Thursday, December 31, 2009

இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்


அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்.

நம் அனைவரும் எல்லா வளமும், நலமும் பெற்று வாழ இறைவனை பிரார்த்திக்கிறேன்.

,

Friday, November 27, 2009

ஈகை பெருநாள் வாழ்த்துகள்


நண்பர்கள், உறவினர்கள் மற்றும் அனைவருக்கும் ஈகை பெருநாள் நல்வாழ்த்துகள்.

இந்த நன்னாளில் இறைவன் உங்களுக்கு சந்தோசத்தையும், உடல் நலத்தையும், மன அமைதியையும், உள்ளத் தூய்மையையும் தந்தருள்வானாக.

Saturday, October 31, 2009

திருநெல்வேலி சில குறிப்புகள்

அன்புள்ள நண்பர்களுக்கு,

அனைவரும் ரம்ஜான் மற்றும் தீபாவளியை சிறப்பாக கொண்டாடியிருப்பீர்கள். அனைவருக்கும் காலம் கடந்த கனிவான வாழ்த்துக்கள்.

வழக்கம் போலவே இந்த விடுமுறையில் ஊர் சென்று வந்ததும் மிகுந்த சந்தோசத்தை கொடுத்தது. அண்ணன் முரளிக்கண்ணன் அவர்கள் தொலைபேசியில் தொடர்பு கொண்டு நலம் விசாரித்தார்கள் சென்னை வந்தால் கண்டிப்பாக சந்திக்க வேண்டும் என்று சொன்னார்கள். அவர்களது அன்புக்கு கடமைப்பட்டுள்ளேன்.

வெளி நாடுகளில் இருந்து விடுமுறைக்கு ஊர் செல்லும் என்னை போன்றவர்களுக்கு ஒவ்வொரு மணித்துளியும் மிக முக்கியம். அதனால்தான் பதிவு மற்றும் வேறு எந்த விசயத்திலும் ஈடுபடாமல் குடும்பாத்தாருடனே நேரம் முழுவதயும் செலவிட்டேன். நண்பர் சங்கா அவர்கள் ரம்ஜான் வாழ்த்து சொல்லி பின்னூட்டமிட்டிருந்தார். மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது.

நம்ம ஊரு பத்தி சொல்லனும்னா டீ‍ 4 ரூபாய், காபி 5 ரூபாய் என்று அனைத்து பொருள்களின் விலையும் பலமடங்கு கூடியிருக்கிறது. ஆனால் முன்பு மாதிரி விலைவாசி உயர்வை கண்டித்து போராட்டம், மறியல் என்று அதிகமாக காண முடியவில்லை. மக்கள் சகித்துக்கொண்டு வாழப்பழகி விட்டார்கள் போல.

மக்களின் வாங்கும் திறனும் அதிகரித்துள்ளது. வழக்கம் போலவே ஜவுளிக்கடைகளில் மிகுந்த கூட்டம். வித்தியாசம் என்னவெனில் முன்பெல்லாம் ரெண்டு பேருக்கு துணி எடுத்தால் 1000 ரூபாய்க்குள் வரும். இப்போது ஒரு ஆளுக்கு 1000 ரூபாய் பத்த மட்டேன் என்கிறது.
ஆனாலும் சளைக்காமல் வாங்குகிறார்கள்.

என்னை ஆச்சர்ய படுத்திய மற்றொரு விசயம் நகைக்கடைகள். முன்பெல்லாம் கூலக்கடை பஜார் என்று மேற்கு ரத வீதியில் கடைகள் இருக்கும் ஒரு நேரத்தில் ஒரு வாடிக்கையாளர்தான் ஏதாவது பேரம் பேசிக்கொண்டிருப்பார். இப்போது ஜவுளிக்கடைகளுக்கு சமமாக பெரிய பெரிய நகைக்கடைகள். அதே போன்று கூட்டமும் அதிகம். ஜவுளி எடுப்பதை போன்று நகைகளை எடுத்துக்கொண்டிருப்பது சந்தோசமான விசயம்.

அப்புறம் தொழில் துறையில் எந்த முன்னேற்றமும் இல்லை. புதிதாக எந்த தொழிற்சாலையும் இல்லை. வண்ணாரப்பேட்டையில் செல்லப்பாண்டியனார் சிலை பைபாஸ் சாலையில் புதிதாக பாலம் கட்டுகிறார்கள் அது ஒன்னுதான் முன்னேற்றம். பல திட்டங்கள் அடிக்கல்லிலேயே நிற்கின்றன மேலெழும்ப வில்லை.

மின்சாரம் தினமும் இரண்டு மணி நேரம் தடை செய்து விடுகிறார்கள். அந்த சமயங்களில் சவுதியில் இதுவரை கரண்டு போனதே இல்லை என்று பந்தா காட்டுவேன்.

இருமாதங்கள் இரு வாரங்களாக கரைந்து சவுதியில் காலடி எடுத்து வைத்தவுடன் ஏசி காரில் ரூம் வந்தாலும் பைக்கில் பிள்ளைகளை வைத்து செல்லும் சந்தோசத்திற்கு ஈடு இல்லை.

சொர்க்கமே என்றாலும் அது நம்மூரை போல வருமா.

Sunday, June 21, 2009

நானும் திருநெல்வேலி தான்

இந்தியாவின் தெற்கே இருந்து இந்தியாவிற்கே பெருமை சேர்க்கும் தமிழ்நாட்டை போல் , தமிழ்நாட்டின் தெற்கே இருந்து கல்வியில் பெருமை சேர்க்கும் திருநெல்வேலி தான் நான் பிறந்த ஊர் .




நம்ம ஊர் (எங்க ஊர்னு சொல்லற பழக்கம் நம்ம ஊர்ல இல்லிங்க ) அல்வா ஒன்னு போதுங்க நம்ம ஊரை பற்றி சொல்ல, அது போக நிறைய பிரசித்தி பெற்ற விசயங்கள் இருக்குங்க




தாமிரபரணி ஆறு இருக்குங்களே அதுல குளிச்சா குளிச்சுகிட்டே இருக்கலாங்க அதுல இருக்குற சுகமே தனி தான் . இது உற்பத்தி ஆகும் பாபநாசம் மலைத்தொடர் ரொம்ப ரம்யமான பகுதி . இங்கு காரையாறு , சேர்வலாறு என்று ரெண்டு அணைக்கட்டு இருக்குங்க , காரையாறு அணையின் மறுபகுதியில் பான தீர்த்தம் அருவி பிரம்மாண்டமா விழும் அழகை பார்த்துட்டே இருக்கலாம் (ரோஜா படத்துல நம்ம மதுபாலா குளிப்பாங்களே அந்த அருவிதான் ). அணைக்கு கீழே அகஸ்தியர் அருவியும் உண்டு . இந்த அருவிகளின் சிறப்பம்சம் வருடம் முழுக்க தண்ணீர் வற்றாது.




எல்லோருக்கும் குற்றாலம் தெரியும் அதுபோல மணிமுத்தாறு அருவியும் குளிப்பதற்கு சுகமா இருக்கும் . ஊட்டி , கொடைக்கானல் பற்றி நினைக்கிறவங்க மணிமுத்தாறு மேலே உள்ள மலைப்பகுதியான மாஞ்சோலை, காகாச்சி , கோதையாறு போன்ற பகுதிக்கும் போயி பாருங்க சும்மா சிலுசிலுன்னு இருக்கும் .




இந்தமாதிரி இடங்களுக்கு போகும் போது சாப்பாடும் கூடவே கொண்டு போயிருங்க அங்கு ஹோட்டல்கள் கம்மி விலையும் கம்மி.




இதுபோக தெற்கே கன்னியாகுமரி ஒரு சிறந்த சுற்றுலா தளம் . இது எங்க ஊர்ல இருந்து 0 கி.மீ தூரத்துல இருக்கு .




கல்வியில் பெருமை சேர்க்கும்னு சொல்லிட்டு அத பற்றி எழுதலன்னா எப்படி


நம்ம ஊர்ல பள்ளி , கல்லூரிகளுக்கு குறைவு இல்லைங்க‌. ஆண்டு தோறும் மிகச் சிறந்த பட்டதாரிகள் வெளி வருகிறார்கள்.தென்னிந்தியாவின் ஆக்ஸ்போர்டு என்று சொல்லப்படும் பாளையங்கோட்டை நம்ம மாவட்டத்துலதான் இருக்கு.




ஆனா




வாழ்றதுக்கு வசதியான ஊரை விட்டு வேற எங்கும் போவாங்களா ? ஆனா நாங்க போவோம் (போய் ஆவணும் ) ஏன்னா எங்க ஊர்ல வேலை வாய்ப்பு ரொம்ப குறைவு . மாவட்டத்துல பாதிபேர் வெளியூரிலோ , வெளிநாடுகளிலோ தான் வேலை செய்றாங்க .




நானும் அதில் ஒருவன் .








Tuesday, June 16, 2009

வாருங்கள் வாழ்த்துங்கள்


அன்புள்ள நண்பர்களுக்கு



கடந்த இரு ஆண்டுகளாக தமிழ்மணத்தின் வாசகனாகவே இயங்கி வந்த நான் எனது முதல் பதிவை எழுதுவதில் மகிழ்ச்சி அடைகிறேன் எனது முயற்சிக்கு தங்கள் அதரவு எப்போதும் தேவை .








இதையும் விரும்புவீர்கள்.

Related Posts with Thumbnails