Saturday, July 24, 2010

அன்புச்செல்வன் : பா. ரா. அண்ணன்

(காக்க காக்க சூர்யா ஸ்டைலில் படிக்கவும்)

கைகால் வலியோட, உடம்பு முழுக்க அசதியோடா தூக்க கலக்கத்துல உட்கார்ந்து இதை எழுதக் காரணம் நேத்து நடந்த சந்திப்புதான்.

என் பேர் அக்பர், அக்பர் PPS ( பிரபல பதிவர் சிரிப்பு பிரிவு ) ன் பேருக்கு பின்னாடி இருக்கிற மூனெழுத்து நான் படிச்சி வாங்கின பட்டமோ, என்னோட லட்சியமோ இல்லை. நம்மூருல ரொம்ப மலிவா கிடைக்கிறது அடை மொழி ஒன்னுதான். அதனால அதை நாங்களே சேர்த்துகிட்டோம். :)

வியாழன் இரவு செல்லில் சரவணன் அழைத்தார்.

சரவணகுமார் PPS : அக்பர் நாளை காலையில நான், ஆறுமுகம் PPS, முடிவிலிசங்கர் PPS, மற்றும் எண்கவுண்டர் ஸ்பெஷலிஸ்ட் பா.ரா அண்ணா நாலு பேரும் வாறோம் ஸ்டார்ஜன் PPS மற்றும் டீமோட ரெடியா இருங்க ஒரு வேட்டைக்கு போக வேண்டியிருக்கு.

அக்பர் : அட பா.ரா அண்ணனா! அவரு வர்றதே பெரிய விசயம் ஆச்சே. இந்த தடவை எப்படியாவது கூட்டி வந்துடுங்க நாங்க ரெடியா இருக்கோம்.

மறுநாள் மதியம் பன்னிரெண்டு மணிக்கு சொன்ன படியே நால்வரும் ஆஜராகிறார்கள்.

ஆறுமுகம் : இதுதான் பா.ரா.! எண்கவுண்டர் ஸ்பெஷலிஸ்ட். இதுவரைக்கும் 150 எண்கவுண்டர் பண்ணியிருக்கார். எல்லாமே சக்சஸ். ஆனா ஒருத்தருக்கும் பாதிப்பில்லை.

ஸ்டார்ஜன் : அதெப்படி ?

சரவணன் : அவர் குறியே வேற.

சங்கர் : அதனாலதான் எல்லோரும் தப்பிச்சிட்டாங்களா?

ஆறுமுகம் : சீரியஸா பேசிட்டு இருக்கும்போது அங்கே என்ன ஜோக். இவருதான் நம்ம ஐந்து பேருக்கும் டிரைனிங் கொடுக்கப் போற ஆபிஸர். ஸார் இவரு அக்பர் அவரு ஸ்டார்ஜன் இன்னைக்கு வேட்டைக்குப் போற இடம் இவங்களுக்குத்தான் தெரியும். இவங்களோட போய் நாம சூட் பண்ணபோறோம்.

பா.ரா : அப்படியா! எல்லோருக்கும் வணக்கம். மொத்தம் 150 எண்கவுண்டர். ஒன்னு கூட மிஸ்ஸாகலை. ஏன்னா எல்லாமே அன்பால சுட்டது. அந்த சமயத்துல எல்லோர் கண்ணும் நம்ம மேலதான் இருக்கும். ரொம்ப கவனமா ஹாண்டில் பண்ணனும். சரி நீங்க நம்மாளுதான்னு தெரிஞ்சிக்க எல்லோரும் டி கார்டை காட்டுங்க.

எல்லோரும் காட்டுகிறார்கள். ஆறுமுகத்தோட கார்டை பார்த்தவுடன் ஷாக்காகும் பா.ரா.

பா.ரா : என்னாதிது. சிகரெட் குடிக்கிறபோஸ். அதுக்கு கீழே "சிகரெட் குடித்தல் உடல் நலத்துக்கு தீங்கானது" ன்னு சப்டைட்டில் வேற.

ஆறுமுகம் : யெஸ் சார். சிகரெட் குடிக்கிறமாதிரி படம் எடுத்தா அதுக்கு கீழே சப்டைட்டில் போடணும்கிறது அரசாங்கத்தோட உத்தரவு சார்.

பா.ரா : உங்க கடமை உணர்ச்சியை பாராட்டுறேன். ங்க வாழ்க்கையில எத்தனை தடைகற்கள் வந்தாலும் அதை தூசி மாதிரி நினைச்சி தட்டிவிட்டுட்டு போயிட்டே இருக்கணும் புரிஞ்சுதா. ஆமா உங்களையெல்லாம் யாராச்சும் ஃபாலோ பண்ணுறாங்களா.

ஸ்டார்ஜன் : என்னை 125 பேர் ஃபாலோ பண்ணுறாங்க. சில்வர் ஜூபிளி சார்.

அக்பர் : 125 ஃபாலோயர் 500 ஆக வாழ்த்துகள் ஸ்டார்ஜன்.

சரவணன் : அருமை ஸ்டார்ஜன். தொடருங்கள்.

சங்கர் : இது முடிவில்லாமல் தொடர வாழ்த்துகள்.

ஆறுமுகம் : ம்ம்ம். ரைட்டு. நடத்துங்க. :)

பா.ரா : இங்கே என்ன நடக்குது?

சங்கர் : அவருக்கு 125 ஃபாலோயர் சேர்ந்ததை ஊக்கப்படுத்துறோம் சார்.

பா.ரா : அடப்பாவிங்களா. நாம செய்யுற வேலைக்கு யாரும் நம்மை ஃபலோ பண்ணாம பார்த்துக்கணும். அது சரி எண்கவுண்டர்னா என்னான்னு தெரியுமா.

அக்பர் : எங்களுக்கு ஹிட் கவுண்டர்தாண்ணே தெரியும். எண்கவுண்டர்ன்னு புதுசா ஏதாச்சும் வந்திருக்கா என்னா. அப்ப உடனே விட்ஜெட் சேர்த்தாகணுமே.

பா.ரா : சரி சரி அதப்பத்தி பின்னாடி சொல்றேன். அப்புறம் என்னை அண்ணேன்னு கூப்பிட்டது ரொம்ப பிடிக்குது. இனி உறவைச்சொல்லியே கூப்பிடுங்க. இப்ப க்ரூப் போட்டோவுக்கு போஸ் கொடுங்க.

சங்கர் : ஆனா அதை பதிவுல போடாதிங்க. அண்ணன் முகம் வெளியாட்களுக்கு தெரியக்கூடாதுன்னு அரசாங்க ஆர்டர்.

எல்லோரும் போஸ் கொடுத்து படம் எடுத்தோம். அதை எடுத்தது அக்பரோட மச்சினன் அர்க்கம். அதுக்கு பக்கத்துல நின்னது அக்பர் தம்பி ஜெயினுலாபிதீன் என்று அப்போ உங்களுக்கு தெரிய வாய்ப்பில்லை. ஏன்னா அவங்க ரெண்டு பேரும் கேமராவுக்கு பின்னாடி நின்னாங்க.

எல்லோரும் சாப்பிட்டு விட்டு வேட்டைக்கு ரெடியாகி ஆறுமுகத்தின் நிஸ்ஸான் காரில் ஏறினோம்.

( முடிந்தால் இந்த மூடுக்கு கில்லில வர்ற "அர்ஜுனரு வில்லு" பாட்டை நினைத்து கொள்ளவும் )

ஆறுமுகம் ஆக்ஸிலேட்டரில் வைத்த காலை எடுக்காமல் 100 கடந்து போகிறார். எந்த ஸ்பீடு பிரேக்கரிலும் பிரேக் பிடிக்கவில்லை.

பா.ரா : என்ன மாப்ள ஆறுமுகம் அப்படி ஒன்னும் அவசரமில்லையே ஏன் இவ்வளவு வேகம்.

ஆறுமுகம் : நீங்க சொன்னதை நீங்க மறக்கலாம். நான் மறக்கமாட்டேன் மாமா. எத்தனை தடைக்கற்கள் வந்தாலும் தூசி மாதிரி தட்டிவிட்டுட்டு போயிட்டே இருக்கணும்னு நீங்கதானே சொன்னீங்க. நான் கடமையில கண்ணா இருப்பேன் மாமா. ( உண்மையைச் சொன்னா பின்னாடி ஒன்னு நோட் பண்ணிக்கிட்டே இருந்து பதிவெழுதி ஹிட் வாங்கிடும் விடக்கூடாது)

பா.ரா : ஓட்டணும்னு முடிவு பண்ணிட்டே. நீ ஓட்டு மாப்ளே.

ஆறுமுகம் : மாமா!

பா.ரா : நான் காரைச்சொன்னேன். :)

அக்பர் : ஸ்டார்ஜன் இந்த சிக்னல்ல இருந்து ரைட்ல போயி லெஃப்ட் போகணுமா?

ஸ்டார்ஜன் : இல்லை லெஃப்ட்ல போயிட்டு அப்புறம்தான் ரைட்டு.

சங்கர் : எனக்கு இது ரைட்டா தெரியலையே.

அக்பர் : ஆமா சங்கர். அது லெஃப்டுதான்.

சரவணன் : (மனதுக்குள்) இவங்க காட்டுற வழியில போறதுக்குள்ளே ரெண்டு புத்தகம் படிச்சி விமர்சனம் எழுதியிருக்கலாம்.

அக்பர் : சாரிண்ணே ரொம்ப நாளைக்கு முன்னாடி வந்ததா. இப்ப சிக்னல் , ஒன்வேன்னு நிறைய விசயங்கள் மாறியிருக்கு. அதான் குழப்பமா இருக்கு.

ஆறுமுகம் : (அடப்பாவி) கோட்டையாவது அதே இடத்துல இருக்கா.

ஸ்டார்ஜன் : என்ன இப்படி கேட்டுட்டிங்க. அங்கேயேதான் இருக்கு. ஆனா அது எங்கே இருக்குன்னுதான் மறந்து போச்சு.

ரோட்டோரமா பல இடங்களில் நிறுத்தி வழி கேட்டு, பல இடங்களை சுற்றி கடைசியில் ஜபுல்காரா எனப்படும் அந்த ழமை வாய்ந்த குன்று குகையை அடைகிறார்கள்.

பா.ரா : சூட்டிங்கை வெளியே வச்சுக்கவா. இல்லை குகைக்குள்ளே வைக்கலாமா.

சங்கர் : முதல்ல வெளியே வச்சுக்குவோம். சில நேரம் குகைக்குள்ள லைட்டிங் கம்மியா இருக்கலாம். ஆறுமுகம் கேமராவை கொடுங்க.

பா.ரா : ரொம்ப அருமையா இருக்கு இடம். மத்த இடங்கள்ல கடும் வெயில் அடிக்கும் போது இந்த இடம் மட்டும் நல்ல கூலிங்கா இருக்கே. சரி இனிமே சுட்டுத்தள்ளுங்க.

அங்கே பிடித்தது இங்கே.


(அர்க்கம், ஜெயினுலாப்தீன்,சங்கர், செ.சரவணக்குமார்,ஸ்டார்ஜன், ஆறுமுகம், அக்பர்)

நண்பர்களே நேற்று பா.ரா அண்ணன், செ.சரவணகுமார், ஆறுமுகம் முருகேசன், முடிவிலி சங்கர் நால்வரும் எங்களை சந்திக்க வந்திருந்தனர். நேற்று மறக்க முடியாத ஒரு இனிய நாளாக அமைந்து விட்டது. எந்த கவலையும் இல்லாமல் சிலமணி நேரங்கள் மகிழ்ந்திருந்தோம். ஜபுல்காரா என்ற குன்று குகைக்கு சென்று சுற்றிப்பார்த்தோம்.

சில காட்சிகளை சிலிக்கான் சிப்பில் புகைப்படங்களாகவும், அந்த சந்திப்பை எங்களது மூளையின் அடுக்குகளிடையே நீங்காத நினைவுகளாகவும் சேமித்து வைத்துள்ளோம் உங்களோடு பகிர்ந்து கொள்ள. அது பற்றிய விரிவான இடுகையை மற்ற பதிவர்கள் இன்னும் அழகாக எழுதுவார்கள். இது சும்மா ஜாலிக்கு. மீண்டும் சந்திப்போம்.

217 comments:

1 – 200 of 217   Newer›   Newest»
ஆறுமுகம் முருகேசன் said...

ஹா ஹா ஹா ஹாஆஆஆஆஆஆ
(பட் உங்க நேர்மை எனக்குப் பிடிச்சுருக்கு அக்பர்ஜி)

ரைட்டு,நான் அப்புறமா வரேன் அண்ணா..

நீங்க நடத்துங்க..
:)))

அக்பர் said...

வந்த ஒரு ஆளும் போயிட்டா நான் என்ன பண்றது. ஆளில்லாத கடையில யாருக்கு டீயாத்த. :)

வானம்பாடிகள் said...

இதுலையும் பா.ரா. எஸ்ஸாயிட்டாரா:)). நல்லாருக்கு அக்பர்:)))

LK said...

நல்ல பகிர்வு

இளம் தூயவன் said...

பதிவர்கள் சந்திப்பை சுவையாக எழுதி உள்ளீர்கள். படிக்க ரசனையாக இருந்தது. யார் அந்த சங்கர்?. விபரம் குறிப்பிடவில்லை.

நாஞ்சில் பிரதாப் said...

பா.ரா அண்ணாச்சி போட்டோவை சுவரொட்டில பார்த்தேனே அக்பர்... அதாவது அவர்தானா.,,இல்ல வேற யாராவதா--??

நல்ல காமெடியா இருந்தது தல... இடைல சரவணனை புத்தகம் விமர்சனம் பதிவை வச்சு சூப்பரா கலாயச்சிஙக...

நம்ம குருவுக்கு டேமேஜ் குறைவா இருக்கு...

ராம்ஜி_யாஹூ said...

nice where is pa raa pic

அக்பர் said...

ஆமா பாலா சார். அடுத்த முறை எப்படியாவது பெர்மிஷன் வாங்கணும். :)

அக்பர் said...

வாங்க எல் கே வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

cheena (சீனா) said...

ஓஒ இதுக்குப் பேரு தான் பதிவர் சந்திப்பா - பாரா காணோம் ஃபோட்டொல

நல்வாழ்த்துகள் அக்பர்
நட்புடன் சீனா

சீமான்கனி said...

//அன்பால சுட்டது//

ஓ..!!! நல்லவேளை சொல்லிடீங்க நான்கூட அடுப்புல சுட்டதொனு தப்பா நெனச்சுட்டேன்......இருந்தாலும் இவ்வளவு சிரிப்பு ஆகாது...வர்ர்ட்டா...

அக்பர் said...

வாங்க இளம் தூயவன்

சங்கரின் லிங்க் இணைத்துள்ளேன்.

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

அக்பர் said...

வாங்க நாஞ்சிலு

பிறிதொரு சமயத்தில் அண்ணனே வெளியிடுவார் என நினைக்கிறேன்.

உங்க குருவைப்பற்றி சரவணகுமார் கலாய்ப்பார் என நினைக்கிறேன்.

அக்பர் said...

வாங்க ராம்ஜி_யாஹூ

இங்கு வெளியிட வேண்டாம் எனக்கேட்டுகொண்டதற்கினங்க படம் போடவில்லை.

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

அக்பர் said...

வாங்க சீனா ஐயா!

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

அக்பர் said...

வாங்க சீமான்கனி

இது உங்களுக்கே ஓவரா தெரியலை :)

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

செ.சரவணக்குமார் said...

ஹலோ ஒன் டூ த்ரீ.. மைக் டெஸ்டிங்...

ஐயா சாமி என்னாதிது... ஒரு சந்திப்ப இம்புட்டு டெரராவா எழுதுவீங்க..

சிரிச்சி சிரிச்சி வயிறு புண்ணாயிருச்சி.

கௌதம் மேனன் இடத்துல பா.ராவா.. ரைட்டு நடத்துங்க.

இந்த PPSக்கு ஒரு வெளக்கம் சொன்னீங்க பாருங்க.. மெரண்டுட்டேன்.

இப்படிக்கு
One of the PPS

செ.சரவணக்குமார் said...

//நல்ல காமெடியா இருந்தது தல... இடைல சரவணனை புத்தகம் விமர்சனம் பதிவை வச்சு சூப்பரா கலாயச்சிஙக... //

நண்பா நாஞ்சிலு......

ரைட்டு..

அக்பர் said...

இன்னும் 10 நிமிஷத்துல வறேன்.

Chitra said...

நாஞ்சில் பிரதாப் said...


நம்ம குருவுக்கு டேமேஜ் குறைவா இருக்கு...


......இப்படி ஒரு சிஷ்யன் கிடைக்க, உங்கள் குரு ரொம்ப தவம் பண்ணி இருந்திருக்கணும்.
ஹா,ஹா,ஹா,ஹா....

அக்பர் சார், கலக்கல் பதிவு.

செ.சரவணக்குமார் said...

ஹலோ மக்களே எங்க ஒருத்தரையும் காணோம்??

ஐயா வழிகாட்டி ஸ்டார்ஜன், எங்கய்யா போனீரு?? வந்து இவர என்னன்னு கேளுங்க..

செ.சரவணக்குமார் said...

// வானம்பாடிகள் said...

இதுலையும் பா.ரா. எஸ்ஸாயிட்டாரா:)).//

ஐயா, கவலைப்படாதீங்க. எம்புட்டு நாளைக்குத்தான் எஸ்ஸாயிட்டே இருப்பாருன்னு பாத்துடுவோம்.

// நாஞ்சில் பிரதாப் said...

பா.ரா அண்ணாச்சி போட்டோவை சுவரொட்டில பார்த்தேனே அக்பர்... அதாவது அவர்தானா.,,இல்ல வேற யாராவதா--??//

நாஞ்சிலு.. அது நம்ம மக்காவேதான். நீரு போறபோக்குல பொரளிய கெளப்பி விட்டுராதீரும்..

அக்பர் said...

//ஐயா சாமி என்னாதிது... ஒரு சந்திப்ப இம்புட்டு டெரராவா எழுதுவீங்க..//

நீங்க அடிச்ச கூத்தை முழுசும் எழுதாம போனேனேன்னு ச்ந்தோசப்படாம... என்ன கேள்வி இது?

//இந்த PPSக்கு ஒரு வெளக்கம் சொன்னீங்க பாருங்க.. மெரண்டுட்டேன்.
இப்படிக்கு
One of the PPS//

அது !

அக்பர் said...

//நண்பா நாஞ்சிலு......

ரைட்டு..//

இப்பதான் அவரை கூப்பிட்டுட்டு வந்தேன் வந்து பதில் சொல்வாரு :)

அக்பர் said...

வாங்க சித்ராக்கா

//......இப்படி ஒரு சிஷ்யன் கிடைக்க, உங்கள் குரு ரொம்ப தவம் பண்ணி இருந்திருக்கணும்.ஹா,ஹா,ஹா,ஹா....//

நல்லா கேட்டிங்க கேள்வி. இப்ப குர் கொஞ்ச நேரத்துல வருவார் பாருங்க :)

அக்பர் said...

//ஐயா வழிகாட்டி ஸ்டார்ஜன், எங்கய்யா போனீரு?? வந்து இவர என்னன்னு கேளுங்க..//

அவரு ரூமுக்கு போயிருக்காரு. கடைக்கு வர்ர வழியை மரந்துட்டாராம். இப்ப வந்துடுவார்.

அக்பர் said...

//நாஞ்சிலு.. அது நம்ம மக்காவேதான். நீரு போறபோக்குல பொரளிய கெளப்பி விட்டுராதீரும்..//

அது என்ன சுவரொட்டி டீடெயில் ப்ளீஸ்.

நாஞ்சில் பிரதாப் said...

ஒன் டு த்ரீ... ஒன் டு த்ரீ...

நண்பா சரவணா கூப்பிட்டீங்களா... அக்பர் உங்களைப்பத்தி ஏதோ சொன்னாரு அதைத்தான் அப்படியான்னு கேட்டேன்...:))

அக்பர் said...

என்ன சரவணன்ஜீ ஆளைக்காணோம்.

அக்பர் said...

//நண்பா சரவணா கூப்பிட்டீங்களா... அக்பர் உங்களைப்பத்தி ஏதோ சொன்னாரு அதைத்தான் அப்படியான்னு கேட்டேன்...:))//

அடப்பாவி கூப்பிட்டாருன்னுதானே சொன்னேன். ப்ளேட்டை மாத்திதீரு.

நாஞ்சில் பிரதாப் said...
This comment has been removed by the author.
நாஞ்சில் பிரதாப் said...

//அது என்ன சுவரொட்டி டீடெயில் ப்ளீஸ்//

சங்கமம் சுவரொட்டி தெரியாதா..-- அதுல அன்னைக்கே நம்ம பாரா அண்ணாசி போட்டோவை பார்த்துட்டேன்... மீசை கொஞ்சம் பெருசா வச்சா அசல் பிரகாஷ்ராஜ் மாதிரி இருப்பாங்கன்னு நினைக்கிறேன்....

பாரா அண்ணாச்சி நீங்க சொன்ன மாதிரியே சொல்லிட்டேன்...

அக்பர் said...

//சங்கமம் சுவரொட்டி தெரியாதா..-- அதுல அன்னைக்கே நம்ம பாரா அண்ணாசி போட்டோவை பார்த்துட்டேன்... மீசை கொஞ்சம் பெருசா வச்சா அசல் பிரகாஷ்ராஜ் மாதிரி இருப்பாங்கன்னு நினைக்கிறேன்....

பாரா அண்ணாச்சி நீங்க சொன்ன மாதிரியே சொல்லிட்டேன்...//

இது எப்ப நடந்தது.

செ.சரவணக்குமார் said...

//அவரு ரூமுக்கு போயிருக்காரு. கடைக்கு வர்ர வழியை மரந்துட்டாராம். இப்ப வந்துடுவார்.//

அக்பரு.. என்னய்யா பொறுப்பில்லாம பேசுறீரு..

பச்சப்புள்ளய பத்திரமா பார்த்துக்க வேண்டாமா?

செ.சரவணக்குமார் said...

//குரு எங்கேருந்தாலும் மேடைக்கு வரவும்.. உங்களுக்காக மைக் உயரத்தை வேற குறைச்சு வச்சுருக்கேன்...::))

யாராவது ஸ்டுல் கொண்டுவாங்கப்பா...//

அடப்பாவிகளா.. குருவையே கலாய்க்கிறீங்களா??

குரு உங்களுக்கு உச்சத்துல இருக்குன்னு நெனைக்கிறேன்.

செ.சரவணக்குமார் said...

//சங்கமம் சுவரொட்டி தெரியாதா..-- அதுல அன்னைக்கே நம்ம பாரா அண்ணாசி போட்டோவை பார்த்துட்டேன்... மீசை கொஞ்சம் பெருசா வச்சா அசல் பிரகாஷ்ராஜ் மாதிரி இருப்பாங்கன்னு நினைக்கிறேன்....

பாரா அண்ணாச்சி நீங்க சொன்ன மாதிரியே சொல்லிட்டேன்...//

இப்படி ஒரு டீலிங் வேற ஓடிட்டு இருக்கா..

செ.சரவணக்குமார் said...

//நீங்க அடிச்ச கூத்தை முழுசும் எழுதாம போனேனேன்னு ச்ந்தோசப்படாம... என்ன கேள்வி இது?//

ரெண்டு பேரும் சேர்ந்துக்கிட்டு 'லெப்டுல திருப்புங்க' 'ரைட்ல ஒடிங்கன்னு' பெண்டு நிமித்தி ஊரையே சுத்திக்காட்டுனீகளே அந்தக் கூத்த விடவா நாங்க பெருசா கூத்தடிச்சிட்டோம்..

எங்கய்யா பிரபல பதிவர் ஸ்டார்ஜன்??

Starjan ( ஸ்டார்ஜன் ) said...

என்ன நடக்குது இங்க.. சரவணன் ஜீ இப்போ கமாண்ட் மாடுரேசன் இல்லை.

Starjan ( ஸ்டார்ஜன் ) said...

வந்துட்டேன் இதோ வந்துட்டேன்.

நாஞ்சில் பிரதாப் said...

//இப்படி ஒரு டீலிங் வேற ஓடிட்டு இருக்கா.//

நண்பா...முதல்ல கமல் மாதிரி இருக்குன்னு சொல்ல சொன்னாங்க, நான்தான் பிரகாஷ்ராஜ்னு மாத்திடேன்....

அப்ப சுவரொட்டி மேடட்டரு அண்ணாச்சிகே தெரியாதா--=? தெரிஞ்சா போட்டோ போட வுட்ருக்கமாட்டாங்களே...

Starjan ( ஸ்டார்ஜன் ) said...

///நாஞ்சில் பிரதாப் said...

நம்ம குருவுக்கு டேமேஜ் குறைவா இருக்கு...///

அடடே நம்ம சிஷ்யாவா இது..

நாஞ்சில் பிரதாப் said...

//ரைட்ல ஒடிங்கன்னு' பெண்டு நிமித்தி ஊரையே சுத்திக்காட்டுனீகளே அந்தக் கூத்த விடவா நாங்க பெருசா கூத்தடிச்சிட்டோம்..//

அப்ப போகாத ஊருக்கா வழியைச்சொன்னாங்க.... நல்லாருக்குய்யா...

நாடோடி said...

ப‌திவ‌ர் ச‌ந்திப்பா?.... க‌ல‌க்குங்க‌... என்ன‌ ஒரே ஒரு போட்டோ ம‌ட்டும் போட்டியிருக்கீங்க‌?..

Starjan ( ஸ்டார்ஜன் ) said...

///செ.சரவணக்குமார் said...

ஹலோ ஒன் டூ த்ரீ.. மைக் டெஸ்டிங்...///

அப்படியே லெப்டுல பாருங்க.. ரைட்டுல திரும்புங்க..:))

நாஞ்சில் பிரதாப் said...

//அடடே நம்ம சிஷ்யாவா இது.//

நானேத்தான் குரு...உங்களை டேமேஜ் பண்ணலையான்னா கேட்க நான்மட்டுத்தான குரு இருக்கேன்...இதுலேருந்தே தெரில நான் எவ்ளோ குருபக்தன்னு...

நாஞ்சில் பிரதாப் said...

//ப‌திவ‌ர் ச‌ந்திப்பா?.... க‌ல‌க்குங்க‌... என்ன‌ ஒரே ஒரு போட்டோ ம‌ட்டும் போட்டியிருக்கீங்க‌?.//

யாருப்பா அது கொலம்பஸ்.... பதிவர் சந்திப்புன்னு கண்டுபிடிச்சாருப்பா..நம்ம ஸ்டீபன்....

நாஞ்சில் பிரதாப் said...

.//வந்துட்டேன் இதோ வந்துட்டேன்.//

வந்துச்சுன்னா போய்ட்டு வாங்க குரு...இதெல்லாமா வெளில சொல்லிட்டு...

செ.சரவணக்குமார் said...

//நண்பா...முதல்ல கமல் மாதிரி இருக்குன்னு சொல்ல சொன்னாங்க, நான்தான் பிரகாஷ்ராஜ்னு மாத்திடேன்....//

செல்லாது செல்லாது..

கமல் மாதிரி இருக்காருன்னுதான் சொல்லியிருக்கணும்.. நீங்க ஏன் பிரகாஷ்ராஜ்னு சொன்னீங்க??

நீங்க ஏன் மாத்தி சொன்னீங்கன்னு நல்லாத் தெரியுது..

செ.சரவணக்குமார் said...

//அப்படியே லெப்டுல பாருங்க.. ரைட்டுல திரும்புங்க..:))//

இங்கேயுமா???

Starjan ( ஸ்டார்ஜன் ) said...

///Chitra said...

நாஞ்சில் பிரதாப் said...


நம்ம குருவுக்கு டேமேஜ் குறைவா இருக்கு...


......இப்படி ஒரு சிஷ்யன் கிடைக்க, உங்கள் குரு ரொம்ப தவம் பண்ணி இருந்திருக்கணும்.
ஹா,ஹா,ஹா,ஹா....///

நல்ல கவனிப்பாருன்னு நினைக்கிறேன் சித்ரா.

நாஞ்சில் பிரதாப் said...

//நீங்க ஏன் மாத்தி சொன்னீங்கன்னு நல்லாத் தெரியுது..//

நீங்க நினைக்கிறது சரிதான் தல.... அவ்ளோ பெரிய பொய்யை என் வாயால எப்படி சொல்லுவேன்... அதான் பிரகாஷ்ராஜ்னு சொன்னேன்...:))

செ.சரவணக்குமார் said...

//யாருப்பா அது கொலம்பஸ்.... பதிவர் சந்திப்புன்னு கண்டுபிடிச்சாருப்பா..நம்ம ஸ்டீபன்....//

ஸ்டீபன் தம்பி.. இங்க என்ன ஓடிக்கிட்டு இருக்குன்னு தெரியாம அப்பாவியா வந்து கமெண்ட் போட்டுட்டு, இந்த நாஞ்சில்காரர்ட்ட வலிய வந்து மாட்டுறீகளே?

இது ரத்த பூமி.... பச்ச மண்ணுக எல்லாம் கொஞ்சம் தூரமா இருங்க.. கும்மி முடியும்போது குச்சி மிட்டாயும் குருவி ரொட்டியும் வாங்கித்தாரேன்.

அக்பர் said...

ஆமா நீங்கல்லாம் இங்கே ஓட்டுறீங்க. அங்க ஓட்டுன ஆறுமுகத்தை காணோமே.

நாஞ்சில் பிரதாப் said...

//இது ரத்த பூமி.... பச்ச மண்ணுக எல்லாம் கொஞ்சம் தூரமா இருங்க.. கும்மி முடியும்போது குச்சி மிட்டாயும் குருவி ரொட்டியும் வாங்கித்தாரேன்//

ஸ்டீபன் போய்ட்டு கம்பெனில பெரியவங்க இருந்தா வரச்சொல்லுங்க...

செ.சரவணக்குமார் said...

//நீங்க நினைக்கிறது சரிதான் தல.... அவ்ளோ பெரிய பொய்யை என் வாயால எப்படி சொல்லுவேன்... அதான் பிரகாஷ்ராஜ்னு சொன்னேன்...:))//

கொஞ்ச நாளைக்கு முன்னாடி ஒருத்தரு அவரோட ப்ளாக் ப்ரஃபைல் போட்டாவுல கமல் படத்தப் போட்டுருந்தாரு.. அவரத்தான் தேடிக்கிட்டு இருக்கேன்.. அந்த நல்லவரப் பார்த்தா கொஞ்சம் சொல்லுங்க நாஞ்சிலு..

அக்பர் said...

//ஸ்டீபன் தம்பி.. இங்க என்ன ஓடிக்கிட்டு இருக்குன்னு தெரியாம அப்பாவியா வந்து கமெண்ட் போட்டுட்டு, இந்த நாஞ்சில்காரர்ட்ட வலிய வந்து மாட்டுறீகளே?

இது ரத்த பூமி.... பச்ச மண்ணுக எல்லாம் கொஞ்சம் தூரமா இருங்க.. கும்மி முடியும்போது குச்சி மிட்டாயும் குருவி ரொட்டியும் வாங்கித்தாரேன்.//

ஸ்டீபனை பத்தி தெரியலை உங்களுக்கு. என்ன ஸ்டீபன் சும்மாயிருக்கிங்க. வாங்க வந்து என்னான்னு கேளுங்க.

Starjan ( ஸ்டார்ஜன் ) said...

//செ.சரவணக்குமார் said...

அக்பரு.. என்னய்யா பொறுப்பில்லாம பேசுறீரு..

பச்சப்புள்ளய பத்திரமா பார்த்துக்க வேண்டாமா?//

அதானே.. நல்லா கேளுங்க சரவணா..

ஆறுமுகம் முருகேசன் said...

/ செ.சரவணக்குமார் said

ரெண்டு பேரும் சேர்ந்துக்கிட்டு 'லெப்டுல திருப்புங்க' 'ரைட்ல ஒடிங்கன்னு' பெண்டு நிமித்தி ஊரையே சுத்திக்காட்டுனீகளே அந்தக் கூத்த விடவா நாங்க பெருசா கூத்தடிச்சிட்டோம்.. /

ஹெலோ ஹெலோ வண்டி ஓட்டுன நானே சும்மா தானே உக்காந்துருக்கேன்.. அக்பர் அண்ணா நீங்க என்ன வேணும்னாலும் எழுதுங்க அண்ணா.. என் புல் சப்போர்ட் உங்களுக்கு உண்டு..

:)))

நாடோடி said...

//இது ரத்த பூமி.... பச்ச மண்ணுக எல்லாம் கொஞ்சம் தூரமா இருங்க.. கும்மி முடியும்போது குச்சி மிட்டாயும் குருவி ரொட்டியும் வாங்கித்தாரேன். //

இதுக்காக‌வே நானும் இன்னைக்கு க‌ள‌த்துல‌ இற‌ங்கிடுறேன்..

அக்பர் said...

//கொஞ்ச நாளைக்கு முன்னாடி ஒருத்தரு அவரோட ப்ளாக் ப்ரஃபைல் போட்டாவுல கமல் படத்தப் போட்டுருந்தாரு.. அவரத்தான் தேடிக்கிட்டு இருக்கேன்.. அந்த நல்லவரப் பார்த்தா கொஞ்சம் சொல்லுங்க நாஞ்சிலு..//

அவரெல்லாம் வரமாட்டார். அவரு ஃபாதராக போராரு :)

நாடோடி said...

//ஸ்டீபன் போய்ட்டு கம்பெனில பெரியவங்க இருந்தா வரச்சொல்லுங்க...//

என்ன‌ மீசை ஒட்டிட்டி வ‌ர‌னுமா?... இல்லை ம‌ரு வ‌ச்சிட்டு வ‌ர‌ணுமா? போங்க‌ த‌ம்பி போங்க‌ போய் த‌ண்ணி சாப்பிட்டு வாங்க‌...

ஆறுமுகம் முருகேசன் said...

/ அக்பர் said...

ஆமா நீங்கல்லாம் இங்கே ஓட்டுறீங்க. அங்க ஓட்டுன ஆறுமுகத்தை காணோமே./

கொஞ்சம் வேலை, அதான் லேட் :)

செ.சரவணக்குமார் said...

//ஆமா நீங்கல்லாம் இங்கே ஓட்டுறீங்க. அங்க ஓட்டுன ஆறுமுகத்தை காணோமே.//

ஏன்யா பீதியக் கெளப்புறீக.. அவர் பேரச் சொன்னாலே சும்மா அதிருது..

அங்க ஒரு லெப்ட் இருக்கு பாருங்க அதுல திருப்பிக்கோங்க... ஹலோ ஹலோ லெப்ட்டுன்னு சொன்னா ஸ்ட்ரெய்ட்டா போறீங்க.. ஹலோ அண்ணே..

ஹி ஹி லெப்டுன்னா நேராத்தான போகணும்..

எங்கயாவது டீ கடையா பார்த்து நிப்பாட்டுங்கப்பா..

அக்பர் said...

//ஹெலோ ஹெலோ வண்டி ஓட்டுன நானே சும்மா தானே உக்காந்துருக்கேன்.. அக்பர் அண்ணா நீங்க என்ன வேணும்னாலும் எழுதுங்க அண்ணா.. என் புல் சப்போர்ட் உங்களுக்கு உண்டு..
:)))//


சே! இப்படியொரு நல்லபிள்ளையையா நான் கலாய்ச்சிட்டேன். அவ்வ்வ்...

நாஞ்சில் பிரதாப் said...

..//ஸ்டீபனை பத்தி தெரியலை உங்களுக்கு. என்ன ஸ்டீபன் சும்மாயிருக்கிங்க. வாங்க வந்து என்னான்னு கேளுங்க//

இப்படி உசுப்பேத்த் விட்டுத்தானய்யா... ஏற்கனவே ரத்தக்களறியாகி கிடக்கு... இதுல பாவம் ஸ்டீபன் வேறயா... வரட்டும வரட்டும்...

நாஞ்சில் பிரதாப் said...

//அந்த நல்லவரப் பார்த்தா கொஞ்சம் சொல்லுங்க நாஞ்சிலு./

hehheee... தல அது கமல் போட்டோ இல்ல தல...என்போட்டோத்தான் இருபது வயசுல எடுத்தது.... அப்படியே கமல் மாதிரியே இருக்கேன்ல....

அக்பர் said...

//என்ன‌ மீசை ஒட்டிட்டி வ‌ர‌னுமா?... இல்லை ம‌ரு வ‌ச்சிட்டு வ‌ர‌ணுமா? போங்க‌ த‌ம்பி போங்க‌ போய் த‌ண்ணி சாப்பிட்டு வாங்க‌...//

அவரு தண்ணி சாப்பிட்டா வரமாட்டாரு பரவாயில்லையா :)

செ.சரவணக்குமார் said...

//என்ன‌ மீசை ஒட்டிட்டி வ‌ர‌னுமா?... இல்லை ம‌ரு வ‌ச்சிட்டு வ‌ர‌ணுமா? போங்க‌ த‌ம்பி போங்க‌ போய் த‌ண்ணி சாப்பிட்டு வாங்க‌...//

சவுதியில இருந்துக்கிட்டு தண்ணி சாப்பிடச் சொல்றீகளே.. எம்புட்டுத் தைரியம் உங்களுக்கு.. சரி சரி போய் ஒரு மருவ ஒட்டிக்கிட்டு வாங்க.

நாடோடி said...

//இப்படி உசுப்பேத்த் விட்டுத்தானய்யா... ஏற்கனவே ரத்தக்களறியாகி கிடக்கு... இதுல பாவம் ஸ்டீபன் வேறயா... வரட்டும வரட்டும்...//

த‌ல‌ ச‌ர‌வ‌ண‌ன் அண்ண‌னை கேட்க‌ மாட்டீங்க‌ளா?... அவ‌ருடைய் அடையாள‌த்தை தொலைச்சிட்டு போட்டோக்கு போஸ் கொடுக்கிறாரு..

சே.குமார் said...

அக்பர் காக்க... காக்க... கலக்குது. இப்பத்தான் நண்பர் ஸ்டார்ஜன் பதிவு படித்தேன். அவர் ஜபல் பற்றிய குறிப்புடன் கலக்கியிருந்தார் என்றால் நீங்கள் உங்கள் பாணியில் கலக்கியிருக்கிறீர்கள். அடுத்து சரவணன் எப்படியோ...? ம்ம்ம்.. ஜாலியான சந்திப்பு. வாழ்த்துக்க்கள்.

ஆமா... அவரும் பாரா அண்ணன் போட்டோ போடவில்லை... நீங்களும்...? என்ன அண்ணாவின் உத்தரவா?

நட்புடன்,
சே.குமார்
அபுதாபி

நாஞ்சில் பிரதாப் said...

//என்ன‌ மீசை ஒட்டிட்டி வ‌ர‌னுமா?... இல்லை ம‌ரு வ‌ச்சிட்டு வ‌ர‌ணுமா? போங்க‌ த‌ம்பி போங்க‌ போய் த‌ண்ணி சாப்பிட்டு வாங்க‌..///

மீசை, மரு மட்டும் பத்தாது தல... வரிபோட்ட முன்டாசு பனியன், பெரிய பெல்ட்டுஇ கைலயும், கழுத்துலயும் கர்சீப் கட்டிட்டி வரனும்.... அப்பத்தான் ரவுடின்னு ஒத்துப்போம்...

செ.சரவணக்குமார் said...

//hehheee... தல அது கமல் போட்டோ இல்ல தல...என்போட்டோத்தான் இருபது வயசுல எடுத்தது.... அப்படியே கமல் மாதிரியே இருக்கேன்ல....//

இதுக்கு அந்தப் பொய்யே தேவலை.

இருந்தாலும் அதுல ரொம்ப நல்லா இருந்தீங்க..

நாடோடி said...

@செ.சரவணக்குமார் said...
//சவுதியில இருந்துக்கிட்டு தண்ணி சாப்பிடச் சொல்றீகளே.. எம்புட்டுத் தைரியம் உங்களுக்கு.. சரி சரி போய் ஒரு மருவ ஒட்டிக்கிட்டு வாங்க.//

நான் தான் அப்ப‌வே சொன்னேனே நாங்க‌யெல்லாம் டெர‌ர்னு...

செ.சரவணக்குமார் said...

//ஹெலோ ஹெலோ வண்டி ஓட்டுன நானே சும்மா தானே உக்காந்துருக்கேன்.. அக்பர் அண்ணா நீங்க என்ன வேணும்னாலும் எழுதுங்க அண்ணா.. என் புல் சப்போர்ட் உங்களுக்கு உண்டு..//

என்னாது வண்டிய ஓட்டுனீங்களா???

போங்கப்பா போய் ஆகுற வேலையப் பாருங்க, கப்பித்தனமா பேசிக்கிட்டு..

Starjan ( ஸ்டார்ஜன் ) said...

// அக்பர் said...

ஆமா நீங்கல்லாம் இங்கே ஓட்டுறீங்க. அங்க ஓட்டுன ஆறுமுகத்தை காணோமே.//

ஆறுமுகம் ஹலோ ஆறுமுகம்.. கொஞ்சம் வேகமாக போங்க.. :))

அக்பர் said...

ஒரு 10 மினிட் டைம் ப்ளீஸ்

நாஞ்சில் பிரதாப் said...

//நான் தான் அப்ப‌வே சொன்னேனே நாங்க‌யெல்லாம் டெர‌ர்னு.....//

நாங்கல்லலாம்னு... கூட்டத்தோடு கூட்டமா ரவுடியாகலாம்னு பார்க்கறிங்களா.... நம்ம குரு உங்களை டெஸ்ட் பண்ணுவாரு... பாஸானாத்தான் நீங்க ரவுடி...

செ.சரவணக்குமார் said...

//த‌ல‌ ச‌ர‌வ‌ண‌ன் அண்ண‌னை கேட்க‌ மாட்டீங்க‌ளா?... அவ‌ருடைய் அடையாள‌த்தை தொலைச்சிட்டு போட்டோக்கு போஸ் கொடுக்கிறாரு..//

அடையாளமா???

என்னவே பீதியக் கெளப்புறீரு..

வந்து கமெண்ட் போட்டது ஒரு குத்தமாய்யா??

ஆறுமுகம் முருகேசன் said...

செ.சரவணக்குமார் said...

//ஆமா நீங்கல்லாம் இங்கே ஓட்டுறீங்க. அங்க ஓட்டுன ஆறுமுகத்தை காணோமே.//

ஏன்யா பீதியக் கெளப்புறீக.. அவர் பேரச் சொன்னாலே சும்மா அதிருது..

அங்க ஒரு லெப்ட் இருக்கு பாருங்க அதுல திருப்பிக்கோங்க... ஹலோ ஹலோ லெப்ட்டுன்னு சொன்னா ஸ்ட்ரெய்ட்டா போறீங்க.. ஹலோ அண்ணே..

ஹி ஹி லெப்டுன்னா நேராத்தான போகணும்..

எங்கயாவது டீ கடையா பார்த்து நிப்பாட்டுங்கப்பா..//

சரவணன் அண்ணா உங்க காலை கொஞ்சம் காட்டுங்கோ :)))

நாடோடி said...

@நாஞ்சில் பிரதாப் said...
//மீசை, மரு மட்டும் பத்தாது தல... வரிபோட்ட முன்டாசு பனியன், பெரிய பெல்ட்டுஇ கைலயும், கழுத்துலயும் கர்சீப் கட்டிட்டி வரனும்.... அப்பத்தான் ரவுடின்னு ஒத்துப்போம்...//

பொருளும் சேர்த்து தான் கொண்டு வ‌ந்திருக்கேன் த‌ல‌... என்ன‌ ஒண்ணு க‌ரும‌ம் முதுகுல‌ நிக்க‌ மாட்டேங்குது.... டிரெயின் ப‌த்த‌ல‌னு நினைக்கிறேன்..

நாஞ்சில் பிரதாப் said...

//ஒரு 10 மினிட் டைம் ப்ளீ//

இன்னாத்துக்கு... ஏசி ரும்ல உக்காந்தலே நம்ம மக்கள்ஸ் இதாம்யா பிரச்சனை... செஞ்சுரி அடிக்காம இடத்தை விட்ட நகலப்படாது சொல்லுப்ப்ட்டேன்...

ஆறுமுகம் முருகேசன் said...

எரிசாராயம் மூளையைத் திங்கத் துவங்கி விட்டதாலும், கனவுகளை அதிகநேரம் காத்திருக்கவைக்க தலையணைக்கு விருப்பம் இல்லாத காரணத்தாலும் எல்லோருக்கும் டாட்டா சொல்லி விடுகிறேன்..

அண்ணன்மார்களுக்கும் நண்பர்ககளுக்கும் நல்இரவு வணக்கங்கள்.

நாடோடி said...

@செ.சரவணக்குமார் said...
//அடையாளமா???

என்னவே பீதியக் கெளப்புறீரு..

வந்து கமெண்ட் போட்டது ஒரு குத்தமாய்யா??//

மாட்டினீங்க‌ளா?.... அந்த‌ தொப்பி எங்க‌?

செ.சரவணக்குமார் said...

//நாங்கல்லலாம்னு... கூட்டத்தோடு கூட்டமா ரவுடியாகலாம்னு பார்க்கறிங்களா.... நம்ம குரு உங்களை டெஸ்ட் பண்ணுவாரு... பாஸானாத்தான் நீங்க ரவுடி...//

wanted da வர்ற ரவுடிய டெஸ்ட் கிஸ்ட்டுன்னு சொல்லி வெரட்டி விடுறீக.. வரட்டும்ணே அவரையும் ஜீப்ல ஏத்திக்கலாம்.

நாஞ்சில் பிரதாப் said...

..//பொருளும் சேர்த்து தான் கொண்டு வ‌ந்திருக்கேன் த‌ல‌... என்ன‌ ஒண்ணு க‌ரும‌ம் முதுகுல‌ நிக்க‌ மாட்டேங்குது..//

என்னாப்பொருள் ஸ்டீபன்... அந்த கம்புல நொங்கை கட்டி டயர் மாதிரி ஓட்டுவோமே அந்தப்பொருளா

நாஞ்சில் பிரதாப் said...

//wanted da வர்ற ரவுடிய டெஸ்ட் கிஸ்ட்டுன்னு சொல்லி வெரட்டி விடுறீக.. வரட்டும்ணே அவரையும் ஜீப்ல ஏத்திக்கலாம்//

அப்படிறீங்களா...அப்ப ரைட்டு... ஆனா உள்ள வந்துட்டு பேஸ்மெண்டு வீக்குன்னு சொல்லிட்டு இருக்க கூடாது....

நாடோடி said...

@Starjan ( ஸ்டார்ஜன் )

அந்த‌ க‌ண்ணாடி எங்க‌ இருந்து வாங்கினீங்க‌ ஸ்டார்ஜ‌ன்.. அப்ப‌டியே டாம் புரூஸ் மாதிரி இருக்கீங்க‌?.. க‌டையை சொன்னீங்க‌னா ந‌ம்ம‌ த‌ல‌( நாஞ்சில்)க்கு வாங்கி பிர‌ச‌ண்ட் ப‌ண்ண‌லானு இருக்கேன்..

அக்பர் said...

//எரிசாராயம் மூளையைத் திங்கத் துவங்கி விட்டதாலும், கனவுகளை அதிகநேரம் காத்திருக்கவைக்க தலையணைக்கு விருப்பம் இல்லாத காரணத்தாலும் எல்லோருக்கும் டாட்டா சொல்லி விடுகிறேன்..
//

அடப்பாவி அப்ப எனக்கு ஃபுல் சப்போர்ட்டுன்னு சொன்னது இதைத்தானா. காலையில மறந்துட மாட்டீரே.

நாஞ்சில் பிரதாப் said...

..// க‌டையை சொன்னீங்க‌னா ந‌ம்ம‌ த‌ல‌( நாஞ்சில்)க்கு வாங்கி பிர‌ச‌ண்ட் ப‌ண்ண‌லானு இருக்கேன்.//

ஏன்... அதைபோட்டுட்டு ரோட்டுல போனா ரெண்டுபேரு என் கையை புடிச்சு ரோட்ட க்ராஸ் பண்ணி வுடறதுக்கா...

செ.சரவணக்குமார் said...

//எரிசாராயம் மூளையைத் திங்கத் துவங்கி விட்டதாலும், கனவுகளை அதிகநேரம் காத்திருக்கவைக்க தலையணைக்கு விருப்பம் இல்லாத காரணத்தாலும் எல்லோருக்கும் டாட்டா சொல்லி விடுகிறேன்..

அண்ணன்மார்களுக்கும் நண்பர்ககளுக்கும் நல்இரவு வணக்கங்கள்.//

ஆறுமுகம் என்ன அம்புட்டுத் தைரியமா? நாளைக்கு ஊருக்குப் போகணுமா வேண்டாமா?

அக்பர் said...

//அப்ப‌டியே டாம் புரூஸ் மாதிரி இருக்கீங்க‌?.. க‌டையை சொன்னீங்க‌னா ந‌ம்ம‌ த‌ல‌( நாஞ்சில்)க்கு வாங்கி பிர‌ச‌ண்ட் ப‌ண்ண‌லானு இருக்கேன்..//

அய்யா. எங்களுக்கும் ஹாலிவுட் நடிகர் பேரெல்லாம் தெரியும். பேரை தப்பா சொன்னதை ஸ்டார்ஜன்கிட்டே சொல்ல போறேன் :)

செ.சரவணக்குமார் said...

வழி விடுங்க.. வழி விடுங்க.. அன்புச்செல்வன் பா.ரா அண்ணன் வர்றாரு.. பராக் பராக்..

நாடோடி said...

@நாஞ்சில் பிரதாப் said...
//என்னாப்பொருள் ஸ்டீபன்... அந்த கம்புல நொங்கை கட்டி டயர் மாதிரி ஓட்டுவோமே அந்தப்பொருளா//

ஆமா த‌ல‌ ப‌ச‌ங்க‌ளுக்கு அந்த‌ பொருளை வ‌ச்சிதான் இது போல‌ வ‌ண்டி செய்து கொடுப்பேன்... நொங்கு சீவ‌னுனா வேணுமில்லே!!!!!!!

அக்பர் said...

//இன்னாத்துக்கு... ஏசி ரும்ல உக்காந்தலே நம்ம மக்கள்ஸ் இதாம்யா பிரச்சனை... செஞ்சுரி அடிக்காம இடத்தை விட்ட நகலப்படாது சொல்லுப்ப்ட்டேன்...//

அடப்பாவிங்களா. இப்படிவேற கிளப்பி விடுறீங்களா. ரெண்டு கஷ்டமர் வெயிட்டிங்யா.

நாஞ்சில் பிரதாப் said...

//டாம் புரூஸ் //

நல்லவேளை தல ஸ்டெல்லா புருஸ்னு சொல்லாமே வுட்டீங்களே....

செ.சரவணக்குமார் said...

//அந்த‌ க‌ண்ணாடி எங்க‌ இருந்து வாங்கினீங்க‌ ஸ்டார்ஜ‌ன்.. அப்ப‌டியே டாம் புரூஸ் மாதிரி இருக்கீங்க‌?.. க‌டையை சொன்னீங்க‌னா ந‌ம்ம‌ த‌ல‌( நாஞ்சில்)க்கு வாங்கி பிர‌ச‌ண்ட் ப‌ண்ண‌லானு இருக்கேன்..//

ஐயா பிரபல பதிவர் டாம் புரூஸ் ஸ்டார்ஜன் வாழ்க வாழ்க..

நாடோடி said...

@ நாஞ்சில் பிரதாப் said...
//ஏன்... அதைபோட்டுட்டு ரோட்டுல போனா ரெண்டுபேரு என் கையை புடிச்சு ரோட்ட க்ராஸ் பண்ணி வுடறதுக்கா...//

ந‌ல்ல‌ பிக‌ரா வ‌ந்த‌ ந‌ல்ல‌து தானே த‌ல‌.... ந‌ம்ம‌ என்ன‌ வேண்டானா சொல்ல‌ப்போறோம்..

நாஞ்சில் பிரதாப் said...

//வழி விடுங்க.. வழி விடுங்க.. அன்புச்செல்வன் பா.ரா அண்ணன் வர்றாரு.. பராக் பராக்//

வருக வருக என அமீரக ரசிர்கள் மன்றம் சார்பில் வரவேற்கிறேன்...

பாரா அண்ணாச்சி உங்களைப்பத்தி நான் ஒண்ணுமே சொல்லலை... நீங்க வேணும்னா பாருங்க...

நாஞ்சில் பிரதாப் said...

99

நாஞ்சில் பிரதாப் said...

100
ஐ வடை எனக்குத்தான்

செ.சரவணக்குமார் said...

//அடப்பாவிங்களா. இப்படிவேற கிளப்பி விடுறீங்களா. ரெண்டு கஷ்டமர் வெயிட்டிங்யா.//

பொய்யி.. நம்ப மாட்டோம்.. அந்த ஏரியாவே காத்தாடுது. ரெண்டு கஸ்டமர் வெய்ட்டிங்காமுல்ல.

நாடோடி said...

@செ.சரவணக்குமார் said...
//ஐயா பிரபல பதிவர் டாம் புரூஸ் ஸ்டார்ஜன் வாழ்க வாழ்க..//

இது டாம் புரூஸ்க்கு தெரியுமா?....

நாஞ்சில் பிரதாப் said...

அடிச்சேன் பாருய்யா செஞ்சுரி... அங்கத்தான் நிக்கறான் இந்த நாஞ்சிலு

செ.சரவணக்குமார் said...

99

100

செல்லாது செல்லாது.. கள்ளாட்ட.

நாடோடி said...

@நாஞ்சில் பிரதாப் said...
//100
ஐ வடை எனக்குத்தான்//

க‌ள்ளா(ளூ)ட்ட‌ம் ஆடுற‌தே வேலையா போச்சி...

நாஞ்சில் பிரதாப் said...

//இது டாம் புரூஸ்க்கு தெரியுமா?...//

வேணாம் தல..எதுக்கு ஒரு ஆலிவுட் நடிகர் தற்கொலை பண்றதுல்ல உங்களுக்கு அவ்ளோ ஆசையா...???

பா.ராஜாராம் said...

யோவ்...அக்பரு கொக்பரு,

இப்படி ஒரு தலைப்பு வச்சதுக்கு நீர் போட்டோவே போட்டுருக்கலாம்..

என்னங்கையா, இந்த கும்மி?? பாவிகளா..

இந்தா வந்துட்டேன்..

(மறக்க முடியாத நாள் அக்பர்! எப்படி அதை எழுதப் போறேன் என தெரியல)

அக்பர் said...

//அடிச்சேன் பாருய்யா செஞ்சுரி... அங்கத்தான் நிக்கறான் இந்த நாஞ்சிலு//

எங்கே எங்கே

நாஞ்சில் பிரதாப் said...

//க‌ள்ளா(ளூ)ட்ட‌ம் ஆடுற‌தே வேலையா போச்சி...//

நாம என்னைக்குத்தான் தல ஒழுங்கா ஆடிருக்கோம்... இதுலதான் ஒரு கிக்கு...

நாஞ்சில் பிரதாப் said...

//எங்கே எங்கே//

மனிதகண்களுக்கு அது தெரியாது... மானிடேரே...

நாடோடி said...

@நாஞ்சில் பிரதாப் said...
//வேணாம் தல..எதுக்கு ஒரு ஆலிவுட் நடிகர் தற்கொலை பண்றதுல்ல உங்களுக்கு அவ்ளோ ஆசையா...???//

அதைத்தான் நானும் சொல்லுறேன்... நீங்க‌ ச‌ர‌வ‌ண‌ன் அண்ண‌னைதான் கேட்க‌ணும்..

அக்பர் said...

//வேணாம் தல..எதுக்கு ஒரு ஆலிவுட் நடிகர் தற்கொலை பண்றதுல்ல உங்களுக்கு அவ்ளோ ஆசையா...???//

இங்க நிக்கிறார்யா நாஞ்சிலு. :) சிரிச்சு முடியலை

செ.சரவணக்குமார் said...

//பாரா அண்ணாச்சி உங்களைப்பத்தி நான் ஒண்ணுமே சொல்லலை... நீங்க வேணும்னா பாருங்க...//

ஆமாண்ணே.. நாஞ்சிலு ரொம்ப நல்லவரு.. உங்களப் பத்தி ஒண்ணுமே சொல்லல. பிரகாஷ்ராஜ், கமல்னு மேல இருக்குற பின்னூட்டத்தப் பாருங்க. அவரு நல்ல மனசு உங்களுக்கே புரியும்.

நாடோடி said...

@அக்பர் said...
//அடிச்சேன் பாருய்யா செஞ்சுரி... அங்கத்தான் நிக்கறான் இந்த நாஞ்சிலு//

எங்கே எங்கே//

அந்த‌ பாட்டிலை முக‌ந்து பார்த்த‌துக்கே இந்த‌ எபைக்ட்டா அக்ப‌ர்?... அந்த‌ பாட்டில்ல‌ இருந்த‌து வெறும் த‌ண்ணி தான்

அக்பர் said...

வாங்கண்ணே

//இப்படி ஒரு தலைப்பு வச்சதுக்கு நீர் போட்டோவே போட்டுருக்கலாம்..//

அதுக்குத்தான் காலையிலேயே கேட்டேன்.

//(மறக்க முடியாத நாள் அக்பர்! எப்படி அதை எழுதப் போறேன் என தெரியல)//

எழுதுங்கண்ணே. இதை விட பெரிய கும்மி இருக்கு

செ.சரவணக்குமார் said...

//அதைத்தான் நானும் சொல்லுறேன்... நீங்க‌ ச‌ர‌வ‌ண‌ன் அண்ண‌னைதான் கேட்க‌ணும்..//

டாம் புரூஸ்னு ஆரம்பிச்சதே நீங்கதானுங்க..

நானும் டாம் புரூஸ்னு ஒரு மணி நேரமா கூகுள்ள தேடிட்டு இருக்கேன். அப்படி ஒரு பயலும் இல்லைன்னுல்ல சொல்லுது..

அக்பர் said...

//அந்த‌ பாட்டிலை முக‌ந்து பார்த்த‌துக்கே இந்த‌ எபைக்ட்டா அக்ப‌ர்?... அந்த‌ பாட்டில்ல‌ இருந்த‌து வெறும் த‌ண்ணி தான்//

இது எப்பயிலேர்ந்து. நல்லா கிளப்புறாங்கையா.

நாடோடி said...

@ நாஞ்சில் பிரதாப் said...
//எங்கே எங்கே//

மனிதகண்களுக்கு அது தெரியாது... மானிடேரே...//

அந்த‌ அயிட்ட‌ம் இங்க‌ கிடைக்காது த‌ல‌... ஒரிஜின‌ல் பிலிப்பினோவுடைய‌ கைவ‌ண்ண‌த்தில் வ‌டிக‌ட்டிய‌து...

செ.சரவணக்குமார் said...

//இப்படி ஒரு தலைப்பு வச்சதுக்கு நீர் போட்டோவே போட்டுருக்கலாம்.. //

வாங்க மக்காஆஆ..

அனுமதி கொடுத்துட்டீங்கல்ல, நாளைக்குப் பாருங்க..

நாஞ்சில் பிரதாப் said...

// பிரகாஷ்ராஜ், கமல்னு மேல இருக்குற பின்னூட்டத்தப் பாருங்க. அவரு நல்ல மனசு உங்களுக்கே புரியு//

நான் ஏதோ அண்ணாச்சி சொல்லச்சொன்னதை அப்படியே சொன்னேன்...
ஏதோ நான் என் இக்ஷ்டத்துக்கு சொன்னாமாதிரி சொல்றீங்க...

எய்தவர் அங்கிருக்க நான் வெறம் அம்புதானே...

செ.சரவணக்குமார் said...

//அந்த‌ அயிட்ட‌ம் இங்க‌ கிடைக்காது த‌ல‌... ஒரிஜின‌ல் பிலிப்பினோவுடைய‌ கைவ‌ண்ண‌த்தில் வ‌டிக‌ட்டிய‌து...//

ஒரு குரூப்பாத்தான்யா அலையுறாய்ங்க..

நாஞ்சில் பிரதாப் said...

//அந்த‌ அயிட்ட‌ம் இங்க‌ கிடைக்காது த‌ல‌... ஒரிஜின‌ல் பிலிப்பினோவுடைய‌ கைவ‌ண்ண‌த்தில் வ‌டிக‌ட்டிய‌து.//

ஆகா... மானிடர் சொன்னாக்கூட மானிட்டர் எடுத்துக்காறாங்களே.... நல்லாருங்கய்யா...நல்லாருங்க

செ.சரவணக்குமார் said...

//எய்தவர் அங்கிருக்க நான் வெறம் அம்புதானே...//

எங்கய்யா இருக்காரு அந்த பவுலர்.

Starjan ( ஸ்டார்ஜன் ) said...

நான் அப்படிக்கா போயிட்டு வர்றதுக்குள்ள இப்படிக்கா என்னவெல்லாமோ நடந்துருக்கே..

பா.ராஜாராம் said...

ஆஹா,

செம்ம டீமாவுல இருக்கு?

உள்ள பூந்தா வெளிய வருவானான்னு தெரியலையே?

என்னங்கையா, ஸ்டார்ஜன் பச்சைப் புள்ளையவும், பால் குடி மறவா பாலகன், ஆறுமுகத்தையும் இந்த பாடு படுத்தி இருக்கீங்க?

:-)))

நாடோடி said...

@செ.சரவணக்குமார் said...
//நானும் டாம் புரூஸ்னு ஒரு மணி நேரமா கூகுள்ள தேடிட்டு இருக்கேன். அப்படி ஒரு பயலும் இல்லைன்னுல்ல சொல்லுது..//

ஒரு வேளை டாம் குரூஸ்னு போட்டு பாத்தா கிடைக்குமோ என்ன‌வோ!!!!!!!!!!... ஹி.ஹி...

Starjan ( ஸ்டார்ஜன் ) said...

ஒண்ணுமே புரியலியே..

பா.ராஜாராம் said...

தடவி, தடவி ஒரு கமன்ட் போட்டு நிமிர்ந்தா 125-ஆஆஆஆஆ?

செ.சரவணக்குமார் said...

//ஆகா... மானிடர் சொன்னாக்கூட மானிட்டர் எடுத்துக்காறாங்களே.... நல்லாருங்கய்யா...நல்லாருங்க//

தல, அவர பச்ச மண்ணுன்னு நெனைச்சா என்னா போடு போடுறாருன்னு பார்த்தீங்களா? ஒரிஜினல் பிலிப்பனோவாம்ல????

நாடோடி said...

@Starjan ( ஸ்டார்ஜன் ) said...
//நான் அப்படிக்கா போயிட்டு வர்றதுக்குள்ள இப்படிக்கா என்னவெல்லாமோ நடந்துருக்கே..//

அந்த‌ க‌ண்ணாடியை க‌ழ‌ட்டி வ‌ச்சிட்டு வாங்க‌ ஸ்டார்ஜ‌ன்.. அப்ப‌ எல்லாம் புரியும்..

Starjan ( ஸ்டார்ஜன் ) said...

/// நாடோடி said...

@Starjan ( ஸ்டார்ஜன் )

அந்த‌ க‌ண்ணாடி எங்க‌ இருந்து வாங்கினீங்க‌ ஸ்டார்ஜ‌ன்.. அப்ப‌டியே டாம் புரூஸ் மாதிரி இருக்கீங்க‌?.. க‌டையை சொன்னீங்க‌னா ந‌ம்ம‌ த‌ல‌( நாஞ்சில்)க்கு வாங்கி பிர‌ச‌ண்ட் ப‌ண்ண‌லானு இருக்கேன்..///

ரொம்ப நன்றி ஸ்டீபன்.. டாம் புரூஸ் ஆக்கினதுக்கு நன்றி

செ.சரவணக்குமார் said...

//ஒண்ணுமே புரியலியே..//

இங்க பாருய்யா? எங்கிட்டு இருந்தோ வந்து சோக்கடிக்காரு..

போய்ட்டு பொறவு வாங்க டாம் புரூஸ்ஸு..

அந்தக் கண்ணாடிய எங்கதான்யா வாங்குனீரு?

நாடோடி said...

@செ.சரவணக்குமார் said...
//தல, அவர பச்ச மண்ணுன்னு நெனைச்சா என்னா போடு போடுறாருன்னு பார்த்தீங்களா? ஒரிஜினல் பிலிப்பனோவாம்ல????//

இப்ப‌டி மொட்டையா போட்டா நாஞ்சில் என்ன‌ நினைப்பாரு?... ஏற்க‌ன‌வே அவ‌ருக்கும் பிலிப்பினோவுக்கும் ஆகாது... இதுல‌ நீங்க‌ வேறையா?...

Starjan ( ஸ்டார்ஜன் ) said...

கண்ணாடி நல்லாருக்கா...

நாஞ்சில் பிரதாப் said...

//ஒரு வேளை டாம் குரூஸ்னு போட்டு பாத்தா கிடைக்குமோ என்ன‌வோ!!!!!!!!!!.//

உங்க எல்லாருக்கும் குருவை பார்த்தா கிண்டலா இருக்கா... ஸ்டார்ஜன் கூகுள் போட்டா காமிக்காதா என்ன?? விக்கிபீடியாவுல 100 பக்கத்துக்கு ஆர்டிக்கிளே இருகக தெரியுமல... யார்கிட்ட

செ.சரவணக்குமார் said...

//என்னங்கையா, ஸ்டார்ஜன் பச்சைப் புள்ளையவும், பால் குடி மறவா பாலகன், ஆறுமுகத்தையும் இந்த பாடு படுத்தி இருக்கீங்க?//

ஸ்டார்ஜன் பச்சப்புள்ள ஓ.கே. அது என்ன பால்குடி மறவா பாலகன். அவரு கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி குட்நைட் சொன்ன அழகைப் பார்த்துட்டு பொறவு பேசுங்க..

நாடோடி said...

@Starjan ( ஸ்டார்ஜன் ) said...
//ரொம்ப நன்றி ஸ்டீபன்.. டாம் புரூஸ் ஆக்கினதுக்கு நன்றி//

அப்ப‌டியே அமொண்டை சைடுல‌ வெட்டுங்க‌ ஸ்டார்ஜ‌ன்.... யாருக்கும் தெரிய‌ ப‌டாது..

செ.சரவணக்குமார் said...

//இப்ப‌டி மொட்டையா போட்டா நாஞ்சில் என்ன‌ நினைப்பாரு?... ஏற்க‌ன‌வே அவ‌ருக்கும் பிலிப்பினோவுக்கும் ஆகாது... இதுல‌ நீங்க‌ வேறையா?...//

அவருக்கும் பிலிப்பனோவுக்கும் ஆகாதா??

இது என்னவே புதுக் கதையா இருக்கு....

அந்த பிலிப்பனோ தோழியச் சொல்றீங்களா???

Starjan ( ஸ்டார்ஜன் ) said...

//நாடோடி said...

அந்த‌ க‌ண்ணாடியை க‌ழ‌ட்டி வ‌ச்சிட்டு வாங்க‌ ஸ்டார்ஜ‌ன்.. அப்ப‌ எல்லாம் புரியும்..///

கழட்டுனா கழறமாட்டேங்குதே.. அய்யகோ.. என்ன செய்ய...

நாஞ்சில் பிரதாப் said...

//கண்ணாடி நல்லாருக்கா.//

என்னா குரு அப்டி கேட்டீங்க...நீங்க போட்டதானாலதான் கண்ணாடியே அழகா இருக்கு... நீங்க அழகா இருக்க்ஙகளான்னு கேட்கலையே,

அப்படி உளவுத்துறை விஜயகாந்த் மாதிரியே இருக்கீங்க தல... ஆங்...

நாடோடி said...

@நாஞ்சில் பிரதாப் said...
//உங்க எல்லாருக்கும் குருவை பார்த்தா கிண்டலா இருக்கா... ஸ்டார்ஜன் கூகுள் போட்டா காமிக்காதா என்ன?? விக்கிபீடியாவுல 100 பக்கத்துக்கு ஆர்டிக்கிளே இருகக தெரியுமல... யார்கிட்ட//

என்ன‌ த‌ல‌ இது.... இதுக்கு நீங்க‌ அவ‌ரை நேர்ல‌ போயி ரெண்டு அறை அறைச்சிருக்க‌லாம்..

பா.ராஜாராம் said...

கமென்ட் எல்லாம் சிரிச்சு முடியல.. (பயணம் போலவே)

எங்கிட்டு கமென்ட் போட?

நாஞ்சில் பிரதாப் said...

//அந்த பிலிப்பனோ தோழியச் சொல்றீங்களா??//

அய்யா ஆருயிர் தோழர்களே... பிலிப்பினோவை பத்தி மட்டும் பேசனீங்க... அப்புற்ம் இந்த நாஞ்சில நல்லவனா இருக்கமாட்டான்...

செ.சரவணக்குமார் said...

//செம்ம டீமாவுல இருக்கு? //

ஹி ஹி.. ஆமாண்ணே இப்பத்தான் கொஞ்சம் கொஞ்சமா ஃபார்ம் ஆகிட்டு வர்றோம்.. அடுத்து பிரபல பதிவர் ஸ்டார்ஜன் பேட்டி நம்ம தல நாஞ்சில் தளத்துல வெளிவரும்.

நாஞ்சில் பிரதாப் said...

//கழட்டுனா கழறமாட்டேங்குதே.. அய்யகோ.. என்ன செய்ய..//


அப்படி மெயின்டெயின் பண்ணுங்க...நாம யாரு வெளிநாடு வா இந்தியர்கள்...ஊருக்குப்போனாலும் கழட்டக்கூடாது... ஆங்...

Starjan ( ஸ்டார்ஜன் ) said...

///நாஞ்சில் பிரதாப் said...

உங்க எல்லாருக்கும் குருவை பார்த்தா கிண்டலா இருக்கா... ஸ்டார்ஜன் கூகுள் போட்டா காமிக்காதா என்ன?? விக்கிபீடியாவுல 100 பக்கத்துக்கு ஆர்டிக்கிளே இருகக தெரியுமல... யார்கிட்ட///

அப்படிபோடுங்க அருவாள..

நாடோடி said...

@செ.சரவணக்குமார் said...
//அவருக்கும் பிலிப்பனோவுக்கும் ஆகாதா??

இது என்னவே புதுக் கதையா இருக்கு....

அந்த பிலிப்பனோ தோழியச் சொல்றீங்களா???//

அந்த‌ க‌தையை ப‌ற்றி ந‌ம‌க்கு ஏதும் தெரியாது... எதுக்கும் க‌ண்ணா வ‌ந்தா கேக்க‌லாம்...

நாஞ்சில் பிரதாப் said...

//அடுத்து பிரபல பதிவர் ஸ்டார்ஜன் பேட்டி நம்ம தல நாஞ்சில் தளத்துல வெளிவரும்//

பேட்டிதானே போட்ருவோம்... யாரவாது எதிர்பேட்டி போட்டீங்க அவ்ளோதான் இந்த நாஞ்சில மெர்சலாயிடுவான்...

நாஞ்சில் பிரதாப் said...

149

செ.சரவணக்குமார் said...

//அய்யா ஆருயிர் தோழர்களே... பிலிப்பினோவை பத்தி மட்டும் பேசனீங்க... அப்புற்ம் இந்த நாஞ்சில நல்லவனா இருக்கமாட்டான்...//

ரைட்டு விடுங்க..

150 வது வடைக்குத்தான வெயிட் பண்ணிட்டு இருக்கீங்க..

தெரியும்வே நீர் ரொம்ப நல்லவர்னு......

நாஞ்சில் பிரதாப் said...

150

அய்யா அடுத்தத வடையும் எனக்குத்தான்

Starjan ( ஸ்டார்ஜன் ) said...

///நாடோடி said...

அப்ப‌டியே அமொண்டை சைடுல‌ வெட்டுங்க‌ ஸ்டார்ஜ‌ன்.... யாருக்கும் தெரிய‌ ப‌டாது..//

அப்படின்னா.. என்ன..

செ.சரவணக்குமார் said...

நாஞ்சிலு போச்சாஆஆஆஆஆ...

நாடோடி said...

@நாஞ்சில் பிரதாப் said...
//அய்யா ஆருயிர் தோழர்களே... பிலிப்பினோவை பத்தி மட்டும் பேசனீங்க... அப்புற்ம் இந்த நாஞ்சில நல்லவனா இருக்கமாட்டான்...//

ஆமா ஆமா யாருய்யா அது எங்க‌ த‌லையை சொர‌ண்டை இழுக்கிற‌து...

அக்பர் said...

//@Starjan ( ஸ்டார்ஜன் ) said...
//ரொம்ப நன்றி ஸ்டீபன்.. டாம் புரூஸ் ஆக்கினதுக்கு நன்றி//

அடப்பாவி. அது டாம் புரூஸ் இல்லை க்ரூஸ். உன்னை வச்சி நல்லா ஓட்டுறாங்க :)

நாஞ்சில் பிரதாப் said...

அடச்சே...ஜஸ்டு மிஸ்சு. ஒரு வடைய முழுசா எடுக்க வுடமாட்டுறாங்களே....

செ.சரவணக்குமார் said...

// நாஞ்சில் பிரதாப் said...

150

அய்யா அடுத்தத வடையும் எனக்குத்தான்//

ஐயோ ஐயோ.. உங்களோட ஒரே நகைச்சுவையாக இருக்கிறது..

நாடோடி said...

@நாஞ்சில் பிரதாப் said...
//பேட்டிதானே போட்ருவோம்... யாரவாது எதிர்பேட்டி போட்டீங்க அவ்ளோதான் இந்த நாஞ்சில மெர்சலாயிடுவான்...//

அப்ப‌ போடான‌னு சொல்லுறீங்க‌?... அப்ப‌டிதானே க‌வ‌லையை விடுங்க‌... நான் பாத்துக்கிறேன்..

நாஞ்சில் பிரதாப் said...

//அடப்பாவி. அது டாம் புரூஸ் இல்லை க்ரூஸ். உன்னை வச்சி நல்லா ஓட்டுறாங்க //

அது சரி...அப்போ இவ்ளோ நேரம் நம்ம குரு இதை உண்மைன்னா நம்பிட்டு இருநநதாரு...ம்க்கும்... ரொம்பத்தான்

Starjan ( ஸ்டார்ஜன் ) said...

//நாடோடி said...

அந்த‌ க‌தையை ப‌ற்றி ந‌ம‌க்கு ஏதும் தெரியாது... எதுக்கும் க‌ண்ணா வ‌ந்தா கேக்க‌லாம்...///

கண்ணா.. கண்ணா.. நீங்களும் நாங்களுமா..

கண்ணா.. கண்ணா.. எங்க மின்சார கண்ணா..

கண்ணா.. எங்கிருந்தாலும் மேடைக்கு வரவும்.

செ.சரவணக்குமார் said...

வே அக்பரு.. 10 நிமிசம்தான கேட்டீரு.. 1 மணி நேரமா எங்கய்யா போனீரு??

பா.ராஜாராம் said...

//ஹி ஹி.. ஆமாண்ணே இப்பத்தான் கொஞ்சம் கொஞ்சமா ஃபார்ம் ஆகிட்டு வர்றோம்.. அடுத்து பிரபல பதிவர் ஸ்டார்ஜன் பேட்டி நம்ம தல நாஞ்சில் தளத்துல வெளிவரும்//

யம்மா!

நாடோடி said...

@அக்பர் said...
//@Starjan ( ஸ்டார்ஜன் ) said...
//ரொம்ப நன்றி ஸ்டீபன்.. டாம் புரூஸ் ஆக்கினதுக்கு நன்றி//

அடப்பாவி. அது டாம் புரூஸ் இல்லை க்ரூஸ். உன்னை வச்சி நல்லா ஓட்டுறாங்க :)//

ஓய்...அக்ப‌ர் என்ன‌ இது ... ஒரு ப‌ச்ச‌ ம‌ண்ணுகிட்ட‌ போய் இந்த‌ விளையாட்டு... அவ‌ரு என்ன‌ நினைப்பாரு எங்க‌ளை ப‌ற்றி...

நாஞ்சில் பிரதாப் said...

//கண்ணா.. எங்கிருந்தாலும் மேடைக்கு வரவும்//

அய்யா வேணாம்...கூப்பிடாதீங்க... கொத்தனாரு வந்தா அப்ப வுடு கட்ட ஆரம்பிச்டுவாரு... இதை நான் வன்மையாக கண்டிக்கிறேன்...

Starjan ( ஸ்டார்ஜன் ) said...

///நாஞ்சில் பிரதாப் said...

பேட்டிதானே போட்ருவோம்... யாரவாது எதிர்பேட்டி போட்டீங்க அவ்ளோதான் இந்த நாஞ்சில மெர்சலாயிடுவான்...///

ஆ... பேட்டியா.. ஆளவிடுங்க சாமிகளா..

அக்பர் said...

//வே அக்பரு.. 10 நிமிசம்தான கேட்டீரு.. 1 மணி நேரமா எங்கய்யா போனீரு??//

எங்கேயும் போகலை தல. ( போக விட்டாத்தானே. )

அய்யோ சிரிச்சு முடியலை.

நாஞ்சில் பிரதாப் said...

///வே அக்பரு.. 10 நிமிசம்தான கேட்டீரு.. 1 மணி நேரமா எங்கய்யா போனீரு?//

யாருமே இல்லாத கடைல யாருக்குய்யா... சர்பத் போடறீரு...

நாஞ்சில் பிரதாப் said...

//ஆ... பேட்டியா.. ஆளவிடுங்க சாமிகளா.//

முடியாது முடியாது... பேட்டி போட்டே தீருவேன்...

நாடோடி said...

@நாஞ்சில் பிரதாப் said...
//அடப்பாவி. அது டாம் புரூஸ் இல்லை க்ரூஸ். உன்னை வச்சி நல்லா ஓட்டுறாங்க //

அது சரி...அப்போ இவ்ளோ நேரம் நம்ம குரு இதை உண்மைன்னா நம்பிட்டு இருநநதாரு...ம்க்கும்... ரொம்பத்தான்//

த‌ல‌ அட‌க்கி வாசிங்க‌... அமொண்ட் இன்னும் கைக்கு வ‌ர‌ல‌... வ‌ந்த‌தும் சொல்லிடுறேன்...

Starjan ( ஸ்டார்ஜன் ) said...

/// நாடோடி said...

@அக்பர் said...
//@Starjan ( ஸ்டார்ஜன் ) said...
//ரொம்ப நன்றி ஸ்டீபன்.. டாம் புரூஸ் ஆக்கினதுக்கு நன்றி//

அடப்பாவி. அது டாம் புரூஸ் இல்லை க்ரூஸ். உன்னை வச்சி நல்லா ஓட்டுறாங்க :)//

ஓய்...அக்ப‌ர் என்ன‌ இது ... ஒரு ப‌ச்ச‌ ம‌ண்ணுகிட்ட‌ போய் இந்த‌ விளையாட்டு... அவ‌ரு என்ன‌ நினைப்பாரு எங்க‌ளை ப‌ற்றி...///

ஆஹா.. இதுவேற நடக்குதா.. நம்ம வீக்னஸ் வீணால்ல போச்சி.. நடத்துங்க நடத்துங்க...

அக்பர் said...

//யம்மா!//

அப்படின்னா என்னண்ணே அர்த்தம்

செ.சரவணக்குமார் said...

நன்றி அக்பர், ஸ்டார்ஜன்.. மறக்க முடியாத அருமையான தருணத்தை பகிர்ந்துகொண்டதற்காக..

உற்சாகமான உரையாடலில் கலந்துகொண்ட நண்பர்கள் நாஞ்சில் பிரதாப், ஸ்டீபன், பா.ரா அண்ணன் மற்றும் அக்பர் ஸ்டார்ஜன் என அனைவருக்கும் மனம் நிறைந்த நன்றிகள்.

போய்ட்டு வாரேன்..

நாஞ்சில் பிரதாப் said...

ஒகே... நேரம் அதிகமாகி விட்ட காரணத்தால் கும்மியை முடித்துக்கொள்கிறேன்...நானு பை...

நாடோடி said...

@நாஞ்சில் பிரதாப் said...
//ஆ... பேட்டியா.. ஆளவிடுங்க சாமிகளா.//

முடியாது முடியாது... பேட்டி போட்டே தீருவேன்...//

ஆமா ஆமா... நானும் அதுக்கு எதிர்ப‌திவு போட்டே தீருவேன்...

நாடோடி said...

நானும் எல்லாருக்கும் ஒரு "ந‌ல்ல‌ இர‌வு" சொல்லிக்கொண்டு கிள‌ம்பிறேன்..

Starjan ( ஸ்டார்ஜன் ) said...

அடடா.. எல்லோரும் கிளம்பிட்டாங்களே..

பா.ராஜாராம் said...

//அய்யா ஆருயிர் தோழர்களே... பிலிப்பினோவை பத்தி மட்டும் பேசனீங்க... அப்புற்ம் இந்த நாஞ்சில நல்லவனா இருக்கமாட்டான்...//

ஆமா, இந்த வாணியங்குடியானும்!

நேசமித்ரன் said...

இடுகையும் பின்னூட்டங்களும் அங்கதம் மிளிர இருக்கிறது

பதிவர் சந்திப்பு குறித்து மகிழ்ச்சி

வாழ்த்துகள் நண்பர்களே

பா.ராஜாராம் said...

//யம்மா!//

//அப்படின்னா என்னண்ணே அர்த்தம்//

இந்த யம்மாவை கேட்ட நினைவு இல்லையா அக்பர்?

பா.ராஜாராம் said...

பிரபல பதிவர்னா, என சரவணன் சில பெயர்கள் சொன்ன போது, ஸ்டார்ஜன் சொன்ன யம்மாதான்!

எவ்வளவு டைமிங்-ஆன யம்மா அது! :-))

Starjan ( ஸ்டார்ஜன் ) said...

///பா.ராஜாராம் said...

பிரபல பதிவர்னா, என சரவணன் சில பெயர்கள் சொன்ன போது, ஸ்டார்ஜன் சொன்ன யம்மாதான்!

எவ்வளவு டைமிங்-ஆன யம்மா அது! :‍))///

அண்ணே.. அண்ணே.. வேணாண்ணே.. :))

பா.ராஜாராம் said...

நேசனும் வந்தாச்சா?

எல்லாம் ஓடிட்டாங்க நேசா, வாங்க நாம விளையாடலாம்.

அக்பர் said...

//இடுகையும் பின்னூட்டங்களும் அங்கதம் மிளிர இருக்கிறது

பதிவர் சந்திப்பு குறித்து மகிழ்ச்சி

வாழ்த்துகள் நண்பர்களே//

அண்ணே வாங்கண்ணே.

அக்பர் said...

//எவ்வளவு டைமிங்-ஆன யம்மா அது! :‍))//

அதா! அதை மறக்கமுடியுமாண்ணே.

//ஆமா, இந்த வாணியங்குடியானும்!//

இது எப்போலேர்ந்து.

//எல்லாம் ஓடிட்டாங்க நேசா, வாங்க நாம விளையாடலாம்.//

நாங்களும் களத்துல நிற்கிறோம். (இன்னும் அஞ்சு நிமிஷம் பாக்கி :)

பா.ராஜாராம் said...

ராம்ஜி,

நேரில் பார்க்கலாம் மக்கா. :-)

அக்பர் said...

அசராமல் கும்மியடித்து சிறப்பித்து தந்த சரவணன், நாஞ்சிலு, ஆறுமுகம், ஸ்டீபன், ஸ்டார்ஜன், பா.ரா. அண்ணா மற்றும் அனைவருக்கும் விழாக்குழுவினர்கள் சார்ப்பாக நன்றிகளை தெரிவித்து கொள்கிறோம்.

அக்பர் said...

//ராம்ஜி,

நேரில் பார்க்கலாம் மக்கா. :‍)//

அண்ணே நீங்க முதல்ல இருந்த வாரீங்க. :)

எல்லோரும் உங்களைத்தான் கேட்கிறாங்க.

புருஷனை விட்டுட்டு கல்யாணத்துக்கு வந்த பொண்டாட்டியை கேக்குறமாதிரி.

அல்லது இப்படி சொன்னா இதை விட பவரா இருக்கும்.

பொண்டாட்டியை விட்டு அவ தாய் வழி உறவு வீட்டு கல்யாணத்துக்கு போன புருஷன் மாதிரி ஆகிப்போச்சு நம்ம நிலம.

அக்பர் said...

ஐயா நாஞ்சிலு முடிஞ்சா நாளைக்கு வந்து 200 அடிச்சு மானத்தை காப்பாத்தும்.

அக்பர் said...

ஓகே பாஸ். நாளை சந்திக்கலாம். மிக்க நன்றி.

பா.ராஜாராம் said...

சரி கிளம்புங்க அக்பர், ஸ்டார்ஜன். பார்க்கலாம்..

நன்றி அக்பர், கொக்பர்! :-)

பா.ராஜாராம் said...

நண்பர்கள்,சீனா சார், பாலாண்ணா,

நன்றி!

பா.ராஜாராம் said...

// புருஷனை விட்டுட்டு கல்யாணத்துக்கு வந்த பொண்டாட்டியை கேக்குறமாதிரி.

அல்லது இப்படி சொன்னா இதை விட பவரா இருக்கும்.

பொண்டாட்டியை விட்டு அவ தாய் வழி உறவு வீட்டு கல்யாணத்துக்கு போன புருஷன் மாதிரி ஆகிப்போச்சு நம்ம நிலம.//

கல்யாணத்தை அட்டன் பண்ணோமா இல்லையா? என நெஞ்சு நிமிர்த்து மேன். குறுக்க குறுக்க பேசிக்கிட்டு. :-)

நேசமித்ரன் said...

அடடே ரொம்ப லேட்டோ நான்
சனிக்கிழமைல்ல நாளைக்கு லீவுன்னதும் எஸ்கேப்பிட்டேன் சாரி மக்கா

நேசமித்ரன் said...

ஆனால் ஆட்டம் செம ஆட்டம்தான் சினேகிதா ..பா.ரா ஸ்டார்ஜன் நண்பர்களே

க‌ரிச‌ல்கார‌ன் said...

செம... சினேகிதா ..பா.ரா ஸ்டார்ஜன் நண்பர்களே

க‌ரிச‌ல்கார‌ன் said...

196

க‌ரிச‌ல்கார‌ன் said...

197

க‌ரிச‌ல்கார‌ன் said...

198

க‌ரிச‌ல்கார‌ன் said...

199

க‌ரிச‌ல்கார‌ன் said...

200

«Oldest ‹Older   1 – 200 of 217   Newer› Newest»

இதையும் விரும்புவீர்கள்.

Related Posts with Thumbnails