Monday, June 21, 2010

வெளிநாட்டு வாழ்க்கை : இஷ்டமா, கஷ்டமா?

இரு நாட்களுக்கு முன் ந‌ண்ப‌ர் செ.ச‌ர‌வ‌ண‌க்குமாரிட‌ம் பேசும் போது வெப்ப‌ம் தாங்காம‌ல் கால் பொத்து விட்ட‌தாக‌வும். அத‌னால் அன்று ப‌ணிக்கு செல்ல‌வில்லை என்றும் சொன்னார். ம‌ன‌து க‌ன‌த்துப்போய் விட்ட‌து.

சரவணன் சொன்னது போல் கோடைகாலத்தில் இங்கு வெயில் மிக மிக அதிகம். நான் வந்த இந்த ஏழு வருடத்தில் இப்போது அடிக்கும் வெயில் போல் இதுவரை கண்டதில்லை. 53 டிகிரி செல்சியஸிற்கு மேல் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்.

காலை எட்டு மணிக்கு அடிக்கும் வெயில் நம்மூர் மதிய வெயிலை விட அதிகம்.ரூமிலிருந்து கடை 500 மீட்டர் தூரம் இருக்கும். அங்கிருந்து ஓட்டமும் நடையுமாக வந்து எழுதிக்கொண்டிருக்கிறேன். அந்த அளவு அனல்.

இங்கு க‌டை, வீடு, கார் அனைத்திலும் ஏசி வ‌ச‌தி இருப்ப‌தால். க‌டைக‌ளில் வேலைப்பார்ப்ப‌வ‌ர்க‌ளுக்கு அதிக‌ பாதிப்பில்லை. ஆனால் க‌ட்டிட‌வேலை, சாலைப்ப‌ணி, பாலை நில‌ங்க‌ளில் இயந்திர நிர்மாண‌ ப‌ணிக‌ளை மேற்கொள்ப‌வ‌ர்க‌ளின் நில‌மை ப‌டுமோச‌ம்.

ச‌வுதிக்கு வேலைக்கு வ‌ந்த‌வ‌ர்க‌ள் எதிர்கொள்ள‌வேண்டிய‌ முக்கிய‌ ச‌வால் இங்குள்ள‌ ப‌ருவ‌ நிலைதான். க‌டும் குளிர், சுடும் வெயில். இது இர‌ண்டையும் தாக்கு பிடிக்க‌ முடிய‌வில்லை என்றால் ஊருக்குப் போய்விட‌ வேண்டிய‌துதான்.

அதே போல் ம‌ற்றொரு ச‌வால் குடும்ப‌ங்க‌ளை பிரிந்திருப்ப‌து. வீட்டில் அனைவ‌ரிட‌மும் பேசும் போதே இங்கு ந‌ம் ம‌ன‌க்க‌ண்ணில் அவ‌ர்க‌ள் என்ன‌ செய்து கொண்டிருப்பார்க‌ள் என்ப‌து தெரியும். குழ‌ந்தை ந‌ட‌ப்ப‌தையும், விளையாடுவதையும், அதற்கு பல் முளைத்ததையும் அவ்வாறே நாம் உணர முடியும்.

இந்த இடத்தில் உங்களுக்கு ஒரு குழப்பம் வரலாம். இவ்வ‌ள‌வு க‌ஷ்ட‌த்தையும் தாங்கிக்கொண்டு எத‌ற்கு வேலைப்பார்க்க‌ வேண்டும் ஊருக்கு வ‌ந்து விட‌ வேண்டிய‌து தானே. ஆனால் வருடா வருடம் வெளிநாடுகளுக்கு செல்பவர்களின் எண்ணிக்கை கூடிக்கொண்டல்லவா இருக்கிறது என்று நீங்க‌ள் நினைப்ப‌து நியாய‌ம் தான்.

இங்கு வாழ்ப‌வ‌ர்க‌ளை ஊருக்கு வ‌ர‌விடாம‌ல் த‌டுப்ப‌து எது, யார் என்ன சொன்னாலும் ஊரில் இருப்ப‌வ‌ர்க‌ள் இன்னும் வெளிநாடு வ‌ர‌ துடிப்ப‌துக்கு எது கார‌ண‌ம்.

எல்லாவற்றிற்கும் ஒரு காரணம், ஒரே காரணம் பணம்.

சம்பாதித்து நல்ல நிலைக்கு வரவேண்டும் என்ற ஆசை. வெளிநாடு சென்றால்தான் ஊரில் உள்ள கடன்களை அடைக்க முடியும் என்ற சூழ்நிலை.

பொதுவாக வெளிநாடு செல்பவர்களின் நிலை புலி வாலை பிடித்த கதைதான். நாம் விட நினைத்தாலும் ஊர் சூழலும், பிரச்சனைகளும், ஊரில் போய் என்ன வேலை செய்ய என்ற பயமும் நம்மை ஊர் திரும்ப விடாது.

இங்குள்ளவர்களின் வாழ்க்கை நிலையை அலசுவதற்கு முன், முதலில் இங்குள்ள வேலை வாய்ப்புகளை பார்த்து விடலாம்.

வீட்டுப்பணி பெண்கள், வீட்டு டிரைவர்கள் இவர்கள் வீட்டுப்பணிக்கு மட்டும் வெளியில் வேலை பார்க்க கூடாது. இவர்களது அடையாள அட்டையில் அது குறிப்பிடப்பட்டு இருக்கும். ( ஆனால் பெரும்பாலான‌ டிரைவர்கள் வெளியிலும் வாடகைக்கு வண்டி ஓட்டுவார்கள் அது அவர்களின் சாமர்த்தியத்தை பொறுத்தது)

கடைகள் , சோரூம்கள், கம்பெனிகளுக்கு சேல்ஸ்மேன், டெக்னீசியன், டிரைவர், கேசியர் இன்னும் பல பணிகளுக்கு ஆள் எடுப்பார்கள். இங்கு ஓவர்டைம், போனஸ் மற்றும் இன்ன பிற சலுகைகள் ( இருந்தால்! ) கிடைக்கும். நமக்கு அமையும் இடத்தை பொறுத்து இதெல்லாம் மாறுபடும்.

சாலைப்பணி, கட்டிடப் பணி, இயந்திர நிர்மாண பணி, மற்றும் இது போன்ற புறச்சூழல் பணிக்கு வருபவர்களின் பாடுதான் கஷ்டம். இங்குள்ள கடும் குளிரையும், வெயிலையும் நேரடியாக சந்திப்பது இவர்கள்தான்.

இங்கு குறிப்பிட்டது போக மேலும் இது போல பல பணிகள் உள்ளன.

ஏஜெண்ட் மூலமாகவோ அல்லது சொந்தங்கள், நண்பர்கள் மூலமாகவோ விசா பெற்று இங்கு வருபவர்கள்தான் அதிகம்.

வீட்டிலுள்ள நகை நட்டையெல்லாம் விற்று , கடன் வாங்கி அல்லது சொந்த சேமிப்பைக்கொண்டு வெளிநாட்டுக்கு விமானம் ஏறி மேலே குறிப்பிட்ட எந்த வேலைக்கு வருபவர்களுக்கும் மூன்று வகையான‌ வாழ்க்கை காத்திருக்கிறது.

முதல் வகை ( ஏமாற்றம் )

ஏஜெண்டால் ஏமாற்றப்பட்டு , சொன்ன சம்பளம் கிடைக்காமல், சொன்ன வேலைக்கு பதில் வேறு கஷ்டமான வேலை கிடைப்பது. கொடுமையான முதலாளி அடிமை போல நடத்துவது என்று இவர்களுடைய கதைகளைதான் அடிக்கடி பத்திரிகைகளில் பார்க்கிறீர்கள்.இதிலிருந்து இவர்கள் மீள்வது ஆயுள் தண்டனை கைதி சிறையிலிருந்து தப்புவதற்கு சமம்.

சிலபேர் பணம் போனால் போகிறது எனக்கு வேலை வேண்டாம் என்று ஊர் திரும்பிவிடுவார்கள் (அதுவும் முதலாளி அனுமதித்தால்தான்). எல்லா சொத்தையும் விற்று வருபவர்களின் கதி? அதோ கதிதான். ஊருக்கு சென்றால் கடன் கழுத்தை நெரிக்கும். வேறு வழிகிடையாது. கிடைக்கும் சொற்ப பணத்தையாவது ஊருக்கு அனுப்பி வைத்து இங்குள்ள சூழ்நிலையை மறைத்து வாழ்பவர்கள் நிறையபேர். இவர்களின் கதையைக்கேட்டால் கண்ணீர் வந்துவிடும்.

இரண்டாம் வகை ( நடுத்தரம் )

ஏஜெண்டுகள் , அல்லது விசா கொடுத்தவர்கள் சொன்ன மாதிரி வேலை கிடைக்கும், சம்பளமும் சொன்ன மாதிரி கிடைக்கும். ஆனால் பெரிய முன்னேற்றம் எதுவும் இருக்காது. கொடுத்த வேலையைப் பார்த்துக்கொண்டு கிடைத்த சம்பளத்தை ஊருக்கு அனுப்பி விட்டு வருடத்துக்கு ஒருமுறையோ , இரு வருடத்துக்கு ஒரு முறையோ முதலாளி செலவில் ஊர் சென்று திரும்பி வந்து மறுபடியும் செக்கிழுக்க வேண்டியதுதான். நான், ஸ்டார்ஜன், சரவணன் எல்லாம் இந்த பிரிவில்தான் இணைகிறோம் :)


மூன்றாம் வகை ( முன்னேற்றம் )

இது உண்மையிலேயே சவாலான சூழல். இந்த வாழ்க்கைக்கு ஏங்கித்தான் ஊரிலிருந்து கனவுகளோடு மக்கள் இங்கு வருவது. ஆம் சொந்தமாக கடைகள் சோரூம்கள் நடத்துவது. இந்த வாய்ப்பு அனைவருக்கும் கிடைத்து விடுவதில்லை. நமக்கு வாய்த்த முதலாளி மாதா மாதம் இவ்வளவு பணம் கொடுத்து விடு என்று சொல்லி கடையை நம் கையில் கொடுத்து விடுவார். அதிலுள்ள லாபமும் நட்டமும் நம் பொறுப்பு. இந்த மாதிரி வாய்ப்பு கிடைத்தவர்கள் தான் ஊரில் கோடீஸ்வரனாகி இருக்கிறார்கள். அது போல் வாய்ப்பை சரிவர பயன்படுத்த தெரியாமல் நஷ்டம் ஆனவர்களும் உண்டு. அது அவரர்களின் திறமை, அதிர்ஷ்டத்தை பொறுத்தது.

என்ன நண்பர்களே இப்போது சொல்லுங்கள் வெளிநாட்டு வாழ்க்கை கஷ்டமா? அல்லது இஷ்டமா?

டிஸ்கி : இங்கு முடிந்தவரை அனைவருக்கும் பொதுவான விசயங்களை குறிப்பிட முயன்றுள்ளேன். இது எனது கருத்து மட்டுமே. இங்கு வசிக்கும் பலருக்கு இதைவிட மோசமான் அல்லது நல்ல அனுபவங்கள் கிடைத்திருக்கலாம்.

,

51 comments:

துளசி கோபால் said...

நமக்கு அமையறதைப் பொறுத்துத்தான் எல்லாமே.

Unknown said...

"பொதுவாக வெளிநாடு செல்பவர்களின் நிலை புலி வாலை பிடித்த கதைதான். நாம் விட நினைத்தாலும் ஊர் சூழலும், பிரச்சனைகளும், ஊரில் போய் என்ன வேலை செய்ய என்ற பயமும் நம்மை ஊர் திரும்ப விடாது."
உண்மை இதுதான்.
அழகாக சொல்லி இருக்கிறீர்கள்.

Ahamed irshad said...

நல்ல ஆ(ஏ)க்கம்..

கோவி.கண்ணன் said...

பொருளில்லாதவற்கு இவ்வுலகம் இல்லை, அதனால் எல்லாவற்றையும் பொருத்துக் கொள்ளவேண்டி இருக்கிறது.

நாடோடி said...

//எல்லாவற்றிற்கும் ஒரு காரணம், ஒரே காரணம் பணம். ///

அதேதான் அக்ப‌ர்... அருமையாக‌ தொகுத்துள்ளீர்க‌ள்..

செ.சரவணக்குமார் said...

வெளிநாட்டு வாழ்க்கையின் அவல நிலையை மிக அருமையாகப் பதிவு செய்துள்ளீர்கள் அக்பர்.

கடந்த பத்து ஆண்டுகளில் இதுபோல ஒரு வெயிலைப் பார்த்ததில்லை என்று சொல்கின்றனர்.

பகிர்வுக்கு மிக்க நன்றி.

Asiya Omar said...

நல்ல தெளிவான இடுகை.அருமை.பாராட்டுக்கள்.

கமலேஷ் said...

//கடந்த பத்து ஆண்டுகளில் இதுபோல ஒரு வெயிலைப் பார்த்ததில்லை என்று சொல்கின்றனர்//

53 டிகிரி இப்ப ஆரம்பம்தானே நண்பரே..
இனிமேதானே கச்சேரியே இருக்கு...

அடிமை ராஜாக்களின் நிலைமையை மிக நன்றாக தொகுத்துள்ளீர்கள் நண்பரே..வாழ்த்துக்கள் ..தொடருங்கள்...

seethag said...

உங்கள் நண்பரின் நிலையை நிநைத்து அழுகையே வந்துவிட்டது.நானும் ஆஸ்திரேலியா வது 7 வருடம் ஆகிவிட்டது. இத்தனை நாளும் எப்படியோ தள்ளிவிட்டேன்.பல்வேறு காரணங்களால் நான் இந்த 7 வருடமும் தனியாயி தான் இருந்தேன்.

இப்போ ஊருக்கு போகிறேன் என் கணவருக்கும் ஊர் பிடிக்கும் என்பதால்.

ஆனால் என்ன செய்ய நானும் முதலில் பணம் போன்ற பல்வேறு காரணங்களுக்கு தான் வந்தேன்.ஆஸ்திரேலியா அரரெபியா இல்லை மற்றும் என் வேலை உண்மையிலேயே dream job இப்போது. அதனால் நின்ங்கள் படும் கஷ்டம் பட்வில்லை என்றாலும் தனிமையும், என்னதான் ஆனாலும் நான் 'வேறு' என்ற எண்ணமும் புரிகிறது. உங்கள் நண்பரை ரொம்ப கேட்டேன் என்று சொல்லுங்கள்.

இராகவன் நைஜிரியா said...

நீங்கள் சொல்வது 100% சரி. புலி வாலைப் பிடிச்ச மாதிரி விட முடியாம தொடர்ந்துகிட்டு இருக்கோம்....

அமைதி அப்பா said...

//எல்லாவற்றிற்கும் ஒரு காரணம், ஒரே காரணம் பணம்.//

ஆமாம், அங்குள்ள நிலையை எடுத்துச் சொல்லி விட்டீர்கள்.முடிவு அவரவர் கையில்.

ஹுஸைனம்மா said...

உள்நாடோ, வெளிநாடோ - நம் திறமையும், தலையெழுத்தும்தான் எல்லாம்...

சொன்னதுபோல, புலிவால் பிடித்த கதைதான்...

Prathap Kumar S. said...

//ஊர் சூழலும், பிரச்சனைகளும், ஊரில் போய் என்ன வேலை செய்ய என்ற பயமும் நம்மை ஊர் திரும்ப விடாது.//

கரீட்டா சொன்னீஙக அக்பர்... யாரும் ரிஸ்க் எடுக்க விரும்புறதிலலை.

அதே வெயில்
கொடுமை தான் துபாய்லயும்...ஆனால் பல விசயங்களில் சவுதிக்கு அமீரகம் கொஞ்சம் பரவாயில்லை ரகம்...

நண்பர் சரணவனை நினைக்கும் வருத்தமாக இருக்கிறது. விசாரித்தாக சொல்லவும்...

Guru said...

புலிவால் பிடித்த கதை என்பது 100 சதவிகிதம் உண்மை.

ஊரில் போய் என்ன வேலை செய்ய என்ற பயமும் நம்மை ஊர் திரும்ப விடாது இது தான் பல பேர் கேட்கின்ற கேள்வி.

UNIVERSAL said...

Hai,

I am from Thanjavur (Tamilnadu) living in Riyadh (Hai Al Wazarat)

Give me your contact number to call you & mentioned points are absolutely correct.

Regard's,

Shahul
Mob # 0568200276

UNIVERSAL said...

Hai,

I am from Thanjavur (Tamilnadu) living in Riyadh (Hai Al Wazarat)

Give me your contact number to call you & mentioned points are absolutely correct.

Regard's,

Shahul
Mob # +966568200276

சிநேகிதன் அக்பர் said...

நன்றி துளசி கோபால். சரியா சொன்னீங்க‌

Starjan (ஸ்டார்ஜன்) said...

நல்லா அலசி ஆராய்ஞ்சிருக்கீங்க அக்பர். இதுதான் உண்மை நிலை. இதுபுரியாமல் ஒவ்வொருவரும் இன்னும் வெளிநாட்டுக்கனவுலே மிதக்கிறார்கள். அவர்களை குற்றம்சொல்லி என்ன பிரயோஜனம்... எல்லாமே மோகம்தான்.

Jaleela Kamal said...

என்னத்த சொல்வது இந்த வெப்பத்தின் தாக்கத்தை.

இன்று கூட மதியம் பத்து நிமிட நடை செருப்பே கொதிக்குது. எப்பாடா அப்பா வீட்டில் போய் அடைவோம் என்றாகிவிட்டது.
http://allinalljaleela.blogspot.com/2010/06/blog-post_19.html

நீங்க என் இந்த இடுகைய படிக்கலையா?

Jaleela Kamal said...

ஸ்டார்ஜன் சொல்வது போல் இன்னும் நிறைய பேர் வெளிநாட்டுக்கு வந்து வேலை பார்ப்பது தான் அவர்களுடைய கனவாக இருக்கு.

சில பேர் வறுமை தாளமுடியாமலும் வருகிறார்கல், ஏதாவது வேலை கிடைத்தால் போதும் என்று,

அப்துல்மாலிக் said...

நாம் அனைவரும் ஆசைப்பட்டு(?) விரும்பி வருந்தும் வர்க்கம் (வெளிநாடுவாழ்). இதற்கெல்லாம் முன்னோர்களே முழு முதர்காரணம். இவ்வளவு கஷ்டம்ப்படும் நிறைய பேர் தன் மக்களையாவது உயர்ந்த இடத்தில் வைத்துப்பார்க்க ஆசைப்பட்டு எல்லாத்தையும் தாங்கிகொள்கிறார்கள்

நல்ல பகிர்வு அக்பர்

Jaleela Kamal said...

வாழ்த்துக்கள் இந்த பதிவு யுத் ஃபுல் விகடன் குட் பிளாக்கில் வந்துள்ளது.

Starjan (ஸ்டார்ஜன்) said...

///Jaleela Kamal said...

வாழ்த்துக்கள் இந்த பதிவு யுத் ஃபுல் விகடன் குட் பிளாக்கில் வந்துள்ளது. ///

நானும் என்னோட வாழ்த்தை சொல்லிக்கிறேன்.

malar said...

ரொம்ப அருமையாக எழுதிஇருக்கீங்க ...சுருக்கமாக சொன்னால் அங்காடி தெரு ....

ஹேமா said...

வெளிநாட்டு வாழ்க்கையின் வேதனைகள்.திரைகடலோடியும் திரவியம் தேடப் புறப்பட்டுவிட்டோம்.
என்ன செய்ய அக்பர் !

சாந்தி மாரியப்பன் said...

தலையெழுத்தைப்பொறுத்ததுதான் எல்லாமே..

ராஜவம்சம் said...

ஒண்னும் சொல்ரதுக்கு இல்லை சகோதரா

ஏன்னா சந்தோஸம்னா சந்தோஸம்மா பகிர்ந்துக்கலாம்

நம்ம கஸ்டம் நம்மலோட

இன்ஸா அல்லாஹ் நம்ம வாழ்க்கையுலும் ஓளிவீசம்.

.

அன்புடன் மலிக்கா said...

//கடந்த பத்து ஆண்டுகளில் இதுபோல ஒரு வெயிலைப் பார்த்ததில்லை என்று சொல்கின்றனர்//

அதையேதான் நானும் சொல்கிறேன் முடியலையேமா.

வீசும்காற்றுக்கூட
விலாசிதள்ளுது
வெயிலை..

சூழ்நிலைகளை அனுசரித்துப்போக பழகவேண்டிய நிலை வேறென்ன சொல்ல வெளிநாட்டுவாழ்க்கையை..

Chitra said...

உண்மை நிலமையையும் அவல நிலைகளையும் கவலைகளையும் சொல்லி இருக்கீங்க.... மனதில் ஒரு வலி தான்......




யூத்புல் விகடன் குட் ப்ளொக்ஸ் - வாழ்த்துக்கள்!

பனித்துளி சங்கர் said...

பலரால் சொல்ல இயலாத வலிகளை உங்களின் பதிவில் சொல்லி இருக்கிறீர்கள் . பகிர்வுக்கு நன்றி நண்பரே .
வார்த்தைகள் இருந்தும் ஊமைகள்தான் எங்களைப் போல் வே வெளிநாட்டடில் வாழ்பவர்கள்

தாராபுரத்தான் said...

இக்கரைக்கு அக்கரை பச்சை..அக்கரைக்கு இக்கரை பச்சை..தானுங்க.

CS. Mohan Kumar said...

ரொம்ப அருமையா சொல்லியிருக்கீங்க நண்பா. நம் நாட்டை விட அதிகம் சம்பாதிக்கலாம் என்பதால் வெளி நாடு செல்பவர்கள் எவ்வளவோ துன்பங்களை சந்திக்கின்றனர்.

அங்குள்ள போது வீட்டு ஞாபகம்; விடுமுறையில் வரும்போதோ திரும்ப செல்ல இன்னும் எத்தனை நாள் உள்ளது என எண்ணி பெருமூச்சு விட்டவாரே இருப்பான் என் நண்பன்.

ஜெய்லானி said...

//வெளிநாடு செல்பவர்களின் நிலை புலி வாலை பிடித்த கதைதான்.//

உண்மை...உண்மை...உண்மை..

இங்கேயே காலை 8 மனிக்கே 40 டிகிரி வெயில் அடிக்குதே.!!

சிநேகிதன் அக்பர் said...

வாங்க

அபுல்பசர்

அஹமது இர்ஷாத்

கோவி.கண்ணன்

நாடோடி

தங்களின் கருத்துக்கு நன்றி

சிநேகிதன் அக்பர் said...

வாங்க

செ.சரவணக்குமார்
//கடந்த பத்து ஆண்டுகளில் இதுபோல ஒரு வெயிலைப் பார்த்ததில்லை என்று சொல்கின்றனர்.//
அப்படியா!

asiya omar

கமலேஷ்

தங்களின் கருத்துக்கு நன்றி

சிநேகிதன் அக்பர் said...

வாங்க திரு

//உங்கள் நண்பரின் நிலையை நிநைத்து அழுகையே வந்துவிட்டது.//

இப்போது குணமாகிவிட்டார். உற‌வை பிரிந்து வாழும் நம்மை போன்றோர்க்கு நமக்குள்தான் ஆறுதால் சொல்லிக்கொள்ள முடியும்.

கால நிலைகள் நாட்டுக்கு நாடு மாறுபடலாம். ஆனால் பிரிவின் வலி ஒன்றுதானே. உங்கள் வேதனை புரிகிறது.

தங்களின் கருத்துக்கு நன்றி

சிநேகிதன் அக்பர் said...

வாங்க

இராகவன் நைஜிரியா

அமைதி அப்பா

ஹுஸைனம்மா

நாஞ்சில் பிரதாப். சரவணனுக்கு இப்போது குணமாகிவிட்டது தல.

Guru

தங்களின் கருத்துக்கு நன்றி

சிநேகிதன் அக்பர் said...

வாங்க ஷாகுல்

விரைவில் உங்களை தொடர்பு கொள்கிறேன்.

தங்களின் கருத்துக்கு நன்றி

சிநேகிதன் அக்பர் said...

வாங்க

Jaleela Kamal
//நீங்க என் இந்த இடுகைய படிக்கலையா?//
படிச்சுட்டேன். மிக அருமையாக எழுதியுள்ளீர்கள்.
//வாழ்த்துக்கள் இந்த பதிவு யுத் ஃபுல் விகடன் குட் பிளாக்கில் வந்துள்ளது.//
வாழ்த்துக்கு நன்றி

Starjan ( ஸ்டார்ஜன் ). உங்கள் வாழ்த்துக்கும் நன்றிகள்.

அபுஅஃப்ஸர்

தங்களின் கருத்துக்கு நன்றி

சிநேகிதன் அக்பர் said...

வாங்க

malar

ஹேமா

அமைதிச்சாரல்

ராஜவம்சம்

அன்புடன் மலிக்கா

Chitra

தங்களின் கருத்துக்கு நன்றி

சிநேகிதன் அக்பர் said...

வாங்க

பனித்துளி சங்கர்

தாராபுரத்தான் ஐயா

மோகன் குமார்

தங்களின் கருத்துக்கு நன்றி

சிநேகிதன் அக்பர் said...

வாங்க ஜெய்லானி

தங்களின் கருத்துக்கு நன்றி

Anonymous said...

நல்ல தெளிவான இடுகை.அருமை.பாராட்டுக்கள்.

KCDesi
USA

சிநேகிதன் அக்பர் said...

வாங்க muldri

தங்களின் கருத்துக்கு நன்றி

Unknown said...

ஆமாங்க ரொம்ப நல்லா சொல்லியிருகீங்க.. நானும் உங்க பிரிவுல(இரண்டாம் வகை)தாங்கோ ennaiyum serthukonka ..

அப்புறம் என்ன சரவணன் அண்ணா சேப்டிஆபீசரா இருந்துகிட்டு.. ஒழுங்கா புது சூ வாங்குங்கோ........... :-)

சிநேகிதன் அக்பர் said...

வாங்க முருகேச‌ண்ணே

நானும் சொல்லிட்டேன் :)

தங்களின் கருத்துக்கு நன்றி.

Haroon said...

அதிர்ஷ்டத்தை பொறுத்தது.
Avaravar valakai avaravar kaiyel nanbarey.

Nambungal ungalai அதிர்ஷ்டத்தை alla.....

Erupenum Ellam Unmaiyey...

Anbudan هارون

Haroon said...

இன்ஸா அல்லாஹ் நம்ம வாழ்க்கையுலும் ஓளிவீசம்.

இங்கு ஓளி அதிகம்
சுடும் வெயில்....

Anbudan هارون

Menaga Sathia said...

நல்ல பதிவு அக்பர்!! அழகா தொகுத்து சொல்லிருக்கிங்க...

Bastin Fernando said...

arumayana pathivu..
Analum mudivu eduppathu avaravar kaiyil.

சிநேகிதன் அக்பர் said...

தங்களின் கருத்துக்கு நன்றி.

Haroon

Mrs.Menagasathia

Bastin Fernando

இதையும் விரும்புவீர்கள்.

Related Posts with Thumbnails