எல்லாம் எளிதாக
கிடைக்கும் என்றெண்ணி
தொடங்கிய இப்பயணம்
பணப்புகழ் என்னும்
மாயக் கடிவாளத்தில் கட்டுண்டு
உணர்வுக்கண்களை
திரைகளால் மூடியபடி
நிற்காமல் ஓடியும்
நீண்டு கொண்டே
போகும் இலக்கு
எப்போது முடியுமென
எந்நாளும் காத்திருக்கிறேன்
இலக்கின்றி சுற்றி
காட்டில் இரை தேடுவது
பிரயாசமெனினும்
தேடுதலே சுகமாக உள்ளது.
14 comments:
// தேடுதலே சுகமாக உள்ளது// ஆஹா அருமையா முடிச்சீங்க தல!! ஆனா தேடுவது ஒன்றும் ஈசியில்ல!!
தேடுதல் சுகமாய் இருந்தால் நல்ல இலக்கு நிச்சயம்.
அருமையா முடிச்சீங்க.
அக்பர் உங்களை தொடர் பதிவிற்கு அழைதுள்ளேன்.
http://asiyaomar.blogspot.com/2011/01/blog-post_08.html
சுப முடிவு சூப்பர்.
இலக்கை நோக்கிய பயணத்தில் வழி தவறாமல் செல்ல வேண்டும். சூழ்நிலைகள், கால மாற்றங்கள் குறிக்கிடாமல் இருந்தால் வெற்றி நிச்சயம்.
நல்லாருக்கு கவிதை அக்பர்.
ஏக்கத்தோடு தொடங்கி இலக்கோடு முடிவு அருமை.
ம்...உண்மைதான் அக்பர்.
தேடுதல் சுகம் !
எப்போது முடியுமென
எந்நாளும் காத்திருக்கிறேன்
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி T.V.ராதாகிருஷ்ணன் சார்
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி எம் அப்துல் காதர்
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி asiya omar
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சே.குமார்
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ஸாதிகா
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி Starjan ( ஸ்டார்ஜன் )
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ராஜவம்சம்
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ஹேமா
அதுக்கு இன்னும் பல வருடங்கள் கிடக்கிறது பொன்.பழனிச்சாமி அண்ணா. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி
Post a Comment