கேட்டுவிட்டு எல்லோரும் சேர்ந்து மொத்தினார்கள். பின்னே சின்னதம்பி படத்தை டிவியில பார்த்துட்டு கதை சொன்னா யாருக்கு கோபம் வராது.அது மாதிரி இன்னைக்கு சில விசயங்கள் அரதப்பழசா இருக்கலாம் பொறுத்தருள்க..
===================
நேற்றுதான் ஏர்டெல் சூப்பர் சிங்கர் அல்கா அஜீத்தின் சிங்காரவேலன் பாடல் பார்க்க முடிந்தது. வாய்ப்பே இல்லை என்ன ஒரு அருமையான குரல், பிசிறேயில்லாமல்! பாடல் முடிந்ததும் அனைத்து பாடகர்களும் எழுந்து நின்று கைத்தட்டியபோது. எனக்கே ரெண்டு ஐஸோட அவுட்டர் எட்ஜில் இருந்தும் வாட்டர் வந்திருச்சு.
என்னதான் மலையாளிஸ் மேல கோபம் இருந்தாலும், இசைக்கு ஏது மொழிங்கிறதால அல்காவிற்கு வாழ்த்துகள்.
=====================
ரொம்ப நாளைக்கப்புறம் மீண்டும் இருந்த இடத்தை விட்டு நகராமல் ஒரு படம் முழுவதையும் பார்க்கவைத்து விட்டார் இயக்குனர் சற்குணம். சில படங்கள் பார்க்கிற நம்மையும் கதைக்குள்ளே தொபுக்கடீர்ன்னு இழுத்துப்போட்டுவிடும். முதல் காட்சியில் இருந்தே அந்த வேலையை கச்சிதமாக செய்கிறான் களவாணி.
இப்படி எடுத்தாத்தான் வெற்றி பெரும் என்று எந்த எண்ணமும் இல்லாமல் இயல்பான ஒரு கதையை கொடுத்த இயக்குனருக்கு நன்றிகள். விமலுக்கு நல்ல வாய்ப்புகள் அமைய வாழ்த்துகள். (இது மாதிரி ஒரு ஆள் கூட இருந்தா கஷ்டம்தான் :)).
======================
இயல்பான கதை என்ற உடன் ஞாபகத்திற்கு வருவது மலையாள படங்கள்தான். ஏஷியாநெட்டில் மதியம் போடும் திரைப்படங்கள் எங்களின் ஒரு மணி நேர தூக்கத்தை கெடுத்து விடுகின்றன. பாதியிலேயே அணைத்து விட முடிவதில்லை. எல்லாமே 80 90 களில் வெளிவந்த படங்கள்.
இப்போதெல்லாம் கேரள மக்களே நமது சிங்கத்தையும் வேட்டைக்காரனையும் விரும்புவதால் அக்கரைச்சீமையிலும் முன்பு போல் இல்லாமல் இப்போது அடிதடி படங்கள்தான் அதிகம் வருகின்றன. எப்படி இருந்த மலையாள சினிமா....
=======================
நண்பர் கவிஞர் ஆறுமுகம் முருகேசன் வெள்ளியன்று இங்கு வந்திருந்தார். ( அதற்கு இருவாரம் முன்பு சரவணனுடன் சேர்ந்து வந்திருந்தார் ). இங்கு இருக்கும் எங்களுக்கு இது போன்ற சந்திப்புகள் மகிழ்ச்சியாகவும், மன அழுத்தத்தில் இருந்து விடுபடவும், புதிய நம்பிக்கைகள் பிறக்கவும் வழி செய்கிறது.
(செ. சரவணகுமார், அக்பர், ஸ்டார்ஜன்)
(செ. சரவணகுமார், ஆறுமுகம், ஸ்டார்ஜன்)பதிவுலகம், பட உலகம், ஊர், நட்புகள் என்று பல திசைகளில் பயணித்த பேச்சு கவிதையையும் தொட்டு சென்றது. எல்லா கவிதைகளும் புரிவதில்லையே எனக்கேட்ட போது. விளக்கம் சொன்னால் அதுக்குப்பேர் கவிதை இல்லை என்றார்.
தற்கொலை செய்வது கொள்வது பற்றி எழுதியிருந்த கவிதைக்கு கருத்துக்கள் கேட்டார். படித்துவிட்டு, இதை படிச்சதும் தற்கொலை செய்துக்கணும்னு தோணுதுன்னு சொன்னேன். விழுந்து விழுந்து சிரித்தார். (அப்படி என்ன தப்பா சொல்லிட்டேன்).
சும்மா தமாசுக்கு இப்படி சொன்னாலும். நண்பர் ஆறுமுகத்தின் கவிதைகள் தொடர்ச்சியாக உயிரோசை, கீற்று போன்ற இணைய இதழ்களில் வெளியாவது அவரது திறமைக்கு சான்று.
அன்றைய பொழுது இனிமையாக கழிந்தது.
,
46 comments:
1. ஆரம்பமே பொய்.... படிக்கிற காலத்தில்னு சொன்னா...நாம என்னைக்குத்தல படிச்சோம்
ஸ்கூலுக்கு போன்காலத்தில்னு சொல்லனும்...
2. அல்கா பாட்டு கலக்கல்... அந்தப்பொண்ணு மலையாளின்னு தெரிஞ்சுபோச்சா..
3. விமல் அடுதத தளபதி ஆகாமா இருந்தா சரி
4. மாயா பஜார், போக்கிரி ராஜா பாருங்க நம்ம பேரரசே தோத்தாரு போங்க...
5, அந்த கவிதை நீங்க எழுதனது நீங்க சொன்ன டயலாக் ஆறுமுகம் சொன்னதா இருக்கும்... மாத்தி சொன்னா நம்பிருவோமா....
1.இதுல என்ன சொல்ல வர்றீங்க... என்னை எல்லாம் மொத்த வரமுடியாது.. நான் இருப்பது சவுதினா?..
2.இருங்க உங்க ரூம் மேட்டு மலையாளி சேட்டா கிட்ட போட்டு கொடுத்துர்றேன்.. எப்ப பார்த்தாலும் உங்களையே வம்புக்கு இழுப்பது தான் அக்பரின் வேலையென்று....:))))
மிட்டாய்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு சுவை.
இசையில் மொழிபாகுபாடு பார்க்கவேண்டாம் என்பது என் கருத்து.
விமல் நடிப்பு எதார்த்தமா இருக்கு...
அப்போ நாமும் விரைவில்
சி(ச)ந்திப்போம் நான் ஜித்தாவில் நீங்க???பகிர்வுக்கு நன்றி...
நல்ல பகிர்வு அக்பர். நீங்கள் குறிப்பிடுவதுபோல இப்போதைய மலையாளத் திரைப்படங்களில் பழைய யதார்த்தத்தைப் பார்க்க முடிவதில்லை.
நண்பர் ஆறுமுகம் முருகேசனுடனான சந்திப்பைப் பகிர்ந்தமைக்கு நன்றி.
மிட்டாய் கலக்கலா இருக்கு.
//எல்லா கவிதைகளும் புரிவதில்லையே எனக்கேட்ட போது. விளக்கம் சொன்னால் அதுக்குப்பேர் கவிதை இல்லை என்றார்.//
ஆமா உண்மைதானே சொன்னார் (( ஒரு வேளை அவருக்கும் தெரியலையோ என்னவோ ))
நல்ல பகிர்வுகள் அக்பர்.
நேத்து பிறந்த மாப்ளை கூட உங்களை வந்து பார்த்துட்டார். நான்தான் பார்க்க முடியாமல் இருக்கு. மிஸ் you makkaals. :-)
மிட்டாய் ரொம்ப சூப்பருங்கோ..
இப்பவாவது முகத்த காட்டினிங்க..
நன்றி
////எல்லா கவிதைகளும் புரிவதில்லையே எனக்கேட்ட போது. விளக்கம் சொன்னால் அதுக்குப்பேர் கவிதை இல்லை என்றார்.//
படித்தவுடன் புரிந்தால் அதற்குப்பெயர் கவிதையல்ல கட்டுரை என யாரோ ஒரு கவிஞர் சொன்ன ஞாபகம்..
//ரொம்ப நாளைக்கப்புறம் மீண்டும் இருந்த இடத்தை விட்டு நகராமல் ஒரு படம் முழுவதையும் பார்க்கவைத்து விட்டார் இயக்குனர் சற்குணம்// உண்மை!
ஏஷியாநெட்டில் மதியம் போடும் திரைப்படங்கள் எங்களின் ஒரு மணி நேர தூக்கத்தை கெடுத்து விடுகின்றன./
ம், கரெக்டா சொன்னீங்க.
/தற்கொலை செய்வது கொள்வது பற்றி எழுதியிருந்த கவிதைக்கு கருத்துக்கள் கேட்டார். படித்துவிட்டு, இதை படிச்சதும் தற்கொலை செய்துக்கணும்னு தோணுதுன்னு சொன்னேன். விழுந்து விழுந்து சிரித்தார். [b](அப்படி என்ன தப்பா சொல்லிட்டேன்).[/b]/ ஹா ஹா யோவ் அண்ணா இதெல்லாம் சரி இல்ல ஆமா :)))
மிட்டாய்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு சுவை.
நண்பர் ஆறுமுகம் முருகேசனுடனான சந்திப்பைப் பகிர்ந்தமைக்கு நன்றி.
என்னதான் மலையாளிஸ் மேல கோபம் இருந்தாலும், இசைக்கு ஏது மொழிங்கிறதால அல்காவிற்கு வாழ்த்துகள்.///
ஸேம் ப்ளட்...
மிட்டாய் சூப்பர்...
1. ஏய்..ஏய்ய் அப்படியெல்லாம் சொல்லக்கூடாது...
2. பொண்ணு பாவம் ப்ளீஸ்...
3. தளபதி பாவம் ப்ளீஸ்...
4. அவங்களையும் விடலையா...
5. டோட்டல் டேமெஜ்
சந்தோசமா நாஞ்சிலு :)
வாங்க ஸ்டீபன்
அடுத்து உங்க ரவுண்டா நடத்துங்க :)
//எனக்கே ரெண்டு ஐஸோட அவுட்டர் எட்ஜில் இருந்தும் வாட்டர் வந்திருச்சு.//
இப்படியெல்லாம் எழுதி தமிழை கொலை செய்யாதீர்கள், திரைத்துரையினரும், செய்தி இதழ்களும் தான் புதுமை என்கிற பெயரில் இப்படியெல்லாம் எழுதும், கவுண்டமணியை பின்பற்றி மணிவண்ணன் நகைச்சுவை என்கிற பெயரில் தமிழையும் ஆங்கிலத்தையும் சேர்த்துப் பேசி தமிழைக் கெடுத்தார்.
:(
எனக்கு ஒன்று புரிந்துவிட்டது, முதல் படத்தை ஆறுமுகம் எடுத்து இருக்கிறார், இரண்டாம் படத்தை நீங்கள் எடுத்து இருக்கிறீர்கள்,
:)
namma valaikku vanthu nalachchu pola...
http://www.vayalaan.blogspot.com
உங்களுடைய சந்திப்பை எல்லோருடன் பகிர்ந்து கொண்டது ரொம்ப சந்தோசம், விரைவில் நாம் எல்லோரும் சந்திப்போம்.
//இப்போதெல்லாம் கேரள மக்களே நமது சிங்கத்தையும் வேட்டைக்காரனையும் விரும்புவதால் அக்கரைச்சீமையிலும் முன்பு போல் இல்லாமல் இப்போது அடிதடி படங்கள்தான் அதிகம் வருகின்றன. எப்படி இருந்த மலையாள சினிமா....//
கேரளாவில் பையா 100 வது நாளாம் .....
இனிக்க இனிக்க ஒரு மிட்டாய்..
வாங்க சீமான்கனி
//இசையில் மொழிபாகுபாடு பார்க்கவேண்டாம் என்பது என் கருத்து.//
எனது கருத்தும் அதுதான்.
//அப்போ நாமும் விரைவில்
சி(ச)ந்திப்போம் நான் ஜித்தாவில் நீங்க???பகிர்வுக்கு நன்றி...//
சந்திப்போம். நான் அல் ஹசாவில் இருக்கிறேன்.
நன்றி.
நல்ல பகிர்வு
நல்ல பகிர்வு நன்றி.
ஏற்கனவே அல்காவுக்கு அவார்ட் கொடுத்ததுல ஏர்டெல் மீது கொலைவெறியில் இறுக்கிறார் கோவி...
சுவை(யான மிட்டாய்கள்)
வாங்க சரவணன்ஜி
எல்லோரும் அடிதடிக்கு மாறிட்டாங்க போலிருக்கு.
அடுத்த முறை நீங்களும் சேர்ந்து வாங்க.
நன்றி.
எல்லாம்....எல்லாமே நல்ல பகிர்வுகள்.சிங்கார வேலன் பாட்டு ஜானகி அம்மாவே பாராட்டும் அளவுக்கு அவ்வளவு இனிமையாய் எதுவும் பிசகாமல் அல்கா அஜீத் பாடியதை நானும் ரசித்திருந்தேன்.
ஆறுமுகம் முருகேசன் அவர்களது கவிதைக்கு நானும் ரசிகை.
அருமையான கவிதைகள்.அவரது தற்கொலை கவிதை நீங்கள் சொல்வது போலவே நானும் உணர்ந்தேன்.நன்றி அக்பர்.
புகைப்படங்களும் பகிர்வும் அருமை அக்பர்.. ஆறுமுகம் முருகேசன்.. நானும்படித்திருக்கிறேன் .. வாழ்த்துக்கள்..
//இது போன்ற சந்திப்புகள் மகிழ்ச்சியாகவும், மன அழுத்தத்தில் இருந்து விடுபடவும், புதிய நம்பிக்கைகள் பிறக்கவும் வழி செய்கிறது//
உண்மை தல... நண்பர்கள் சந்திப்பை பார்க்கும் போது மகிழ்ச்சியாக இருக்கு...
மிட்டாய் அருமை
வாங்க ஜெய்லானி
சும்மா கலாய்க்கத்தான்.
வருகைக்கு நன்றி.
வாங்க பா.ரா அண்ணா
நாமளும் விரைவில் சந்திப்போம். அவலுடன் இருக்கிறேன்.
நன்றி.
வாங்க ரியாஸ்
நாந்தான் உங்களுக்கு நன்றி சொல்லனும். என்னை பார்த்ததுக்கு :)
நன்றி.
வாங்க ஆர்.கே.சதீஷ்குமார்
நீங்களும் பார்த்தாச்சா. நல்லாயிருந்துச்சுல்ல.
நன்றி.
வாங்க ஆறுமுகம்
இப்படியெல்லாம் எழுதுனதுல உங்களுக்கு வருத்தம் இல்லையே. இருந்திச்சுன்னா சொல்லுங்க. இன்னும் ரெண்டு பிட்டு சேர்த்து எழுதுவோம்.
நன்றி.
வாங்க சே. குமார்
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
வாங்க இர்ஷாத்
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
வாங்க கோவி அண்ணா
இனிமே இப்படி எழுதுவதை மாற்றுகிறேன்.
கரெக்டா கண்டுபிடிச்சிட்டிங்களே.
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
வாங்க இளம் தூயவன்
விரைவில் சந்திப்போம்.
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
வாங்க கரிசல்காரன்
சிங்கமே சிலிர்த்துக்கிட்டு ஓடுதாமுலோ.
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
வாங்க பிரசன்னா
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
வாங்க T.V.ராதாகிருஷ்ணன் ஐயா
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
வாங்க ராஜவம்சம்
ஆமாம் நானும் படித்தேன் :)
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
வாங்க நிஜாம்
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
வாங்க ஹேமா
உண்மையிலேயே அவர் சிறந்த கவிஞர்தான்
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
வாங்க தேனக்கா
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
வாங்க கண்ணா
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
அல்கா அஜித் பாடல் நெஜமாவே அருமைங்க.. எனக்கும் அப்படி தான் தோணுச்சு.. :-)
என்ன ஒரு வாய்ஸ்.. ஹ்ம்ம்.. உண்மையிலே சூப்பர் சிங்கர் டைட்டில் பொருத்தம்..
உங்கள் நட்புக்கள் மென்மேலும் தொடரட்டும்.. பகிர்வுக்கு நன்றி.
வாங்க Ananthi
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
Post a Comment