Monday, July 26, 2010

மேனேஜரை டேமேஜர் ஆக்குபவர்களுக்கு விடத்தோணும் குத்துகள்..

கீழே இருக்கும் விசயங்களில் ஒண்ணு கூட உங்களுக்கு மேட்ச் ஆகலைன்னா கண்டிப்பா நீங்கத்தான் உங்க கம்பெனில அடுத்த எம்ப்ளாய் ஆப் தி இயர்.




1. எப்போதுமே லேட்டாத்தான் வருவாங்க. கேட்கும்போது மட்டும் இன்னிக்கு மட்டும்தான் சார் லேட்டுன்னு சொல்லும் போது விடத்தோணூம் ஒரு மாக்குத்து.

2. கண்டிப்பாக இன்னிக்கு முடிச்சாக வேண்டிய அவசர வேலையை கொடுக்கும் போது மட்டும். ரொம்ப மெதுவாக ஒன்னுமே தெரியாத மாதிரி வேலைப் பார்க்கும் போது விடத்தோணும் மஞ்சக்குத்து.

3. பக்கத்துல வர்ற வரைக்கும் ப்ளாக் படிச்சிக்கிட்டு , சிரிச்சிக்கிட்டு இருக்கிறவங்க வந்ததும் மைக்ரோ செகண்டுல ஆபீஸ் சாஃப்ட்வேரை திரையில் லோட் பண்ணி வேலை செய்கிற மாதிரி நடிக்கும் போது விடத்தோணும் ஒரு பூக்குத்து

4. தன்னோட பொருட்களை புதுப்பொண்டாட்டி மாதிரி பார்க்கிறவங்க. ஆபீஸ் பொருட்களை மட்டும் வேண்டாத மனேஜர் மாதிரி நினைச்சிக்கிட்டு சேதம் பண்ணுவாங்களே அப்ப விடத்தோணும் புளியங்குத்து.

5. கம்பெனி நல்லா ஓடினா போனஸ் கேட்கிறவங்க, நஷ்டத்துல ஓடும்போது பங்கெடுக்காம எனக்கு என் சம்பளம் வந்தாகணும்னு கேட்கும் போது விடத்தோணும் பிள்ளையார் குத்து.

6. எப்பவும் மேனேஜர், சூப்பர்வைசர்களை வில்லன்களாக காட்டும் தமிழ் படங்களைப் பார்த்துட்டு வந்து நம்மளையும் அதே வில்லன் போல நினைத்து முறைத்துப் பார்க்கும் போது விடத்தோணும் பாருங்க அதுதான் எனக்கு பிடிச்ச குத்து.

7. பக்கத்துல இருக்கிற பேங்குக்கு இந்த ஆட்டோ கட்டணம் ஜாஸ்தியா இருக்கேன்னு வவுச்சரை காட்டி கேட்டா, தி.நகர்ல இருந்து சைதாப்பேட்டை போயி பாண்டிபஜார் வந்தேன் ஒரே டிராபிக் ஜாம்னு சொல்லும் போது கொடுக்கத்தோணும் போனஸ் குத்து.

8. ஆபீஸில் ஒரு பொண்ணை கூப்பிட்டு பேசினா, வெளியே அதுக்கு ஆயிரம் அர்த்தம் கற்பித்து பேசுபவர்களுக்கு கொடுக்க நினைக்கிறது ஸ்பெஷல் போனஸ் குத்து.

9. மேனேஜர் மட்டும் எப்போதும் நம்மோட சிரித்து சிரித்து பேசணும்னு நினைக்கிறவங்க. கஷ்டமருக்கு மரியாதை கொடுக்காம முறைக்கும் போது விடத்தோணும் குத்து எந்த வகையிலயும் சேர்க்க முடியாது.

லாஸ்ட் பட் நாட் லீஸ்ட்

10. இந்த மனேஜரை எப்படியாவது மாத்தியாகணும்னு கங்கணம் கட்டி, நினைத்த மாதிரி மாற்றிய பிறகு, புது மேனேஜர் டார்ச்சர் தாங்காம பழைய ஆளே தேவலாம்னு புலம்பும் போது விடத்தோணும் பாருங்க அதுதான் கும்மாங்குத்து.

இது நாஞ்சிலின் இந்த பதிவுக்கு எதிர்பதிவுன்னு உங்களுக்கு தெரியாதா என்ன! :)

,

124 comments:

Starjan ( ஸ்டார்ஜன் ) said...

அக்பர் நீங்க எங்கேயோ போயிட்டீங்க..

Starjan ( ஸ்டார்ஜன் ) said...

எம்மாடி... என்ன ஒரு வில்லத்தனம்..

//இது நாஞ்சிலின் இந்த பதிவுக்கு எதிர்பதிவுன்னு உங்களுக்கு தெரியாதா என்ன! :)//

சிஷ்யாவுக்கு எதிராகவா.. இத நான் வன்மையா கண்டிக்கிறேன். :))

Starjan ( ஸ்டார்ஜன் ) said...

சரிகுத்தால்ல இருக்கு.. இதுல எதுவும் உள்குத்து இல்லயே.. :))

நாஞ்சில் பிரதாப் said...

எலே பசுபதி...எட்றா என்ட்ற துப்பாக்கிய... சுட்டு பொசுக்கிடறேன்... இதை சும்மா விடமாட்டேன்...

நாஞ்சில் பிரதாப் said...

//சிஷ்யாவுக்கு எதிராகவா.. இத நான் வன்மையா கண்டிக்கிறேன். :))//

கண்டிக்கிறேன்னு பின்னூட்டம் போட்டா பத்தாது...எனக்கு தேவை ரிசட்ல்டு... அங்....

எம் அப்துல் காதர் said...

இந்தாங்க பிடிங்க பூங்கொத்து..! இதக் கூட நான் தரலன்னா அதுக்கு என்னா குத்து வருமோ? ஹி..ஹி..

நாடோடி said...

//எப்போதுமே லேட்டாத்தான் வருவாங்க. கேட்கும்போது மட்டும் இன்னிக்கு மட்டும்தான் சார் லேட்டுன்னு சொல்லும் போது விடத்தோணூம் ஒரு மாக்குத்து.//

என‌க்கு என்ன‌வோ இவ‌ரு மேனேஜ‌ரா இருக்க‌ மாட்டாருனு நினைக்கிறேன்... வாட்ச்மேனா இருப்பார்னு நினைக்கிறேன்..

நாடோடி said...

//கண்டிப்பாக இன்னிக்கு முடிச்சாக வேண்டிய அவசர வேலையை கொடுக்கும் போது மட்டும். ரொம்ப மெதுவாக ஒன்னுமே தெரியாத மாதிரி வேலைப் பார்க்கும் போது விடத்தோணும் மஞ்சக்குத்து.//

"அவ‌ச‌ர‌மா இன்னைக்கே செய்ய‌வேண்டும்" என்ற‌ நிலைமையை கொண்டு வ‌ந்த‌ இந்த‌ ம‌ஞ்சா மாக்கான் மேன‌ஜ‌ருக்கு தான் முத‌ல் குத்து.. அதுவ‌ரைக்கும் என்ன‌ ப‌ண்ணிட்டு இருந்தாரு இந்த‌ டேம‌ஜ‌ரு.

நாடோடி said...

//பக்கத்துல வர்ற வரைக்கும் ப்ளாக் படிச்சிக்கிட்டு , சிரிச்சிக்கிட்டு இருக்கிறவங்க வந்ததும் மைக்ரோ செகண்டுல ஆபீஸ் சாஃப்ட்வேரை திரையில் லோட் பண்ணி வேலை செய்கிற மாதிரி நடிக்கும் போது விடத்தோணும் ஒரு பூக்குத்து//

ஒரு பிளாக்கு ப‌டிக்கிற‌தை எப்ப‌டி இன்ட‌ர்னெட்டில் லாக் ப‌ண்ணுவ‌து என்று தெரியாம‌ல் இருக்கும் இந்த‌ ம‌க்குசாமி டேமேஜ‌ருக்கு புட்பால் குத்து..

கண்ணா.. said...

//பக்கத்துல வர்ற வரைக்கும் ப்ளாக் படிச்சிக்கிட்டு , சிரிச்சிக்கிட்டு இருக்கிறவங்க வந்ததும் மைக்ரோ செகண்டுல ஆபீஸ் சாஃப்ட்வேரை திரையில் லோட் பண்ணி வேலை செய்கிற மாதிரி நடிக்கும் போது விடத்தோணும் ஒரு பூக்குத்து//

நானெல்லாம் அல்ட் எண்டர்தான் யூஸ் பண்ணுறேன் இது வரைக்கும் மாட்டுனதே இல்ல.....

இந்த மாதிரி டேமஜரை ஏமாற்ற உதவும் தொழில் நுட்பங்கள் நிறைய பேருக்கு தெரியல போல..... அதுக்கும் ஓரு பதிவு போட்ருலாம் போல இருக்கே....

நாடோடி said...

//தன்னோட பொருட்களை புதுப்பொண்டாட்டி மாதிரி பார்க்கிறவங்க. ஆபீஸ் பொருட்களை மட்டும் வேண்டாத மனேஜர் மாதிரி நினைச்சிக்கிட்டு சேதம் பண்ணுவாங்களே அப்ப விடத்தோணும் புளியங்குத்து.///

ஆபிஸ் பொருட்க‌லையும் புது பொண்டாட்டி போல‌ புதுசா வாங்கி போடாம‌ல்... செக‌ண‌ட்ல‌ சீப்பா கிடைச்சுதுனு வாங்கி போட்ட‌ டேமேஜ‌ருக்கு குடுக்க‌ணும் ஒரு நாக் அவுட் குத்து..

கண்ணா.. said...

தல எங்க பரம்பரை எதிரிகளான டேமஜருக்கு சப்போர்ட் பண்ணி பாம்புக்கு பால் வார்க்காதீங்க.... இந்த விஷயத்துல என் புல் சப்போர்ட் நாஞ்சிலுக்குத்தான்.... :)))

மனுசனா அவன் எப்பவும் என்ன வேலை செய்ய சொல்லி கொடுமை பாத்துறாய்ங்க பாஸு

நாடோடி said...

//கம்பெனி நல்லா ஓடினா போனஸ் கேட்கிறவங்க, நஷ்டத்துல ஓடும்போது பங்கெடுக்காம எனக்கு என் சம்பளம் வந்தாகணும்னு கேட்கும் போது விடத்தோணும் பிள்ளையார் குத்து.///

ஒரு க‌ம்பெனியை லாப‌க‌ர‌மா ந‌ட‌த்த‌ தெரியாம‌ல் ந‌ஷ்ட‌ம் அடைந்து விட்ட‌து என‌ சொல்லிக் கொண்டு ப‌க்க‌த்துல‌ இதே போல் ஒரு க‌ம்பெனி ஆர‌ம்பிப்ப‌துக்கு பிளான் ப‌ண்ணும் டேமேஜ‌ருக்கு குடுக்க‌னும் ஒரு ப‌வுன்ச‌ர் குத்து.

நாடோடி said...

//எப்பவும் மேனேஜர், சூப்பர்வைசர்களை வில்லன்களாக காட்டும் தமிழ் படங்களைப் பார்த்துட்டு வந்து நம்மளையும் அதே வில்லன் போல நினைத்து முறைத்துப் பார்க்கும் போது விடத்தோணும் பாருங்க அதுதான் எனக்கு பிடிச்ச குத்து.//

இந்த‌ வ‌ருச‌ம் ந‌ல்ல‌ டேண்ஓவ‌ர் இருக்குண்ணு சொல்லுற‌தை கூட‌ உர்னு வ‌ச்சிட்டு சொல்லும் போது கொடுக்க‌னும் ஒரு பேக் ஷாட் குத்து...

சே.குமார் said...

சரிகுத்தால்ல இருக்கு..

நாடோடி said...

//பக்கத்துல இருக்கிற பேங்குக்கு இந்த ஆட்டோ கட்டணம் ஜாஸ்தியா இருக்கேன்னு வவுச்சரை காட்டி கேட்டா, தி.நகர்ல இருந்து சைதாப்பேட்டை போயி பாண்டிபஜார் வந்தேன் ஒரே டிராபிக் ஜாம்னு சொல்லும் போது கொடுக்கத்தோணும் போனஸ் குத்து.//

பாரிஸ்ல‌ இருக்கிற‌ பேங்குக்கு கார்ல‌ போனா டிராபிக் அதிக‌மா இருக்கும், அத‌னால் நீங்க‌ ந‌ம்ம‌‌ டிவிஎஸ்50 எடுத்துட்டு போங்க‌னு சொல்லும் போது குடுக்க‌ணும் ஒரு ஸ்பெச‌ல் குத்து.

நாடோடி said...

//ஆபீஸில் ஒரு பொண்ணை கூப்பிட்டு பேசினா, வெளியே அதுக்கு ஆயிரம் அர்த்தம் கற்பித்து பேசுபவர்களுக்கு கொடுக்க நினைக்கிறது ஸ்பெஷல் போனஸ் குத்து.//

ரிச‌ப்ச‌னிஸ்டிட‌ம் நாம‌ பேசுற‌த‌ அறையின் க‌ண்ணாடி வ‌ழியா பார்த்திட்டு உட‌னே போன் அடிச்சி ரிச‌ப்ச‌னிஸ்டை கூப்பிடும் போது குடுக்க‌னும் ஒரு டிஸ்யூம் குத்து..

நாடோடி said...

//மேனேஜர் மட்டும் எப்போதும் நம்மோட சிரித்து சிரித்து பேசணும்னு நினைக்கிறவங்க. கஷ்டமருக்கு மரியாதை கொடுக்காம முறைக்கும் போது விடத்தோணும் குத்து எந்த வகையிலயும் சேர்க்க முடியாது.//

க‌ஷ்ட‌ம‌ரிட‌ம் ப‌ண‌ம் வாங்கின‌ மேட்ட‌ர் எங்க‌ ந‌ம‌க்கு தெரிந்து விடுமோ என்று, ந‌ம்மிட‌ம் பேச‌விடாம‌ல் த‌டுக்கும் போது குடுக்க‌ணும் ஒரு டூமில் குத்து.

நாடோடி said...

//இந்த மனேஜரை எப்படியாவது மாத்தியாகணும்னு கங்கணம் கட்டி, நினைத்த மாதிரி மாற்றிய பிறகு, புது மேனேஜர் டார்ச்சர் தாங்காம பழைய ஆளே தேவலாம்னு புலம்பும் போது விடத்தோணும் பாருங்க அதுதான் கும்மாங்குத்து.//

த‌ப்பே செய்யாம‌ ச‌ஸ்பென்ட் வாங்கிட்டு, அது முடிஞ்சி வேலைக்கு வ‌ரும் போது இனிமேல் இதுபோல் செய்யாதே என்று அட்வைஸ் ப‌ன்ணும் போது கொடுக்க‌னும் ஒரு ம‌ஜா குத்து..

நாடோடி said...

//இது நாஞ்சிலின் இந்த பதிவுக்கு எதிர்பதிவுன்னு உங்களுக்கு தெரியாதா என்ன! :)//

இது அக்ப‌ரின் குத்துக‌ளுக்கு எதிர்குத்துனு உங்க‌ளுக்கு தெரியாதா என்ன‌?.......

அப்துல்மாலிக் said...

:))))

நாஞ்சில் பிரதாப் said...

அய்யோ... நானும் ஆட்டத்துக்கு வர்றம்யா... கொஞ்சம் பொறுங்கய்யா...

நாஞ்சில் பிரதாப் said...

//நானெல்லாம் அல்ட் எண்டர்தான் யூஸ் பண்ணுறேன் இது வரைக்கும் மாட்டுனதே இல்ல.....//

யோவ் அது ஆல்ட் + டேப்... ஆல்ட் + என்டருக்கு எந்த ஃபங்சனும் கிடையாது....

கண்ணா.. said...

@ நாஞ்சிலு..

//யோவ் அது ஆல்ட் + டேப்... ஆல்ட் + என்டருக்கு எந்த ஃபங்சனும் கிடையாது.//

பாடலில் எவ்வளவு சொற்பிழை உள்ளதோ அதற்கேற்றார் போல் பரிசுதொகையை குறைத்து கொள்ளவும்

நாடோடி said...

@நாஞ்சில் பிரதாப் said...
//அய்யோ... நானும் ஆட்டத்துக்கு வர்றம்யா... கொஞ்சம் பொறுங்கய்யா...//

என்ன‌ இவ்வ‌ள‌வு லேட்டாவா வ‌ர்ற‌து?... சீக்கிற‌ம் வாங்க‌..

நாடோடி said...

@கண்ணா.. said...
@ நாஞ்சிலு..
//பாடலில் எவ்வளவு சொற்பிழை உள்ளதோ அதற்கேற்றார் போல் பரிசுதொகையை குறைத்து கொள்ளவும்//

சொல்லில் குற்ற‌ம் இருந்தா பிர‌ச்ச‌னையில்லை... பொருளில் குற்ற‌ம் இருக்கிற‌து த‌ல‌.. அது தான் பெரிய‌ குற்ற‌ம்..

நாடோடி said...

@Starjan ( ஸ்டார்ஜன் ) said...
//சரிகுத்தால்ல இருக்கு.. இதுல எதுவும் உள்குத்து இல்லயே.. :))//

ஆமா... நீங்க‌ இன்னும் அந்த‌ க‌ண்ணாடியை க‌ழ‌ட்ட‌லியா?...

கண்ணா.. said...

அடடா..!! நாடோடி புல் பார்ம்ல இங்கனதான் உலாத்திகிட்டு இருக்கா....??

ஓகே பாஸ் அக்ஸப்டட்... அல்ட் டேப்தான்....

நாடோடி said...

@கண்ணா.. said...
//மனுசனா அவன் எப்பவும் என்ன வேலை செய்ய சொல்லி கொடுமை பாத்துறாய்ங்க பாஸு//

இந்த‌ டேமேஜ‌ர் எல்லாமே இப்ப‌டித்தான் த‌ல‌... நீங்க‌ குத்துங்க‌ எச‌மான்... குத்துங்க‌..

நாடோடி said...

@கண்ணா.. said...
//அடடா..!! நாடோடி புல் பார்ம்ல இங்கனதான் உலாத்திகிட்டு இருக்கா....??

ஓகே பாஸ் அக்ஸப்டட்... அல்ட் டேப்தான்....//

ந‌ல்ல‌ தெளிவா சொல்லுங்க‌ த‌ல‌... யார‌வ‌து புல் ம‌ப்புல‌னு ப‌டிச்சிற‌ போறாங்க‌...

Starjan ( ஸ்டார்ஜன் ) said...

நானும் வாரேன் ஆட்டத்துக்கு.. நா எப்ப வருவேன்; எப்படி வருவேன்; யாருக்கும் தெரியாது;; ஆனா கரெக்டா வரவேண்டிய நேரத்துக்கு கரெக்டா வந்துருவேன்.. இதப்படி... ஹா ஹா ஹா...

அக்பர் said...

அடப்பாவிங்களா. சாப்பிட்டு விட்டு வர்றதுக்குள்ளே ரணகளமா ஆக்கிட்டிங்களே. எல்லோரும் கொலைவெறியோட சுத்திக்கிட்டு இருக்கிற மாதிரில்ல இருக்கு.

அக்பர் said...

//சிஷ்யாவுக்கு எதிராகவா.. இத நான் வன்மையா கண்டிக்கிறேன். :))//

அடப்பாவி நீதான் சேம் சைடுல முதல் கோல் போட்டதா.

அக்பர் said...

//எலே பசுபதி...எட்றா என்ட்ற துப்பாக்கிய... சுட்டு பொசுக்கிடறேன்... இதை சும்மா விடமாட்டேன்...//

அய்யா முதல்ல குண்டு இருக்கான்னு பாருங்க. :)

Starjan ( ஸ்டார்ஜன் ) said...

///கண்ணா.. said...

@ நாஞ்சிலு..

//யோவ் அது ஆல்ட் + டேப்... ஆல்ட் + என்டருக்கு எந்த ஃபங்சனும் கிடையாது.//

பாடலில் எவ்வளவு சொற்பிழை உள்ளதோ அதற்கேற்றார் போல் பரிசுதொகையை குறைத்து கொள்ளவும் ///

அய்யா.. எல்லாம் சரிதான்.. கீபோர்டு ஒர்க் ஆகலைன்னா.. தகடுதகடுதான்... :)))

அக்பர் said...

//கண்டிக்கிறேன்னு பின்னூட்டம் போட்டா பத்தாது...எனக்கு தேவை ரிசட்ல்டு... அங்....//

நல்லாயிருங்கைய்யா.. நல்லாயிருங்க.

அக்பர் said...

//இந்தாங்க பிடிங்க பூங்கொத்து..! இதக் கூட நான் தரலன்னா அதுக்கு என்னா குத்து வருமோ? ஹி..ஹி..//

ரொம்ப நன்றிண்ணே. இவங்கள விடுங்க நான் பார்த்துக்கிறேன்.

Starjan ( ஸ்டார்ஜன் ) said...

/// அக்பர் said...

//சிஷ்யாவுக்கு எதிராகவா.. இத நான் வன்மையா கண்டிக்கிறேன். :))//

அடப்பாவி நீதான் சேம் சைடுல முதல் கோல் போட்டதா.///

அக்பர்... எந்தசைடு கோல் போட்டா என்ன.. கோல் விழுந்ததா இல்லையா..:))

Starjan ( ஸ்டார்ஜன் ) said...

///நாஞ்சில் பிரதாப் said...

கண்டிக்கிறேன்னு பின்னூட்டம் போட்டா பத்தாது...எனக்கு தேவை ரிசட்ல்டு... அங்....///

எந்த ரிசல்ட் வேணும்... பத்தாம்வகுப்பா..இல்ல‌ +2..>> தெளிவா சொல்லுங்க..:))

அக்பர் said...

அய்யா நாடோடி ஸ்டீபன், நாளைக்கு நீங்களும் மேனேஜர் ஆகுவிங்கள்ல அப்ப இதையெல்லாம் செயல் படுத்துங்கையா.

நானும் நம்ம நாஞ்சிலு மோசமான மேனேஜர்களை பற்றி எழுதுறாரே நாம மோசமான தொழிலாளியை பற்றி எழுதுவோம்னு பார்த்தா அ நியாயத்துக்கு பொங்கிட்டீங்களே.

அக்பர் said...

//அக்பர்... எந்தசைடு கோல் போட்டா என்ன.. கோல் விழுந்ததா இல்லையா..:))//

அப்படியா பாஸ். ஓகே பாஸ்.

Starjan ( ஸ்டார்ஜன் ) said...

/// நாடோடி said...

@Starjan ( ஸ்டார்ஜன் ) said...
//சரிகுத்தால்ல இருக்கு.. இதுல எதுவும் உள்குத்து இல்லயே.. :))//

ஆமா... நீங்க‌ இன்னும் அந்த‌ க‌ண்ணாடியை க‌ழ‌ட்ட‌லியா?...///

என்னன்னே தெரியல.. 2 நாளா.. கண்ணாடிக்கு கண்ணு விழுந்துக்கிட்டே இருக்கு.. திருஷ்டி சுத்திப்போடணும்... :))

ஹேமா said...

அக்பர் இப்பிடி ஒரு வில்லனா நீங்க !

அக்பர் said...

//இந்த மாதிரி டேமஜரை ஏமாற்ற உதவும் தொழில் நுட்பங்கள் நிறைய பேருக்கு தெரியல போல..... அதுக்கும் ஓரு பதிவு போட்ருலாம் போல இருக்கே....//

ஏமாத்துங்க பாஸ் நல்லா ஏமாத்துங்க.

//தல எங்க பரம்பரை எதிரிகளான டேமஜருக்கு சப்போர்ட் பண்ணி பாம்புக்கு பால் வார்க்காதீங்க.... இந்த விஷயத்துல என் புல் சப்போர்ட் நாஞ்சிலுக்குத்தான்.... :)))//

நாளைக்கு நீங்க மேனேஜராகும் போது , எங்க பரம்பரை எதிரிகளான வொர்க்கர்ஸுக்கு சப்போர்ட் பாண்ணாதீங்கன்னு சொல்வீங்களோ?

Starjan ( ஸ்டார்ஜன் ) said...

/// அக்பர் said...

//எலே பசுபதி...எட்றா என்ட்ற துப்பாக்கிய... சுட்டு பொசுக்கிடறேன்... இதை சும்மா விடமாட்டேன்...//

அய்யா முதல்ல குண்டு இருக்கான்னு பாருங்க. :)////

நாஞ்சில பத்தி என்ன நினைச்சீங்க.. குண்டு இல்லைன்னாலும் சுடுவாரு தெரியுமா...:))

அக்பர் said...

//மனுசனா அவன் எப்பவும் என்ன வேலை செய்ய சொல்லி கொடுமை பாத்துறாய்ங்க பாஸு//

அடுத்த தடவை சிஸ்டத்த மாத்தி அவருக்கு நீங்க வேலை சொல்லுங்க. ஆனா என்ன அப்ப அவருக்கு வேலை சொல்லும் போதே நீங்க மனேஜர் ஆகிடுறீங்க.

அக்பர் said...

வாங்க குமார்

//சரிகுத்தால்ல இருக்கு..//

யாரு குத்துறதை சொல்றீங்க.

அக்பர் said...

வாங்க அப்து மாலிக்.

சிரிச்சிட்டு எஸ்கேப்பா. சரிதான்.

அக்பர் said...

//இது அக்ப‌ரின் குத்துக‌ளுக்கு எதிர்குத்துனு உங்க‌ளுக்கு தெரியாதா என்ன‌?.......//

பிற்காலத்துல நீங்களும் மேனேஜர் ஆவாமலா போயிடுவீங்க. அப்ப இருக்குடி இந்த குத்துக்கெல்லாம் பதில் குத்து. :)

அக்பர் said...

//ஆபிஸ் பொருட்க‌லையும் புது பொண்டாட்டி போல‌ புதுசா வாங்கி போடாம‌ல்... செக‌ண‌ட்ல‌ சீப்பா கிடைச்சுதுனு வாங்கி போட்ட‌ டேமேஜ‌ருக்கு குடுக்க‌ணும் ஒரு நாக் அவுட் குத்து..//

என்ன ஸ்டீபன் நீங்க. நான் சொன்னதையே திருப்பி சொன்னா நல்லாவா இருக்கு. புதுசா ஏதாவது மேட்டர வச்சு குத்துங்க பாஸ்.

உங்க ஆபிஸுல பாஸ் செகண்ட்ல பொருள் வாங்குதாங்களா பாஸ். சில இடங்கள்ல அப்படி இல்லை.

அக்பர் said...

வாங்க ஹேமா

//அக்பர் இப்பிடி ஒரு வில்லனா நீங்க !//

இவ்வளவு நேரம் விட்ட குத்தையெல்லாம் எப்படியோ சமாளித்து கொண்டு இருந்த நேரத்துல.எதிர் பாராம ஒரு குத்து விட்டு நாக் அவுட் பண்ணிட்டிங்களே. நீங்களும் அவங்க குருப்பா :)

அக்பர் said...

//சொல்லில் குற்ற‌ம் இருந்தா பிர‌ச்ச‌னையில்லை... பொருளில் குற்ற‌ம் இருக்கிற‌து த‌ல‌.. அது தான் பெரிய‌ குற்ற‌ம்..//

கண்டுபிடிச்சுட்டாருய்யா நாடோடி நக்கீரரு. அப்படி என்ன குத்தத்த கண்டிங்க எங்க கண்ணாகிட்ட.

கண்ணா நீங்க என்னதான் நாஞ்சிலு பக்கம் போனாலும் அவரு உங்களுக்கு ஆப்புதான் வப்பாரு பார்த்து சூதனமா இருங்கப்பு.

அக்பர் said...

//ஒரு க‌ம்பெனியை லாப‌க‌ர‌மா ந‌ட‌த்த‌ தெரியாம‌ல் ந‌ஷ்ட‌ம் அடைந்து விட்ட‌து என‌ சொல்லிக் கொண்டு ப‌க்க‌த்துல‌ இதே போல் ஒரு க‌ம்பெனி ஆர‌ம்பிப்ப‌துக்கு பிளான் ப‌ண்ணும் டேமேஜ‌ருக்கு குடுக்க‌னும் ஒரு ப‌வுன்ச‌ர் குத்து.//

ஆமாங்க இந்த‌ மாதிரி ஆட்களை வச்சா நஷ்டத்துல ஓடாம லாபத்திலா ஓடும்.

//பாரிஸ்ல‌ இருக்கிற‌ பேங்குக்கு கார்ல‌ போனா டிராபிக் அதிக‌மா இருக்கும், அத‌னால் நீங்க‌ ந‌ம்ம‌‌ டிவிஎஸ்50 எடுத்துட்டு போங்க‌னு சொல்லும் போது குடுக்க‌ணும் ஒரு ஸ்பெச‌ல் குத்து.//

நல்லதுக்கு சொன்னா கேட்டுக்கணும்.

//ரிச‌ப்ச‌னிஸ்டிட‌ம் நாம‌ பேசுற‌த‌ அறையின் க‌ண்ணாடி வ‌ழியா பார்த்திட்டு உட‌னே போன் அடிச்சி ரிச‌ப்ச‌னிஸ்டை கூப்பிடும் போது குடுக்க‌னும் ஒரு டிஸ்யூம் குத்து..//

ரிசப்சனிஸ்டு கிட்ட கஷ்டமர்தான் பேசனும் நீங்க ஏன்யா கடலை போடுறீங்க.

//க‌ஷ்ட‌ம‌ரிட‌ம் ப‌ண‌ம் வாங்கின‌ மேட்ட‌ர் எங்க‌ ந‌ம‌க்கு தெரிந்து விடுமோ என்று, ந‌ம்மிட‌ம் பேச‌விடாம‌ல் த‌டுக்கும் போது குடுக்க‌ணும் ஒரு டூமில் குத்து.//

அவரு கஷ்டமர் கிட்டேயே வரமாட்டாரே. பார்க்கத்தானே செய்வார்.

//த‌ப்பே செய்யாம‌ ச‌ஸ்பென்ட் வாங்கிட்டு, அது முடிஞ்சி வேலைக்கு வ‌ரும் போது இனிமேல் இதுபோல் செய்யாதே என்று அட்வைஸ் ப‌ன்ணும் போது கொடுக்க‌னும் ஒரு ம‌ஜா குத்து..//

நீங்க சொல்ற மாதிரி மேனேஜர்கள் இருக்காங்கன்னு நான் ஒத்துக்கிறேன்.

நான் சொல்றமாதிரி வொர்க்கர்ஸ் இருக்காங்கன்னு நீங்க ஒத்துக்கிறீங்களா?

abul bazar/அபுல் பசர் said...

குத்திலும் இத்தனவகை குத்துக்கள் இருப்பதை உங்கள் பதிவின் மூலம்தான் தெரிந்துக் கொண்டேன் அக்பர்.
குத்துக்கு இவ்வளவு விரிவான விளக்கம் தந்த உங்களுக்கு தமிழ் கூறும் நல்லுலகம் என்றென்றும் கடமைப் பட்டிருகிறது.
வாழ்த்துக்கள்.

செ.சரவணக்குமார் said...

ஹலோ.. என்னய்யா இவ்வளவு சீக்கிரமா ஆரம்பிச்சிட்டீங்க..

ஆஃபீஸ்ல இருந்துக்கிட்டே கும்முறீங்களா? இதுக்குத்தான் மொதக் குத்து விடணும்.

செ.சரவணக்குமார் said...

எந்தப் பதிவுக்குப் போனாலும் ஒரே குத்து மயமா இருக்கு..

குத்துமதிப்பா நீங்கள்லாம் என்னதான் நெனைச்சுட்டு இருக்கீங்க.

வே அக்பரு.. ஒமக்கு எம்புட்டுத் தைரியம் இருந்தா எங்க தல நாஞ்சிலு பதிவுக்கு எதிர்பதிவு போடுவ?

செ.சரவணக்குமார் said...

தொழிலாளர்களின் ஆதார உரிமைக்கு எதிரான பதிவை எழுதிய முதலாளித்துவத்தின் பிரதிநிதி அக்பருக்கு கடுமையான கண்டனங்கள்.

குத்து.. கும்மாங்குத்து..

செ.சரவணக்குமார் said...

என்னய்யா கடைல ஒருத்தரயும் காணோம்..

வேலை நேரத்துல மட்டும்தான் கும்முவீகளோ?

செ.சரவணக்குமார் said...

//எப்போதுமே லேட்டாத்தான் வருவாங்க. கேட்கும்போது மட்டும் இன்னிக்கு மட்டும்தான் சார் லேட்டுன்னு சொல்லும் போது விடத்தோணூம் ஒரு மாக்குத்து.//

ஒரு நாள் லேட்டாப் போனாலே காச் மூச்சுன்னு கத்துவாய்ங்க..

டெய்லி லேட்டாத்தான் போவோமாம்ல? பக்கத்துல இருந்து பாத்தீரோ?

குத்து 1.. அக்பருக்கு..

செ.சரவணக்குமார் said...

//கண்டிப்பாக இன்னிக்கு முடிச்சாக வேண்டிய அவசர வேலையை கொடுக்கும் போது மட்டும். ரொம்ப மெதுவாக ஒன்னுமே தெரியாத மாதிரி வேலைப் பார்க்கும் போது விடத்தோணும் மஞ்சக்குத்து.//

ஒரு வாரத்துக்கு முன்னாடியே இந்த அவசர வேலையப் பத்தி ஞாபகப்படுத்தியிருப்போம் அப்பல்லாம் 'வரும்போது பாத்துக்கலாம்னு' சொல்லி அசால்ட்டா இருப்பாய்ங்க. நமக்கு எதாவது அர்ஜெண்ட் வேலை இருக்கும்போதுதான் கரெக்டா இப்பிடிச் சொல்லிட்டு வருவாய்ங்க. அங்க ஒரு ஆள் நமக்காகக் காத்திருக்கிறத நெனச்சா எப்பிடிவே வேலை ஓடும்..

அக்பர் said...

ஹலோ மைக் டெஸ்டிங்....

இப்பதான் கடைதிறந்தோம். (மறுபடியும்)

அக்பர் said...

சரவணா யூ டூ

ஐயோ எனக்கு சப்போர்ட்டுக்கு யாருமே இல்லையா.

செ.சரவணக்குமார் said...

//ஐயோ எனக்கு சப்போர்ட்டுக்கு யாருமே இல்லையா.//

மவனே சப்போர்ட்டா..
ஒன்னயக் கும்மாம விட மாட்டேன்.

ராஜவம்சம் said...

எல்லோறுக்கும் மகிழ்ச்சியான அறிவிப்பு அடுத்தமாதம் தமாமில் நடக்க இருகும் பதிவர் சந்திப்புக்கு வரும் நனபர்கள் அனவருக்கும் நெல்லை நன்பர்கள் சார்பில் மடிக்கணினி அன்பளிப்பாக வழங்கப்படும் என்று நன்பர் சரவணன் கூறியுள்ளார்.

அக்பர் said...

//மவனே சப்போர்ட்டா..
ஒன்னயக் கும்மாம விட மாட்டேன்.//

ம்ம்ம். நடத்தணும்னு ஆசைப்பட்டுட்டிங்க. நடத்துங்க முடிஞ்ச வரைக்கும் பார்ப்போம்.

அக்பர் said...

//எல்லோறுக்கும் மகிழ்ச்சியான அறிவிப்பு அடுத்தமாதம் தமாமில் நடக்க இருகும் பதிவர் சந்திப்புக்கு வரும் நனபர்கள் அனவருக்கும் நெல்லை நன்பர்கள் சார்பில் மடிக்கணினி அன்பளிப்பாக வழங்கப்படும் என்று நன்பர் சரவணன் கூறியுள்ளார்.//

இதென்ன புதுக்கதையா இருக்கு. நல்லா கிளப்புறாங்கையா பீதியை.

Starjan ( ஸ்டார்ஜன் ) said...

சரவணா.. எனக்கு ஒரு சந்தேகம்.. குத்துமதிப்புன்னு சொல்லிருக்கீங்களே.. குத்துக்கு மதிப்பு உண்டா..

ராஜவம்சம் said...

ஹலோ ஸ்டார்ஜன் கம் டு ஸ்டேஜ் பிலீஸ்.

ராஜவம்சம் said...

இருக்கீங்களா

அக்பர் said...

//ஹலோ ஸ்டார்ஜன் கம் டு ஸ்டேஜ் பிலீஸ்.//

எதுக்கு? அவர் கையால முதல் கணினியை வழங்கவா?

ஆமா நீங்கதான் ஸ்பான்சராமுல்ல. உண்மையா.

ராஜவம்சம் said...

ஏண்னா என்னன்னு புரியலையே கணினியா அப்படின்னா

Starjan ( ஸ்டார்ஜன் ) said...

// ராஜவம்சம் said...

ஹலோ ஸ்டார்ஜன் கம் டு ஸ்டேஜ் பிலீஸ்.///

வந்துட்டேன்..கூப்பிட்ட குரலுக்கு ஓடோடி வருவான் இந்த சேக் :))

Starjan ( ஸ்டார்ஜன் ) said...

/// ராஜவம்சம் said...

ஏண்னா என்னன்னு புரியலையே கணினியா அப்படின்னா///

ஏண்ணே.. இப்படியெல்லாம் சொன்னா நம்பிருவோமா..

அக்பர் said...

தல சரவணன் ராஜவம்சம் ராஜாக்கள் காலத்துலயே இருக்காரு போல இருக்கு. கணினின்னா என்னான்னு கணினில தட்டி கேட்கிறாரு பாருங்க.

அண்ணே அது கம்யூட்டர்ண்ணே.

ராஜவம்சம் said...

//ஏண்ணே.. இப்படியெல்லாம் சொன்னா நம்பிருவோமா..//

மழழைச்சொல்லில் பொய் இருக்காது
நம்புங்க நா பச்சப்புள்ளை

அக்பர் said...

தல ஸ்டீபன் எங்கிருந்தாலும் மேடைக்கு வரவும், உடன் நாஞ்சிலையும் அழைத்து வரவும்.

ராஜவம்சம் said...

//அண்ணே அது கம்யூட்டர்ண்ணே. //
அது என்ன கருமமோ நமக்கு அதல்லா தெரியாதுப்பு.

அக்பர் said...

சரவணன் எங்கைய்யா போனீங்க?

Starjan ( ஸ்டார்ஜன் ) said...

///ராஜவம்சம் said...

மழழைச்சொல்லில் பொய் இருக்காது
நம்புங்க நா பச்சப்புள்ளை//

பார்த்தா.. அப்படித் தெரியலியே..

ராஜவம்சம் said...

ஜெயமோகனை மேஞ்சிக்கிட்டு இருப்பாரோ.

Starjan ( ஸ்டார்ஜன் ) said...

/// ராஜவம்சம் said...

ஜெயமோகனை மேஞ்சிக்கிட்டு இருப்பாரோ.///

கரெக்டா.. சொன்னீங்க போங்க..

அக்பர் said...

//ஜெயமோகனை மேஞ்சிக்கிட்டு இருப்பாரோ.//

விஷ்ணு புரத்துக்குள்ளே போயிட்டாருன்னா வீடு திரும்ப லேட்டாகுமே.

அக்பர் said...

//ஜெயமோகனை மேஞ்சிக்கிட்டு இருப்பாரோ.//

விஷ்ணு புரத்துக்குள்ளே போயிட்டாருன்னா வீடு திரும்ப லேட்டாகுமே.

Starjan ( ஸ்டார்ஜன் ) said...

/// அக்பர் said...

//ஜெயமோகனை மேஞ்சிக்கிட்டு இருப்பாரோ.//

விஷ்ணு புரத்துக்குள்ளே போயிட்டாருன்னா வீடு திரும்ப லேட்டாகுமே.///

அக்பர் நீங்க ரெண்டுதடவ சொல்லியும் இன்னும் சரவணன் வரலியே..

அக்பர் said...

அப்புறம் வர்றேன் ராஜவம்சம். பை.

செ.சரவணக்குமார் said...

//எல்லோறுக்கும் மகிழ்ச்சியான அறிவிப்பு அடுத்தமாதம் தமாமில் நடக்க இருகும் பதிவர் சந்திப்புக்கு வரும் நனபர்கள் அனவருக்கும் நெல்லை நன்பர்கள் சார்பில் மடிக்கணினி அன்பளிப்பாக வழங்கப்படும் என்று நன்பர் சரவணன் கூறியுள்ளார்.//

ஹைய்யா ஜாலி..

நெல்லை நண்பர்கள்னா நம்ம அக்பரும், பி.ப ஸ்டார்ஜனும்தான?

ரொம்பப் பெரிய மனசுய்யா உங்க ரெண்டுபேருக்கும்.

ராஜவம்சம் said...

எல்லா குத்தையும் வருசையா படிச்சிக்கிட்டு வாங்க கடசியா அக்பரும் சேக்கும் வருவாங்க.

செ.சரவணக்குமார் said...

// அக்பர் said...

//ஜெயமோகனை மேஞ்சிக்கிட்டு இருப்பாரோ.//

விஷ்ணு புரத்துக்குள்ளே போயிட்டாருன்னா வீடு திரும்ப லேட்டாகுமே.///

அக்பர் நீங்க ரெண்டுதடவ சொல்லியும் இன்னும் சரவணன் வரலியே..//

அடப்பாவிகளா? எங்கய்யா படிக்கவிடுறீங்க?

பை தி வே.. நான் இப்ப சாருவோட 'மதுமிதா சொன்ன பாம்புக் கதைகள்' படிச்சுட்டு இருக்கேன். பாம்பு ஓவரா கொத்துதேன்னு பார்த்தா நீங்க வேற இப்படிக் கொத்துறீகளேய்யா..

செ.சரவணக்குமார் said...

//சரவணா.. எனக்கு ஒரு சந்தேகம்.. குத்துமதிப்புன்னு சொல்லிருக்கீங்களே.. குத்துக்கு மதிப்பு உண்டா..//

இது அதுல்ல.....

அவ்வ்வ்வ்வ்வ்வ்..

அக்பர் said...

//நெல்லை நண்பர்கள்னா நம்ம அக்பரும், பி.ப ஸ்டார்ஜனும்தான?

ரொம்பப் பெரிய மனசுய்யா உங்க ரெண்டுபேருக்கும்.//

மொத்தம் எத்தனை பேரு கிளம்பியிருக்கிங்க.

அக்பர் said...

//எல்லா குத்தையும் வருசையா படிச்சிக்கிட்டு வாங்க கடசியா அக்பரும் சேக்கும் வருவாங்க.//

கடைசியா மொத்தமா கும்முறதுக்கா :)

செ.சரவணக்குமார் said...

இப்ப நீங்க எங்கவே போனீங்க?

இப்பிடித் தனியா வந்து டீயாத்துறதே நமக்கு வேலையாப் போச்சு.

அக்பர் said...

//பை தி வே.. நான் இப்ப சாருவோட 'மதுமிதா சொன்ன பாம்புக் கதைகள்' படிச்சுட்டு இருக்கேன். பாம்பு ஓவரா கொத்துதேன்னு பார்த்தா நீங்க வேற இப்படிக் கொத்துறீகளேய்யா..//

எங்கே கொத்துச்சு, எப்படி கொத்துச்சு...

அக்பர் said...

//இப்பிடித் தனியா வந்து டீயாத்துறதே நமக்கு வேலையாப் போச்சு.//

இங்கதான் தல இருக்கோம். நீங்க நடத்துங்க.

இடையில ராஜவம்சத்தை காணோம். அரசவையை கூட்ட போறாரா?

ராஜவம்சம் said...

இடையில ராஜவம்சத்தை காணோம். அரசவையை கூட்ட போறாரா?

சில நேரம் தள்ளி நின்று வேடிக்கைப்பார்க்கலான்னு நினைச்சேன்.

அக்பர் said...

//சில நேரம் தள்ளி நின்று வேடிக்கைப்பார்க்கலான்னு நினைச்சேன்.//

மொத்தமே மூணு பேருதான்.

செ.சரவணக்குமார் said...

//மொத்தம் எத்தனை பேரு கிளம்பியிருக்கிங்க.//

ம்ம்ம் ஆசைதான்.. உங்கள மேய்க்குறதுக்கு நான் ஒரு ஆள் போதாதாக்கும்...

கணினி பரிசு தாரோம்னு சொல்லிட்டு கடைக்கு ரிப்பேருக்கு வந்த ஓட்ட ஒடசல கொடுத்துராதீரும்.. நல்ல புதுசா பாத்து வாங்குகவே. ஏதோ சோனி வையோவாமுல்ல அதக் கொடுத்தா நல்லாருக்கும்.

ராஜவம்சம் said...

சோனியல்லாம் வய்யகூடாது

ராஜவம்சம் said...

//கடைக்கு ரிப்பேருக்கு வந்த ஓட்ட ஒடசல கொடுத்துராதீரும்..//

இது வேறயா நடக்குது.

அக்பர் said...

//கணினி பரிசு தாரோம்னு சொல்லிட்டு கடைக்கு ரிப்பேருக்கு வந்த ஓட்ட ஒடசல கொடுத்துராதீரும்.. நல்ல புதுசா பாத்து வாங்குகவே. ஏதோ சோனி வையோவாமுல்ல அதக் கொடுத்தா நல்லாருக்கும்.//

யாரு சொன்னா. சொன்ன ஆளுட்ட கேளுங்க.

சோனி வையோவுக்கு பதில ஆப்பிள் ஐ புக் கொடுக்கலாமா. அவருதான் ராஜவம்சமாச்சே!

செ.சரவணக்குமார் said...

//சில நேரம் தள்ளி நின்று வேடிக்கைப்பார்க்கலான்னு நினைச்சேன்.//

இருக்குற மூணு ஆள்ல இது வேறயா? சரி நானும் கொஞ்சம் தள்ளி நின்னு பாக்குறேன். (ஹி ஹி.. கொஞ்சம் வேலை இருக்குண்ணே.. உங்க கும்மிகளயெல்லாம் பொறவு மொத்தமா படிச்சிக்கிடுதேன். வர்ட்டா)

நன்றிங்க.

அக்பர் said...

அடப்பாவிங்களா எனக்கு நானே 100 போட வச்சிட்டிங்களே.

அக்பர் said...

//நானும் கொஞ்சம் தள்ளி நின்னு பாக்குறேன்.//

அப்போ நானும் அதேதான். பை

ராஜவம்சம் said...

நா சொல்ல நினத்தேன் பை என்று நீங்க எல்லாம் முந்திக்கிட்டீங்க சலாவுக்கு போய்ட்டுவந்து பாக்கிறேன்.

!♫ ♪ ..♥ .பனித்துளி சங்கர் .♥..♪ ♫ said...

அஹா இதுல ஒன்னு விடாம எல்லாமே சரியா நமக்கு பொருந்துதே . இனிமே உசாராத்தான் இருக்கணும்போல . நல்லா இருக்கு நண்பரே . பகிர்வுக்கு நன்றி

mythoughts said...

nadodivyou r right..

Chitra said...

அடங்கொக்க மக்கா.... நான் போட்ட கமென்ட் காணோமே! அவ்வ்வ்....

ILA(@)இளா said...

போன வாரம் சிறந்த பதிவு

என்பார்வையில்(சிபஎபா)
, இந்த இடுகையச் சேர்த்திருக்கேன்.

சீமான்கனி said...

மொத்தத்தில் இது கும்மிகுத்து....

ரிஷபன் said...

//புது மேனேஜர் டார்ச்சர் தாங்காம பழைய ஆளே தேவலாம்னு புலம்பும் போது விடத்தோணும் பாருங்க அதுதான் கும்மாங்குத்து.//
சூப்பர் பஞ்ச்..

கே.ஆர்.பி.செந்தில் said...

மேனேஜர் சார் வாழ்க...

அக்பர் said...

வாங்க பனித்துளிசங்கர்.

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

அக்பர் said...

வாங்க mythoughts

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

அக்பர் said...

வாங்க Chitra

//அடங்கொக்க மக்கா.... நான் போட்ட கமென்ட் காணோமே! அவ்வ்வ்....//

எப்போ போட்டிங்க. பரவாயில்லை மறுபடியும் போடுங்க.

அக்பர் said...

வாங்க இளா

எனது இடுகையை தேர்ந்தெடுத்தமைக்கு மிக்க நன்றி.

அக்பர் said...

வாங்க சீமான்கனி

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

அக்பர் said...

வாங்க ரிஷபன்

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

அக்பர் said...

வாங்க கே.ஆர்.பி.செந்தில்

//மேனேஜர் சார் வாழ்க...//

ஐயோ! இது யாருக்கும் ஆதரவா உள்ள இடுகை இல்லைங்க. தொழிலாளி தப்பு பண்ணா மேனேஜரால தண்டிக்க முடியும். மேனேஜர் தப்பு பண்ணுனா தொழிலாளியால தண்டிக்க முடியாது. சும்மா புலம்பலாம்.

எனவே எனது சப்போர்ட் எப்போதும் தொழிலாளிக்கே.

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

ஜெய்லானி said...

//இது நாஞ்சிலின் இந்த பதிவுக்கு எதிர்பதிவுன்னு உங்களுக்கு தெரியாதா என்ன! :)//


அக்பர் இது எந்த குத்து..சரியா சொல்லையே...ஹா..ஹ..

இளம் தூயவன் said...

நீங்கள் சொன்ன எல்லாம் ஓகே பாஸ், ஆனால் அந்த லிஸ்டில் உள்ளவர்களுக்கு தானே பாஸ் எல்லாம் கிடக்கின்றது.அப்ப எந்த மாதிரி குத்து விடலாம் பாஸ்?.ஒரு விஷயம் நல்லவனா இருந்தால் வாழ முடியாது.

அக்பர் said...

வாங்க ஜெயிலானி

அது சீக்ரெட் குத்து வெளியில சொல்லக்கூடாது.

அக்பர் said...

வாங்க இளம் தூயவன்

//ஒரு விஷயம் நல்லவனா இருந்தால் வாழ முடியாது.//

100 சதவீதம் உண்மை. நல்லவனாக இருப்பதை விட வல்லவனாக இருப்பவனுக்குத்தான் நல்லது நடக்கும்.

ஒ.நூருல் அமீன் said...

இத்தனை வகை குத்துகளா!. குத்துகளா அடுக்கிவிட்டு காலாலே எத்தும் அழகிய படத்தை பதிவு செய்ததற்காக வலிக்காமல் செல்லமாக ஒரு கு..

முடிவிலி said...

ஹே..ஹே.. எல்லாத்துலயும் நான் இருக்கேன். இங்க்ரீமென்ட் கொடுப்பாங்களா ..?

இதையும் விரும்புவீர்கள்.

Related Posts with Thumbnails