண்டுபிடித்து நமக்கு அளித்த "தேனீ" உமர் தம்பி அவர்களுக்கு நாம் நமது நன்றிகளை செலுத்துவோம்.

தமிழ் எழுத்துருக்கள் (Thenee, Theneeuni மற்றும் சில..) ஆங்கிலம்-தமிழ் அகராதி, தமிழ் எழுத்துறுமாற்றி (தமிழெழுதி), மற்றும் தமிழ் இணைய தளங்களைப் பார்வையிட உதவும் தானியங்கி/டைனமிக் எழுத்துறுமாற்றி மற்றும் பல தொடக்கநிலை நிரழி/மென்பொருள்களின் சொந்தக்காரராக இருந்தாலும் அவை எதிலும் தனது பெயரோ அல்லது அதற்கு பண‌த்தையோ எதிர் பார்க்காமல் சேவையாற்றியவர்கள் உமர்தம்பி அவர்கள்.

மறைந்த உமர்தம்பி அவர்களின் தன்னலமற்ற தமிழ்தொண்டைப் போற்றும் வகையில் கோவையில் நடைபெற உள்ள உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டில் தமிழ்கணிமைக்கு பங்காற்றியவர்களுக்கு 'யூனிகோட் உமர்தம்பி' பெயரால் விருது வழங்கி கவுரவிப்பதே காலத்தினால் செய்த நன்றியாகும் அதை நம் பதிவர்கள் அனைவரும் ஒத்த கருத்துடன் பதிவுகள் மூலமாக எல்லோரிடமும் பரப்புவதே நாம் அவருக்கும் அவர் பணிக்கும் செய்கின்ற நன்றிக்கடனாகும்.

மேலும் அவர்களைப்பற்றி அறிய‌ இதை வாசியுங்கள்.

,

42 comments:

பனித்துளி சங்கர் said...

///////குச்சிகளை கடன் கொடுப்பதோடு நிறைய பேருக்கு நட்பையும் சேர்த்து கொடுத்திருக்கிறேன். பின்பு அவர்கள் நட்போடு சேர்த்து இருமடங்காக திருப்பித்தருவார்கள். இது பென்சிலுக்கும் நடக்கும்./////////


பள்ளியில் துள்ளித்தெறிந்த காலங்களை கண்முன் நிறுத்தியது உங்களின் இந்த அழகியப் பதிவு . பகிர்வுக்கு நன்றி

தாஜுதீன் (THAJUDEEN ) said...

Thanks for remembering Umar with very good examples.

settaikkaran said...

யூனிக்கோடு உமர்தம்பிக்கும், அவரைப் பற்றிக் குறிப்பிட்டதுடன், மேலும் பல சுவாரசியமான தகவல்கள் தந்த உங்களுக்கும் பாராட்டுக்கள்!

vasu balaji said...

பகிர்ந்தமைக்கு நன்றி. உமருக்கு சலாம்:)

நேசமித்ரன் said...

பகிர்வுக்கு நன்றி

சிநேகிதன் அக்பர் said...

வாங்க சங்கர்

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

Chitra said...

அருமையான பகிர்வு. நன்றி.

அமைதி அப்பா said...

//இந்த தமிழ் எழுத்துருக்களுக்காக பிரதிபலன்பாராமல் தன் வாழ்நாளின் பெரும்பகுதியை செலவழித்து கண்டுபிடித்து நமக்கு அளித்த "தேனீ" உமர் தம்பி அவர்களுக்கு நாம் நமது நன்றிகளை செலுத்துவோம்.//

நிச்சயமாக.
நல்லதொரு பகிர்வு, நிறைய நினைவுகளைக் கொண்டுவந்ததுடன், நிறையத் தகவல்களையும் கொடுத்துள்ளீர்கள். நன்றி.

Starjan (ஸ்டார்ஜன்) said...

நல்ல பகிர்வு.. சிலேட்டுல வீட்டுப்பாடம் எழுதிட்டு வரலைன்னா அடி விழும். அதேமாதிரி சிலேட்டுல எழுதினது அழிஞ்சிருச்சின்னா அவ்வளவுதான். சே!! கஷ்டப்பட்டு எழுதினதெல்லாம் வீணாப்போச்சே, என்ற வருத்தம் அதிகமா இருக்கும். டீச்சரிடம் காட்டும்போது சமாளிக்கணும் இல்லைன்னா அடிதான்.

நல்ல பகிர்வு அக்பர்.

சிநேகிதன் அக்பர் said...

வாங்க தாஜுதீன்

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

சிநேகிதன் அக்பர் said...

வாங்க சேட்டைக்காரன்

தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

சிநேகிதன் அக்பர் said...

வாங்க பாலா சார்

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

சிநேகிதன் அக்பர் said...

வாங்க நேசமித்ரன் சார்

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

ஸாதிகா said...

அருமையான பகிர்வு.நானும் உமர்தம்பி அவர்களைப்பற்றி நிறைய படித்து இருக்கின்றேன்

Thenammai Lakshmanan said...

யூனிகோட் அளித்த உமர்தம்பிக்கும் பகிர்ந்த அக்பருக்கும் நன்றிகள் பல

பா.ராஜாராம் said...

அருமையான பகிர்வு அக்பர்.

observation & presentation-மற்றொரு சரவணா (எ) செ.சரவணகுமார்!

ஹேமா said...

பள்ளியின் நினைவலையில் தொடங்கித் தமிழோடு நிறைத்திருக்கிறீர்கள் பதிவை.
நன்றி அக்பர்.

T.V.ராதாகிருஷ்ணன் said...

//பகிர்ந்தமைக்கு நன்றி. உமருக்கு சலாம்:)
//

Repeatey

Prasanna said...

சிறந்த பதிவு..!

தமிழ் மீரான் said...

கல் சிலேட்டிலிருந்து கணினி திரைக்கு மிக சுவாரஸ்யமாக நகர்த்தி வந்து முடிவில் முக்கியமான கருத்தையும் அழகாக பதிவு செய்துள்ளீர்கள். வாழ்த்துக்கள்.!

'பரிவை' சே.குமார் said...

உங்கள் பள்ளி வாழ்க்கையை எங்கள் கண் முன்னே நிறுத்தியிருக்கிறீர்கள். அருமையான கட்டுரை.
கட்டுரைக்குள் நட்பின் வாசம்.

koothanalluran said...

பள்ளிநாட்களில் குச்சிக்கு கோவக்காய் என்பது பிரபலம் சிலேட்டில் உள்ள எழுத்துக்களை அழிக்க கோவக்காய் பயன்படும். அப்படி குச்சிக்கு கோவக்காய் வாங்கி பழகிய நம்மை பள்ளிநாட்களுக்கு அழைத்து சென்றிருகிறீர்கள்.

உமர் தம்ம்பிக்கு நிச்சயம் அங்கீகாரம் கிடைக்கும் நம்புவோம்

நாடோடி said...

அருமை அக்ப‌ர்.. ப‌கிர்விற்கு ந‌ன்றி... உம‌ர்த‌ம்பிக்கு அங்கீகார‌ம் கிடைக்க‌ வாழ்த்துக்க‌ள்..

தாராபுரத்தான் said...

எங்க பள்ளி நாட்களில் விரல் இடுக்கையில் மை இல்லாத நாட்களே இருக்காது. அதை போக்க கல்லில் விரலை தேய்ப்போம்..சுகமான நினைவுகள். உம்மர் தம்பி அவர்களுக்கு விருது வழங்க குரல் கொடுப்போம்.

சிநேகிதன் அக்பர் said...

வாங்க

அமைதி அப்பா
Starjan ( ஸ்டார்ஜன் )

தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

சிநேகிதன் அக்பர் said...

வாங்க

ஸாதிகா அக்கா
ஜெய்லானி
தேனம்மை அக்கா

தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

சிநேகிதன் அக்பர் said...

வாங்க பா.ராஜாராம் அண்ணா

// அருமையான பகிர்வு அக்பர்.
observation & presentation-மற்றொரு சரவணா (எ) செ.சரவணகுமார்!//

அவர் அளவுக்கு இல்லை என்றாலும் தங்கள் சொன்னது மகிழ்ச்சி அளிக்கிறது. ரொம்ப சந்தோசம்ணே.

தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

சிநேகிதன் அக்பர் said...

வாங்க

ஹேமா
T.V.ராதாகிருஷ்ணன் சார்
பிரசன்னா
தமிழ் மீரான்
koothanalluran

தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

சிநேகிதன் அக்பர் said...

வாங்க

நாடோடி ஸ்டீபன்
தாராபுரத்தான் பழனிசாமி சார்

தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

Adirai khalid said...

அருமையான பகிர்வு.,
ஒலைச்சுவடிகளையும், எழுத்தானிகளையும் ஒரங்கட்டிவிட்டு கரும்பலகையும் (சிலேட்டும்), காகிதமும் பிரவேசித்த தருணத்தில் நாமும் வாழ்ந்தோம் வளர்ந்தோம்
என்பதினை நினைக்கும்பொழுது
கலவரப்பட்ட மனதிர்க்கு இனிமையான
நினைவுகள்தான்

பாலிய எழுத்து முறைகலுடன்
காகிதம், கணினியுடன் செய்த விஞ்ஞான உடன்படிக்கையால் சாதரனறும் கணினியில் தன் தாய்மொழியில் இவ்வலைப் பிரதேசத்தில் பிரவேசிக்க கலம் அமைத்துக்கொடுத்த அந்த கனிமையாளர் "யுனிகோட் உமர் தம்பி" அவர்களுக்கும், அவர் நமக்கு தந்த பங்களிப்புகளுக்கும் கண்டிப்பாக தமிழக அரசு அங்கீகாரம் அளிக்கவேண்டும் இதர்க்கு
உலகிளுள்ள அனைத்து தமிழ் பதிவர்கள் மற்றும் கனிணி பங்களிப்பாளர்கள் அனைவரும்
குரல் கொடுக்க வேண்டியது அவசியம்

உங்களின் இந்த உள்ளக் கிடக்கைக்கு ஆதரவு அளித்தவனாகவும் உங்களின் இந்த அழகியப் பகிர்வுக்கும் நன்றிகள்

மு.அ.ஹாலித் சிட்னி ஆஸ்திரேலியா

செ.சரவணக்குமார் said...

மிக முக்கியமான பகிர்வு அக்பர். பள்ளி நாட்களை நினைவுகூர்ந்த விதம் வெகு அழகு. அதிலும் அந்த கடல் குச்சி, ஆஹா மறக்க முடியுமா?

Ahamed irshad said...

நல்ல பகிர்வு நண்பா..

முனைவர் இரா.குணசீலன் said...

பயனுள்ள வாழ்க்கை வாழ்ந்தவரைப் பற்றிய பதிவு காலத்தின் தேவை.

SUFFIX said...

//பேனா பரிசு கொடுத்தால் நட்பு முறிந்து விடும்//

இப்படியுமா இருக்கு?

//யூனிகோட் உமர்தம்பி' பெயரால் விருது வழங்கி கவுரவிப்பதே காலத்தினால் செய்த நன்றியாகும் //

அரசு முயற்சி செய்யும் என நம்புவோமாக!!

சிநேகிதன் அக்பர் said...

வாங்க‌

மு.அ. ஹாலித்
செ.சரவணக்குமார்
அஹமது இர்ஷாத்
முனைவர்.இரா.குணசீலன்
SUFFIX

தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

தாஜுதீன் (THAJUDEEN ) said...

adiraix உமர்தம்பி அவர்களை பற்றி ஆனந்த விகடன் இணையத்தில் செய்தி http://youthful.vikatan.com/youth/Nyouth/umarthambi080510.asp

மங்குனி அமைச்சர் said...

ஸ்கூல கண்ணுக்கு முன்னாடி கொண்டு வந்து நிப்பாட்டிக

விஜய் said...

பள்ளி நாட்களில் ஹீரோ பேனா கண்டிப்பாக மிகப்பெரிய விஷயம் அப்பொழுது.

வாழ்த்துக்கள்

விஜய்

சிநேகிதன் அக்பர் said...

வாங்க

தாஜூதீன்
மங்குனி அமைச்சர்
விஜய்

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

Jaleela Kamal said...

//யூனிகோட் உமர்தம்பி' பெயரால் விருது வழங்கி கவுரவிப்பதே காலத்தினால் செய்த நன்றியாகும் //

கண்டிப்பாக கவுரவிக்க பட வேண்டும்.


ஹை கல் சிலேட் எழுதும் போது நரு நருன்னு நல்ல இருக்கும்.

அடுத்து துண்டு பென்சில் அதை மறந்துட்டீங்களே.
அதற்கடுத்து தான் இங்க் பேனா, அடுத்து ஹீரோ பேனா ஹிஹி

சிநேகிதன் அக்பர் said...

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி Jaleela

Jaleela Kamal said...

உங்களுக்கு ஒரு அவார்டு கொடுத்துள்ளேன் வந்து பெற்று கொள்ளுங்களேன்.

இதையும் விரும்புவீர்கள்.

Related Posts with Thumbnails