அண்ணன் கோவிக்கண்ணனிடம் பேசிக்கொண்டிருந்த போது, துறை சார்ந்த பதிவுகள் போடலாமே என்று ஆலோசனை கொடுத்தார். தொழில்நுட்பம் சார்ந்த பதிவுகள் எழுதும் ஜாம்பவான்கள் நிறையபேர் இருக்கும் போது நாம் என்ன புதிதாக சொல்லிவிட போகிறோம் என்ற எண்ணம் ஏற்பட்டது.
இருந்தாலும் நான் சந்தித்த வாடிக்கையாளர்களின் பிரச்சனையை அடிப்படையாக கொண்டு சில விசயங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்வதே இந்த இடுகையின் நோக்கம்.
நண்பர்களே வாரம் ஒரு முறை தொழில் நுட்பம் சார்ந்த பதிவுகள் எழுதலாம் என்று இருக்கிறேன். வழக்கம் போல் உங்கள் ஆதரவுகளை வழங்குங்கள். எழுதும் செய்தியில் பிழை இருந்தால் சுட்டிக்காட்டுங்கள். திருத்திக்கொள்கிறேன்.
ஒரு எளிய விசயத்திலிருந்து ஆரம்பிப்போம்.
இப்போதெல்லாம் மேஜைக்கணினி விலையிலேயே மடிக்கணினி கிடைப்பதால் அனைவரும் மடிக்கணினிக்கு மாறி வருகின்றனர்.
மடிக்கணினி வைத்திருப்பவர்களுக்கும் புதிதாக வாங்குபவர்களுக்கும் சில குறிப்புகள்.
1. மடிக்கணினி வாங்கும் போதே அதனுடன் Operating system DVD சேர்ந்து வரும். அதை பத்திரப்படுத்தி வைக்கவும். சில நேரங்களில் சிஸ்டத்தின் உள்ளேயே பதிந்து வைத்திருப்பார்கள். அதின் உள்ளே சென்று Recovery option மூலம் DVD க்களில் பதிந்து கொள்ளலாம். அதற்கு 2 முதல் 4 DVD தேவைப்படும்.
2. மடிக்கணினியின் முதல் மற்றும் முக்கிய பிரச்சனை பேட்டரி சம்பந்தப்பட்டதுதான். முதல் மாசத்தில் 3 மணி நேரம் உழைக்கும் பேட்டரி 6 மதத்துக்குப் பிறகு 1 மணி நேரம் தான் உழைக்கும். அதை தவிர்க்க நீங்கள் செய்ய வேண்டியவை.
முடிந்தவரை பேட்டரியை கழற்றி வைத்து விட்டு நேரடி மின் இணைப்பையே பயன்படுத்துங்கள். மின்சாரம் இல்லாத சமயங்களில் மட்டுமே பேட்டரி இட்டு பயன்படுத்துங்கள்.
பேட்டரியை முழுவதுமாக பயன்படுத்தி விட்டு சார்ஜ் செய்யுங்கள். சிறிது குறைந்த உடனே (அல்லது) அடிக்கடி சார்ஜ் செய்தால் பேட்டரி விரைவில் அதன் அதிக நேரம் உழைக்கும் திறனை இழந்துவிடும்.
அதற்காக பேட்டரியை மாசக்கணக்கில் பூட்டி வைத்து விட வேண்டாம். பின்பு பயன்படாமலேயே போய் விடும்.
மிக முக்கியமாக கணினியுடன் வரும் சார்ஜரையே பயன்படுத்துங்கள். ஒரு வேலை அது கெட்டு விட்டால் அதே மாதிரி ஒரிஜினல் சார்ஜரையே உபயோகியுங்கள். தவறான சார்ஜர் உங்கள் பேட்டரியையும் கணினியையும் பழுதாக்கி விடும்.
3. மடிக்கணினி வாங்கும் போதே அதற்கேற்ப தரமான பேக் வாங்கி கொள்ளுங்கள். நீர் புகாத பேக்குகள் இன்னும் நல்லது.
4. மடிக்கணினிக்கும் திரவப்பொருள்களுக்கும் ஆகவே ஆகாது. பருகும் பொருள்களை அதன் அருகில் வைக்காதீர்கள். கூடுதல் பாதுகாப்புக்கு கீ போர்ட் பாதுகாப்பு கவர்கள் கிடைக்கும் அதை வாங்கி பயன்படுத்துங்கள்.
5. அதிக விலை உள்ள கணினிகளை விட உங்கள் பயன்பாட்டு அத்தியாவசியமாக உள்ளதையே வாங்குங்கள். ஏனெனில் மற்ற எதையும் விட கணினியிலும், செல்போன்களிலும் தினமும் புதுப்புது தொழில் நுட்பங்கள் வந்து கொண்டே இருக்கின்றன. இரண்டு வருடத்தில் உங்கள் கணினியை மாற்ற வேண்டியது வரலாம்.
==============================
பிரணவ்.
சமீபகாலமாக தொழில்நுட்ப உலகில் அனைவராலும் உச்சரிக்கப்படும் பெயர் பிரணவ்.நண்பர் நட்புடன் ஜமால் விரல் நுனியில் என்ற இடுகையில் பிரணவ் பற்றிய காட்சியை பதிந்திருந்தார்.
தமிழில் அவரைப்பற்றி அறிய இந்த தளத்துக்கு செல்லுங்கள்.
பிரணவின் இணையதளத்திற்கு செல்ல இங்கே கிளிக்குங்கள்.
நன்றி.
,

31 comments:
நல்லா எழுதியிருக்கீங்க ...
இன்னும் நிறைய எதிர்பார்க்கிறோம் ..
நல்ல பகிர்வு அக்பர்..
இது போல நிறைய எழுதுங்கள்
மடிக்கணினி வைத்திருக்கும் அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய விசயம்...தொடர்ந்து எழுதுங்கள்.
மிக்க மகிழ்ச்சி..தொடருங்கள்..:))
சூப்பர் தல...
என்னோட மடிக்கணிணில இருக்கற விஸ்டாவை எடுத்துட்டு எக்பி இன்ஸ்டால் பண்ணலாம்னு இருக்கேன்... இதனால சிஸ்டத்துக்கு ஏதாச்சும் ஆகுமா?
விஸ்டா வாங்கும்போதே அதில் இருந்தது. விஸ்டா சில நேரங்கள்ல ரொம்ப தொந்தரவு குடுக்குது...
ஏதாச்சம் ஐடியா குடுங்க தல...
நல்ல விஷயங்கள், நல்ல பகிர்வு. தொடர்ந்து எழுதுங்கள் அக்பர்.
நல்ல பகிர்வு
நல்லதொரு பகிர்வு தொடர்ந்து எழுதுங்கள்..
நேரம்கிடைக்கும்போதுவந்து பாருங்கள்
http://fmalikka.blogspot.com/
நல்ல பகிர்வு அக்பர்..
பயனுள்ள மடிக்கணினி தகவல்கள்.
தொழில்நுட்பப் பதிவு அருமை. எளிமையாக விளக்குகிறீர்கள் அக்பர். எனது மடிக்கணினியிலும் பேட்டரி சம்மந்தமாக கொஞ்சம் சந்தேகங்கள் இருக்கின்றன. அலைபேசியில் பேசும்போது தெரிவிக்கின்றேன். பகிர்வுக்கு நன்றி நண்பா.
தொடர்ந்து இதுபோன்ற பதிவுகளை உங்களிடம் எதிர்பார்க்கிறேன் அக்பர்.
அக்பர் இவ்ளோ மடிக்கணிணியில் விசயங்கள் இருக்கா இன்னும் நிறைய எழுதுங்கள் தெரிந்து கொள்கிறேன்...!
நல்ல பயனுள்ள தகவல், பேட்டரி இல்லமால் நேரடி மின் இணைப்பில் இயக்கலாம் என்பது எனக்கு புதிய தகவல். நன்றி
டெஸ்ட்
Good one! Thanks for sharing
வாங்க
Starjan ( ஸ்டார்ஜன் )
கண்ணா..
நாடோடி
பலா பட்டறை
வருகைக்கும் , ஊக்கத்துக்கும் நன்றி.
வாங்க பிரதாப்,
நிறைய பேர் விஸ்டாவைவிட XP யை அதிகம் விரும்புகிறார்கள்.
நீங்கள் செய்ய வேண்டியது. விஸ்டாவின் ஒரிஜினல் டிஸ்க் உங்களிடம் இல்லையென்றால். முதலில் ரெகவரி செய்து கொள்ளவும்.
அது போக சவுண்ட், வீடியோ, வயர்லெஸ் போன்ற சாதனங்களுக்கு டிரைவர் இருக்கிறதா என்று பார்த்து கொள்ளவும். இல்லையெனில் அந்த கம்பெனி தளத்திற்கு சென்று XP க்கான டிரைவரை தரவிறக்கம் செய்து கொள்ளவும்.
உங்கள் கணினியின் மாடலை தெரியப்படுத்தினால் இன்னும் எளிதாக இருக்கும்.
வருகைக்கும் , ஊக்கத்துக்கும் நன்றி.
வாங்க
S.A. நவாஸுதீன்
T.V.Radhakrishnan..
அன்புடன் மலிக்கா
Sangkavi
கோவி.கண்ணன்
செ.சரவணக்குமார்
பிரியமுடன்...வசந்த்
இல்யாஸ்
கபீஷ்
தங்கள் வருகைக்கும் , ஊக்கத்துக்கும் நன்றி.
பேட்டரி விசயம் தெரிந்தவிடயம் என்றாலும் சொல்லப்பட்ட விதம் அருமை, நிறைய பேர் 30 நிமிடம் தான் பேட்டரி பவர் இருக்கு என்று புலம்புவது பார்த்திருக்கேன்
தொடர்ந்து எழுதுங்க உங்க சேவை இந்த டெக்னாலஜி உலகத்துக்கு தேவை
//நாஞ்சில் பிரதாப் said...
சூப்பர் தல...
என்னோட மடிக்கணிணில இருக்கற விஸ்டாவை எடுத்துட்டு எக்பி இன்ஸ்டால் பண்ணலாம்னு இருக்கேன்... இதனால சிஸ்டத்துக்கு ஏதாச்சும் ஆகுமா?
விஸ்டா வாங்கும்போதே அதில் இருந்தது. விஸ்டா சில நேரங்கள்ல ரொம்ப தொந்தரவு குடுக்குது...
ஏதாச்சம் ஐடியா குடுங்க தல...
//
விண்டோஸ் 7 கிடைத்தால் அப்கிரேட் பண்ணுங்க, நல்ல வேகமும் அதிக செக்யூரிட்டியையுன் உள்ளடக்கியது
பயனுள்ள தொழில்நுட்ப தகவல்.
இன்னும் நிறைய எதிர்பார்கிறோம்.
கணனி பத்தி நிறைய தெரிந்து கொள்ள வேண்டியது ..
நிறைய தகவல்கள் .
வாங்க அபுஅஃப்ஸர்
//விண்டோஸ் 7 கிடைத்தால் அப்கிரேட் பண்ணுங்க, நல்ல வேகமும் அதிக செக்யூரிட்டியையுன் உள்ளடக்கியது//
சரியா சொன்னீங்க.
தங்கள் வருகைக்கும் , ஊக்கத்துக்கும் நன்றி.
வாங்க
அபுல் பசர்
கட்டபொம்மன்
தங்கள் வருகைக்கும் , ஊக்கத்துக்கும் நன்றி.
அருமையான பதிவு. பேட்டரி மிகவும் பிரச்சினைக்குரிய விசயமாகத்தான் இருக்கிறது. தொடரும் தொழில்நுட்ப பதிவுகள்.
நல்ல பகிர்தல்.
ஒரு மடிக்கணினி வாங்கும் பொழுது கவணிக்க வேண்டியவை பற்றி எதுனா எழுதுங்களேன்.
-----------
நம்ம சுட்டி குடுத்ததற்கு நன்றிங்கோ.
வாங்க
வெ.இராதாகிருஷ்ணன்
நட்புடன் ஜமால்
தங்கள் வருகைக்கும் , ஊக்கத்துக்கும் நன்றி.
நல்லா இருக்கு. இன்னும் நிறைய தீனி போடனும். இது சும்மா... ... ஜு...ஜூ...
வாழ்த்துக்கள். லேட்டா தெரிந்தாலும் வாழ்த்துக்கள்!
ஜிஆர்ஜி
புதுவை.
வாங்க ஜிஆர்ஜி
தங்கள் வருகைக்கும் , ஊக்கத்துக்கும் நன்றி.
அருமையான தொடக்கம் அக்பர்.
Post a Comment