Sunday, June 21, 2009

நானும் திருநெல்வேலி தான்

இந்தியாவின் தெற்கே இருந்து இந்தியாவிற்கே பெருமை சேர்க்கும் தமிழ்நாட்டை போல் , தமிழ்நாட்டின் தெற்கே இருந்து கல்வியில் பெருமை சேர்க்கும் திருநெல்வேலி தான் நான் பிறந்த ஊர் .




நம்ம ஊர் (எங்க ஊர்னு சொல்லற பழக்கம் நம்ம ஊர்ல இல்லிங்க ) அல்வா ஒன்னு போதுங்க நம்ம ஊரை பற்றி சொல்ல, அது போக நிறைய பிரசித்தி பெற்ற விசயங்கள் இருக்குங்க




தாமிரபரணி ஆறு இருக்குங்களே அதுல குளிச்சா குளிச்சுகிட்டே இருக்கலாங்க அதுல இருக்குற சுகமே தனி தான் . இது உற்பத்தி ஆகும் பாபநாசம் மலைத்தொடர் ரொம்ப ரம்யமான பகுதி . இங்கு காரையாறு , சேர்வலாறு என்று ரெண்டு அணைக்கட்டு இருக்குங்க , காரையாறு அணையின் மறுபகுதியில் பான தீர்த்தம் அருவி பிரம்மாண்டமா விழும் அழகை பார்த்துட்டே இருக்கலாம் (ரோஜா படத்துல நம்ம மதுபாலா குளிப்பாங்களே அந்த அருவிதான் ). அணைக்கு கீழே அகஸ்தியர் அருவியும் உண்டு . இந்த அருவிகளின் சிறப்பம்சம் வருடம் முழுக்க தண்ணீர் வற்றாது.




எல்லோருக்கும் குற்றாலம் தெரியும் அதுபோல மணிமுத்தாறு அருவியும் குளிப்பதற்கு சுகமா இருக்கும் . ஊட்டி , கொடைக்கானல் பற்றி நினைக்கிறவங்க மணிமுத்தாறு மேலே உள்ள மலைப்பகுதியான மாஞ்சோலை, காகாச்சி , கோதையாறு போன்ற பகுதிக்கும் போயி பாருங்க சும்மா சிலுசிலுன்னு இருக்கும் .




இந்தமாதிரி இடங்களுக்கு போகும் போது சாப்பாடும் கூடவே கொண்டு போயிருங்க அங்கு ஹோட்டல்கள் கம்மி விலையும் கம்மி.




இதுபோக தெற்கே கன்னியாகுமரி ஒரு சிறந்த சுற்றுலா தளம் . இது எங்க ஊர்ல இருந்து 0 கி.மீ தூரத்துல இருக்கு .




கல்வியில் பெருமை சேர்க்கும்னு சொல்லிட்டு அத பற்றி எழுதலன்னா எப்படி


நம்ம ஊர்ல பள்ளி , கல்லூரிகளுக்கு குறைவு இல்லைங்க‌. ஆண்டு தோறும் மிகச் சிறந்த பட்டதாரிகள் வெளி வருகிறார்கள்.தென்னிந்தியாவின் ஆக்ஸ்போர்டு என்று சொல்லப்படும் பாளையங்கோட்டை நம்ம மாவட்டத்துலதான் இருக்கு.




ஆனா




வாழ்றதுக்கு வசதியான ஊரை விட்டு வேற எங்கும் போவாங்களா ? ஆனா நாங்க போவோம் (போய் ஆவணும் ) ஏன்னா எங்க ஊர்ல வேலை வாய்ப்பு ரொம்ப குறைவு . மாவட்டத்துல பாதிபேர் வெளியூரிலோ , வெளிநாடுகளிலோ தான் வேலை செய்றாங்க .




நானும் அதில் ஒருவன் .








Tuesday, June 16, 2009

வாருங்கள் வாழ்த்துங்கள்


அன்புள்ள நண்பர்களுக்கு



கடந்த இரு ஆண்டுகளாக தமிழ்மணத்தின் வாசகனாகவே இயங்கி வந்த நான் எனது முதல் பதிவை எழுதுவதில் மகிழ்ச்சி அடைகிறேன் எனது முயற்சிக்கு தங்கள் அதரவு எப்போதும் தேவை .








இதையும் விரும்புவீர்கள்.

Related Posts with Thumbnails