இந்த சுப்ரமணி இருக்கானே பயங்கர குறும்புக்காரன். எனக்கு அவனை மிகவும் பிடிக்கும். எப்பவும் யாரைப்பற்றியாவது நக்கல் பண்ணிகொண்டே இருப்பான். சமயத்தில் என்னைப் பற்றியும்.
எனக்கு ஏழாம் வகுப்பிலிருந்து அவனை தெரியும். எட்டும் என் கூடத்தான் படித்தான். ஒன்பதுக்கு புனித அந்தோனியார் பள்ளியில் இருந்து டவுனில் உள்ள சாப்டர் மேனிலைப் பள்ளியில் அடுத்த அத்தியாயத்தை தொடங்கும் போதும் எங்கள் செட்டில் இருந்தான். ஆனால் வேறொரு பிரிவில்.
ஒன்பதில் சேக்தாவூது அறிமுகமானான். கே.டி. குஞ்சுமேனை விட பெரிய ஜென்டில்மேன். நல்லா படிப்பான். ஒரே ஊர்க்காரன். பள்ளி விட்டதும் சுப்ரமணி, சேக்தாவூது, பெருமாள், சண்முக நாதன் இவர்கள் யாருடனாவது இணைந்து பஸ் ஏற செல்வேன்.
பஸ்காரர்களுக்கு எங்களை கண்டால் பாசம் அதிகம். எங்களையும் பிடிக்காது பிரேக்கும் பிடிக்காது. அதனால் அருகிலுள்ள தாலுகா ஆபிஸில் நிற்காமல். ஒரு கிலோ மீட்டர் தள்ளி இருக்கும் கோவில் வாசலில் போய் நிற்கும். சொந்தக்கதை, சுற்று வட்டார கதையைப்பேசி கோவில் வாசல் வரை நடப்போம். நண்பர்கள் இணைந்தால் தூரம் ஒரு பொருட்டல்லதானே.
எங்கள் வகுப்புக்கு சௌந்திரபாண்டியன் சார். சிரித்த முகம். சிரிப்பென்றால் அதிரும்படி சத்தமாக இல்லாமல் பூ மலர்வதைப்போல ஓசையில்லா சிரிப்பு. இவரே எல்லா வகுப்புக்கும் வாத்தியாராக மாட்டாரா என்று ஏங்க வைத்தவர்.
ஹிப்பி தலையுடனும் , பெல்பாட்டம் பேண்டுடனும் "சங்கர் சலீம் சைமன்" படத்தில் வரும் ஹீரோ போல இருந்த பக்கத்து வகுப்பு சாரும் என்னை மிகவும் கவர்ந்து விட்டார். எனக்கு அவரைப்பார்த்தவுடன் சிரிப்பு வந்து விடும்.
சில நாட்களில் நானும் சேக்தாவூதுவும் நல்ல நண்பர்களானோம். வகுப்பில் சேக்தாவூதுதான் எப்போதும் முதல் ராங்க். எனக்கு மட்டுமல்ல வகுப்பில் அனைவருக்கும் அவனை பிடிக்கும்.
இப்படியாக ஒன்பதை தாண்டி பத்தை தொட்டோம். அங்கு சுப்ரமணி மீண்டும் இணைந்து கொண்டான். மூவர் கூட்டணியில் அரட்டை அராஜகம் ஆரம்பமானது.
எங்களின் கணக்கு சாராக வந்தவர் வேறு யாருமல்ல அந்த ஹீரோதான். பிற்பாடு பழகும் போதுதான் தெரிந்தது அவர் உண்மையிலேயே ஹீரோ என்று அப்படி ஒரு ஆட்டிடியூட். மிக பண்பானவர். அருமையாக பாடம் நடத்துவார்.
ஆனால் வாத்தியார்களுக்கு பட்டப்பெயர் வைக்கவில்லை என்றால் அவன் என்ன மாணவன். அவருக்கும் பட்டப்பெயர் வைத்தார்கள். நாங்கள் மூவரும் பஸ் ஏறச்செல்லும் போது பலரைப்பற்றியும் பேசி கிண்டலடித்துக்கொண்டே செல்வோம்.
அப்படி பேசும் போது அன்று மாட்டியவர் கணக்கு சார். சுப்ரமணிதான் முதலில் ஆரம்பித்தான் நாங்கள் பிக்கப் செய்துகொண்டோம். அவரின் பேச்சு நடை உடை பாவணை என்று ஒன்றை விடவில்லை. அரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய் மாதிரி. அந்த நேரம் அவர் எங்களை கடந்து சென்றது மாதிரி ஒரு ஃபீலிங்.
மறுநாள் வகுப்பில் கணக்கு நேரம் அது எங்களை கணக்கு பண்ணும் நேரம் என்பதை நாங்கள் உணர வில்லை.
வந்து உட்கார்ந்தவர். "நேத்து என்னை பற்றி பேசுன ரெண்டு பெரிய மனுஷனும் எந்திரிங்கடா" அப்படின்னார்.
வெடவெடத்து போய் விட்டது. அப்போ கடந்து சென்றது அவர்தானா?
"நீங்களா எந்திரிச்சா உங்களுக்கு நல்லது. நான் சொன்னேன்னா அப்புறம் என்ன நடக்கும்னு எனக்கே தெரியாது."
வேறு வழியில்லை எழும்பிவிடுவோம் என்று நினைக்கும் போது புது குழப்பம். எந்த ரெண்டு பேர் . தப்பிச்ச மூணாவது ஆள் யாரு?
இந்த தயக்கத்துக்கிடையில் சம்பந்தமேயில்லாமல் ரெண்டு பேர் எழுந்தார்கள். இருவரும் அண்ணன் தம்பிகள்
"இந்த ரெண்டு பெரிய மனுஷங்களும் என்ன செஞ்சாங்கன்னு அவங்க வாயாலயே இப்ப சொல்லுவாங்க."
ரெண்டு பேர் கண்களிலும் தாரை தாரையாக கண்ணீர். மூச்சு கூட விடாமல் நின்றார்கள்.
"அது என்ன பாட்டுடா. ஆத்தாடி பாவாடை காத்தாடவா. ராஸ்கல் வெளியூர்னா வர மாட்டேன்னு நினைச்சீங்களா."
"இவனுங்க கெட்ட நேரம் நான் அந்த ஊர் வழியா போக வேண்டியிருந்தது. ரெண்டும் ஆத்துல குளிச்சிட்டு துண்ட தலையில போட்டுட்டு என்னை கிண்டலடிச்சுக்கிட்டே போறாங்க இடையில பாட்டு வேற. என்னை பார்த்ததும் அவனுங்க மூஞ்சி போனதை பார்க்கணுமே. "
சார்.. சார்... தெரியாம செஞ்சுட்டோம் சார். மன்னிச்சுருங்க ஸ்ஸார்.. என்று அழுதுகொண்டே சொன்னார்கள்.
"என் கிளாஸுக்கு ரெண்டு பேரும் இனி வரக்கூடாது. போங்கடா வெளியில" என்று அனுப்பி விட்டார்.
அதிலிருந்து வெளியில் எங்க சொந்த கதையைக்கூட பேசப் பயந்தோம். ஒரு வாரத்தில் நிலைமை சகஜமாகியது வழக்கம்போல கேலிப்பேச்சு தொடங்கியது. அவர்களும் மன்னிக்கப்பட்டார்கள்.
பொதுத்தேர்வில் எங்களில் சிலர் கணக்கில் சென்டம் எடுத்து அவரை கிண்டல் பண்ணியதற்கு பரிகாரம் தேடிக்கொண்டோம்.
இதுல கொடுமை என்னான்னா அந்த ரெண்டு பேர் பேசுனதுக்கு தண்டனை கொடுத்தவர். இப்போ எல்லோரும் படிக்கிற மாதிரி எழுதுற என்னை வெளியே போக சொல்ல முடியாது பாருங்க அதுதான் டைமிங்.
என்னோட நோக்கப்படி பாலிடெக்னிக்கில் சேர்ந்தேன். டாக்டராக வேண்டுமென்பதால் சேக் தாவூது ப்ளஸ் ஒன்னில் சேர்ந்தான்.
பின்பு அவன் சென்னையில் BDS படித்துக்கொண்டிருக்கும் போது ஓரிரு முறை சென்னையில் வைத்து சந்தித்தேன். டாக்டர் பட்டம் வாங்கி அதே கல்லூரியில் வேலை செய்து கொண்டிருக்கும் போது நான் சவுதி வந்து விட்டேன்.
போன வாரம் ஒரு பதிவில் டாக்டர் எஸ் தாவூது என்று பெயரில் ஒரு பின்னூட்டம் வந்தது.
ஒரு வேளை நம்மாளாக இருக்குமோ எனக்கேட்டேன். அவனேதான்.
ஊரில் நலம் விசாரித்து மெயில் அனுப்பினேன்.
அவனிடம் இருந்து பதில் வந்தது.
"டேய்.. நானும் சவுதில, ஜித்தால தாண்டா இருக்கேன். இங்குள்ள டெண்டல் ஹாஸ்பிடலில் டாக்டரா இருக்கேன். முடிஞ்சா சந்திப்போம்."
என்ன கொடுமை சரவணன் இது !
,
50 comments:
//
"டேய்.. நானும் சவுதில, ஜித்தால தாண்டா இருக்கேன்."
என்ன கொடுமை சரவணன் இது !//
பாத்து ., அரபி யாரையும் கலாய்ச்சு மாட்டிகாதீங்க..
மிகவும் சுவராசியமான சந்திப்பாகவல்ல இருக்குது..
ஆஹா. இந்த டைமிங்கும் நல்லா ஒர்கவுட் ஆயிருக்கே:))
அக்பர் கடைசில நீங்க திருநெல்வேலின்னு தெரிஞ்சிடுச்சு.இது எப்பூடி ?
ரசித்து வாசித்தேன் அக்பர். ஒரு சிறுகதையின் நேர்த்தியோடு அழகாக எழுதியிருக்கிறீர்கள். நீண்ட நாட்களுக்குப் பிறகு நண்பர்கள் சேர்ந்திருப்பது மகிழ்ச்சி.
ஆனா அதுக்கேன்யா, என்ன கொடும சரவணன்னு என்கிட்ட கேக்குறீங்க?
@ஜெய்லானி
//பாத்து ., அரபி யாரையும் கலாய்ச்சு மாட்டிகாதீங்க..//
இங்கே ஒரு வசதி பாஸ். அவங்க முன்னாடி கலாய்ச்சா கூட அவங்களுக்கு புரியாது. :)
@மிக்க நன்றி பழனிச்சாமி சார்.
@பாலா சார்
//ஆஹா. இந்த டைமிங்கும் நல்லா ஒர்கவுட் ஆயிருக்கே:))//
உங்க டைமிங்கையும் ரசித்தேன்.
@asiya omar
//அக்பர் கடைசில நீங்க திருநெல்வேலின்னு தெரிஞ்சிடுச்சு.இது எப்பூடி ?//
மேடம் அதுதான் ப்ரோஃபைல்ல இருக்கே :)
@சரவணன்
//ஆனா அதுக்கேன்யா, என்ன கொடும சரவணன்னு என்கிட்ட கேக்குறீங்க?//
ஒரு நண்பர் கிடைச்சதை சொல்ல இன்னொரு நண்பரை கூப்பிட்டுத்தானே ஆகணும்.
//"டேய்.. நானும் சவுதில, ஜித்தால தாண்டா இருக்கேன்."
என்ன கொடுமை சரவணன் இது !//
அதானே...? :-)))))
சவுதில ஜெத்தால இருக்காரு ஒகே..என்னவா இருக்காரு...இன்னும் டாக்டராத்தான் இருக்காரா-??? :))
எதிர்பார்க்காத சந்திப்பு...
கட்டை சுப்ரமணி சேட்டைக்காரபய.. அவனுக்கு குசும்பு ஜாஸ்தி. யப்பாடி
// நாஞ்சில் பிரதாப் said...
சவுதில ஜெத்தால இருக்காரு ஒகே..என்னவா இருக்காரு...இன்னும் டாக்டராத்தான் இருக்காரா-??? :))//
சிஷ்யா.. டாக்டர் டாக்டராத்தான் இருக்கமுடியும். அதிலென்ன சந்தேகம்?.. :))
கழுதை கெட்டா குட்டிச்சுவரு
நம்மல்லாம் படிச்சாலும் படிக்காட்டியும்
அரபுநாடுதான்
பலையநண்பரை சந்தித்ததுக்கு வாழ்த்துக்கள்
வாழ்த்துகள் அகபர்
பால்ய நண்பர் மீளக் கிடைத்ததற்கு
வலைதான் எத்துணை அற்புதங்களை நிகழ்த்திக் காட்டுவதாக இருக்கிறது
ஏலே மக்கா பாத்துல அரபி யாரையும் கலாய்ச்சு மாட்டிகாதீங்க அப்பறம் ஒட்டகம்தான் மேய்க்கணும் ஆமா சொல்லிட்டேன்
அப்பறம் குய்யோ குய்யோனு கத்தினாலும் , காதறினாலும் ஒண்ணும் முடியாது !
எதுக்கும் விசாரிச்சிக்கிடுங்க. அவரு உங்க பக்கத்து வீட்டுக்காரரா இருக்கப்போறாரு :-)))))
சுவாரஸ்யமான சந்திப்பு இது.
எத்தனை விதமான அற்புதங்களை இந்த வலை உலகம் நிகழ்த்துகிறது!
இப்படித்தான் எனக்கும் கிடைத்தான் என் பழைய நன்பன், ஜ்யோவ்ராம் சுந்தர்.
அருமையான நடையோட்டம் அக்பர். சரவணன் மாதிரி இனி, அக்பர்ஜி-ன்னு கூப்பிடலாம் போல வருது. :-)
மாப்ள.... அப்படியே ஸ்கூல் லைஃப்க்கு திரும்ப போன மாதிரி ஃபீலிங்...
///ஒன்பதில் சேக்தாவூது அறிமுகமானான். கே.டி. குஞ்சுமேனை விட பெரிய ஜென்டில்மேன். ///
இதுக்கு பேர்தான் வஞ்சப் புகழ்ச்சி அணியோ?
///என்னோட நோக்கப்படி பாலிடெக்னிக்கில் சேர்ந்தேன்.///
அப்படி என்னங்க நோக்கம்...பருவ வயசுல (?) பாய்ஸ் ஒன்லி ஸ்கூல்ல படிக்கக் கூடாது.. கோ யெட்- லதான் படிக்கணும்கிறதுதானே..
சுவாரஸ்யமாய்ச்
சொல்லியிருக்கீங்க அக்பர்.
(:
நண்பர் கிடைத்ததற்கு வாழ்த்துகள்..
ஹையா..... சந்தோஷமான விஷயம்,.... என்சாய்...... மக்கா...... என்சாய்.....
சுவராஸ்யம் நண்பா...
ஹிஹி அப்ப இனி பல்லு வலி வந்தா உஙக்ளுக்குகவலை யில்ல வலியில்லாம புடிங்கிடுவாரு
ஹிப்பி தலையுடனும் , பெல்பாட்டம் பேண்டுடனும்
80 களில் இளசுகளின் ஸ்டைலல்லவா இது,
இப்ப என் பையனும் ஊரிலிருந்து ஹிப்பி தலையுடன் தான் வந்துள்ளான்.
அக்பர் நம்ம ஏரியா பக்கமா?... ரெம்ப சந்தோசம்... அப்ப எப்ப ஜித்தா வர்றீங்க..
Two good:)
//செ.சரவணக்குமார் said...
ஆனா அதுக்கேன்யா, என்ன கொடும சரவணன்னு என்கிட்ட கேக்குறீங்க? //
அவர் பல்லைப் பதம் பார்ப்பார்; நீங்க சொல்லை!! அதனாலயோ? ;-))))))
// drsdawood said...
அப்படி என்னங்க நோக்கம்...பருவ வயசுல (?) பாய்ஸ் ஒன்லி ஸ்கூல்ல படிக்கக் கூடாது.. கோ யெட்- லதான் படிக்கணும்கிறதுதானே..//
உங்க கதையும் மெதுவா வருது பாருங்க!!
இதுக்குத்தான் “என்ன கொடும சரவணா”ன்னு புலம்புனீங்களா?
@ நன்றி சேட்டைக்காரன்
@ நாஞ்சில் பிரதாப்.
//சவுதில ஜெத்தால இருக்காரு ஒகே..என்னவா இருக்காரு...இன்னும் டாக்டராத்தான் இருக்காரா-??? :))//
என்ன தல் ஏன் இந்த டவுட்டு? அவரு பல் டாக்டரா இருக்காரு.
@ Starjan ( ஸ்டார்ஜன் )
//கட்டை சுப்ரமணி சேட்டைக்காரபய.. அவனுக்கு குசும்பு ஜாஸ்தி. யப்பாடி//
ஆமாப்பு.
@ ராஜவம்சம்
// கழுதை கெட்டா குட்டிச்சுவரு
நம்மல்லாம் படிச்சாலும் படிக்காட்டியும்
அரபுநாடுதான்//
என்னத்த சொல்ல. நல்லது நடக்கும் நன்றி ராஜவம்சம்.
@ நேசமித்ரன் அண்ணா
//வாழ்த்துகள் அகபர் பால்ய நண்பர் மீளக் கிடைத்ததற்கு வலைதான் எத்துணை அற்புதங்களை நிகழ்த்திக் காட்டுவதாக இருக்கிறது//
உங்களை போல நல்ல அண்ணன்களையும் கூட.
@ பனித்துளி சங்கர்
//ஏலே மக்கா பாத்துல அரபி யாரையும் கலாய்ச்சு மாட்டிகாதீங்க அப்பறம் ஒட்டகம்தான் மேய்க்கணும் ஆமா சொல்லிட்டேன் அப்பறம் குய்யோ குய்யோனு கத்தினாலும் , காதறினாலும் ஒண்ணும் முடியாது !//
ஏம்வே இப்படி பீதியை கிளப்புதீரு :)
@அமைதிச்சாரல்
// எதுக்கும் விசாரிச்சிக்கிடுங்க. அவரு உங்க பக்கத்து வீட்டுக்காரரா இருக்கப்போறாரு :-))))) சுவாரஸ்யமான சந்திப்பு இது.//
அட நீங்க வேற. உண்மையிலேயே அவரு பக்கத்து தெருக்காரர்தான். ஆனால் படிப்பு முடிந்ததிலிருந்தே வெளியூர் வெளிநாடுன்னு இருக்கிறதால சந்திக்க முடியலை அவ்வளவுதான்.
@ பா.ராஜாராம் அண்ணா
//எத்தனை விதமான அற்புதங்களை இந்த வலை உலகம் நிகழ்த்துகிறது!//
உண்மைதாண்ணே
//இப்படித்தான் எனக்கும் கிடைத்தான் என் பழைய நன்பன், ஜ்யோவ்ராம் சுந்தர்.//
எல்லோருமே கவிஞர்கள். :)
//அருமையான நடையோட்டம் அக்பர். சரவணன் மாதிரி இனி, அக்பர்ஜி-ன்னு கூப்பிடலாம் போல வருது. :)//
உங்க வாயால பாராட்டு கிடைக்கும் போது சந்தோசமாகவும். அதே சமயம் கூச்சமாகவும் இருக்குண்ணே.
@ drsdawood
//மாப்ள.... அப்படியே ஸ்கூல் லைஃப்க்கு திரும்ப போன மாதிரி ஃபீலிங்...//
எனக்கும்தான் மாப்ஸ்...
// ///ஒன்பதில் சேக்தாவூது அறிமுகமானான். கே.டி. குஞ்சுமேனை விட பெரிய ஜென்டில்மேன். ///
இதுக்கு பேர்தான் வஞ்சப் புகழ்ச்சி அணியோ?//
உண்மையைச் சொன்னேன்.
// ///என்னோட நோக்கப்படி பாலிடெக்னிக்கில் சேர்ந்தேன்.///
அப்படி என்னங்க நோக்கம்...பருவ வயசுல (?) பாய்ஸ் ஒன்லி ஸ்கூல்ல படிக்கக் கூடாது.. கோ யெட்- லதான் படிக்கணும்கிறதுதானே..//
சரி விடுப்பா... அறியாத வயசுல தெரியாம சொல்லிட்டேன். ஆனா வேலைதான் கோ யெட் ல கிடைக்க மாட்டேங்குது. :)
@ நன்றி ஹேமா
@ நன்றி தலைவன்
@ நன்றி நண்டு@நொரண்டு -ஈரோடு. சிரிப்பானை மாற்றி போட்டு பீதியை கிளப்புறீங்களே பாஸ்.
@ நன்றி முத்துலெட்சுமி
@ நன்றி சித்ரா. என்ன கட் பேஸ்ட் பண்ணக்காணோம். சாரிங்க.
@ நன்றி அஹமது இர்ஷாத்
@ ஜலீலா.
// ஹிஹி அப்ப இனி பல்லு வலி வந்தா உஙக்ளுக்குகவலை யில்ல வலியில்லாம புடிங்கிடுவாரு//
நீங்க வேற பழைய பகையை மனசுல வச்சு ரெண்டு எடுத்துட்டான்னா என்ன செய்ய :)
//ஹிப்பி தலையுடனும் , பெல்பாட்டம் பேண்டுடனும் 80 களில் இளசுகளின் ஸ்டைலல்லவா இது, இப்ப என் பையனும் ஊரிலிருந்து ஹிப்பி தலையுடன் தான் வந்துள்ளான்.//
உண்மைதான். ஆனால் நாங்கள் படிக்கும் போது 1995. அதுதான் கிண்டலுக்கு காரணம். ( தட் மீன் நாங்க இன்னும் யூத்துதான்)
@ நாடோடி
// அக்பர் நம்ம ஏரியா பக்கமா?... ரெம்ப சந்தோசம்... அப்ப எப்ப ஜித்தா வர்றீங்க..//
உங்க கிட்ட சொல்லாமலா... உங்களை சந்திக்கவும் ஆவலாக உள்ளது ஸ்டீபன்.
@ நன்றி ராஜ நடராஜன்
//கழுதை கெட்டா குட்டிச்சுவரு
நம்மல்லாம் படிச்சாலும் படிக்காட்டியும்
அரபுநாடுதான்//
mee tooo , padichu vanthana ,illa padikaama vanthana kekka koodathu
/////ஒன்பதில் சேக்தாவூது அறிமுகமானான். கே.டி. குஞ்சுமேனை விட பெரிய ஜென்டில்மேன். ///
periya meesaii,sottai thalaiyo ????
enna commission dr a ippde pugala (;
//எனக்கு மட்டுமல்ல வகுப்பில் அனைவருக்கும் அவனை பிடிக்கும்//
mudiyala//
///என்னோட நோக்கப்படி பாலிடெக்னிக்கில் சேர்ந்தேன்.///
அப்படி என்னங்க நோக்கம்...பருவ வயசுல (?) பாய்ஸ் ஒன்லி ஸ்கூல்ல படிக்கக் கூடாது.. கோ யெட்- லதான் படிக்கணும்கிறதுதானே.
ரிபீட் .....................
@அக்பர்
// ஆனா வேலைதான் கோ யெட் ல கிடைக்க மாட்டேங்குது. :)//
சவுதி ல இந்த ஆசை வேறையா ???
டூ ,த்ரீ ,பௌர் ,பைவ் ......ஆயிரம் ரெண்டு ஆயிரம் மச் பாஸ் ,
முத்தாவா கிட்ட அட்ரெஸ்
குடுக்கவா ????
ஹி ஹி எல்லோரும் மனதளவில் யுத்து தானுங்கோ
வாவ் சூப்பர் :)
அது அப்படிதான் தான் சார் , ஆப்பு தானா தேடி தேடி வரும்
சந்தோஷப்படுவதை விட்டுவிட்டு என்ன கொடுமைசரவனன் என்கின்றீர்களே அக்பர்!!!!!
@ வாங்க ரோகினி சிவா
டாக்டருக்கு டாக்டர் சப்போர்ட்டா...
இந்த டாக்டருங்களே இப்படித்தான்.
@ஜலீலாக்கா
//ஹி ஹி எல்லோரும் மனதளவில் யுத்து தானுங்கோ//
உண்மையை சொன்னா யார் நம்புறா. பரவாயில்லை.
@ நன்றி பிரசன்னா
@ மங்குனி அமைச்சர்
//அது அப்படிதான் தான் சார் , ஆப்பு தானா தேடி தேடி வரும்//
ஒரு வித்தியாசம். அது ஆப்பு இது மாப்பு. :)
@ ஸாதிகா
// சந்தோஷப்படுவதை விட்டுவிட்டு என்ன கொடுமைசரவனன் என்கின்றீர்களே அக்பர்!!!!!//
மேடம் இது சந்திரமுகி டயலாக் இல்லை. சென்னை 28 டயலாக். (தட் மீன் காமெடி) :)
சினேகிதனுக்கு, மீண்டும் சினேகிதன்
கிடைத்த(தில்) சந்தோஷம் எனக்கும்.
மிகவும் நல்ல பகிர்வு தோழரே...தொடருங்கள்..நடப்பையும், பதிவையும்...
@ NIZAMUDEEN
// சினேகிதனுக்கு, மீண்டும் சினேகிதன்
கிடைத்த(தில்) சந்தோஷம் எனக்கும்.//
நன்றி நிஜாம்.
@ கமலேஷ்
// மிகவும் நல்ல பகிர்வு தோழரே...தொடருங்கள்..நடப்பையும், பதிவையும்...//
நன்றி கமலேஷ்
உண்மை தான் அக்பர், அழகான எழுத்து நடையில் அசத்திட்டிங்க.நண்பரை மீண்டும் சந்தித்ததில் மகிழ்ச்சி. வாழ்த்துக்கள்.
:) இது ஃபாலோ அப்புக்கு!!
வாங்க ஷஃபி. நண்பர்களை சந்திப்பது என்றாலே மகிழ்ச்சிதான். உங்களைப்போன்ற நண்பர்களை!
Post a Comment