Wednesday, June 16, 2010

முதல் நாள் இன்று... (100வது இடுகை)

அன்புள்ள நண்பர்களே !

இத்தனை நாள் பழைய சட்டையுடன் (எனக்கும் விருப்பமான சட்டையும் கூட) வலம் வந்தவன் இன்று புதுச்சட்டை மாற்றி விட்டேன் நண்பர்களே.

ஆம் உங்களுடனான இந்த சிநேகம் தொடங்கி இன்றுடன் ஓராண்டு நிறைவடைவது மிக மகிழ்ச்சியாக இருக்கிறது. ஒரு வழியாக தட்டுத்தடுமாறி நூறாவது இடுகையும் இன்று எழுதிவிட்டதில் ரெட்டிப்பு மகிழ்ச்சி.

பயணம் செய்வது அனைவருக்கும் விருப்பமான ஒன்று. அதுவும் இந்த இணையப்பயணத்தில் உங்களுடன் இணைந்து பயணிப்பதை எனது வாழ்வின் முக்கிய தருணமாக உணர்கிறேன்.

இந்த ஒருவருடத்திய பேலன்ஸ் சீட்டை அப்படியே உங்கள் பார்வைக்கு வைத்துள்ளேன். (இதெல்லாம் ஓவர்ன்னு எனக்கே தெரியுது.கொஞ்சம் பொறுத்துக்கொள்ளுங்கள்)

வரவு

நல்ல நண்பர்கள், நல்ல எழுத்துக்கள், சமூக சிந்தனைகள் என்று பல நல்லவைகள்.

அதை விட மேலாய், முகம் தெரியாத நண்பர்களிடம் இவ்வளவு நேசமாய் இருக்க முடியுமென்றால். அன்றாடம் பழகும் நண்பர்களிடம் ஏன் இருக்கமுடியாது என்று உணர்ந்தது. ( மனிதரை விட்டு பிரியும் போதுதானே அவர்கள் செய்த நல்லவைகள் கண்ணுக்கு தெரிகிறது. நெருக்கமாயிருக்கும் போது தவறுகளே பெரிதாக தெரிகிறது)

தமிழில் புதிய வார்த்தைகள் அறியக்கிடைத்தது. கூடுமான வரை எழுத்துப்பிழை இல்லாமல் எழுதப்பழகியது என்று இங்கு நான் பெற்றதுஏராளம்.

செலவு

குறிப்பிட்டுச் சொல்லும்படியாக ஒன்றும் இல்லை. ஆனால் பணி செய்யும் இடத்தில் எழுதுவதால் நிறைய எழுத முடிவதில்லை. பின்னூட்டங்களும் இட முடிவதில்லை. அதையும் தாண்டி சில வேளைகளில் ஆர்வமிகுதியால் வலையைப்பார்த்துக்கொண்டே இருந்ததனால் சரியான நேரத்தில் டெலிவரி கொடுக்கமுடியாமல் சில வாடிக்கையாளர்களை இழந்ததும் நடந்திருக்கிறது.

அதன் பிறகுதான் சுயகட்டுப்பாட்டுடன் கையை கட்டிப்போட்டு வைத்திருக்கிறேன். மிகுதியான ஆர்வத்துடன் கலந்து கொண்டு பின்பு வெறுத்து ஒதுங்குவதை விட‌ மெதுவாகவே உங்களுடன் பயணிக்க விரும்புகிறேன்.

பலன் (இதிலிருந்து நான் கற்றது)

அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு.

‍==========

மாம்ஸ், மாப்ஸ், சித்த்ப்பா, பெரியப்பா, அண்ணன்மார்கள், சகோதரிகள் என்று இதில்தான் எத்தனை விதமான உறவுகளை பெற்றுள்ளேன், பெற்றுக்கொண்டு இருக்கிறேன். உங்களுடைய இந்த அன்புக்கு நான் என்றும் கடமைப்பட்டவனாக இருக்கிறேன்.

நல்ல எழுத்தாளர்களும், கவிஞர்களும் பயணிக்கும் இந்த தளத்தில் நானும் இருப்பதை நினைத்து பெருமையடைகிறேன்.

எனக்கு இதுவரை உறுதுணையாக இருந்த அனைத்து பதிவுலக, படிக்கும் நண்பர்களுக்கும், கூகிளாருக்கும் மிக்க நன்றிகள்.

இன்றிலிருந்து மீண்டும் முதல் இடுகையாக நினைத்து எழுதத்தொடங்குகிறேன். உங்கள் ஆதர‌வுடன்...

நிறைகுறைகளை பகிர்ந்து கொள்ளுங்கள்.

,

69 comments:

Prathap Kumar S. said...

நான்தான் பர்ஸ்ட்...வாத்யாரே...

வாழ்த்துக்கள்...

SUFFIX said...

ஒரு வருடம் ஆயிடுச்சா அக்பர், காலம் ஓடுவதே தெரிவதில்லை, மனம் நிறைந்த வாழ்த்துக்கள்!!

Prathap Kumar S. said...

பேல்ன்ஸ் ஷீட்டை இன்னும் நிறைய ஆடிட் பண்ணவேண்டியிருக்கு...நிறைய கள்ளக்கணக்குகள் காண்பிச்ச மாதிரி இருக்கு...நம்ம குருதான் உண்மையாச்சொல்லனும்..

குரு எங்கிருந்தாலும் மேடைக்கு வரணும்...

Starjan (ஸ்டார்ஜன்) said...

அக்பர் இந்த பயணம் என்றென்ன்றும் தொடரட்டும்.. என் அன்பான வாழ்த்துக்கள்.

ஜெய்லானி said...

100க்கு வாழ்த்துக்கள்

ஜெய்லானி said...

விரைவில் இன்னும் பக்கத்தில நாலு சைபர் வர அட்வான்ஸ் வாழ்த்துக்கள்

Starjan (ஸ்டார்ஜன்) said...

// நாஞ்சில் பிரதாப் said...

பேல்ன்ஸ் ஷீட்டை இன்னும் நிறைய ஆடிட் பண்ணவேண்டியிருக்கு...நிறைய கள்ளக்கணக்குகள் காண்பிச்ச மாதிரி இருக்கு...நம்ம குருதான் உண்மையாச்சொல்லனும்..

குரு எங்கிருந்தாலும் மேடைக்கு வரணும்...///

வந்துட்டேன் சிஷ்யா.. சொல்லிரவா எல்லாத்தையும் சொல்லிரவா.. கள்ளக்கணக்குல காட்டுன பணம் எல்லாத்தையும் உங்க அக்கவுண்டுக்குதான் அனுப்பியிருக்கேன். ஹா ஹா ஹா ஹா...

கோவி.கண்ணன் said...

நல்வாழ்த்துகள்

Btc Guider said...

வாழ்த்துக்கள் நண்பரே...

எல் கே said...

congrats keep rocking

Ahamed irshad said...

வாழ்த்துக்கள் அக்பர்...

Jaleela Kamal said...

நாஞ்சிலாருக்கு யோசனை எப்படி போவுது பாருங்க.

Jaleela Kamal said...

100 வது பதிவிற்கு வாழ்த்துகக்ள்.

மேலும்பல இடுகைகள் போட வாழ்த்துகக்ள்.

முகம் தெரியாத தோழர்க்ளும், சகோதரிகள் எல்லோரும் கிடைத்தது எல்லோருக்கும் சந்தோஷம் தான்,

க.பாலாசி said...

ஒருவருட நிறைவுக்கும், 100வது இடுகைக்கு வாழ்த்துக்கள் அக்பர்.. மென்மேலும் தங்களின் படைப்புகள் இவ்வலையில் விரியட்டும்...

க‌ரிச‌ல்கார‌ன் said...

வாழ்த்துக்க‌ள் ம‌க்கா

நட்புடன் ஜமால் said...

ஒராண்டு நிறைவில் 99ஐ தாண்டியாச்சி

வாழ்த்துகள்!

Riyas said...

BEST OF LUCK AKBAR. CONTINUE,,

அப்துல்மாலிக் said...

வாழ்த்துக்கள் 100க்கு

தொடருங்க....500 நோக்கி

வெங்கட் said...

All the Best.. Keep Rocking

ஹேமா said...

இன்னும் இன்னும் நிறைய எழுத மனம் நிறைந்த வாழ்த்துகள் அக்பர்.

முத்துலெட்சுமி/muthuletchumi said...

வாழ்த்துக்கள்.

நேசமித்ரன் said...

பெருகும் அன்பின் வாழ்த்துகளும்
சினேகத்தின் கொண்டாட்டமும் நிறைத்து போகிறேன் அக்பர்

பழமைபேசி said...

வாழ்த்துகள்.... சித்திரமும் கைப்பழக்கம்; செந்தமிழும் நாப்பழக்கம்; தெளிதமிழும் விரற்பழக்கம்!!

நிறைய எழுதுங்க தம்பி!!!

நாடோடி said...

100 வ‌து ப‌திவுக்கு வாழ்த்துக்க‌ள் அக்ப‌ர்.... தொட‌ர்ந்து எழுதுங்க‌...

ஜெய் said...

செஞ்சுரிக்கும், ஒரு வருடத்திற்கும் வாழ்த்துக்கள் அக்பர்... :)

வால்பையன் said...

சத்தத்திற்கு வாழ்த்துக்கள்!

நண்டு @நொரண்டு -ஈரோடு said...

100 வது பதிவிற்கு
வாழ்த்துக்கள் தோழா

ரிஷபன் said...

100 வது பதிவிற்கு வாழ்த்துகள்..

Chitra said...

////ஆம் உங்களுடனான இந்த சிநேகம் தொடங்கி இன்றுடன் ஓராண்டு நிறைவடைவது மிக மகிழ்ச்சியாக இருக்கிறது. ஒரு வழியாக தட்டுத்தடுமாறி நூறாவது இடுகையும் இன்று எழுதிவிட்டதில் ரெட்டிப்பு மகிழ்ச்சி.////


..... ஓராண்டு நிறைவுக்கும் நூறாவது இடுகைக்கும் வாழ்த்துக்களும் பாராட்டுக்களும்! தொடர்ந்து அசத்துங்க!

சிநேகிதன் அக்பர் said...

நன்றி பிரதாப்.

நன்றி ஷஃபி.

ராஜவம்சம் said...

அண்ணா உங்க சந்தோஸத்தில நானும் பங்கெடுத்துகிறேண்ணா.

Paleo God said...

நல்ல புரிதல். வாழ்த்துகள்!! :))

Starjan (ஸ்டார்ஜன்) said...

யூத்புல் விகடனில் குட்ப்ளாக்ஸ் பகுதியில் வந்ததற்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துகள் அக்பர்.

மின்மினி RS said...

இன்னும் நிறைய சாதனைகள் தொடர அன்பான வாழ்த்துகள் அக்பர் அண்ணே.. குட்ப்ளாக்ஸில் வெளியானதற்கு வாழ்த்துகள் வாழ்த்துகள்.

தாராபுரத்தான் said...

வெளுத்துக் கட்டுங்கோ தம்பீ.

கமலேஷ் said...

நல்வாழ்த்துக்கள் நண்பரே..

T.V.ராதாகிருஷ்ணன் said...

வாழ்த்துக்கள் அக்பர்

ஸாதிகா said...

சததிற்கு வாழ்த்துக்கள்.மேலும்பல சதம் அடிக்கவும் வாழ்த்துக்கள்.//அதன் பிறகுதான் சுயகட்டுப்பாட்டுடன் கையை கட்டிப்போட்டு வைத்திருக்கிறேன். மிகுதியான ஆர்வத்துடன் கலந்து கொண்டு பின்பு வெறுத்து ஒதுங்குவதை விட‌ மெதுவாகவே உங்களுடன் பயணிக்க விரும்புகிறேன்.
//அருமையான அறிவுரை அக்பர்.மிக்க நன்றி.

க ரா said...

நூறுக்கும், ஒரு வருடம் முடிந்ததற்கும் வாழ்த்துக்கள்.

Menaga Sathia said...

congarats Br!!

தேவன் மாயம் said...

100/100 மார்க் வாங்கி முதல் வருடம் பாஸ் ஆகிவிட்டீர்கள்!!!

sathishsangkavi.blogspot.com said...

வாழ்த்துக்கள்...

Thenammai Lakshmanan said...

அக்பர் தம்பி

நல்ல எழுத்தாளர்களும், கவிஞர்களும் பயணிக்கும் இந்த தளத்தில் நானும் இருப்பதை நினைத்து பெருமையடைகிறேன்.

எனக்கு இதுவரை உறுதுணையாக இருந்த அனைத்து பதிவுலக, படிக்கும் நண்பர்களுக்கும், கூகிளாருக்கும் மிக்க நன்றிகள்.

இன்றிலிருந்து மீண்டும் முதல் இடுகையாக நினைத்து எழுதத்தொடங்குகிறேன். உங்கள் ஆதர‌வுடன்...

நிறைகுறைகளை பகிர்ந்து கொள்ளுங்கள்.//

இது நாலுமே அருமை...:))

வாழ்த்துக்கள் .. நிறைய எழுத.. நூறு பல்லாயிரமாகப் பெருக..

அ. முஹம்மது நிஜாமுத்தீன் said...

சினேகிதரே!
வாழ்த்துக்கள்!
தொடர்ந்து பயணிப்போம்!

அமைதி அப்பா said...

வாழ்த்துக்கள்.
நல்ல சட்டை, பொருத்தமாக உள்ளது.

ப்ரியமுடன் வசந்த் said...

வாழ்த்துகள் அக்பர்..

Unknown said...

இங்கே இன்றுதான் முதல் முறை.. ஆனால்,மிகுந்த மன மகிழ்ச்சி.. :)

வாழ்த்துக்கள்...

பனித்துளி சங்கர் said...

வாழ்த்துக்கள் நண்பரே . தொடரட்டும் உங்களின் எழுத்து சாதனைகள் .

Unknown said...

தொடரட்டும் உங்கள் எழுத்துப்பணி.
வாழ்த்துக்கள் அக்பர்.

கண்ணா.. said...

சதத்திற்கும், ஓரு வருடத்திற்கும் வாழ்த்துக்கள்..

தொடரட்டும் உங்கள் பதிவுலக பயணம்...

எனக்கும் உங்களை போன்ற பல நண்பர்கள் கிடைத்ததும் பதிவுலகினால்தான்.

சிநேகிதன் அக்பர் said...

@ நாஞ்சிலு

//நிறைய கள்ளக்கணக்குகள் காண்பிச்ச மாதிரி இருக்கு...//

நல்ல கணக்கை மெயிலில் அனுப்புறேன் பாஸ்.

சிநேகிதன் அக்பர் said...

நன்றி ஸ்டார்ஜன்

//கள்ளக்கணக்குல காட்டுன பணம் எல்லாத்தையும் உங்க அக்கவுண்டுக்குதான் அனுப்பியிருக்கேன். //

அப்படி போடு....

நன்றி ஜெய்லானி

சிநேகிதன் அக்பர் said...

நன்றி கோவி அண்ணா

நன்றி ரஹ்மான்

நன்றி LK

சிநேகிதன் அக்பர் said...

நன்றி அஹமது இர்ஷாத்

வாழ்த்துக்கள் அக்பர்...

வாங்க‌ Jaleela Kamal

// நாஞ்சிலாருக்கு யோசனை எப்படி போவுது பாருங்க.//

அவரு எப்பவுமே இப்படித்தான் கலாய்ப்பாரு.

வாழ்த்துக்கு நன்றி

சிநேகிதன் அக்பர் said...

நன்றி பாலாசி

நன்றி கரிசல்காரன்

நன்றி ஜமால்

சிநேகிதன் அக்பர் said...

நன்றி ரியாஸ்

நன்றி அபுஅப்ஸர்

நன்றி வெங்கட்

நன்றி ஹேமா

நன்றி முத்துலெட்சுமி

சிநேகிதன் அக்பர் said...

நன்றி நேசன் அண்ணா. பெயரைப்போலவே வாழ்விலும் :)

நன்றி பழமைபேசி மணி அண்ணா

நன்றி ஸ்டீபன்

நன்றி ஜெய்.

நன்றி வால்பையன்.

சிநேகிதன் அக்பர் said...

நன்றி நண்டு @நொரண்டு வக்கில் சார்

நன்றி ரிஷபன்

நன்றி சித்ரா

நன்றி ராஜவம்சம்

நன்றி ஷங்கர்

தெரிய்ப்படுத்தியதற்கு நன்றி ஸ்டார்ஜன்

சிநேகிதன் அக்பர் said...

நன்றி மின்மினி

நன்றி பழனிச்சாமி ஐய்யா

நன்றி கமலேஷ்

நன்றி T.V.ராதாகிருஷ்ணன் சார்

நன்றி ஸாதிகா

நன்றி இராமசாமி கண்ணண்

சிநேகிதன் அக்பர் said...

நன்றி மேனகா

நன்றி தேவன் மாயம் சார்

நன்றி சங்கவி

நன்றி தேனக்கா

நன்றி நிஜாமுதீன்

நன்றி அமைதி அப்பா

நன்றி ப்ரியமுடன்...வசந்த்

சிநேகிதன் அக்பர் said...

நன்றி ஆறுமுகம் முருகேசன் சார்

நன்றி பனித்துளி சங்கர்

நன்றி அபுல் பசர்

நன்றி கண்ணா.

பன்னிக்குட்டி ராம்சாமி said...

வாழ்த்துக்கள்!

Asiya Omar said...

முதல் சதத்திற்கு அன்பான வாழ்த்துக்கள்.உங்களுக்கு வாழ்த்து சொல்வதில் நானும் பங்கு கொள்கிறேன் என்பதில் மகிழ்ச்சி.

Nathanjagk said...

சிநேகிதன் பயணம் தொடர அன்பான வாழ்த்துக்கள்!
100க்கு வாழ்த்துக்கள் மாப்ள!!
அப்புறம், புதுச்சட்டை: பேக்ரவுண்ட் என்னன்னு விளங்கலியே?
எனக்குத்தான் பிரச்சினையோ?

செ.சரவணக்குமார் said...

மனமார்ந்த வாழ்த்துகள் அக்பர்.

இன்றுதான் தொடங்குகிறேன் என்று சொல்லியிருந்தது மிகப் பிடித்திருந்தது.

மேலும் பல சிறப்புகளை அடைய இந்த நண்பனின் வாழ்த்துகள்.

சிநேகிதன் அக்பர் said...

நன்றி ராமலக்ஷ்மி

நன்றி பன்னிக்குட்டி ராம்சாமி

நன்றி asiya omar

நன்றி ஜெகநாதன். நான் டெம்ளேட்டை மாற்றிவிட்டேன் மாப்ஸ்.

நன்றி செ.சரவணக்குமார்.

ஹுஸைனம்மா said...

வாழ்த்துகள் அக்பர்!!

மங்குனி அமைச்சர் said...

அதன் பிறகுதான் சுயகட்டுப்பாட்டுடன் கையை கட்டிப்போட்டு வைத்திருக்கிறேன். மிகுதியான ஆர்வத்துடன் கலந்து கொண்டு பின்பு வெறுத்து ஒதுங்குவதை விட‌ மெதுவாகவே உங்களுடன் பயணிக்க விரும்புகிறேன்.///


மிகச் சரியான முடிவு

மங்குனி அமைச்சர் said...

100௦௦ க்கு வாழ்த்துக்கள்

இதையும் விரும்புவீர்கள்.

Related Posts with Thumbnails