Thursday, January 6, 2011

சாலை பாதுகாப்பு வாரமா? சாலையில் செல்வோர் பாதுகாப்பு வாரமா?

இரண்டு வருடம் முன்பு ஒரு காலை பொழுதில் வீட்டிற்கு போன் பேசிக்கொண்டிருக்கும் போது அந்த அதிர்ச்சியான விசயத்தை சொன்னார்கள். தம்பிக்கு விபத்தில் கால் முறிந்து விட்டதாக. கேட்ட அந்த நிமிடம் ஆடிப்போனோம். கூடச் சென்ற மச்சினன் மற்றும் உடனிருந்தவர்கள் சேர்ந்து அவனை மருத்துவமனையில் சேர்த்து விட்டதாக சொன்னார்கள். சோதித்து பார்த்ததில் வலது தொடை எலும்பு ரெண்டாக உடைந்திருந்தது.

வீடே சோகமாக இருந்தது. எப்படி சரி செய்வது என பல பேரிடம் ஆலோசித்து இறுதியாக நாகர்கோவிலில் உள்ள சுஷ்ருஷா மருத்துவமனையில் சேர்த்தோம். அங்குள்ள டாக்டரின் புண்ணியத்தில் ஆபரேஷன் பண்ணி ப்ளேட் வைத்து இன்று ஒழுங்காக நடக்கிறான். பணம் ஒரு பக்கம் போனாலும் அந்த கால கட்டத்தில் நாங்கள் அடைந்த வேதனை சொல்லி மாளாது.

தினம் தினம் பேப்பரில் நாலைந்து இடங்களிலாவது விபத்து பற்றிய செய்திகள் வந்து விடுகின்றன. நம் அனைவரை பொறுத்தவரையும் அது ஒரு செய்தி அவ்வளவுதான். ஆனால் சம்பந்தப்பட்டவர்களுக்கு அது எவ்வளவு பெரிய இடி.

ஒவ்வொரு விபத்திலும் மனிதர்கள் மட்டும் பலியாவதில்லை. அவர்களது ஆசைகளும், கனவுகளும் குடும்பங்களின் எதிர்காலமும் சேர்ந்தே பலியாகின்றன. உலகம் பூராவும் நோய் வந்து இறப்பவர்களை விட விபத்தில் இறப்பவர்களின் எண்ணிக்கையே அதிகமாக இருக்கிறது.

இதற்கெல்லாம் யார் காரணம்? முழுக்க முழுக்க மனிதர்களாகிய நாம் தான். நமது ஐந்து நிமிட தாமதத்தை தவிர்க்க பலரது ஆயுளை விழுங்கி விடுகிறோம். பெரும்பாலான விபத்துக்கு நமது அவசரமாகத்தான் காரணமாக இருக்கிறது.

சரி எல்லோரும் இனிமேல் நிதனமாக செல்வோம் என உறுதி மொழி எடுத்துக்கொண்டால் எல்லாம் சரியாகிவிடுமா? பல சூழ்நிலைகளில் அவசரமாகச் செல்வது தவிர்க்க முடியாத ஒன்றாக போன இன்றைய காலகட்டத்தில் இதை கடைபிடிக்க நம்மால் முடியவே முடியது. அப்போ வேறு என்னதான் வழி?

இருக்கிறது! கடுமையான போக்குவரத்து சட்டங்கள். அது ஒன்றுதான் இதற்கு ஒரே தீர்வு.

நான் வசிக்கும் சவுதி அரேபியா உட்பட பல நாடுகளில் போக்குவரத்து விதிகள் கடுமையாக பின்பற்ற படுகின்றன. முறையான சிக்னல்களும் , சாலை குறியீடுகளும் ஏற்படுத்தப்பட்டு அதை கண்காணிக்கவும் செய்கின்றனர். கடுமையான தண்டனைக்கும் அபராதத்திற்கும் பயந்து வேறு வழியில்லாமல் இங்குள்ள மக்கள் சாலை விதிகளை பினபற்ற வேண்டிய கட்டாயத்திற்கு ஆளாகின்றனர்.

இது போக யாராவது விபத்தில் பலியானால் அந்த விபத்தை ஏற்படுத்தியவர் அக்குடும்பம் கேட்கும் நஷ்ட ஈடை கொடுத்தே ஆகவேண்டும் தவறினால் கடுமையான சிறை தண்டனைக்கு ஆளாவார்கள். நம்மூரைப்போல ஃபைன் கட்டிவிட்டு தப்பிக்க முடியாது.

இவ்வளவு கட்டுபாடுகள் இருக்கப் போய்தான் இந்த அளவாவது இங்கு விபத்தை குறைக்க முடிந்திருக்கிறது. ஏனெனில் இங்குள்ளவர்கள் நம்மாட்களை விட அவசரக்காரர்கள் முரடர்கள்.

இப்படிப்பட்டவர்களையே சட்டங்கள் மூலம் கட்டுப்படுத்த முடியுமெனில். நம் நாட்டில் ஏன் முடியாது?

நாம் நாட்டில் பெரும்பாலான விபத்துக்கள் லாரிகள் மூலமே ஏற்படுகின்றன. அதுவும் பழுதாகி ரோட்டில் நிற்க வைப்பட்டுள்ள லாரிகளால்! அதன் இருமுனைகளிலும் முக்கோண ரிப்ளட்டர்களை வைத்தாலே முக்கால்வாசி விபத்துகளை தவிர்த்து விடலாம். இந்த அடிப்படை விதியை கூட பின்பற்றாமல் முட்செடிகளை சுற்றிலும் போடுவது அவர்களது அலட்சியத்தை தவிர வேறொன்றும் இல்லை.

இது போன்ற சின்ன சின்ன அலட்சியங்கள்தான் பல பெரிய விபத்துகளுக்கு காரணமாக இருக்கின்றன. இது தெரிந்தும் இருக்கிற சட்டங்களை வைத்தாவது நடவடிக்கை எடுக்காமல் இருப்பவர்களை பற்றி என்ன சொல்வது.

ஒவ்வொரு வாகனத்திலும் அவசரத் தேவைக்கான பொருட்கள் இருக்கிறதா என்பதை முறையாக சோதனை செய்தாலே பாதி விபத்தை குறைத்து விடலாம்.

கடுமையான சட்டங்கள் வந்தால் மட்டும் போதாது அதை முறையாக செயல் படுத்தும் அதிகாரிகளும் , விழிப்புணர்வுள்ள மக்களும் வேண்டும் அப்போதுதான். சாலை பாதுகாப்பு வாரம் என்பது கொண்டாடப்படவேண்டிய விழாவாக மாறும்.

,

29 comments:

இராகவன் நைஜிரியா said...

என்னதான் சட்டங்கள் கடுமையாக இருந்தாலும், அந்த சட்டத்தை நிறைவேற்றுபவர்களின் கை சுத்தமாக இருந்தால்தான் சட்டங்கள் சரியாக அமலாக்கப்படும்.

கையூட்டு பெற்றுக் கொண்டு, விடுதலை செய்தால், எந்த கடுமையான சட்டம் இருந்தாலும் ஒன்றும் செய்ய இயலாது.

மேலும் சட்டங்களை இயற்றுவது மட்டுமல்லாமல், அதை பின்பற்ற வேண்டும் என்ற மனப்பான்மை நம்மிடம் வளர வேண்டும். அது இல்லையே?

தலைக்கவசம் அவசியம் போட வேண்டும் என்று சட்டம் இருந்தாலும், எத்தனைப் பேர் தலைக்கவசம் உபயோகிக்கின்றனர்..

சேட்டைக்காரன் said...

தம்பி விரைவில் குணமாகப் பிரார்த்திக்கிறேன் அண்ணே!

ஒவ்வொரு விபத்தும், அதிகரித்து வரும் கவனக்குறைவின் அளபீடுகள்!

வானம்பாடிகள் said...

:)) haa haa..சேட்டை பல்பு. நல்ல கருத்து அக்பர். ஹூம் நடந்தா நல்லாருக்கும்.

இளம் தூயவன் said...

சட்டம் ஒரு இருட்டறை, இது பல விசயத்தில் நிரூபிக்க பட்டுள்ளது. இங்கே உள்ள எதிர்கட்சிகள் நல்லது செய்தாலும் எதிர்பார்கள். எதற்கு போராட்டம் நடத்துகிறோம் என்றே தெரியாமல் போராட்டம் நடத்துகிறார்கள். நீங்கள் சொல்வது போல் சட்டம் கொண்டு வந்தால் , உடனே ஜெயலலிதா சவுதி சட்டம் இந்தியாவில் திணிப்பதாக கூறி ஒரு போராட்டம் நடத்துவார்.

செ.சரவணக்குமார் said...

நல்ல பகிர்வு அக்பர்.

நாஞ்சில் பிரதாப்™ said...

நாம ஒழுங்கா போனாலும் எதிர்ல வர்றவன் ஒழுங்கா வரனுமே.... எனக்கு ஒருமுறை விபத்து உண்டானது அதுமாதிரிதான்...
சார் டாஸ்மாக்லேருந்து நேரா வந்து எம்மேல வுட்டாரு...

ஆமா... நம்மூர்லலதான் சாலையே இல்லையே... அப்போ சாலைவிதிகள் எப்படி இருக்கும்... என்னாலத்தல காமெடிலாம் பண்ணிட்டு :)))


வீட்டுக்கொரு மரம் வளர்ப்போம்
வீட்டைக்கொடு வளர்கிறோம்
அதுமாதிரிதான்..:)

சிநேகிதன் அக்பர் said...

நீங்கள் சொல்வது முற்றிலும் சரி ராகவன் அண்ணா.

என்ன தான் சட்டங்கள் இருந்தாலும் அதை பின்பற்றவில்லையென்றால் என்ன பயன்!

Chitra said...

இது போன்ற சின்ன சின்ன அலட்சியங்கள்தான் பல பெரிய விபத்துகளுக்கு காரணமாக இருக்கின்றன.

..... rightly said!

ஆயிஷா அபுல் said...

//ஒவ்வொரு விபத்திலும் மனிதர்கள் மட்டும் பலியாவதில்லை. அவர்களது ஆசைகளும், கனவுகளும் குடும்பங்களின் எதிர்காலமும் சேர்ந்தே பலியாகின்றன. உலகம் பூராவும் நோய் வந்து இறப்பவர்களை விட விபத்தில் இறப்பவர்களின் எண்ணிக்கையே அதிகமாக இருக்கிறது.//


சென்னையில் அதிகம் சகோ.

சட்டம் கடுமையாக்கப்பட்டால்
குற்றங்கள் குறையும்.

அல்லாஹ் நம் அனைவரையும்
காப்பாத்துவனாக!

நல்ல பகிர்வு சகோ.

ஹேமா said...

நம் நாடுகளில் சட்டதிட்டங்களை மதிக்கிறார்களா மக்கள்.எங்கும் ஊழல்.பிறகெப்படி !

Dr.எம்.கே.முருகானந்தன் said...

சட்டங்கள் மட்டும் போதாது. விழிப்புணர்வு தேவை என்பதை நீங்கள் வலியுறத்தியது மிகவும் சரி.

ஆமினா said...

//. நம் அனைவரை பொறுத்தவரையும் அது ஒரு செய்தி அவ்வளவுதான். ஆனால் சம்பந்தப்பட்டவர்களுக்கு அது எவ்வளவு பெரிய இடி//

உண்மை தான்....

நமக்கு நடக்கும் போது தான் அதன் வீரியம் வலி உணர முடிகிறது....

மதுரை பாண்டி said...

நல்ல பகிர்வு !!!

Starjan ( ஸ்டார்ஜன் ) said...

சாலையில் செல்லும்போது நாம் கொஞ்சம் கவனமாக செல்லவேண்டும். திடீரென என்ன நடக்குமென்று தெரியாது. சாலை விபத்தில் பலியாகுவோர் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்துக் கொண்டே செல்வதை பார்க்கும்போது ரொம்ப வேத்னையா இருக்கு..

ஊர்ல இருக்கும்போது கண்முன்னே நடந்த விபத்து இன்னும் ஞாபகத்தில் இருக்கு.. அதை பற்றி எழுத நினைத்து இருக்கிறேன்.

நல்ல பகிர்வு அக்பர்.

RAZIN ABDUL RAHMAN said...

நீங்க நாலு எழுத்து படிச்சதுனால ஏதேதோ சொல்ரீங்க..
பட்...எனக்குத்தா ஒன்னுமே பிரியல...நானும் என்னோட கொம்ப்பியூட்டர்ல நீங்க சொன்ன,ஏதாச்சும் செஞ்சுரலாம்னு பாத்தா...கழுதை நம்ம அறிவுக்கு எட்டவே மாடேங்குது...மொத்தத்துல கமல் படம் பாத்த ஒரு எஃபெக்ட்....

அன்புடன்
ரஜின்

சிநேகிதன் அக்பர் said...

வாங்க சேட்டை

இது நடந்து இரண்டு வருடம் ஆகிவிட்டது. உங்கள் பிரார்த்தனைக்கு நன்றி.

சிநேகிதன் அக்பர் said...

வாங்க பாலாண்ணா.

சேட்டை கவனிக்கலை போலும். :)

தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

சிநேகிதன் அக்பர் said...

வாங்க இளம் தூயவன்

நீங்கள் சொல்வதும் உண்மையே

தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

சிநேகிதன் அக்பர் said...

வாங்க சரவணன்

தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

சிநேகிதன் அக்பர் said...

வாங்க நாஞ்சிலு

நச்சுன்னு சொன்னீங்க.

தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

சிநேகிதன் அக்பர் said...

வாங்க சித்ரா

தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

சிநேகிதன் அக்பர் said...

வாங்க ஆயிஷா அபுல்

தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

சிநேகிதன் அக்பர் said...

வாங்க ஹேமா

இங்கும் சட்டங்களை தண்டனைக்கு பயந்துதான் மதிக்கிறார்கள்.

தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

சிநேகிதன் அக்பர் said...

வாங்க Dr.எம்.கே.முருகானந்தன் சார்

தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

சிநேகிதன் அக்பர் said...

வாங்க ஆமினா

தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

சிநேகிதன் அக்பர் said...

வாங்க மதுரை பாண்டி

தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

சிநேகிதன் அக்பர் said...

வாங்க Starjan ( ஸ்டார்ஜன் )

தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

சிநேகிதன் அக்பர் said...

வாங்க ரஜின்.

வேறு பதிவுக்கு போட வேண்டிய கமெண்ட்ஸை இங்கு போட்டு விட்டீர்கள் போலும்

தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

T.V.ராதாகிருஷ்ணன் said...

நல்ல பகிர்வு

இதையும் விரும்புவீர்கள்.

Related Posts with Thumbnails