"யப்பா! டிக்கட் எடுத்து வச்சிட்டியா! எல்லா துணியையும் பேக்குல வச்சிட்டியா? எல்லாத்தையும் ஒரு தடவை சரி பார்த்துக்கோ." அத்தா
"அந்த ஊறுகாய் பாட்டிலை கவர்ல சுத்தி வச்சசிருக்கேன். துணிமணியில படாம பார்த்துக்கோ இல்லைன்னா எண்ணை மக்கா ஆயிடும்" அம்மா
"இப்படி கல்யாணம் ஆனா புதுசிலேயே விட்டுட்டு வெளியூர் போக எப்படி மனசு வருது" அப்படின்னு வாயால் கேட்காமல் கண்ணீரால் கேட்கும் மனைவி.
திருமணத்துக்கு எடுத்த ஒரு மாத லீவு முடிந்து வேலைக்கு கிளம்பும் போது நடந்தவைதான் மேலே.
அண்ணனின் M 80 யில் 8 மணிக்கு பஸ்ஸ்டாண்ட் வந்து சேர்ந்தோம். 8.30 நெல்லை To சென்னை TTC ஸ்னேகம் 180V . வழக்கமாக செல்லும் பஸ்ஸிற்கு பதில் ஸ்பேர் பஸ் ஸ்பேர் பார்ட்ஸ் மாட்டும் கண்டிஷனில் நின்றது.
" யப்பா இந்த வண்டியா டிக்கட் எடுத்தே!" "இல்லைண்ணே இன்னைக்கு வண்டி மாத்திட்டாங்க போலருக்கு"
"பாத்து பத்திரமா போயிட்டு வாப்பா."
" சரிண்ணே வீட்டுல எல்லாத்தையும் கேட்டதா சொல்லிடுங்க."
வண்டியில் ஏறினேன். பொதுவா என்னை பார்த்தாலே என் பக்கத்தில இருக்க விருப்பபடுவாங்க பலர். ஏன்னா நான் அப்போ அந்தளவு ஸ்லிம். எனது ஜன்னலோர இருக்கையை தேடினேன்.
ஏற்கனவே உட்கார்ந்திருந்த 45 மதிக்கதக்க ஒருவர் என்னை பார்த்து குஷியாகி. "தம்பி உங்க சீட்டா இது! எனக்கு வாமிட் வரும் அதனாலதான் இங்க உட்கார்ந்துட்டேன்."
(ஐய்! ஆசையப்பாரு ரிசர்வ் பண்ணுறதே ஜன்னலோர சீட்டுக்குதானே) "சரியாப்போச்சு எனக்கும் அதே பிரச்சனை தான் சார். அதான் இதை புக் செஞ்சேன்."
ஒருவழியா அவரை கிளப்பி நான் அமர்ந்து கொண்டேன். பார்க்க நல்லவராகத்தான் தெரிந்தார். உண்மையிலேயே அவர் வாந்தி எடுத்தால் என்ன செய்யங்கிற பயத்தை விட அவர் "உங்களுக்கு வாந்தியே வரலையே தம்பி"ன்னு கேட்டா என்ன சொல்லங்கிற யோசனைதான் அதிகமா இருந்தது.
ஒரு வழியாக வண்டி நிறைந்து புறப்பட்டது. வழக்கம் போலவே சன் டிவியில் இருந்து காப்பி செய்த மொக்கை படம் போடப்பட்டது. முக்கால்வாசி படம் முடியும் போது கோவில்பட்டி தாண்டியுள்ள ஓட்டலில் வண்டி நிறுத்தப்பட்டது.
பொதுவாகவே ஓட்டுனர்களுக்கும்,ஓட்டல்காரங்களுக்கும் உள்ள டீலிங் உலக பிரசித்தம் என்பதால். நெல்லை ஜன்னத் ஹோட்டலில் அரை பிளேட் பிரியாணி பார்சல் வாங்கியிருந்தேன்.
எல்லோரும் இறங்கிய உடன் பார்சலை திறந்து கொண்டுவந்த தண்ணீர் பாட்டில் துணையுடன் சாப்பிட்டு முடித்தேன். நம்மாளு புலம்பிக்கொண்டே ஏறினார்." என்னா அநியாயம் தம்பி இது ரெண்டு காய்ஞ்ச தோசைக்கும், ஒரு சிக்கன் எலும்புக்கும் 50 ரூபாய் வாங்கிட்டான் நல்லாயிருப்பானா." அப்படின்னார்.
"சரி விடுங்க சார் வெளியூர் பயணத்துல இதுதான் பிரச்சனை. முடிஞ்சா அடுத்த முறை பார்சல் கொண்டுவந்துடுங்க. சரி வாங்க ஒரு டீ குடிச்சிட்டு வரலாம்"னு அவருடன் கீழே போனேன்.
அப்போதுதான் கவனித்தேன். அருகில் ஒரு தம்பதிகள் டீ குடித்துக்கொண்டிருந்தார்கள். இருவருக்குமே 30 வயதுக்குள் இருக்கும். கணவன் கொஞ்சி கொஞ்சி பேசிக்கொண்டு கேட்டதை எல்லாம் வாங்கி கொடுத்துக்கொண்டிருந்ததை பார்க்கும் போது கடுப்பாக இருந்தது. பின்னே புதுசா கல்யாணம் ஆனா என் முன்னாடி இப்படி நடந்தா எனக்கு எப்படியிருக்கும்.
பிழைக்க ஒரு ஊர்! வாழ ஒரு ஊர்ன்னு பராசக்தி வசனத்தை மனசுல நெனச்சி நொந்து கொண்டு பஸ்ஸுல ஏறி உட்கார்ந்தேன். படத்தை ஓட விட்டு வண்டி கிளம்பியது. படம் முடியும் முன்னரே பாதி பேர் தூங்கியிருந்தார்கள். வண்டி மதுரையை தாண்டி போய்க்கொண்டிருந்தது.
ஊர் கனவுகளோடு நல்ல தூக்கத்தில் இருந்த போது சட் சட்னு மொத்துற சத்தம் கேட்டு திடுக்கிட்டு கண் விழித்தால் நடுநிசி 2 மணி. கடைசி இருக்கைக்கு முன் இருக்கையில் அமர்ந்திருந்த மனைவியை அடித்துக்கொண்டிருந்தான் கணவன்.
"ச்ச்சீய்.. நீயெல்லாம் பொம்பளையா... தே____,,, *&# கேவலப்பட்ட மு*%$# , பின்னாடி ஒருத்தன் கையைவிட்டுக்கிட்டு இருக்கான். கண்டுக்கிடாம இருக்கியே" அப்படின்னு அடி பின்னிக்கிட்டு இருந்தான். அவன் வேறு யாருமல்ல டீக்கடையில் பார்த்த தம்பதிதான். அதற்குள் எல்லோரும் அவனை பிடித்தார்கள். பேருந்து ஓரமாக நிறுத்தப்பட்டது.
"இல்ல... யாரு செஞ்சா.... ஏன் இப்படி... ஐயோ ஒன்னுமில்லை... அப்படி நடக்கலைங்க... ஏன் இப்படி பேசுறீங்க" அவமானத்தால் கூனிக்குறுகி பேசினாள் அவள்.
"ஏட்டி வாயை மூடு. அவன் செய்றதுக்கு நீ என்ன செய்யிறேன்னு நானும் அரை மணி நேரமா பாத்துகிட்டுதாண்டி இருக்கேன். பாதவத்தி நல்லாவுல கொடுத்துகிட்டு இருக்கே... ச்சீய்ய் நாண்டுக்கிட்டு சாவலாம்." அவன் பேச்சில் ஏமாற்றத்தாலும், துரோகத்தாலும் பாதிக்கப்பட்டிருந்தது தெரிந்தது.
பின்னாலிருந்து "நான் செய்யலையே ... நான் இல்லை... ஒன்னும் இல்லை " அப்படின்னு சன்னமாக கேட்டகுரல் இவன் சத்தத்தில் அடங்கிப் போனது.
ஊருக்கு போய் உனக்கு இருக்குடின்னு சொல்லிக்கொண்டிருந்தவனை
ஒரு வழியாக அமைதிப்படுத்தி டிரைவருக்கு பின்னால் அமரவைத்து வண்டி கிளம்பியது.
பாவம் அந்த பெண். தூக்கத்தில் இருந்த போது இது நடந்ததா? அல்லது
புருஷனுக்கு பயந்து இதை சொல்லாமல் மறைத்தாளா? அல்லது நிஜமாகவே அவன் சொன்னது போல் அவ்வளவு மோசமானவளா ? என்ற சிந்தனை எனக்குள் ஓடிக்கொண்டிருந்தது.
அதை விட அதிக கோபமும், ஆற்றாமையும் பின்னாலிருந்து கைவைத்து ஒரு பெண்ணின் வாழ்க்கையை கெடுத்த அந்த பொறுக்கி ராஸ்கல் மீது வந்தது. இவன் செஞ்ச தப்புக்கு பாதிக்கப்படப்போகும் அந்த பெண்ணின் வாழ்க்கை எண்ணி கண்ணில் நீர் வந்தது.
,

44 comments:
அருமையான பகிர்தல் அக்பர்.
//வழக்கம் போலவே சன் டிவியில் இருந்து காப்பி செய்த மொக்கை படம் போடப்பட்டது.//
ஆமா அக்பர், நான் போகும்போதும் லொப்பை படம்தான் போட்டாங்க.
ஆனா கடைசியில ஒரு ட்விஸ்ட் கொடுத்திருக்கீங்க பாருங்க.. மிக அருமை.
நல்ல பதிவு.
அருமையான பதிவு. நான் புதிதாக வலைப்பூ ஆரம்பித்துள்ளேன். உங்களின் ஆதரவு தேவை.
அக்பர்,
அபரிதமான திறமை உங்களிடம் உள்ளது.தொடர்ந்து எழுதவும்.
அதை விட அதிக கோபமும், ஆற்றாமையும் பின்னாலிருந்து கைவைத்து ஒரு பெண்ணின் வாழ்க்கையை கெடுத்த அந்த பொறுக்கி ராஸ்கல் மீது வந்தது. இவன் செஞ்ச தப்புக்கு பாதிக்கப்படப்போகும் அந்த பெண்ணின் வாழ்க்கை எண்ணி கண்ணில் நீர் வந்தது.
....... கதையின் எழுத்து நடை, கரு, உணர்வுகள் எல்லாம் அருமையா இருக்கு.
அவன் ஒரு ஆம்பிளையான்னு தான் கேக்க தோனுது சிநேகிதரே
மனைவி என்னா செய்றான்னு பார்த்துகிட்டு இருக்கானாம், அப்பாளிக்கா மனைவியை மொத்துவானாம் பின்னாடி இருந்த அந்த !@#$%^& போட்டு மொத்த வேண்டியது தானே ...
ஜமால் சொல்வது சரியே,
நல்ல எழுத்து நடை அக்பர்.
நைஸ்
கதை நல்ல இருக்கு அக்பர்..இயல்பான எழுத்து நடை.
அந்த ஆளை ரெண்டு சாத்து சாத்தணும் போலிருக்கு! அருமையா எழுதியிருக்கீங்க!!
ம்.. எழுத்து நடை அட்டகாசம் தல...
எதிர்பாராத கடைசி சம்பவம் அதிர்ச்சிதான்...
மொக்கை படம், கோவில்பட்டி மோட்டல்னு விவரித்தது இயல்பாக இருந்தது.
தொடர்ந்து இது போலவும் எழுதுங்கள்
//ஸ்பேர் பஸ் ஸ்பேர் பார்ட்ஸ் மாட்டும் கண்டிஷனில் நின்றது.//
:-)))
சந்தேகப் புத்தியுள்ளவன் போல!! அந்தப் பெண்ணின் மேல் கோவமும் வருது, பாவமாவும் இருக்கு.
வாங்க ஸ்டார்ஜன்
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
வாங்க மினிமினி
//நான் புதிதாக வலைப்பூ ஆரம்பித்துள்ளேன். உங்களின் ஆதரவு தேவை.//
ஆதரவு எப்போதும் உண்டு.
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
\\நட்புடன் ஜமால் said...
அவன் ஒரு ஆம்பிளையான்னு தான் கேக்க தோனுது சிநேகிதரே
மனைவி என்னா செய்றான்னு பார்த்துகிட்டு இருக்கானாம், அப்பாளிக்கா மனைவியை மொத்துவானாம் பின்னாடி இருந்த அந்த !@#$%^& போட்டு மொத்த வேண்டியது தானே ...
\\
அப்படியே ஆமோதிக்கிறேன்,,
வாங்க பா.ரா அண்ணே
//அபரிதமான திறமை உங்களிடம் உள்ளது.தொடர்ந்து எழுதவும்.//
உங்களைப்போன்றோரின் ஊக்கமே என்னை தொடர்ந்து எழுதவைக்கிறது.
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
நிஜமோ புனைவோ முதலில் கணவனைச் சொல்லனும்..
அரைமணி பாக்கிறானாம்.
பின்னாலிருந்து கை வைத்தவன் சராசரி ஆண் பலரைப் போல..
அப்படியிருந்தால் அதைக் கண்டிக்காத பெண் ஒன்று தூக்கத்தில் கவனிக்காமல் இருந்திருக்கனும் இல்லை மோசமானவளாக இருக்கனும்
இதே போன்று ஒரு திடீர் 'பந்த்' தினத்தில் சென்னையிலிருந்து அரசு பேருந்தில் வந்தோம்.பயந்து பயந்து ஓட்டுநர் ஓட்டி கொண்டு வந்தபோது ஒரு சின்னப்பெண்ணை ஒருவன் நோண்ட தர்மஅடி கொடுத்து நடுக்காட்டில் இறக்கிவிட்டார் நடத்துநர் அந்த நாயை.
//வழக்கமாக செல்லும் பஸ்ஸிற்கு பதில் ஸ்பேர் பஸ் ஸ்பேர் பார்ட்ஸ் மாட்டும் கண்டிஷனில் நின்றது.//
//ரெண்டு காய்ஞ்ச தோசைக்கும், ஒரு சிக்கன் எலும்புக்கும் 50 ரூபாய் வாங்கிட்டான் நல்லாயிருப்பானா."//
அரசுப்பேருந்துகள் என்றாலே இந்த கொடுமைகளை எல்லாம் இன்றும் அனுபவிக்கதான் வேண்டி உள்ளது.
வாங்க Chitra
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
:)
எழுத்து நடை அருமை நண்பரே...
வாங்க ஜமால்
//அவன் ஒரு ஆம்பிளையான்னு தான் கேக்க தோனுது சிநேகிதரே
மனைவி என்னா செய்றான்னு பார்த்துகிட்டு இருக்கானாம், அப்பாளிக்கா மனைவியை மொத்துவானாம் பின்னாடி இருந்த அந்த !@#$%^& போட்டு மொத்த வேண்டியது தானே ...//
என்ன செய்றது. அவன் சந்தேகப்பேர்வழி போல இருக்கு.
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
வாங்க சைவகொத்துப்பரோட்டா
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
படித்து முடித்ததும் மனது கனத்துப்போய் விட்டது நண்பரே!!
வாங்க கேபிள்ஜி
முதல் முறைய வந்திருக்கிங்க சந்தோசம்.
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
வாங்க நாடோடி
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
வாங்க சேட்டைக்காரன்
//அந்த ஆளை ரெண்டு சாத்து சாத்தணும் போலிருக்கு! //
எனக்கும்தான். ஆனால் சம்பந்தப்பட்டவரே ஒன்னும் செய்யவில்லையே.
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
வாங்க கண்ணா..
//மொக்கை படம், கோவில்பட்டி மோட்டல்னு விவரித்தது இயல்பாக இருந்தது.
தொடர்ந்து இது போலவும் எழுதுங்கள்//
சரி தல.
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
வாங்க T.V.ராதாகிருஷ்ணன்
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
வாங்க ஹுஸைனம்மா
//சந்தேகப் புத்தியுள்ளவன் போல!! அந்தப் பெண்ணின் மேல் கோவமும் வருது, பாவமாவும் இருக்கு.//
என்ன செய்ய சூழ் நிலை சில நேரங்களில் எதிராக அமைந்துவிடும்.
தன்மனைவியை நம்புபவனாக இருந்தால் இந்த பிரச்சனையே வந்திருக்காது.
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
வாங்க நிகழ்காலத்தில்...
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
வாங்க கண்மணி/kanmani
//நிஜமோ புனைவோ முதலில் கணவனைச் சொல்லனும்..
அரைமணி பாக்கிறானாம்.
பின்னாலிருந்து கை வைத்தவன் சராசரி ஆண் பலரைப் போல..
அப்படியிருந்தால் அதைக் கண்டிக்காத பெண் ஒன்று தூக்கத்தில் கவனிக்காமல் இருந்திருக்கனும் இல்லை மோசமானவளாக இருக்கனும்//
இது நிஜத்திலேயே நடந்த சம்பவம். நிச்சயம் கணவன் சந்தேகப்பேர்வழிதான் போல. அந்த பெண்ணின் நிலைதான் மோசம்.
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
வாங்க துபாய் ராஜா
ஊரில் அனைவரும் நலமா.
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
வாங்க இராமசாமி கண்ணண்
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
வாங்க இராகவன்
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
வாங்க பனித்துளி சங்கர் .
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
சம்பவ விவரணை அருமை. எழுத்து மெருகேறி சரளமாகியிருக்கிறது.
“உண்மையிலேயே அவர் வாந்தி எடுத்தால் என்ன செய்யங்கிற பயத்தை விட அவர் "உங்களுக்கு வாந்தியே வரலையே தம்பி"ன்னு கேட்டா என்ன சொல்லங்கிற யோசனைதான் அதிகமா இருந்தது”. - ரசித்தேன்.
இந்த மாதிரி சம்பவங்கள், உந்து தொல்லைகள் சம்பவங்கள், நான் பயணித்த சில சமயங்களிலும் நடந்திருக்கின்றன. ஆனால் பெண்ணை மொத்திய சம்பவம் இல்லை.
அப்புறம் அந்த சினேகம் V180, கோவில்பட்டி தாண்டிய மோட்டல் - அது ஒரு பழங்காலக் கதை.
அதை விட அதிக கோபமும், ஆற்றாமையும் அந்த புருஷன் மேல
அவன்லாம் ஒரு ஆளு பாத்துட்டு இருந்துருக்கான் பாரு #$%^%$#?><>?<#$%^%$#$%^%$#%^&
நல்லா விவரிச்சுருக்கீங்க அக்பர்
வாங்க ஷங்கி
//சம்பவ விவரணை அருமை. எழுத்து மெருகேறி சரளமாகியிருக்கிறது. //
கேட்பதற்கு மிக சந்தோசமாக இருக்கிறது.
//அப்புறம் அந்த சினேகம் V180, கோவில்பட்டி தாண்டிய மோட்டல் - அது ஒரு பழங்காலக் கதை.//
எழுதுங்க ஷங்கி
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
வாங்க வசந்த்,
//அதை விட அதிக கோபமும், ஆற்றாமையும் அந்த புருஷன் மேல //
உண்மைதான்.
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
//ஊர் கனவுகளோடு நல்ல தூக்கத்தில் இருந்த போது சட் சட்னு மொத்துற சத்தம் கேட்டு திடுக்கிட்டு கண் விழித்தால் நடுநிசி 2 மணி.//
அட அவ என்ன லூஸா , 2 மணி என்றால் அவளும் சரியான தூக்கத்தில் தான் இருந்திருப்பாள். இவன் ஏன் பேய் மாதிரி முழுத்திருந்து பார்த்தான், இது சந்தேகப்பேர்வழி தான்.
அருமையான பதிவு!!
உங்களுக்கு அவார்டு கொடுத்து இருக்கேன் வந்து வாங்கி கொள்ளுங்களேன்.
http://allinalljaleela.blogspot.com/2010/03/blog-post_31.html
Post a Comment