Wednesday, September 22, 2010

மிட்டாய் (22‍.09.2010)

பெருநாளைக்கு மறுநாள் நான் ஸ்டார்ஜன் மற்றும் தம்பிகள், மச்சினனுடன் உம்ரா செல்லும் பாக்கியத்தை இறைவன் எங்களுக்கு தந்தான். ஒரு நாள் மெக்காவிலும் இரு நாட்கள் மதினாவிலும் தங்கியிருந்தோம். மனதுக்கு நிம்மதி தந்த பயணம்.

இது பற்றி நம்ம ஸ்டார்ஜன் விரிவாக பதிவு எழுதியிருக்கிறார்.

இறைவன் நாடினால் இதுவரை காணாதவர்களுக்கு விரைவில் காணும் பாக்கியத்தை அளிப்பானாக ஆமின்.

****************

பதிவுலகை உற்சாகபடுத்தும் வித‌மாக நம்ம பரிசல் கிருஷ்ணா அண்ணன் ஆதி அண்ணனுடன் சேர்ந்து சவால் சிறுகதை போட்டி நடத்துகிறார்கள்.

அனைவரும் கலந்துகொண்டு உங்கள் படைப்பு திறமையை காண வாய்ப்பு தாருங்கள். (யப்பா! நிறைய சிறுகதை படிக்கலாம்)

இந்த மாதிரி போட்டிகள் பதிவுலத்திற்கு புத்துணர்ச்சி அளிக்கட்டும்.

சுஜாதாவின் " நில்லுங்கள் ராஜாவே" பாணியில் ஒரு கதை எழுதி அனுப்ப ஆசைதான். ஆனால் எழுத இயல‌வில்லை.

முதல் பரிசுக்கு கடும் போட்டி இருக்காதுங்கிற தைரியத்துல ஏனோ தானோன்னு எழுதாமா சூப்பரா எழுதுங்க :)

******************

பதிவுலத்தின் வளர்ச்சி பிரமிக்க வைக்கிறது. இதன் மூலம்தான் எத்தனை விசயங்களை சாதித்துக்கொண்டிருக்கிறோம். அண்ணன் இளா சொன்னது போல ஏதாவது ஊருக்கு செல்ல நினைத்தால் முதலில் நினைவுக்கு வருபவர்கள் அங்குள்ள பதிவர்கள்தான். அந்த அளவுக்கு நல்ல நட்புகளை ஏற்படுத்தி தந்திருக்கிறது.

பா.ரா. அண்ணனின் மகா திருமணத்தில் கலந்து கொள்ள ஆசை. வாய்ப்பிருப்பின் அனைத்து பதிவுலக சொந்தங்களையும் காண ஆசை.

******************

கடந்த இரு மாதங்களாக சரிவர பதிவு எழுத முடியவில்லை. நேரமின்மையும் மன உளைச்சலும் சேர்ந்து ஆட்டிப்படைத்தது.

இந்த இடைபட்ட காலத்தில் மெயிலிலும் போனிலும் தொடர்பு கொண்டு விசாரித்த அன்பு உள்ளங்களுக்கு நன்றிகள்.

வேறு ஒன்றும் பெரிய பிரச்சனை இல்லை. எல்லாம் ஊருக்கு செல்வது பற்றியதுதான்.

*******************

ஆம் நண்பர்களே நாளை (23.09.10) நான் ஊர் திரும்புகிறேன்.வெளி நாடுகளில் வேலை பார்ப்பவர்களுக்கு வேலை பார்ப்பதை விட சவாலான விசயம் ஊருக்கு செல்ல லீவு கிடைப்பதுதான். கடந்த இரு மாத கால போராட்டத்திற்கு பிறகு ஒரு வழியாக முதலாளியின் சம்மதத்தை வாங்கி கிள‌ம்பியாகி விட்டது. இரு மாதங்கள் விடுமுறை.

இறைவன் நாடினால் அடிக்கடி பதிவுலகிலும் தலை காட்டுவேன்.

உன்னதமான இந்த தருணத்தை உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சியடைகிறேன்.

இறைவன் நாடினால் மீண்டும் சந்திப்போம் நண்பர்களே.


,

37 comments:

நாஞ்சில் பிரதாப் said...

ஆகா...தல என்ன ஊருக்கா... சூப்பர்.. என்ஜாய்ய்ய்ய்...

வரும்போது இருட்டுக்கடை அல்வா பார்சல்ல்ல்ல்ல்ல்லல்.....

நம்ம குருவை விட்டுட்டாப்போறிங்க...:)

சே.குமார் said...

ஊருக்கா... சூப்பர்.. என்ஜாய்ய்ய்ய்...


Happy Journey.

Tell Regards to ur family members and friends.

அஹமது இர்ஷாத் said...

நல்லபடியாக போய்ட்டு வாங்க அக்பர்..

ஜெய்லானி said...

பயணங்கள் சிறப்பாக அமைய வாழ்த்துக்கள்..!!

ஹுஸைனம்மா said...

நல்லபடியா போய்ட்டு வாங்க; ஊர்லயும் போய் அதிகம் பதிவு போட்டிட்டிருக்காம, குடும்பத்தோட ரொம்ப நேரம் இருங்க.

Balaji saravana said...

பயணம் இனிதாய் அமைய வாழ்த்துக்கள்..
ரெண்டு மாதம் என்ஜாய் பண்ணுங்க :)

ராஜவம்சம் said...

சந்தோஷம் சகோ நல்லபடியா போயிட்டு வாங்க திருவனந்தபுரமா? சென்னையா?

எங்க இறங்கினாலும் தங்கிவிடாமல் தாமதிக்காமல் ஊர் செல்லவும் வெள்ளிக்கிழமை பாபர் மஸ்ஜித் தீர்ப்பு நாள் என்பதால் ஒரு முன் எச்சரிக்கை

வஸ்ஸலாம்.

ஸாதிகா said...

பயணம் இனிதாக அமைய வாழ்த்துக்கள்!

Gayathri said...

happy journey

சைவகொத்துப்பரோட்டா said...

விடுமுறை நாட்கள் இனிதே அமைய வாழ்த்துக்கள் அக்பர்.

asiya omar said...

இனிதே சென்று வாருங்கள் சகோ.ஏனோ மனசு கனக்கிறது் இந்த இடுகையை படித்ததும் இனிய பயண ஊர் அனுபவங்களை எழுதுங்கள்,

சேட்டைக்காரன் said...

ஸ்டார்ஜன் இடுகையும் படித்தேன். நீங்களும் அவரைப் போலவே சுவாரசியமாக எழுதியிருக்கிறீர்கள். விடுமுறை சிறப்பாக மகிழ்வுடன் கழிய வாழ்த்துகள். அவசியம் மீண்டும் மீண்டும் சந்திப்போம்.

சிநேகிதன் அக்பர் said...

@ நாஞ்சில்

நன்றி தல. கண்டிப்பா அல்வா வாங்கிட்டு வாரேன்.

//நம்ம குருவை விட்டுட்டாப்போறிங்க...:)//

அப்புறம் பதிவுலகை யார் காப்பத்துறதாம் :)


@குமார்

நன்றி குமார். எல்லோரிடமும் சொல்றேன்.


@மிக்க நன்றி அஹமது இர்ஷாத்.


@ மிக்க நன்றி ஜெய்லானி


@ நன்றி ஹுஸைனம்மா

ஊருக்கு போயிட்டா பதிவு பக்கம் வருவது கம்மிதான் :)

சிநேகிதன் அக்பர் said...

@ நன்றி பாலாஜி சரவணா.

@ நன்றி ராஜ வம்சம்

நான் திருவனந்தபுரம்தான் செல்கிறேன். நீங்கள் கூறியதை மனதில் வைத்துக்கொள்கிறேன்


@ நன்றி ஸாதிகா


@ நன்றி காயத்ரி


@ நன்றி சைவகொத்துபரோட்டா

சிநேகிதன் அக்பர் said...

@ நன்றி சகோ ஆசியா உமர்.

இன்ஷா அல்லா கண்டிப்பாக எழுதுகிறேன்.


@ நன்றி சேட்டைக்காரன்

மீண்டும் சந்திப்போம்.

Mrs.Menagasathia said...

பயணம் சிறப்பாக அமைய வாழ்த்துக்கள்!!

Chitra said...

Have a safe and fun and relaxed trip to India!

Starjan ( ஸ்டார்ஜன் ) said...

ஆஹா.. அக்பர் ஊருக்கு கிளம்புறாரு.. நா மட்டும்தானா..

நல்லப‌டியாக விடுமுறையை சந்தோசமாக கழிக்கவும்..

//நம்ம குருவை விட்டுட்டாப்போறிங்க...:)//

சிஷ்யா பிரதாப் @ வரும்போது குச்சிமிட்டாயும் குருவி ரொட்டியும் வாங்கிட்டு வருவார் அக்பர்.. அதுல பாதிய உங்களுக்கு தருவேன் என்ன.. ஹா ஹா ஹா ஹா...

Jaleela Kamal said...

மிட்டாய் நல்ல இனிப்பாக இருந்தது.

உம்ரா சென்றீர்களா? நோன்பு நேரம் ரொம்ப நல்ல இருக்குமாமே?
எங்களுக்கும் துஆ செய்யுங்கள் நோன்பு நேரம் உம்ரா வரனும்,

ரொம்ப நாளா கருத்து தெரிவிக்க முடியல.
ஊருக்கு போறீங்கலா நல்ல படியாக போய் வாங்க.
நாஞ்சிலாருக்கு இருட்டு கடை அல்வா வேனுமாம். மறந்துடாதீங்க.

abul bazar/அபுல் பசர் said...

தங்களின் பயணம் இனிதாக அமையவும்,விடுமுறையை குடும்பத்தோடு சந்தோசமாக கொண்டாடவும் உள்ளம் நிறைந்த நல் வாழ்த்துக்கள்
அக்பர்.

நாடோடி said...

விடுமுறை ந‌ல்ல‌ ப‌டியாக‌ அமைய‌ வாழ்த்துக்க‌ள் அக்ப‌ர்..

வானம்பாடிகள் said...

வாங்க அக்பர். இனிய பயணத்துக்கு வாழ்த்துகள்.

NIZAMUDEEN said...

//சுஜாதாவின் " நில்லுங்கள் ராஜாவே" பாணியில் ஒரு கதை எழுதி அனுப்ப ஆசைதான்.//

சாவி வார இதழின் முதல் இதழிலிருந்து ஆரம்பமான கதை.எனக்கு மிக படிக்கும்.

NIZAMUDEEN said...

//முதல் பரிசுக்கு கடும் போட்டி இருக்காதுங்கிற தைரியத்துல ஏனோ தானோன்னு எழுதாமா சூப்பரா எழுதுங்க :)//

நீங்க எழுதாட்டி முதல் பரிசுக்கு, கடும் போட்டி இருக்காதா? ஹை நல்ல காமெடி!

NIZAMUDEEN said...

விடுமுறை சிறக்க, பயணம் இனிதே அமைய நல்வாழ்த்துக்கள்!

ஹேமா said...

சுகமா சந்தோஷமா போய்ட்டு வாங்க அக்பர்.சந்திக்கலாம் நிச்சயம்.

செ.சரவணக்குமார் said...

சந்திக்கலாம் அக்பர்.

இந்திரா said...

நல்லா விடுமுறையைக் கொண்டாடுங்கப்பா..

ஜெய்லானி said...

http://blogintamil.blogspot.com/2010/09/blog-post_24.html

SUFFIX said...

இனிப்பான செய்தி தான், ஊருக்கு நல்ல படியா போய்ட்டு வாங்க அக்பர். வாழ்த்துக்கள்.

sweatha said...

உங்கள் பதிவுகளை jeejix.com இல் பதிவு செய்யுங்கள் அரசியல் , சினிமான்னு ஆறுவகை இருக்கு
ஒவ்வொரு வாரமும் எழுத்தாளர்களை ஊக்குவிக்கும் வகையில்
ஜீஜிக்ஸ் அதிகம் பார்க்கப்பட்ட சமுதாய, பொழுதுபோக்கு நோக்கோடு எழுதும்
தலை சிறந்த எழுத்தாளர்களை ஊக்குவித்து வாரம் 500 பரிசும் தருகிறார்கள் .உங்களுடைய சக ப்ளாகர்ஸ் நிறைய பேர் பரிசும் பெற்றிருகிரார்கள் .(இயற்கை விவசாயம், பிளாஸ்டிக் கழிவுகள், அரசியல் எதிர்பார்ப்புகள், மரம் வளர்ப்பு, சுகாதாரம், மழை நீர் சேமிப்பு , மக்கள் விடுதலை, சமுதாய குறைபாடுகள், சத்தான உணவுகள், உடல் நலம், மருத்துவம், கணினி, தொழில்

வளர்ச்சி, பங்கு சந்தை, கோபம் குறைக்கும் வழிகள், குடும்பத்தில் அன்பு பாராட்டும் செயல்கள், அன்பு புரிதல்கள், பிள்ளை வளர்ப்புகள் , கல்வி) இதில் எதை பற்றி வேண்டுமானாலும் நீங்கள் எழுதலாம்

sweatha said...

உங்கள் பதிவுகளை jeejix.com இல் பதிவு செய்யுங்கள் அரசியல் , சினிமான்னு ஆறுவகை இருக்கு
ஒவ்வொரு வாரமும் எழுத்தாளர்களை ஊக்குவிக்கும் வகையில்
ஜீஜிக்ஸ் அதிகம் பார்க்கப்பட்ட சமுதாய, பொழுதுபோக்கு நோக்கோடு எழுதும்
தலை சிறந்த எழுத்தாளர்களை ஊக்குவித்து வாரம் 500 பரிசும் தருகிறார்கள் .உங்களுடைய சக ப்ளாகர்ஸ் நிறைய பேர் பரிசும் பெற்றிருகிரார்கள் .(இயற்கை விவசாயம், பிளாஸ்டிக் கழிவுகள், அரசியல் எதிர்பார்ப்புகள், மரம் வளர்ப்பு, சுகாதாரம், மழை நீர் சேமிப்பு , மக்கள் விடுதலை, சமுதாய குறைபாடுகள், சத்தான உணவுகள், உடல் நலம், மருத்துவம், கணினி, தொழில்

வளர்ச்சி, பங்கு சந்தை, கோபம் குறைக்கும் வழிகள், குடும்பத்தில் அன்பு பாராட்டும் செயல்கள், அன்பு புரிதல்கள், பிள்ளை வளர்ப்புகள் , கல்வி) இதில் எதை பற்றி வேண்டுமானாலும் நீங்கள் எழுதலாம்

அன்புடன் மலிக்கா said...

ஊருக்காஆஆஆஆ... போய்விட்டு வாங்க.. என்ஜாய்ய்ய்ய்.

எல்லாரையும் விசாரிதாக சொல்லுங்கள் அக்பர்..

முரளிகண்ணன் said...

விடுமுறை சிறக்க வாழ்த்துக்கள்

பத்மா said...
This comment has been removed by the author.
அஹமது இர்ஷாத் said...

http://blogintamil.blogspot.com/2010/11/blog-post_17.html..

ராஜவம்சம் said...

ரெஸ்ட் எடுத்தது போதும் சீக்கிரமா உங்கள் சந்தோஷமான நிகழ்வுகளை எங்களுடன் பகிர்ந்துக்கொள்ளுங்கள்.


ஆவலுடன் நண்பன்.

இதையும் விரும்புவீர்கள்.

Related Posts with Thumbnails