கற்பூரத்தை விட காற்றில் விரைவாக கரையும் தன்மை வார்த்தைகளுக்குத்தான் உண்டு. வாயிலிருந்து வெளிப்படும் வார்த்தை அடுத்தவரின் காதுகளில் சரியாக சென்றடைவதைப் பொறுத்தே அந்த வார்த்தைக்கு மதிப்பு. நம் பெரியவர்கள் அடிக்கடி 'நான் சொன்னதை காத்துல பறக்க விட்டுட்டான் பார்'ன்னு சொல்லக்கேட்டிருக்கிறேன் அது இதனால் தான் போலும்.
பேச்சு வழக்கிற்கும் எழுத்துக்கும் உள்ள அடிப்படை வித்தியாசமே இதுதான் போலும். நம் வாய் வழியே வரும் வார்த்தைகளை விட கை வழியே வரும் வார்த்தைகள் அதன் திடத்தன்மையை இழப்பதில்லை அதனால்தான் இரண்டாயிரம் ஆண்டுகள் கடந்தும் திருக்குறள் இன்றும் இருக்கிறது.
எழுத்துக்கள் மிகப்பழமையானவை ஆனால் அவை எழுதப்படும் போது அதன் அர்த்தங்கள் ரோஜா மொட்டு மலர்வதைப் போன்று புதிதாகவே இருக்கின்றான.
அதனால்தான் அனைவருக்கும் படிக்க,படிக்க எழுத்தின் மீதான காதல் கூடிக்கொண்டே போகிறது. புதிது புதிதான தேடுதலும் தொடர்கிறது.
அது என்னை மட்டும் விட்டு விடுமா என்ன. தீவிர இலக்கிய ஆர்வம் இல்லாவிட்டாலும், சிறுவர்மலர், வாரமலர், ஆனந்த விகடன், குமுதம், சுஜாதா, எஸ்.ராமகிருஷ்ணன், வலைத்தளம் என்று எழுத்தை நேசிக்கும் அனைவரைப்போலவும் எனது வாசிப்பனுபவமும் தொடர்ந்து கொண்டு இருக்கிறது.
நண்பர்களாகிய நீங்கள் கொடுத்த உற்சாகமும் ஆதரவும் வாசகனாக இருந்த என்னை பதிவராக்கி இன்று 50 வது இடுகையும் போட வைத்துள்ளது. 500 இடுகைகளை கடந்து அமைதியாக எழுதிக்கொண்டிருப்பவர்கள் மத்தியில் இந்த கொண்டாட்டம் சற்று அதிகமாக தோன்றினாலும், ஆயிரம் மைல் தூரத்தை கடப்பது முதல் அடியிலிருந்தே ஆரம்பமாகிறது என்பதால் குழந்தைக்கு ஐஸ்க்ரீம் கிடைத்தால் ஏற்படும் சந்தோசத்தை நான் இப்போது உணர்கிறேன்.
நான் இதுவரை எழுதிய மொக்கைகளையும் , சில நல்ல பதிவுகளையும் (அது எங்க இருக்கு) வாசித்து என்னை உற்சாகப்படுத்தும் அனைத்து உள்ளங்களுக்கும் எனது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்து கொள்கிறேன்.
பின்னூட்டமிட்டு ஆதரவளித்து வரும் நண்பர்களுக்கும், தமிழிஷ் , தமிழ்மணத்தில் வோட்டு போட்ட (இனி போட விருக்கும்) நண்பர்களுக்கும், பிரத்யோகமாக நன்றி சொல்ல நான் கடமை பட்டிருக்கிறேன் ( ஏன்னா அதுக்கு பெயர், கடவுச்சொல் கொடுத்து எழுதுறதுக்கு ஒரு இடுகை எழுதி விடலாம் ).
வாழ்க்கை என்பது போட்டி போடுவது அல்ல அது பரிட்சை எழுதுவது போல், போட்டியில் எவ்வளவு முயன்றாலும் ஒருத்தர்தான் வெற்றி பெற முடியும். பரிட்சையில் முயற்சி செய்யாதவர் மட்டுமே தோல்வியடைவார். போனதேர்வை விட இந்த தேர்வில் உங்களை நீங்கள் முந்தினால் அதுதான் உண்மையான வெற்றி என்று சொல்லி போட்டி மனப்பான்மையோடு சென்று கொண்டிருந்த எங்கள் கல்லூரி வாழ்க்கையை மற்றுமல்லாது வருங்காலத்தையும் இனிமையாக மாற்றிய எங்கள் ராதை மேடத்துக்கு நன்றி சொல்ல கடமைப்பட்டுள்ளேன். இவர்களைப் பற்றி பின்பு தனி இடுகையில் சொல்கிறேன்.
அதிலிருந்துதான் நாம் ஜெயிக்க வேண்டியது நம்மைதான் வெளியில் உள்ளவர்களை அல்ல என்பதை உணர்ந்து கொண்டேன். ஆமாம் நண்பர்களே இறைவன் நாடினால் எனது முந்தைய இடுகைகளை விட சிறந்த இடுகைகளை உங்களுக்கு நான் அளிப்பேன். அதுதான் நீங்கள் கொடுக்கும் ஆதரவுக்கு நான் செய்யும் கைமாறு.
எல்லா புகழும் இறைவனுக்கே.
,

40 comments:
50 ஐ தாண்டி சாதனை படைக்க போகும் எங்கள் சக்ரவர்த்தியே !!
நீ வாழ்க ! நின் கொற்றம் வாழ்க !!
அருமையான சிந்தனை கருத்துக்கள் .
50 க்கு வாழ்த்துக்கள்
50-not out. வாழ்த்துக்கள் அக்பர். தொடர்ந்து எழுதுங்க. 50 உங்களுக்கும் 500 ஆகட்டும் சீக்கிரம்.
வாழ்த்துக்கள் நண்பரே !. மேலும் பல சாதனைப் புரிய வாழ்த்துக்கள்!. சவூதி அரேபியாவில் எந்த இடத்தில் உள்ளீர் நண்பரே. முடிந்தால் மொபைல் நம்பரை கொடுங்கள்.
//500 இடுகைகளை கடந்து அமைதியாக எழுதிக்கொண்டிருப்பவர்கள் மத்தியில் இந்த கொண்டாட்டம் சற்று அதிகமாக தோன்றினாலும், ஆயிரம் மைல் தூரத்தை கடப்பது முதல் அடியிலிருந்தே ஆரம்பமாகிறது என்பதால் குழந்தைக்கு ஐஸ்க்ரீம் கிடைத்தால் ஏற்படும் சந்தோசத்தை நான் இப்போது உணர்கிறேன்//
500 எழுதினாலும் உருப்படியா எழுதுவதுதான் சிரமம்.. 50 லே 10 வது உருப்படியா இருந்தால் நீங்கள் வெற்றிப்பெற்றவரே
வாழ்த்துக்க்கள்.. தொடருங்க
வாழ்த்துக்கள்;
வாழ்த்துக்கள்;
வாழ்த்துக்கள்;
வாழ்த்துக்கள்;
வாழ்த்துக்கள்;
வாழ்த்துக்கள்;
வாழ்த்துக்கள்;
வாழ்த்துக்கள்;
வாழ்த்துக்கள்;
வாழ்த்துக்கள்;
போட்டியில் எவ்வளவு முயன்றாலும் ஒருத்தர்தான் வெற்றி பெற முடியும். பரிட்சையில் முயற்சி செய்யாதவர் மட்டுமே தோல்வியடைவார். ]]
அருமைங்க
வாழ்த்துகள்.
வாழ்த்துக்கள் அக்பர்!! தங்களது ஆக்கங்கள் அனைத்தும் அருமையாக இருக்கு, தொடருங்கள்!!
50கு வாழ்த்தும் பூங்கொத்தும்!
மனமார்ந்த வாழ்த்துகள். எல்லையின்றித் தொடருங்கள்.
Don't put your number in public
try to send him email - plz delete that comment
வாழ்த்துக்கள்.தொடரட்டும் உங்கள் ஆக்கங்கள்.
//வாழ்க்கை என்பது போட்டி போடுவது அல்ல அது பரிட்சை எழுதுவது போல்//
என்ன அக்பர், பன்ச் டயலாக்குல்லாம் பட்டையைக்கிளப்புது..
உங்கள் 50 பதிவு 5000 மாக வளர வாழ்த்துக்கள்
வாழ்த்துக்கள்
வாழ்த்துக்கள்
வாழ்த்துக்கள்
வாழ்த்துக்கள்
வாழ்த்துக்கள்
வாழ்த்துக்கள்
வாழ்த்துக்கள்
வாழ்த்துக்கள்
வாழ்த்துக்கள்
வாழ்த்துக்கள்
வாழ்த்துக்கள்
வாழ்த்துக்கள்
வாழ்த்துக்கள்
வாழ்த்துக்கள்
வாழ்த்துக்கள்
வாழ்த்துக்கள்
வாழ்த்துக்கள்
வாழ்த்துக்கள்
வாழ்த்துக்கள்
வாழ்த்துக்கள்
வாழ்த்துக்கள்
வாழ்த்துக்கள்
வாழ்த்துக்கள்
வாழ்த்துக்கள்
வாழ்த்துக்கள்
வாழ்த்துக்கள்
வாழ்த்துக்கள்
வாழ்த்துக்கள்
வாழ்த்துக்கள்
வாழ்த்துக்கள்
வாழ்த்துக்கள்
வாழ்த்துக்கள்
வாழ்த்துக்கள்
வாழ்த்துக்கள்
வாழ்த்துக்கள்
வாழ்த்துக்கள்
வாழ்த்துக்கள்
வாழ்த்துக்கள்
வாழ்த்துக்கள்
வாழ்த்துக்கள்
வாழ்த்துக்கள்
வாழ்த்துக்கள்
வாழ்த்துக்கள்
வாழ்த்துக்கள்
வாழ்த்துக்கள்
வாழ்த்துக்கள்
வாழ்த்துக்கள்
வாழ்த்துக்கள்
வாழ்த்துக்கள்
50 வாழ்த்துக்கள் சரியா இருக்கான்னு பாருங்க...
@
Starjan ( ஸ்டார்ஜன் )
S.A. நவாஸுதீன்
நாடோடி
அபுஅஃப்ஸர்
SUREஷ் (பழனியிலிருந்து
நட்புடன் ஜமால்
SUFFIX
அனைவரின் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி.
நீக்கிவிட்டேன்.
சுட்டி காட்டியதற்கு நன்றி ஜமால்.
50 வது பதிவுக்கு வாழ்த்துக்கள் அக்பர். சீக்கிரமா செஞ்சுரி அடிங்க நண்பா.
அரை சதத்துக்கு என் வாழ்த்துக்கள்! தொடருங்கள்!
மனமார்ந்த வாழ்த்துகள் அக்பர்..
:)
வாழ்த்துக்கள் அக்பர்!!
வாழ்த்துகள் நண்பரே! தொடர்ந்து கலக்குங்கள்.
@ அன்புடன் அருணா
Dr.எம்.கே.முருகானந்தன்
மாதேவி
நாஞ்சில் பிரதாப்
செ.சரவணக்குமார்
ராமலக்ஷ்மி பிரியமுடன்...வசந்த்
Sangkavi
ஷங்கி
அனைவரின் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி.
வாழ்த்துக்கள்!!!
@gulf-tamilan
வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி.
வாழ்த்துக்கள். நண்பரே..., தொடர்ந்து வளருங்கள்...
வாங்க அண்ணாமலை சார்.
வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி.
அருமையாய் எழுதுறீங்க அக்பர்.
//அதிலிருந்துதான் நாம் ஜெயிக்க வேண்டியது நம்மைதான் வெளியில் உள்ளவர்களை அல்ல என்பதை உணர்ந்து கொண்டேன்.//
fantastic!
ஐம்பதுக்கு வாழ்த்துக்கள் மக்கா!
சீக்கிரம் செஞ்சுரி அடிக்க வாழ்த்துக்கள்.
வாழ்த்துகள்!நானெல்லா எப்ப ஐம்பதை தொடுவது.ஐம்பத்திஎட்டை தொட்டாச்சு.
50க்கு வாழ்த்துகள்.
அவ்வையார் பாணியில்
'பதிவுவுயர'என வாழ்த்துகிறேன்
வாங்க
பா.ராஜாராம் அண்ணா
துபாய் ராஜா
தாராபுரத்தான் சார்
கோவி.கண்ணன் அண்ணா
அனைவரின் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி.
50 க்கு வாழ்த்துக்கள்
நெஞ்சம் நிறைந்த வாழ்த்துக்கள்.
தொடர்ந்து எழுதுங்கள்.
துணை நிற்போம் உங்களுடன்
வாங்க
T.V.R
அபுல் பசர்
மனமார்ந்த வாழ்த்துகள் நண்பரே.
அன்பு மாப்ஸ் அக்பர்...
இடுகைகள் இன்னும் பெருக.. நிறைய நண்பர்களும், சொந்தங்களும் பெருக வாழ்த்துகிறேன்!!
வெளிச்சங்கள் பெருகி பொருட்கள் ஒவ்வொன்றும் அடையாளம் காணும் வேளையில், இரவு கவனமாக நமக்கு கொடுத்த கனவொன்று பரிதாபமாக மறைந்து போயிருக்கும்... எந்த ஒளியிலும் அமிழாத கனவொன்று என்று எப்போதாவது வருவதுண்டு..
அது கைரேகை போல அழியாமல் நினைவில் தன்னைப் பொறுத்திக் கொள்ளும்.. காலம் கசங்கிய படைப்பூக்கம் சுணங்கிய ஒரு தருணம் பார்த்து ரேகையான கனவு நம்மையும் மீறி அதுவே அதனை எழுதிச் செல்லும்.
அப்போ.. நாம அந்த கனவோட வெறும் கருவிதான். உங்கள் உள் பதியன் போடப்பட்டிருக்கும் கனவு ரேகைகள் ஒவ்வொன்றாய்செடியாய் கொடியாய் பூக்களாய் படைப்புகளாக வாழ்த்துக்கிறேன்!!!
****
என்ன மாப்பு.. நாக்கு தள்ளுதா???
நீங்கதானே கேட்டீங்க..? பெர்சா வேணும்னு.. அதுதான்.. :-)
என்ஜாய்!!!
//ஆயிரம் மைல் தூரத்தை கடப்பது முதல் அடியிலிருந்தே ஆரம்பமாகிறது//
வாழ்த்துக்கள்.
வாங்க ஜெகா மாம்ஸ்,
//வெளிச்சங்கள் பெருகி பொருட்கள் ஒவ்வொன்றும் அடையாளம் காணும் வேளையில், இரவு கவனமாக நமக்கு கொடுத்த கனவொன்று பரிதாபமாக மறைந்து போயிருக்கும்..//
எத்தனை வெளிச்சம் வந்தாலும் எனக்கான கனவுகளை நான் மன இருட்டில் பூட்டியே வைத்திருக்கிறேன். வெளிச்சம் அதன் மீது படரா வண்ணம் பாதுகாத்தும் வருகிறேன். ஏனெனில் வெளிச்சமும் இருளும் மாறி மாறி வருவதை போல கனவுகள் வருவதில்லை. சில கனவுகள் நினைவுகளை விட நீங்க இடம் பிடித்துவிடும். உங்களைப்போல.
(யப்பா. இதுக்கு மேல முடியல.
வாழ்த்துக்கு நன்றி மாம்ஸ்.
வாங்க கடையம் ஆனந்த்
வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி.
வாங்க ஹுஸைனம்மா
வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி.
வாங்க நசரேயன்
வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி.
Post a Comment