சில (பல?) வருடங்களுக்கு முன்பு வெளிநாடுகளில் இருந்து இறக்கு மதியான சோனி, பானாசோனிக், சார்ப், சான்யோ, நேஷனல் போன்ற டிவிக்களை டெக்குடன் (அப்படின்னா என்னவா) வாடகைக்கு விடுவார்கள். இரண்டு மாதத்திற்கு முன் வந்த புத்தம் புதிய படம் திரையிடப்படும்.
வாடகைக்கு கொண்டு வரும் நபருக்கு அந்த ஏரியாவில் இருக்கும் மரியாதையே தனி. கூடவே இருந்து படம் முடிந்தவுடன் கழட்டி கொண்டிபோய்விடுவார்( யாராவது ரெண்டாம் தடவை போட்டு பார்த்துட்டா). சொல்ல மறந்துட்டேன் அதுக்கு முன்னாடி அரை மணி நேரம் ஒலியும் ஒளியும் ஓடும். ராமராஜனும், மோகனும் கொடிகட்டி பறந்த நேரம் அது.
முதன் முதலில் கருப்பு வெள்ளை சாலிடர் (இப்ப எங்க கண்ணா இருக்கே) டிவி வாங்கி, ஆண்டனா செட்பண்ணி, பூஸ்டரை திருகி புள்ளிகளுடன் தூர்தர்சன் உருண்டை டோன்டோன்டொடடோன் என்ற சத்தத்துடன் உருண்டதை பார்க்கும் போது ஏற்பட்ட பரவசம் உங்களில் பலருக்கு ஏற்பட்டிருக்கலாம். அத்துடன் சில சமயம் ரூபவாஹினி சேனலும் தெரிந்துவிட்டால் வரும் ஆனந்தத்திற்கு எல்லையேயில்லை.
செவ்வாய்க்கிழமை நாடகம், வெள்ளிக்கிழமை ஒளியும்/ஒலியும், ஞாயிற்றுக்கிழமை திரைப்படம். இந்த மூன்றையும் பார்க்காதவர்களை மற்றவர்கள் ஒரு மாதிரியாக பார்ப்பார்கள். வெள்ளி கிழமை பள்ளி விடும் போது சனி, ஞாயிறு லீவு என்பதை விட அன்று இரவு வரும் ஒளியும்/ஒலியையும் நினைத்துதான் மனது சந்தோசப்படும்.
பின்பு கேபிள் கனெக்ஷன் வந்த பிறகு. டிவி/டெக் கலாச்சாரம் மெல்ல குறையத்தொடங்கியது. அவர்களே பழைய படம் , புதுப்படம் என்று நேரத்துக்கு ஏற்ப போட்டுவிடுவார்கள். அப்பவே பன்னிரெண்டு மணிக்கு மேல் மிட்நைட் மசாலா போட்ட புண்ணியவான்களும் உண்டு.
தொலைக்காட்சி வரலாற்றில் முக்கிய திருப்புமுனை ஏற்பட்டது சன் டிவியின் வருகைக்கு பிறகுதான். அதற்கு முன் பூமாலை என்ற வீடியோ பத்திரிக்கை கேசட் வெளிவந்துகொண்டிருந்தது. சன் டிவியின் நிகழ்ச்சி தரமும் துள்ளியமும். காய்ந்து கிடந்த மாட்டுக்கு வைக்கோல் கிடைத்த மாதிரி மக்களை அதனுடன் கட்டி போட்டுவிட்டது. இன்று ஆயிரம் சேனல் வந்தாலும் ரிமோட்டின் முதல் தேர்வாக சன் டிவி இருப்பது அதனால்தான்.
இன்று ஒரே டிவியில் 200 சேனல்கள் என்பது சர்வசாதாரணமாக போய் விட்ட வேலையில். டிவி கம்பெனிகளும் அதற்கு தகந்தாற்போல் புதுப்புது மாடல்களை வெளியிட்டு வருகின்றனர். மெக்கானிக்கல் , எலெக்ட்ரானிக் , டிஜிட்டல் டியூனர்கள் ஃப்ளாட் டியூப் என்று காலத்திற்கேற்ப டிவி தொழில் நுட்பத்தில் மாற்றங்கள் வந்து கொண்டே இருக்கின்றன. அதில் தற்போது வந்திருக்கும் LCD டிவிக்கள். டிவியின் தரத்தை அடுத்த கட்டத்திற்கு கொண்டு சென்றுள்ளன.
இதன் பயன்கள்:
நாம் முன்பு பார்த்த / பார்த்துக்கொண்டிருக்கும் CRT மாடல் டிவிக்களில் படங்கள் ஒளிபரப்பாகும்போது மேலும் கீழும் கருப்புப்பட்டை வருவதை பார்த்திருப்பீர்கள் அதற்கு காரணம். நமது திரை 4:3 என்ற விகிதத்தில் இருப்பதால்தான் LCD டிவிக்களில் இதன் விகிதம் 16:9 என்று இருப்பதால் அந்த கரும்பட்டைகள் இல்லாமல் திரைமுழுவதும் படம் தெரியும் அல்லது கரும்பட்டையின் அளவு குறைந்து விடும்.
ஆனால் சேனல்கள் பார்க்கும்போது பழைய டிவிக்களை போல அல்லாமல் இதில் முகம் அகன்று தெரியும். இதற்கு காரணம் நமது கேபிள் டிவியின் ஒளிப்பரப்பு முறைதான் (4:3). வருங்காலங்களில் இது சரிசெய்யப்பட்டுவிடும். செட் டாப் பாக்ஸ் வைத்திருப்பவர்களுக்கு இந்த பிரச்சனை இல்லை. அதில் உள்ள மெனுவின் மூலம் நாம் 16:9 க்கு மாற்றி கொள்ளலாம் (மேலதிக விபரங்களுக்கு செட் டாப் பாக்ஸ் பயனர் கையேட்டை பார்க்கவும்)
பழைய CRT டிவிக்களைவிட இதில் படத்தின் கலரும் துள்ளியமும் அருமையாக இருக்கும் (DVD Blu-ray Disc படம் பார்க்கும் போது)
வெளிப்புற வெளிச்சங்கள் படம் பார்ப்பதை பாதிக்காது.
சரி LCD TV வாங்க முடிவு செய்து விட்டீர்களா அதற்கு முன் கீழுள்ளவற்றை மனதில் கொள்ளுங்கள்.
1. முதல் விசயம் டிவியின் அளவு. இப்போது எல்லோருடைய தேர்வும் 32 ல் இருந்தே ஆரம்பம் ஆகிறது. உங்கள் வீட்டின் அளவை பொறுத்து 37,42,50 என்று தேர்ந்தெடுக்கலாம். சின்ன அறைகளில் பெரிய திரை வைத்தால் படம் தெளிவாக தெரியாது. திரையின் அளவுக்கு இருமடங்கு தூரத்தில் இருந்து பார்ப்பது நல்லது. உதாரணமாக 32" டிவி வாங்கினால் ஐந்து அடி தூரம் தள்ளி அமர்ந்து பார்க்கவும்.
2. திரையில் ஒரு புள்ளி தோன்றி மறைய ஆகும் நேரத்தை ரெஸ்பான்ஸ்டைம் என்று சொல்வார்கள். இது எந்த அளவிற்கு குறைவாக உள்ளதோ அதைப்பொறுத்து வேகமாக நகரும் காட்சிகள் துள்ளியமாக தெரியும். உதாரணத்திற்கு வேகமாக செல்லும் கார், நகரும் எழுத்துக்கள் போன்றவை. இப்பொழுது 5ms மற்றும் அதற்கு குறைவான ரெஸ்பான்ஸ்டைம் உள்ள டிவிக்கள் வரத்தொடங்கியுள்ளன. சரி பார்த்து வாங்கவும்.
3. எல் சி டி டிவிக்களில் அதிகம் குழப்பும் விசயம் HD Ready, Full HD எளிதாக சொல்வதானால் நாம் தற்போது பார்க்கும் சேனல்களுக்கும், DVD களுக்கும் HD Ready போதுமானது. Games, Blu-ray Disc போன்றவைகள் பயன்படுத்த Full HD டிவிக்கள் பொருத்தமாக இருக்கும். இதில் முடிவெடுப்பது உங்கள் பட்ஜெட்டை பொறுத்தது.
4. அது போல LED LCD TV களுக்கு விலை அதிகம். LED என்பதும் LCD TV தான். ஆனால் இதன் பேக் லைட்டிங்கில் ஃப்ளொரசன்ட் க்கு பதில் LED பயன் படுத்தப்படுகிறது. எனவே இரண்டிற்கும் பெரிய வித்தியாசமில்லை.எனவே அதிக பணம் செலவழித்து LED LCD TV வாங்க வேண்டாம்.
5. பிரபலமான கம்பெனிகளின் டிவிக்களையே வாங்குங்கள் (தற்போது சோனியும், சாம்சாங்கும் முன்னணியில் உள்ளது). அதுபோல விற்பனைக்கு பிந்தைய சேவை எந்த பிராண்டில் அதிகம் என்பதை உறுதிப்படுத்திவிட்டு வாங்குங்கள்.சில பேர் ஒரு மாதம் ரெண்டுமாதம் என்று இழுத்து விடுவார்கள்.
6. எல்லாவற்றிற்கும் மேலாக உங்கள் பழைய டிவியை மாற்றவேண்டிய கட்டாயம் இருந்தாலோ, புது டிவி வாங்க வேண்டிய அத்தியாவசியம் இருந்தாலோ மட்டுமே LCD TV வாங்குங்கள். ஏனெனில் இப்போதைய சேனல் ஒளிப்பரப்பில் பழைய டிவிக்கும் இதுக்கும் பெரிய வித்தியாசம் தெரியாது.
7. வெளிநாட்டில் இருப்பவர்கள் ஊர் செல்வதற்கு ஒரு மாதம் இருக்கும் போது வாங்கினால் போதுமானது. காசு இருக்கிறது என்று 6 மாதத்துக்கு முன்பே வாங்கி வைத்துகொண்டால் நீங்கள் ஊர் செல்லும் நேரத்தில் நீங்கள் வாங்கிய மாடலை விட புதிய மாடல் விலை குறைவாக வந்து இருக்கும். இது அனைத்து எலெக்ட்ரனிக் சாதனங்களுக்கும் பொருந்தும்.
வெளி நாடுகளில் இருந்து ஊருக்கு கொண்டு செல்லும் டிவிக்கு (சைஸ் வாரியாக ) ஏர்போர்டில் எவ்வளவு Tax (வரி) கட்டவேண்டும் என்பதை தெரிந்தால் சொல்லுங்கள் நண்பர்களே.
,
39 comments:
அருமையான தகவல்கள்
வரலாறு முக்கியம் அமைச்சரே ...
வாங்க பொம்மன். என்ன படைய காணோம்.
நல்ல தகவல்கள் அக்பர். பகிர்வுக்கு நன்றி
தொழில்நுட்பப் பதிவுகளில் அசத்துகிறீர்கள் அக்பர்ஜி. இங்கிருந்து எல்.சி.டி வாங்கிச் செல்வது சிரமமானது என சொல்கிறார்களே?
பழசும், புதுசும் கலந்து பதிவு துல்லியமா இருக்கு.
ஆஹா... சூப்பர் பதிவு தல...
பிளாஸ்மா டிவி பத்தியும் சொல்லிருக்கலாம்... சாதாரண டிவிக்கும் பிளாஸ்மா டிவிக்கும் என்ன வித்தியசாம்னு சொலுங்க... அதுல ஜெல்பயன்படுத்தறதனால ரேடியேஷன் குறையும்னு சொல்றாங்க உண்மையா?
அருமையான தகவல்கள்
நல்ல பதிவு. 32" மேல வாங்குனா ஊர்ல tax கட்டனுமாமே
நல்ல பகிர்வு அக்பர்...தொடர்ந்து பகிருங்கல் இது போன்ற தகவல்களை..
பயனுள்ள தகவல்கள் நன்றி
வாங்க நவாஸுதீன்
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
நல்ல தகவல்கள் ;
மேலும் நிறைய தெரிந்து கொள்ள ஆவல் .
அது ஒரு காலம் தான் அக்பர். சவுக்கு கம்பத்தில் ஆன்ட்டனாவைக் கட்டி வந்தும் வராத தூர்தர்ஷனை அங்கிட்டும் இங்கிட்டும் தேடிப் பிடித்து, எங்க ஊருக்கு ரூப்வாஹினி தெளிவா தெரியும் அப்போ கேட்ட அயூ பவன், இப்போ ஏர்லங்காவில் மறுபடியும் கேட்க முடிந்தது. கிரிக்கெட் வந்தால் படாத பாடு தான். அது ஒரு காலம்....
நாஞ்சிலாருக்கு ஏற்பட்ட அதே சந்தேகம் தான் எனக்கும், ப்லாஸ்மா டிவி நாளடைவில் படத்தின் திறன் குறைந்துவிடும்னு வேறு சொல்றாங்களே...
நமது தேசத்துக்கு வாங்க
இது கட்டபொம்மனின் ஆணை .
:-))).
வரும்போது மன்னருக்கு என்னமோ சொல்றாங்களே ...
ஆ.. எல்சிடி டிவி அன்பளிப்பு கொண்டு வரவும் .
கன்ஸ்யூமர் எலெக்ட்ரானிக்ஸ் தகவல் களஞ்சியம் உங்க பதிவு
HD Ready, Full HD பற்றி இன்னும் நிறைய சொல்லலாம்..
வரவேற்கிறேன் இது மாதிரி பயனுள்ள பதிவை
வாங்க சரவணன்
//இங்கிருந்து எல்.சி.டி வாங்கிச் செல்வது சிரமமானது என சொல்கிறார்களே?//
இது குறித்து அறிந்த நண்பர்கள் சொன்னால் உதவியாக இருக்கும்.
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
வாங்க
துபாய் ராஜா
T.V.Radhakrishnan.
நாஞ்சில் பிரதாப்
//சாதாரண டிவிக்கும் பிளாஸ்மா டிவிக்கும் என்ன வித்தியசாம்னு சொலுங்க... அதுல ஜெல்பயன்படுத்தறதனால ரேடியேஷன் குறையும்னு சொல்றாங்க உண்மையா?//
விரிவாக சொல்கிறேன் பாஸ்.
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
பயனுள்ள தகவல்கள்.
நன்றி அக்பர்.
//வெளிநாட்டில் இருப்பவர்கள் ஊர் செல்வதற்கு ஒரு மாதம் இருக்கும் போது வாங்கினால் போதுமானது. காசு இருக்கிறது என்று 6 மாதத்துக்கு முன்பே வாங்கி வைத்துகொண்டால் நீங்கள் ஊர் செல்லும் நேரத்தில் நீங்கள் வாங்கிய மாடலை விட புதிய மாடல் விலை குறைவாக வந்து இருக்கும்.//
வழக்கமா கல்யாணம் பண்ணிக்கப் போற பசங்க கிட்ட சொல்ற வார்த்தை இது..,
வாங்க
ஷாகுல்
//நல்ல பதிவு. 32" மேல வாங்குனா ஊர்ல tax கட்டனுமாமே//
எனக்கு அது பற்றி சரியாக தெரியவில்லை சாகுல்.
கண்ணா..
ரிஷபன்
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
வாங்க
Starjan ( ஸ்டார்ஜன் )
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
வாங்க
//நாஞ்சிலாருக்கு ஏற்பட்ட அதே சந்தேகம் தான் எனக்கும், ப்லாஸ்மா டிவி நாளடைவில் படத்தின் திறன் குறைந்துவிடும்னு வேறு சொல்றாங்களே...//
ப்ளாஸ்மா டிவிலதான் அந்த பிரச்சனை என்று சொல்றாங்க ஷஃபி. எல் சி டி யில் அந்த பிரச்சனை இல்லை என்று நினைக்கிறேன்.
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
வாங்க கட்டபொம்மன்
//ஆ.. எல்சிடி டிவி அன்பளிப்பு கொண்டு வரவும் .//
கரண்டு இருக்குங்களா.
(லொல்லைப்பாரு மன்னருக்கு)
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
வாங்க அபுஅஃப்ஸர்,
//HD Ready, Full HD பற்றி இன்னும் நிறைய சொல்லலாம்..//
அடுத்த முறை முயற்சி செய்கிறேன் பாஸ்.
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
வாங்க
அபுல் பசர்
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
வாங்க தல
//வழக்கமா கல்யாணம் பண்ணிக்கப் போற பசங்க கிட்ட சொல்ற வார்த்தை இது..,//
இதுதான் உங்ககிட்ட ரொம்ப பிடிச்சது.
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
நல்ல ஆக்கம்! எல்லாப்பக்கம் இருந்து டி.வி பார்த்தால் சரியாகத் தெரியாது என்கிறார்களே!
பயனுள்ள இடுகை நன்றி அக்பர்
வாங்க டாக்டர்
//நல்ல ஆக்கம்! எல்லாப்பக்கம் இருந்து டி.வி பார்த்தால் சரியாகத் தெரியாது என்கிறார்களே!//
இதில் அந்த பிரச்சனை இல்லை தேவன் சார்.
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
வாங்க தேனம்மை அக்கா
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
good article and information are very very helpful every new t v purchaser
gvr
போங்க தம்பி. உங்க கூ்ட வெல்லாம் சேந்துபோட்டு டீ.வீ யெல்லாம் எங்க பார்க்க முடியுது.
வாங்க G VARADHARAJAN
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
வாங்க தாராபுரத்தான்
//போங்க தம்பி. உங்க கூ்ட வெல்லாம் சேந்துபோட்டு டீ.வீ யெல்லாம் எங்க பார்க்க முடியுது.//
:)
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
ரொம்ப அருமையான பகிர்வு.
வாங்க Jaleela
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
நல்ல பதிவு.sony 32" வாங்கிட்டு வந்து 1800 ரூபாய் சென்னை ஏர்போர்டில் கட்டினேன்.
asalamu alaikkum,
why should i buy TV when i am in tamil nadu. enna boy sinna pulla thanamalla irukku.
Post a Comment