17.9.2020, 8.30 AM ,45' C என சென்னை அண்ணா சாலை, ராஹோஜா டவரிலுள்ள டிஜிட்டல் பேனல் திரும்ப திரும்ப காட்டிக்கொண்டிருந்ததை கடுப்புடன் பார்த்துக்கொண்டிருந்தான் ஜீவ்ஸ்.
"சே! இந்த தமிழ் பீப்புள்ஸ் என்னைக்குத்தான் பங்ச்சுவாலிட்டியை கீப்பப் பண்ண போறாங்களோ தெரியலை. எய்ட் தேர்ட்டிக்கு என்னை வரச்சொல்லிட்டு இன்னும் ஷாப் ஓப்பன் பண்ண ஆளைக் காணோம்."
ரிமோட்டின் மூலம் ஷட்டர் உயர்வதைப்பார்த்து அவர் அருகில் வந்துகொண்டிருக்கிறார் என உணர்ந்தான். தூரத்தில் கையசைத்துக்கொண்டே வந்தார் மெடிக்கல்ஷாப் ஓனர் ராக்ஸ்.
"ஹாய் ஜீவ்ஸ். சாரியா ஐ கெட் லிட்டில் லேட். ஓ! சாரி எகைன்... நீங்க டமில் லிட்டரெச்சர் உங்ககிட்ட நல்ல டமிழ்ல ஸ்பீக் பண்ணனும்னு அன்னைக்கே சொன்னீங்க மறந்துட்டேன்." என சிரித்துக்கொண்டே லைட், ஏசியை ஆன் செய்தார்.
"ஓக்கே சார். என்னோட மெடிசின் வந்துட்டுதா?"
"யெஸ் அன்னைக்கே ரிசீவ் பண்ணிட்டேன். அதுவும் ஃப்ரெஞ்ச் மேட். மார்க்கெட்ல பயங்கர டிமாண்ட் அதுதான் கொஞ்சம் லேட்."
டஹ் லா (dah law)என்ற ப்ரெஞ்ச் பெயர் எழுதப்பட்ட பாட்டிலை வாங்கிக்கொண்டு கார்டை கொடுத்தான் அவர் ஸ்வைப் செய்து கொண்டே கேட்டார்.
"நவ்ய டேய்ஸ் இதை யாரும் யூஸ் பண்றதில்லை. யாருக்கு பர்சேஸ் பண்ணுறீங்க."
"என்னோட கிராண்ட்மாக்குத்தான். அவங்க ரொம்ப சென்சிட்டிவ். ஓல்டு லேடி இல்லையா. அந்த டைம்ல இருந்தே இதை டிரிங்க் பண்ணி பழகிட்டாங்க. டெய்லி ஒரு 50 எம்எல் எடுக்கலைன்னா அப்நார்மல் ஆயிடுறாங்க."
"அதானே பார்த்தேன். யெங்கர் ஜென்லதான் இப்போ உள்ள சிச்சுவேஷனுக்கு தகுந்தமாதிரி செட் ஆயிட்டாங்களே."
"ஆமா சார். உங்களை மாதிரி சில பெர்சன்தான் நல்ல டமிழ்ல பேசுறீங்க, இப்பல்லாம் எல்லோரும் ஒரு வேர்டு கூட டமிழ் சேர்க்க மாட்டேங்கிறாங்க.சரி பை!" என சொல்லி,கார்டை வாங்கிக்கொண்டு செங்கல்பட்டு செல்லும் மெட்ரோ ட்ரெயினை பிடிக்க வேகமாக நடந்தான்.
வழியில் "கெட் பேக் பெட்ரோல் ஹைக்ஸ்" என தமிழில் எழுதப்பட்ட எல்சிடி பேனல்களை பிடித்துக்கொண்டு போராட்டம் நடத்திக்கொண்டிருந்தது ஒரு பொலிட்டிகல் பார்ட்டி. அதில் இடையிடையே அவர்களுடைய கட்சிக்கொடி தெரிந்தது அவனுக்கு சுவாரஸ்யமாக இருந்தது.
"என்ன போராட்டம் நடத்தினாலும் 150 ருபீஸ் ஆனா பெட்ரோலை 125 க்கா குறைக்கப்போறாங்க. வேணும்னா 1 ருபீஸ் லெஸ் பண்ணி 149வாக மாற்றுவாங்க" என நினைத்தபடியே ஸ்டேஷனை நெருங்கினான்.
வாசலில் 50 % சுத்திகரிக்கப்பட்ட தூய்மையான குடி நீர் என பொருள்பட, ஆங்கிலத்தில் எழுதியிருந்த ஒரு கம்பெனியின் பேனர் வரவேற்றது.
"50 % ப்யூரிஃபை பண்ணிட்டோம்கிறது சுத்த பொய். நம்ம நாட்டு நீரை 38 % க்கு மேல ப்யூரிஃபை பண்ண முடியாதுன்னு யெஸ்டர்டே நெட்டில் பார்த்தோமே." என எண்ணியவனாக ஓரமாக உள்ள சீட்டில் போய் அமர்ந்தான்.
"இன்றைய காலகட்டத்தில் ட்ரெயின்தான் சீப் இங்கேயிருந்து செங்கல்பட்டுக்கு வெறும் 110 ருபீஸ்தான். 200 கிலோமீட்டர்ஸ் ஸ்பீடுல 12 மினிட்ஸ்ல போய் இறங்கிடலாம்" என நினைத்துக்கொண்டிருந்தவனை உசுப்பியது செல்போன் அழைப்பு.
அவனிடம் இருந்த பழைய 4G போனில் தெரிந்த காதலியின் முகத்தை தொட்டு உயிர் கொடுத்தான். பேசினாள். இன்னும் அரை மணி நேரத்தில் வந்து பார்ப்பதாக கூறி அணைத்தான். லேட்டஸ்ட் மாடல் போன் வாங்கவேண்டுமென்ற ஆசையிருந்தாலும், மாதம் கிடைக்கிற 45 ஆயிரம் வீட்டிற்கே சரியாவிடுவதால் ஒன்றும் செய்ய முடியவில்லை அவனுக்கு.
"சில செக்யூரிட்டி ரீசனால் ட்ரெயின் 15 மினிட்ஸ் லேட்டாகும்" என்ற தமிழ் அறிவிப்பின் மூலம் வெறுப்படைந்தவனாக தனது செல்போன் டிவியை ஆன் செய்தான்.ஸ்லீவ்லெஸ் டாப்ஸும், மினி ஸ்கர்ட்டும் அணிந்த பெண், இந்த வருடமும் நோ ரெயின், ஹீட் 55 டிகிரி செல்சியஸை தாண்டும் என வானிலை அறிவிப்பு செய்துகொண்டிருந்தாள்.
அதைப் பார்த்து சலிப்படைந்தவனாக, "இந்த டமில் கேர்ள்ஸ் எப்போ சேஞ்ச் ஆவாங்களோ தெரியலை. ஃபாரின்ல எல்லாம் பிரா, பேண்டிசுக்கு சேஞ்ச் ஆகி லாங் டைம் ஆயாச்சு" என்று மனதுக்குள் சலித்துக்கொள்ளவும் ட்ரெயின் வரவும் சரியாக இருந்தது. ஏறினான். அரை நொடிக்குள் சீறிப்பாய ஆரம்பித்தது.
"யூ நோ. யெஸ்டெர்டே ஐ சீ தட் பிக்சர். இட்ஸ் வெரி நைஸ்யா " என்று இங்கிலீசும் இல்லாமல் டமிழும் இல்லாமல் பேசும் அருகில் நின்ற பெண்களை பார்த்து " கண்டிப்பா நம்மை போன்ற பெர்சன்தான் நல்ல டமிழை பீப்புள்கிட்ட இம்ப்ரூ பண்ணனும்" என மனதுக்குள் சொல்லிக்கொண்டான். ட்ரெயின் செங்கல்பட்டை நெருங்கியது.
ஒரு வழியாக வீடு வந்து சேர்ந்தவுடன் க்ராண்ட்மா கையில் பாட்டிலை திணித்தான். மிக்க மகிழ்ச்சியுடன் வாங்கி சின்ன கிளாசில் ஊற்றிப் பருகினாள் ப்ரெஞ்சு மொழியில் டஹ் லா என்றும், அதன் கீழ் ப்யூர் மினரல் வாட்டர் என சின்னதாக ஆங்கிலத்திலும் எழுதப்பட்ட, அந்த 100 % சுத்திகரிக்கப்பட்ட நீரை.
57 comments:
தமிழ்மணத்தில் இணைக்க முடியவில்லை. நண்பர்கள் யாராவது இணைத்து விடவும். நன்றி.
சூப்பர் அக்பர்.. ரொம்ப நல்லாயிருந்தது. 2020 லயே இந்த நிலைமை வந்துடுமா? தண்ணீரின் தேவை வரும் காலங்களில் மிகப்பெரிய பிரச்சனையாக உருவெடுக்கும் வாய்ப்புகள் அதிகம். ஒரு புனைகதையில் இதைச் சொன்னவிதம் பிடித்திருந்தது. வாழ்த்துகள் அக்பர்.
கதை உண்மையை உரைக்கிறது.. இனிவரும் காலங்களில் இப்படியெல்லாம் ஆகிருமா..
படித்துவிட்டு வாறேன்...
அருமையான கதை அக்பர் ஜி நினைத்து பார்க்கவே பயமா இருக்கு நாம் எல்லோரும் அவ்ளோ பாவமா???
உலகம் போற போக்க பார்த்தா அப்படிதான் ஆகிடும் போல இருக்கு.
////" கண்டிப்பா நம்மை போன்ற பெர்சன்தான் நல்ல டமிழை பீப்புள்கிட்ட இம்ப்ரூ பண்ணனும்" என மனதுக்குள் சொல்லிக்கொண்டான். ////
..... இப்போவே டமில் அந்த ரேஞ்சுல தான் கோயிங் ......பேசிங் ....... ம்ம்ம்ம்....
சூப்பர் ஸ்டோரி!
கதை நல்லா இருக்கிறது அக்பர்.
2010 . இல் இதுபோன்று நடப்பதற்கு வாய்ப்புகள் நிறையவே இருக்கிறது.
நல்லாக் கெளப்புறாய்ங்கப்பா பீதிய:)
Nice
ஐய்யயயோஓஓஓஓஓஓஓ!!!
தண்ணியை மெடிக்கல் ஷாப்புல விக்குற அளவுக்கு போய்விடுமா?... :))))) நல்லா இருக்கு அக்பர்.
ரொம்ப நல்லா இருக்குங்க கதை.. ரொம்ப ரசிச்சு படிச்சேன்..
இப்ப இது கதையா இருந்தாலும்.. இதுதான நிஜமாகப் போகுது..
வாழ்த்துக்கள்..
//"இன்றைய காலகட்டத்தில் ட்ரெயின்தான் சீப் இங்கேயிருந்து செங்கல்பட்டுக்கு வெறும் 110 ருபீஸ்தான். 200 கிலோமீட்டர்ஸ் ஸ்பீடுல 12 மினிட்ஸ்ல போய் இறங்கிடலாம்" //
தல இது மட்டும் நடக்க ரொம்ப லேட் ஆகும்னு தோணுது..
நல்லா கதை விட்ருக்கீங்க :))
சற்று அச்சுறுத்தும் கற்பனையோ என்று எண்ணும்போது, ’அட, யதார்த்தம் அதை விட பயங்கரமானது,’ என்று உறைக்கிறது. கலக்கிட்டீங்க!
very nice creation... !!
2020 - லேவா? ரொம்பப் பக்கத்துல சொல்றீங்களே? பயம்ம்ம்மா இருக்கு.
நல்ல கற்பனை. இந்த நிலைமை 2020 லெயே வந்திடுமா?? :-(
இது மாதிரி fiction களில் கடைசி வரியில் விஷயத்தை சொல்லி முடிப்பார்கள். அது மாதிரி முடித்துவிட்டு யோசிக்கவும் வைத்து விட்டீர்கள். ரொம்ப நாளா யோசித்து வைத்திருந்த knot தானே அக்பர் வெல்டன்!
பயமாக இருக்கு பிரதர் எவ்வளவுதான் பயப்பட தணியில்லேன்னா தமிழ் இல்லேனா.
என்னமோ போங்க என் பேத்திதான் என்னிடம் கேட்பால் என்று நினைத்தேன் என் மகளையே கேட்கவச்சிடும் போல ஆரு,குழம் என்றால் என்னவென்று.
nice akbar!!
//ப்ரெஞ்சு மொழியில் டஹ் லா என்றும், அதன் கீழ் ப்யூர் மினரல் வாட்டர் என சின்னதாக ஆங்கிலத்திலும் எழுதப்பட்ட, அந்த 100 % சுத்திகரிக்கப்பட்ட நீரை.//
'டஹ் லா'ன்னா
100% சுத்திகரிக்கப்பட்ட
தண்ணீரா!!!
என்ன கொடுமை சினேகிதன்???
இப்படியும் ஒரு காலம் வருமோ?!?!
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சரவணன்
அருமையான கதை ,நினைத்து பார்க்கவே பயமா இருக்கு நாம் எல்லோரும் அவ்ளோ பாவமா??
நல்லது அக்பர்..
தமிழின் நிலைமையும் தண்ணீரின் நிலைமையும் ஒரே மாதிரியாத்தான் இருக்குங்க..சினேகித தம்பீ...
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ஸ்டார்ஜன்
வாங்க சீமான்கனி
இதுதானே நடைமுறை உண்மை. தண்ணியை காசு கொடுத்துதானே குடிக்கிறோம் நாம்.
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ஜெய்லானி
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சித்ரா
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி அபுல்பசர்
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி பாலா அண்ணே
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ராதாகிருஷ்ணன் சார்.
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி அருணா
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ஸ்டீபன்
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி பாபு
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி கண்ணா
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சேட்டைக்காரன்
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ரகு
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ஹுஸைன்னம்மா
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி உழவன்
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி அப்துல்காதர்
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ராஜவம்சம்
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி மேனகா
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நிஜாமுதீன்
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி செந்தில்
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி அஹமது இர்ஷாத்
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி பழனிச்சாமி அண்ணே.
கதை அருமையாக உள்ளது.
அவ்வள்வு சீக்கிரம் இப்படி ஒரு நிலமை வந்துவிடுமா!!!!!!!
ஹய்யோ ஹய்யோ..
நல்லா கெளப்புறாய்ங்கய்யா பீதிய..
ரொம்ப நல்லா இருக்குங்க கதை.. ரொம்ப ரசிச்சு படிச்சேன்..
" கண்டிப்பா நம்மை போன்ற பெர்சன்தான் நல்ல டமிழை பீப்புள்கிட்ட இம்ப்ரூ பண்ணனும்//
ஹாஹாஹ சூப்பர் அக்பர்.. இப்படியே கண்டின்யூ பண்ணுங்க டமில் பொழைச்சிடும்..:))
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி இளம் தூயவன்
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ஸாதிகா
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி இந்திரா
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சே.குமார்
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி தேனம்மை லெக்ஷ்மணன்
நிஜமாகவே கதையை வாசிக்கும் பொழுது இப்படி டமில் பேசினால் எவ்வளவு அபத்தம்னு புரிய வச்சிட்டீங்க,நல்ல எழுதிருக்கீங்க அகபர்.இனியாவது முடிந்தளவு ஆங்கிலவார்த்தை கலக்காமல் பேசனும்னு தோணவச்ச கதை.
நல்லதொரு பதிவு அக்பர்.
சமயம் கிடைக்கும்போது இதையும் பாருங்கhttp://fmalikka.blogspot.com/2010/09/blog-post.html
கருத்துக்கு நன்றி ஆசியா உமர்
கருத்துக்கு நன்றி மாலிக்கா
Post a Comment