Wednesday, July 21, 2010

களவாணி பயம் !


பயமறியா வயதில் எனக்கு முதன்முதலில் பயத்தை ஏற்படுத்தியது திருடர்களை பற்றிய எண்ணங்கள்தான். அதுவும் கனவில் வரும் அவர்களின் கற்பனை முகங்கள் நடுநடுங்க வைப்பவையாக இருக்கும். கருப்பு நிறத்தில் இருக்கமான உடையுடன் முகமூடி போட்டுக்கொண்டு தடித்த உருவத்துடன் வருப‌வர்கள் தான் திருடர்கள் என மனதில் பதிந்து போனது. அந்த மாதிரி ஒருவரிடம் மாட்டி கொள்வதை நினைத்தாலே குலை நடுங்கும்.

எட்டு வயது இருக்கும் போது ஒரு காத்தடி காலத்தில் காத்தாடி விட்டுக்கொண்டு இருக்கும் போது தலையில்லா முண்டம், ஊரை சுற்றி பிள்ளைகளை பிடிக்கிறது என்ற செய்தி கேட்டு வீட்டுக்குள் ஓடியவன். பின்பு துணையில்லாமல் வெளிவருவதில்லை.

ஒரு முறை சந்தைக்கு சென்ற எனது உறவினரிடம் திருடிய ஒருவன், ஊருக்குள் வரும்போது அவர் கண்ணில் பட்டுத் தொலைக்க. உறவினர்கள், தெருக்காரர்களிடம் வசமாக சிக்கி, சின்னாபின்னமானான். திருடனை பார்க்கவேண்டுமென்ற ஆவலில் மனதுக்குள் பீதியுடன் ஓடினேன்.

ஒருவனை ஒரு ஓரமாக உட்காரவைத்து மூணு பேர் காவல் இருந்தனர். அவன் என் திருடனாக(!?) இல்லை. பக்கத்துவீட்டு அண்ணன் மாதிரி இருந்தவனை திருடன் பிம்பத்துக்குள் பொருத்த மனம் மறுத்தது. ( அவர்களை ஏமாற்றிவிட்டு அவன் ஓடியது தனிக்கதை)

பின்பு ஒரு நாள் இரவு விசேஷ வீட்டின் விருந்தில் அனைவரும் கூடியிருந்த போது, முக்கு வீட்டின் மாடியில் திருடன் ஓடிய சத்தத்தை கேட்டதாக சொல்ல மனதில் மறுபடியும் பீதி ஒட்டிக்கொண்டது.

இரவில் வந்த இவந்தான் நான் நினைத்துக் கொண்டிருக்கும் உண்மையான திருடனாக இருப்பான் என்ற எண்ணத்தில் நானும் கூட்டத்துடன் சேர்ந்து ஓடினேன். இரண்டு மூன்று பேர்களாக ஒவ்வொரு திசையிலும் தேடியும் கையில் பிடிபடவில்லை. ஆனால் கனவில் வந்து என்னை துரத்திக்கொண்டிருந்தான்.

படிப்பை பற்றிய பயம் வந்த போது திருடனை பற்றிய கனவுகள் மறைந்து ஃபார்மூலாக்களும் , மூலக்கூறுகளும் கனவுகளின் மூலம் ஆக்கிரமிக்க தொடங்கின. ஒரு வழியாக படிப்பை முடித்தாலும் வேலை என்னும் அரக்கன் முன்பை விட அதிக பயத்தை ஏற்படுத்தினான்.

வேலை செய்யும் இடத்தில் சந்தித்த திருடர்களின் கதை இன்னும் சுவாரஸ்யமானது. ஷோரூமில் திருடியவர்களை விசாரிக்க அலுவலகத்துக்குள் கூட்டி வந்து விடுவார்கள். அங்கு வைத்து பட்டி, டிங்கரிங் பார்த்து அனுப்பி வைப்பார்கள்.

இப்படித்தான் சேலை திருடிய பெண்ணை கூட்டி வந்து விசாரித்ததில். அவள் வேலுரை சேர்ந்த பிரபல மருத்துமனையில் வேலை பார்க்கும் அடையாள அட்டை வைத்திருந்தது மிகவும் அதிர்ச்சியை அளித்தது.

பிரிதொரு சமயம் சட்டைக்குள்ளே டி ஷர்ட்டை போட்டு மறைத்து திருடியவன் பிடிபட்டவுடன், தான் சென்னையில் உள்ள பிரபல கல்லூரியில் 2ம் ஆண்டு மாணவன் என்றும் நண்பர்களிடம் விட்ட சவாலுக்காக திருடியதாகவும் சொன்னதும், அவனிடம் இருந்து செயின் , மோதிரைத்தை வாங்கி வைத்துக் கொண்டு பத்து நாட்கள் அலைய விட்டது தனிக்கதை. அன்று வாங்கிய அடி அவனுக்கு வாழ் நாளுக்கும் மறக்காது.

தன்னை ஒரு விளம்பர ஏஜெண்ட் என்று நம்பவைத்து ரெண்டு லட்ச ரூபாய் சுருட்டியவனை இதே முறையில் கவனித்து போலீஸில் பிடித்து கொடுக்க முடிந்ததே தவிர பணத்தை மீட்க முடியவில்லை, ஆறு மாதம் கழித்து வேறு யாரையோ ஏமாற்ற டிப்டாப்பாக பஸ்ஸில் சென்றவனை பார்த்தது இன்றும் நினைவிருக்கிறது.

இது போல் ஒன்றரை லட்ச ரூபாய் டிராவலர் செக் மோசடி செய்தவன், கிரடிட் கார்டில் ஏமாற்றியவன் என்று பல வகையான திருடர்களை பார்த்ததில் ஒருவரிடம் கூட பால்ய வயதில் வந்த திருடனின் சாயல் இல்லை. ஆனால் அவனை விட இவர்கள் கொடுரமாக தெரிந்தார்கள்.

பொதுவாக சின்ன லெவலில் திருடுபவர்கள் வாங்கும் தண்டனை, லட்சங்களில் திருடுபவர்களுக்கு கிடைப்பதில்லை இன்னும் சொல்லப்போனால் ஓரளவு சட்டம் தெரிந்தவர்களாக இருப்பதால் ஈசியாக தப்பி விடவும் முடிகிறது.

கோடிகளில் திருடுபவர்களிடம் சட்டமே தன்னை ஒப்படைத்து விடுவதால் அவர்கள்தான் பெரிய பதவிகள் இருக்க முடிகிறது. இதுவரை பெரும்பாலான ஊழல் புகார்கள் நிருபிக்க முடியால் இருப்பது ஒரு சிறந்த உதாரணம்.

வேலை பற்றிய எனது பயங்கள் விலகி இருந்த நேரத்தில் திருமண கனவுகள் என்னை சூழ்ந்து கொண்டன,அது முடிந்த பின்பு எதிர்காலம் பற்றிய கனவுகள்.

என்னதான் கனவுகள் அதன் நிறத்தை மாற்றினாலும் அதன் அடிப்படை நாதமான பயம் என்றும் அதனுள்ளே ஒட்டிக்கொண்டே வந்து, எதிர்காலத்தைப் பற்றிய கவலையை ஏற்படுத்தி நமது நிகழ்காலத்தின் சந்தோசங்களை திருடிச் சென்று விடுகிறது.

,

45 comments:

நாஞ்சில் பிரதாப் said...

பணத்தை திருடுறதைப்பத்திறயே பேசுறீங்களே..சில பொண்ணுங்க இதயத்தை திருடிடறாங்களே அவங்களக்க தண்டையே கிடையாதா??? என்ன கொடுமை சார் இது...

க‌ரிச‌ல்கார‌ன் said...

//கோடிகளில் திருடுபவர்களிடம் சட்டமே தன்னை ஒப்படைத்து விடுவதால் அவர்கள்தான் பெரிய பதவிகள் இருக்க முடிகிறது.//

உண்மை தான்

அப்புற‌ம் நாஞ்சிலாரின் கேள்விக்கென்ன‌ ப‌தில்???????

நாடோடி said...

க‌ட்டுரை ந‌ல்லா இருக்கு அக்ப‌ர்..

//பணத்தை திருடுறதைப்பத்திறயே பேசுறீங்களே..சில பொண்ணுங்க இதயத்தை திருடிடறாங்களே அவங்களக்க தண்டையே கிடையாதா??? என்ன கொடுமை சார் இது...//

அதை ஆப்ப‌ரேச‌ன் ப‌ண்ணி எடுக்கிற‌ வ‌ரைக்கும் நீங்க‌ என்ன‌ ப‌ண்ணிட்டு இருந்தீங்க‌ த‌ல‌..

இப்ப‌டிக்கு,
இத‌ய‌த்தை த‌வ‌ற‌விடாத‌வ‌ர் ச‌ங்க‌ம்,
சௌதி அரேபியா.

தக்குடுபாண்டி said...

//எதிர்காலத்தைப் பற்றிய கவலையை ஏற்படுத்தி நமது நிகழ்காலத்தின் சந்தோசங்களை திருடிச் சென்று விடுகிறது// arumaiyaana varikal ....;)

ஆறுமுகம் முருகேசன் said...

ரைட்டு:)
நீங்க நடத்துங்க அண்ணா..

வானம்பாடிகள் said...

அதெப்புடி களவை கனவு திருடிச்சி:))

பிரசன்னா said...

//கோடிகளில் திருடுபவர்களிடம்/

(அஞ்சு பத்து திருடுபவர்களுக்கு விழும் அடி x எத்தனை கோடி)யோ அத்தனை அடி விழ வேண்டும் கோடிகளில் திருடுபவனுக்கு..

கண்ணா.. said...

//சில பொண்ணுங்க இதயத்தை திருடிடறாங்களே அவங்களக்க தண்டையே கிடையாதா???//

வே .. நாஞ்சிலு.... அவங்களுக்கு தண்டை இருந்தா என்ன இல்லேன்னா உமக்கென்னவே......

தண்டனைன்னு ஓழுங்கா டைப் பண்ண தெரியலை.... சொம்ப தூக்கிட்டு வாரானுவ... அநியாயமா என் இனத்துக்கு பங்கம் விளைவிக்க வார்ரான்

பிரபாகர் said...

நிகழ்காலத்தை திருடும் எதிர்காலத்தின் மேல் எப்போதும் பயம் சினேகிதா!

காத்தாடு விடுதல், பால்ய பருவத்தில் ஏற்படும் எண்ணங்கள் என நிறைய வழக்கம்போல் நமக்குள் ஒத்துப்போகும் விஷயங்கள் இதிலும்...

பிரபாகர்...

அக்பர் said...

வாங்க நாஞ்சிலு

//பணத்தை திருடுறதைப்பத்திறயே பேசுறீங்களே..சில பொண்ணுங்க இதயத்தை திருடிடறாங்களே அவங்களக்க தண்டையே கிடையாதா??? என்ன கொடுமை சார் இது...//

உங்களை கல்யாணம் பண்ணிக்கிறதை விடவா பெரிய தண்டனை வேணும்.

(தண்டை கொழுசு எல்லாம் இல்லாட்டி வாங்கி கொடுங்க பாஸ்)

உங்களோட இந்த கேள்வியைப்பார்த்து தமிழகமே கொதிச்சு போய் கிடக்கு. அவங்களை வேற சமாதானப்படுத்தனும். :)

அக்பர் said...

வாங்க கரிசல்

நாஞ்சில் வர வர டெர்ரரா கேள்வி கேட்க ஆரம்பிச்சிட்டாரு அவ்வ்வ்...

நன்றி.

அக்பர் said...

வாங்க ஸ்டீபன்.

//அதை ஆப்ப‌ரேச‌ன் ப‌ண்ணி எடுக்கிற‌ வ‌ரைக்கும் நீங்க‌ என்ன‌ ப‌ண்ணிட்டு இருந்தீங்க‌ த‌ல‌.. //

உங்களுக்கு விசயமே தெரியாதா? முதல் கம்ளைண்டே அங்கே இருந்துதான். இவரு ல(வ்)வட்டிக்கிட்டு வந்துட்டு இப்படி பேசுறாரு :)

//இப்ப‌டிக்கு,
இத‌ய‌த்தை த‌வ‌ற‌விடாத‌வ‌ர் ச‌ங்க‌ம்,
சௌதி அரேபியா.//

இது எப்போலேர்ந்து சொல்லவே இல்லை :)

அக்பர் said...

வாங்க தக்குடுபாண்டி

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

அக்பர் said...

வாங்க ஆறுமுகம்

//ரைட்டு:)
நீங்க நடத்துங்க அண்ணா..//

ரொம்ப நன்றி.

அக்பர் said...

வாங்க பாலா அண்ணே

//அதெப்புடி களவை கனவு திருடிச்சி:))//

இது எப்போ நடந்தது (எங்கேயாவது எழுத்து பிழை இருக்கா?)

அக்பர் said...

வாங்க பிரசன்னா

//(அஞ்சு பத்து திருடுபவர்களுக்கு விழும் அடி x எத்தனை கோடி)யோ அத்தனை அடி விழ வேண்டும் கோடிகளில் திருடுபவனுக்கு..//

அட போங்க பிரசன்னா. எந்த காலத்துல இது நடந்திருக்கு.

அக்பர் said...

வாங்க கண்ணா

பிரதாப்புக்கு (பேருலேயே ஆப்பு வச்சிக்கிட்டு அலையுது பாருங்க) சரியான ஆளு நீங்கதான் பாஸ். உங்களுக்குத்தான் அவர் அடங்குவாரு (ஏதோ நம்மாள முடிஞ்சது)

அக்பர் said...

வாங்க பிரபாகர்

நமக்கும் நம்மை சுற்றியுள்ளவர்களுக்கும் ஏக்கம் ஒன்றாகவே இருக்கிறது.

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

ஜெய்லானி said...

எங்கையே ஆரம்பிச்சி கடைசில முடிச்ச இடம் சூப்பர்....அக்பர்..!!

Starjan ( ஸ்டார்ஜன் ) said...

ஒவ்வொரு காலகட்டத்துலயும் எதாவது ஒரு பயம் நம்மை சூழ்ந்துகொள்கிறது. இப்படியே தொடர்ந்ததுனா எங்கபோய் முடியுமோ?...

அசத்தியிருக்கீங்க அக்பர்.

செ.சரவணக்குமார் said...

//பேருலேயே ஆப்பு வச்சிக்கிட்டு அலையுது பாருங்க//

பிரதாப் எங்கிருந்தாலும் மேடைக்கு வரவும்.

செ.சரவணக்குமார் said...

//இப்ப‌டிக்கு,
இத‌ய‌த்தை த‌வ‌ற‌விடாத‌வ‌ர் ச‌ங்க‌ம்,
சௌதி அரேபியா.//

ஸ்டீபன் அண்ணாச்சி, இத எப்ப ஆரம்பிச்சீக..

சொல்லவேயில்ல.

நாஞ்சில் பிரதாப் said...

வே...கண்ணா எழுத்துபிழைதானவே.... நீரென்ன பெரிய தமிழ்பண்டிட்டா... உமக்கு நான் சொன்ன மேட்டரு புரிஞ்சுதா இல்லையா... அவ்ளோதோன்...
நான் என்சொன்னாலும் குத்தம் கண்டுபிடிச்சு சொம்பை தூக்கி அலையுறீரேவே...
கொசு தொல்லை தாங்க முடில நாராயணா......

கமலேஷ் said...

உண்மைதான் ...

நல்ல ஆதங்க பதிவு.

நாஞ்சில் பிரதாப் said...

அக்பர் தல... பேருல ஆப்பு வச்சுருக்கனா... தப்பா புரிஞ்சுகிட்டீங்க இப்ப நான் கொடுக்கறேன் போருங்க விளக்கம்... பிரதாப்பு - பிற ஆப்பு- அதவாது பிறருக்கு ஆப்பு வைப்பது. அதான் பிரதாப்பு... எப்படி விளக்கம் நம்மகிட்டேயேவா.....
எல்லாம் எங்க குருவோடு கோச்சிங்தான்... குரு எங்கேருந்தாலும் மேடைக்கு வரவும்...

நாஞ்சில் பிரதாப் said...

//இத‌ய‌த்தை த‌வ‌ற‌விடாத‌வ‌ர் ச‌ங்க‌ம்,
சௌதி அரேபியா//

இப்படி வேற கிளம்பிட்டீங்களா.... தல ஸ்டீபன் இதயத்தை தவறவிடறதுல தப்பே இல்லை... பர்ஸைத்தான் தவறவிடக்கூடாது... (உள்குத்து புரிஞ்சிருக்கும்னு நினைக்கிறேன்)...

கும்மி அடிக்கிறதுல இருக்கற சுகம் வேற எதுலேயுமே இல்லை....

நாஞ்சில் பிரதாப் said...

ஸ்டீபன் நம்ம கொத்தனா கண்ணா கிட்ட எதுக்கும் கொஞ்சம் உஷராவே இருங்க... உங்களையும் எனக்கு எதிரா தூண்டிவிட்டு சதிபண்ணப்பாப்பாரு....

ஹேமா said...

ம்ம்...நிறையவே
யோசிக்கிறீங்கன்னு அர்த்தம் அக்பர் !

ராஜவம்சம் said...

உண்மையதான் சொல்றிங்களா!!!!!!!!
என் கனவெல்லாம் வெளியிட்டாள் அப்பறம் பதிவை தொறக்கும் போது

// உள்ளடக்க எச்சரிக்கை

இந்த வலைப்பதிவைப் படித்த சில வாசகர்கள் Google ஐ தொடர்பு கொண்டு இதன் உள்ளடக்கம் மறுப்பிற்குரியது என்று தெரிவித்துள்ளனர். பொதுவாக, Google எந்த வலைப்பதிவின் உள்ளடக்கத்தையும் மதிப்பாய்வு செய்வதுமில்லை மற்றும் பொறுப்பேற்பதுமில்லை. எங்கள் உள்ளடக்க கொள்கைகளைப் பற்றிய மேலும் விவரங்களுக்கு பிளாகரின் சேவை விதிமுறைகளைக் காண்க

நான் புரிந்து கொண்டேன், தொடர விரும்புகிறேன்.
தொடர்வதற்கு எனக்கு விருப்பமில்லை//

அப்படீன்னு வரும்.

சீமான்கனி said...

//கோடிகளில் திருடுபவர்களிடம் சட்டமே தன்னை ஒப்படைத்து விடுவதால் அவர்கள்தான் பெரிய பதவிகள் இருக்க முடிகிறது.//

சுவாரஸ்யமா சொல்லி இருக்கீங்க அக்பர்ஜி...திருடனாய் பார்த்து திருந்தா விட்டால் திருட்டை ஒழிக்க முடியாதோ???

நேசமித்ரன் said...

களவொழுக்கம் படிச்சிருக்கீங்களா சினேகிதா

:)

நல்ல இடுகை கோர்த்தாற் போல்!

அக்பர் said...

நன்றி ஜெய்லானி

நன்றி Starjan ( ஸ்டார்ஜன் )

அக்பர் said...

வாங்க சரவணன்

//பிரதாப் எங்கிருந்தாலும் மேடைக்கு வரவும்.//

ஐயா! நீங்க ஒரு ஆள் பொதுமப்பு.

//ஸ்டீபன் அண்ணாச்சி, இத எப்ப ஆரம்பிச்சீக..
சொல்லவேயில்ல.//

முதல்ல சங்கத்துல சேருர வழியப்பாருங்கவே.

இதையெல்லாம்தான் படிச்சிங்களா. பதிவைப்பத்தி ஒன்னுமே சொல்லலை. (சொல்றதுக்கு என்ன இருக்குன்னு கேட்டுபுடாதிங்க அவ்வ்வ்)

அக்பர் said...

வாங்க நாஞ்சிலு

கண்ணாவுக்கு கொடுத்த கவுண்டர் சூப்பர்.

//பிரதாப்பு - பிற ஆப்பு- அதவாது பிறருக்கு ஆப்பு வைப்பது. அதான் பிரதாப்பு... எப்படி விளக்கம் நம்மகிட்டேயேவா..... //

அதையேத்தான் நானும் சொன்னேன் தல :)

//இப்படி வேற கிளம்பிட்டீங்களா.... தல ஸ்டீபன் இதயத்தை தவறவிடறதுல தப்பே இல்லை... பர்ஸைத்தான் தவறவிடக்கூடாது... (உள்குத்து புரிஞ்சிருக்கும்னு நினைக்கிறேன்)...//

அவரு ரொம்ப நல்லவருயா (பால் வடியும் முகம்) அவரைப்போய்....

//கும்மி அடிக்கிறதுல இருக்கற சுகம் வேற எதுலேயுமே இல்லை....//

சாரி தல நான் வெளியில போயிருந்ததால ஜோதியில ஐக்கியமாக முடியலை. இன்னொரு சமயம் அடிப்போம்.

//ஸ்டீபன் நம்ம கொத்தனா கண்ணா கிட்ட எதுக்கும் கொஞ்சம் உஷராவே இருங்க... உங்களையும் எனக்கு எதிரா தூண்டிவிட்டு சதிபண்ணப்பாப்பாரு....//

ஆமா! நாங்கல்லாம் அவரு சொல்லித்தான் சதி பண்ணுறோமாக்கும். ஏன் தல சும்மா இருக்கிறவரையும் உங்களுக்கு எதிராவே தூண்டி விடுறீங்க.

எப்படியோ என்னோட வேலை முடிஞ்சிது. முடிஞ்சா மத்தமக்கள் தொடரலாம் :)

அக்பர் said...

வாங்க கமலேஷ்

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

அக்பர் said...

வாங்க ஹேமா

//ம்ம்...நிறையவே
யோசிக்கிறீங்கன்னு அர்த்தம் அக்பர் !//

நிறைய நேரம் கிடைக்குதுன்னும் அர்த்தம் :)

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

அக்பர் said...

வாங்க ராஜவம்சம்

உங்க கனவு அம்புட்டு டெர்ரராவா இருக்கும்!

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

அக்பர் said...

வாங்க சீமான்கனி

நாமளும் அவங்கள மாதிரி மாறுவதுதான் ஒரே வழி.

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

அக்பர் said...

வாங்க நேசண்ணே

//களவொழுக்கம் படிச்சிருக்கீங்களா சினேகிதா//

இல்லைண்ணே.

//நல்ல இடுகை கோர்த்தாற் போல்!//

உங்க வாயிலிருந்து இதை கேட்க மகிழ்ச்சியாயிருக்கு.

நன்றிண்ணே.

thenammailakshmanan said...

படிப்பை பற்றிய பயம் வந்த போது திருடனை பற்றிய கனவுகள் மறைந்து ஃபார்மூலாக்களும் , மூலக்கூறுகளும் கனவுகளின் மூலம் ஆக்கிரமிக்க தொடங்கின. ஒரு வழியாக படிப்பை முடித்தாலும் வேலை என்னும் அரக்கன் முன்பை விட அதிக பயத்தை ஏற்படுத்தினான்//
எப்பவும் ஒரு பயத்தை இன்னொரு பயம் துரத்துதுங்குறதுஉண்மைதானா..??? ...:)))

அக்பர் said...

வாங்க தேனக்கா

அது உண்மைதான்க்கா

abul bazar/அபுல் பசர் said...

கோடிகளை திருடுபவன் மாடமாளிகைகளிலும்,பசிக்கு திருடுபவன் சிறையிலும்.

இதுதான் ஒட்டுமொத்த உலகத்தின் சாபக்கேடு.
நல்ல பதிவு அக்பர்.

சே.குமார் said...

உண்மைதான்....

நல்ல பதிவு.

இளம் தூயவன் said...

அக்பர் இவ்வளவு பயத்த வச்சிக்கிட்டு எப்படி சவூதிக்கு வந்திங்க.

சுல்தான் said...

எங்கள் ஊரில் நான் சிறுவனாக இருந்த போது ஒரு திருடன் மாட்டிக் கொண்டான். பிடித்து கட்டி வைத்திருந்தார்கள்.
ஊர்ப் பெரியவர் வந்தார்
டேய் யார்ரா திருடன்?
எலே நீயாடா! அட போங்கடா! நான் என்னவோ கன்னங்கரேல்னு, தடியா, முரட்டு மீசை வச்சுகிட்டு, உடம்பெல்லாம் எண்ணெய் தடவிட்டு வருவான்னு பார்த்தேன்.
(பக்கத்து ஊர் பெயரைச் சொல்லி)______ஊர் கோயிந்து உனக்கென்னடா வேணும்.
அவரு மகந்தான் (இது வேறொருவர்)
வயித்து பசிக்கு திருடிருக்கான். எலே! வேல கொடுத்தா ஒழுங்கா செய்வியாடா?
செய்றேனுங்க ( இது திருடன்)
கட்டவுத்துடுங்கடா. அந்த ஹோட்டல்ல இவனுக்கு வேல குடுங்கடா

அதற்கப்புறம் எத்தனையோ முறை திருடனாக இருந்த அந்த அண்ணணை பார்த்திருக்கேன். சிநேகமா சிரிக்கும். என்னுடைய திருடன் பயம் இந்த அண்ணணுக்கு முன்னதான்.

இதையும் விரும்புவீர்கள்.

Related Posts with Thumbnails